கிட்டதட்ட இலங்கை திரிகோணமலை துறைமுகம் போன்ற அமைப்புள்ள இடம் அது. மூன்றுபக்கம் நிலம் ஒரு பக்கம் கடல் என்ற அமைப்பு.
புரட்சிபடைகளிடம் பேசியிருந்த நெப்போலியன் அவர்களை இரு பக்கம் நிற்க செய்தான்,
ஒரு பக்கம் நெப்போலியன் தாக்குவான் என்பது திட்டம்
(அவனுக்கு கொடுக்கபட்ட மிக குறைவான படையில் அவனுக்கு வேறு எதுவும் சாத்தியமில்லை. நெப்போலியன் காலத்தில் துப்பாக்கியும்,பீரங்கியும்
இந்த ஏற்பாட்டில் களமிறங்கினான்,அந்த நுழைவாயில் பக்கம் ஒரு குன்று இருப்பதையும் கவனித்தான்.
கடவுளை வணங்கிவிட்டு யுத்தம் தொடங்கினான் நெப்போலியன், அவனின் முதல் யுத்தம் அது.
தரையில் நாம் மோதிகொண்டிருக்க,இவன் ஏன் மலை ஏறுகின்றான் என குழம்பியது பிரிட்டிஷ் படை, குன்றை கைபற்றும் முயற்சியினை அது தடுக்கவில்லை,
ஆனால் அக்குன்றில் இருந்து பிரென்ஞ் படை தாக்குதலை தொடங்கியதும் வெற்றிமுகம் நெப்போலியனுக்கு தென்பட்டது. பிரிட்டிஷ் படைகளுக்கு சுற்றி ஆப்படித்திருந்தான் அவன், எங்கும் அவைகளால் நகர முடியவில்லை,
பிரிட்டிஷ் படை எவ்வளவோ முயன்றும் அவர்களின் வியூகத்த்தை உடைத்தான் நெப்போலியன்,வேறு வழியின்றி அவை பின் வாங்கின
பின் ஓட அடித்தான் நெப்போலியன்,கோட்டையும் துறைமுகமும் அவன் வசமாயிற்று,பிரிட்டிஷ் கப்பல்கள் அலறி அடித்து ஓடின
(இன்றும் இந்த சம்பவம் வீடியோ கேம்களிலும்,இன்னபிற விளையாட்டுக்களிலும் உண்டு,
கேண்டி கிராஸ்,டெம்பிள் ரன் என அலைவதால் இம்மாதிரி ஆட்டமெல்லாம் இருப்பது பலருக்கு தெரியவில்லை)
ஒருவன் வளரும் பொழுது அவனுக்கு மேல் இருப்பவனுக்கு வயிறு எரிவது மானிட குணம். தனக்கு கீழ் இருக்கும் ஒருவனுக்கு பெயரும் புகழும் கிடைப்பதை எந்த அதிகாரியும் விரும்புவதில்லை,சில விதிவிலக்குகளை தவிர
எப்படி வென்றான்? இந்த குன்றை பிடித்தா? அட அது இத்தனை நாளும் இங்குதானே இருந்தது,நமக்கு ஏன் இந்த திட்டம் தோன்றவே இல்லை என அவர்களே மனதிற்குள்
உண்மை அதுதான் அக்குன்றின் மேல் நின்றால் யுத்தம் முடிப்பது வெகு எளிது,யாருக்கும் தோன்றா சிந்தனை அவனுக்கு தோன்றிற்று,அவன் யுத்தம் என்பது பூகோள தொடர்புடையது,கொஞ்சம் அறிவியில் தொடர்புடையது வெறும் ஆயுதம் மட்டுமல்ல என நம்பியவன் மிககணக்காக திட்டமிட்டான்,வென்றான்
அதாவது புரட்சிபடைகளின் ஒத்துழைப்புடனேதான் அவன் வென்றான் எனும் தகவல் அது, துள்ளி எழுந்தார்கள்
"நீ நாட்டில் குழப்பம் விளைவிக்கும் புரட்சிபடையோடு
"இது பிரான்ஸ், புரட்சிபடையினரும் பிரான்ஸின் நலனுக்கே போராடுபவர்கள். அவர்கள் வகைவேறு ஆனால் நோக்கம் ஒன்று,நானும் பிரான்ஸை மனமார நேசிப்பவன், பொது எதிரியான பிரிட்டிசாரை விரட்ட,பிரான்ஸ் குடிமக்கள்
அவனை முடக்குவது என முடிவெடுத்துவிட்டு அல்லவா விசாரிக்கின்றார்கள்,பின் அவன் என்ன நியாயம் சொல்லி எடுபடும்
நீ புரட்சியாளரோடு தொடர்பு வைத்ததற்காக உன்னை சிறையில் அடைக்கின்றோம் என அவனை சிறையிட்டார்கள்
நான் என்ன செய்தேன்? யாராலும் மீட்கமுடியாத அந்த டுலான் நகரை பிரான்ஸுக்காக மீட்டேன்,அதற்கு பிரான்ஸ் மக்களை சேர்த்து கொண்டேன்,இது ஏன் இவர்களுக்கு பொறுக்கவில்லை,
ஆனால் உணர்ச்சிகளை வெளிகாட்டி கொள்ளாமல் வாசிப்பிலே இருந்தான்,ஆழ்ந்த வாசிப்பு
10ம் நாள் அவன் சிறையில் இருந்தபொழுது,வெண்டி எனும் நகர் பக்கம் பெரும் கலவரம் வெடித்தது,கட்டுகடங்காமல் சென்று கொண்டிருந்தது நிலை
அதிகாரிகளும் அதனைய யோசித்தனர்,அவனை அனுப்ப வேண்டிய நிலை,ஆனால் அதே நெப்போலியனாக அனுப்பகூடாது அவனுக்கு கெத்து வந்திவிடும்
நாமெல்லாம் 50 வயதிலும் செய்ய முடியாத சாதனையினை 24 வயதில் செய்துவிட்டவன்
என்ன செய்யலாம்?
ம்ம் கடந்த முறை அவனை பெரும் படைக்கு தலைவனாக அனுப்பியதுதான் பிரச்சினை,இனி அவனை சாதாரண தலைவனாக அனுப்பலாம்,களம் கண்டுவிட்டால் அவன் உள்ளே ஒரு சக்தி புகுந்துவிடும்,
ஆம்,அதுதான் முடிவு அவன் பதவியினை பறித்து,தரமிறக்கம் செய்து அனுப்பலாம் என முடிவெடுத்தார்கள்
நெப்போலியனுக்கு செய்தி சென்றது
எவ்வளவு பெரும் காரியத்தை செய்தவன் நான்,என்னை தரமிறக்கம் செய்தார்களா?
முடியாது,செல்லமாட்டேன். நீங்களே கலவரத்தை அடக்குங்கள்,மீறினால் சிறை என்றால் சிக்கல் இல்லை,நான் ஏற்கனவே அங்குதான் இருக்கின்றேன் என சொல்லிவிட்டான்
குழம்பி நின்றனர் அதிகாரிகள்
(மாவீரன் வருவான் .....)