அவனை என்ன செய்ய என யோசித்த அதிகார வர்க்கம் அவனை துருக்கி பக்கம் தூக்கியடித்தது.
அன்று ஆட்டோமன் துருக்கியர் மிக வலுவாக இருந்தனர். அவர்களை வெல்ல எந்த ஐரோப்பிய நாடாலும்
அதனால் நிலவழியினை விட்டுவிட்டு கடல்வழியே இந்தியாவோடு வாணிபம் செய்தன ஐரோப்பிய நாடுகள்,
அந்த அளவிற்கு இரும்பு நாடாக இருந்தது ஆட்டோமன் துருக்கி
அவர்களுக்கும் பிரான்சுக்கும் சில ஒப்பந்தங்கள் இருந்தன,அப்படி நெப்போலியனை அங்கு பணிக்கு
அது ஒப்புக்கு சப்பான வேலை,அவனுக்கு நிறைய ஓய்வு இருந்தது,அப்பொழுதுதான் அவன் மிக சிறந்த ரொமான்டிக் நாவலை எழுதினான்
உண்மையில் அவன் மிக மிக ரசனைக்காரன்,நிறைய வாசித்ததால் அவனுக்கு எழுத்து கலையும் அட்டகாசமாக வந்தது.
ஒரு போர்வீரனுக்கும் அவன் காதலிக்கும் நடக்கும் காதல் கதை,ஆச்சரியமாக அது பின்னாளில் அவனுக்கே நடந்தது
தன் வாழ்வின் பின்னாளைய சம்பவத்தை அன்றே கனவாக கொண்டிருந்தான் போலும்
ஆனால் அந்த அதிகாரிகளின் கோபம் அப்படியே இருந்தது, வெண்டி செல்ல மறுத்த காரணத்தால் அவனை சஸ்பெண்ட் செய்தார்கள்.
வேலை போன விரக்திக்கு உள்ளானான்,அவன் மனநெருக்கடி அதிகரித்தது.
பிரான்சில் கலவரங்கள் அதிகரிக்க தொடங்கின,பாரீஸ் வரை வன்முறை பரவிற்று,அடக்க முடியாமல் அதிகார வர்க்கம் தவித்தது.
அவர் தன் அதிகாரிகளுக்கு யோசனை சொன்னார்,பாரீஸ் எரிந்து கொண்டிருக்கின்றது, ஈகோ பார்க்க நேரமில்லை.
அதிகாரிகளும் யோசித்தனர், நெப்போலியனுக்கு அழைப்பு விடுக்கபட்டது,வந்து நின்றான்
"உன் திறமை மீது எப்பொழுதுமே எங்களுக்கு நம்பிக்கை உண்டு, ஏற்கனவே புரட்சியாளர்களுடன் சேர்ந்தாய் என்ற
இதோ உனக்கான வாய்ப்பு,அந்த புரட்சியாளர்களே பாரீஸ் தெருக்களில் அட்டகாசம் செய்கின்றார்கள்,இவர்களை அடக்க உன்னை அனுப்புகின்றோம்,அடக்கினால் நீ குற்றமற்றவன் என்பதை ஒப்புகொள்கின்றோம்"
நிமிர்ந்து பார்த்தான் நெப்போலியன்,என் பதவியில்
அது என்ன பதவி? அதனை விட பெரும் பதவியாக இந்த கலவர தடுப்பு படைக்கு உன்னை தளபதியாக நியமிக்கின்றோம் என்றார்கள்.
கிளம்பினான் நெப்போலியன், படைகளை தயார் செய்தான்,தன் குதிரையில் தாவி ஏறினான்
பாரீஸ் தெருக்களை படிபடியாக கைபற்றினான்,
நெப்போலியன் வந்தபின் அரசபடைகளின் கை ஓங்கியது, அட்டகாசமாக முன்னேறினான். அவனது வியூகத்தில் எதிரிபடை திணறியது.
அந்த யுத்தத்தை 2 நாட்களில் முடித்து கலவரத்தை அடக்கினான்.
வெற்றி வீரனானான்
அந்த பெருமிததத்துடன் அரசு இயக்கும் டைரக்டர் குழு முன் நின்றான்
அக்குழு அவனை பிரென்ஞ் படையின் தளபதியாக உயர்த்தியது,24 வயதில் பிரெஞ்ச் தளபதியாக அவன் பொறுப்பேற்றபொழுது பிரான்சே அவனை வித்தியாசமாக நோக்கியது,
பதவிக்கு வந்ததும் யார் தனக்கு உதவினார்கள் என விசாரித்தான், பால் பேரசின் பெயர் அடிபட்டது.
ஆனால் பால் பேரஸ் யுத்ததில் கொல்லபட்டிருந்தார்,எனினும் அவர் வீட்டை பார்க்க கிளம்பினான்
அந்த வீட்டில்தான் நெப்போலியனின் எதிர்காலம் இருக்கின்றது,
வீட்டிற்கு சென்ற நெப்போலியன் அந்த பால் பேரஸ் படத்திற்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பி பார்த்தான்
இரு குழந்தைகளோடு அவள் நின்றுகொண்டிருந்தாள்.
அவள் தான் ஜோசபைன்.
பால் பேரஸின் மனைவி.
அவள் ஒன்றும் அப்படி பிரமாதமான அழகி அல்ல, ஆப்ரிக்க வம்ச கலப்பு,பல்வரிசை வேறு கோணல்,அழகு என்றெல்லாம் சொல்லமுடியாது.
இந்த யழவு காதல் அப்படித்தான், அவரவர் கண்ணிற்கு அவரவர் அழகு.அது என்ன தொடர்போ, ஜாதக அம்சமோ,மன்மத பாணமோ எதுவோ ஒன்று.
அழகில்லாத ஒருவர் இன்னொருவர் கண்ணுக்கு பெரும் அழகியாக தெரிவதெல்லாம் விதிப்பயன்.
ஜோசபினுக்கு ஏற்கனவே சொல்லியிருந்தார்,நீ ஒரு நாளில் நாட்டிற்கே மகா ராணியாவாவாய். நிச்சயம் நடக்கும்
ஆனால் ஒரு ராணுவ அதிகாரி மனைவியாய் வாழ்ந்தவள் ஜோசபின்,இனி அவரும் இல்லை விதவை வாழ்வு
4 வீடுகளில் பாத்திரம் தேய்த்து இந்த பிள்ளைகளை வளர்க்க வேண்டியதுதான் என நினைத்துகொண்டு நெப்போலியன் முன்னால் நின்றாள்.
விதி தள்ளி இருந்து புன்னகைத்தது,அது ஜாதக பிரகாரம் வழி போட்டு கொடுத்தது
வீடு திரும்பிய நெப்போலியன் செய்த முதல் காரியம் தனக்கு நிச்சயம் செய்திருந்த பெண்ணை வேண்டாம் என சொன்னது
அவன் நினைவெல்லாம் ஜோசபின் நிறைந்திருந்தாள், அவனுக்கு வயது 24 அவளுக்கு வயது ஏறகுறைய 30.
அவன் ஏகபத்தினி விரதன் எல்லாம் அல்ல,தீராத விளையாட்டு பிள்ளை அதில் சந்தேகமே இல்லை.
அவன் குதிரையில் யுத்தகாலம் தவிர பெண்கள் அமர்ந்தே இருந்தார்கள்.
கடிதங்கள் எனும் பெயரில் அழியா காவியங்களை அவன் அவளுக்கு எழுத தொடங்கினான்.
ஒவ்வொரு கடிதமும் ஒரு ரோஜாவுடன் அவள் வீட்டுக்கு வர தொடங்கியது.
(மாவீரன் வருவான்......)