பின் குர்திஸ்தான் 2 நாடுகளால் அமுக்கபட்டது இன்று அது சிரியா, ஈராக்,துருக்கி என 3 நாடுகளில் பிராதனமாக பிரிந்து கிடக்கின்றது.
இந்த நாடுகளில் எல்லாம் அவர்கள் சிறுபான்மை என்பதால் கண்டுகொள்ள யாருமில்லை,
ஈரான்,ஈராக்,துருக்கி,சிரியா என குர்துகள் வாழும் நாட்டில் அடக்கி ஒடுக்கபட்டனர்,கல்வி முதல் சகலமும் சிக்கல்.
உண்மையில் அரேபியாவில் பாலஸ்தீனரை போலவே குர்துகள் நிலையும் மகா மோசம்.
ஆனால் யூதன் இஸ்லாமியரை அடித்தால்தான் அநீதி,
சதாம் உசேன் மீதும் அவரோடு தூக்கில் இடபட்ட கெமிக்கல் அலி மீதும் குர்துகளை மோசமாக கொன்ற சில சர்ச்சை உண்டு.
இந்நிலையில்தான் ஐ.எஸ் இயக்கம் வெறிபிடித்து ஈராக்கையும், சிரியாவினையும் அலறவிட்டது.
அதனால் வல்லரசுகள் திட்டம் தீட்டி கொடுத்தன,சம்பளத்திற்கு சுடும் ராணுவத்தை விட,உரிமைக்கு சுடும் மக்களின் போரட்டம் வித்தியாசமாக இருக்க்கும்,குர்துகளுக்கு ஆயுதம் கொடுத்தால் நிச்சயம் பலனளிக்கும்
நாங்களே எப்பொழுது வாய்ப்பு கிடைக்கும் என்று இருந்தோம்,இனி ஐஎஸ் வந்தால் என்ன ஆண்டவன் வந்தால் என்ன? என அவர்கள் அடித்த அடியில் உலகமே குர்துகளை வியப்பாக பார்த்தது
பல நாட்டு உதவிகள் கிடைத்துவிட்டதால் இனி குர்திஸ்தான் சாத்தியம் என சொல்ல தொடங்கியாயிற்று,இப்பொழுது சுயாட்சிக்கு ஈராக் பக்கம் தேர்தலாம்
பலவீனமான சிரிய,ஈராக்கிய அரசுகள் இனி குர்துகளை அடக்கமுடியாது என்பது போல நிலை செல்கின்றது
சிரியாவினை பிளக்கவேண்டும் என்பது வல்லரசுகளின் ஆசை
அது நெருங்கிகொண்டிருக்கின்றது.
இப்பொழுது சிக்கல் துருக்கிக்கு, ஈராக்கிலும் சிரியாவிலும் குர்துகள் பலம் பெற்று அதிகாரத்திற்கு வந்துவிட்டால் அடுத்த அடி துருக்கிக்கே!
பாஜக முன்னால் அதிமுக நிற்பது போல அமெரிக்கா முன்னால் ஈராக் நிற்கின்றது,இல்லை அதனை விடமோசம். பின் என்ன செய்ய முடியும்?
பல நூறு ஆண்டுகளாக நாடின்றி
சிலர் சொல்லிகொண்டிருப்பான் ஈழதமிழன் மட்டுமே உலகில் நாடில்லாதவன்,மற்றவன் எல்லாம் சொந்தநாட்டோடு இருப்பவன் என்றும் அவனாக சொல்வான் அதனை சிலர் இங்கு கண்ணீர் சிந்தி சொல்வார்கள்
சில இனங்கள் நம் இந்தியா போல பாதுகாப்பான நாட்டில் வாழ்கின்றன.
மலையாளி,குஜராத்தி,மராட்டியன், தெலுங்கன் எல்லாம் தனிநாட்டிலா இருக்கின்றான்? அல்ல.
இந்நாட்டில் நம்மை போல அவனும் இருக்கின்றான்,சுகமாக இருக்கின்றோம்
குர்திஸ்தான் பிரச்சினை தெரிந்தவுடன்,சிலர் இப்படி பொங்குவார்கள்,நாமும் அப்படித்தான் இந்தியா இலங்கை என இரு நாடுகளிடம் சிக்கியிருக்கின்றோம், குர்திஸ்தான் போல அகண்ட தமிழகமும் இரு நாடுகளிடமிருந்தும் விடுதலைபெற வேண்டும்
நமக்கும் குர்தியர்களுக்கும் ஏகபட்ட வித்தியாசம் உண்டு. இந்தியா போன்ற பல இனம் வாழும் நாடுகளுக்கும் சிரியா, ஈராக் போன்ற நாடுகளுக்கும் பல வித்தியாசம் உண்டு.
அதனால் குர்திஸ்தான் போல தமிழகம் என எவனாவது கிளம்பினால்
அங்கு படும் அடியில் இந்தியா சொர்க்கம் என சொல்லி கொண்டே ஓடிவருவான்.....