கிட்டதட்ட 20 வருடம் லெனினோடு போராடி ரஷ்ய புரட்சியில் பெரும்பங்கு வகித்து சோவியத் யூனியன் அமைக்க காரணமானவர் ஸ்டாலின்
லெனினுக்கு பின் சோவியத்தில் குழப்பம் வந்தது,டராவோட்ஸ்கி தலமையில் ஒரு குழு,இன்னும் பல குழுக்கள் அட்டாகசம் செய்தன,
எல்லாவற்றையும் ஒடுக்கி தனிபெரும் தலைவராக வந்தார் ஸ்டாலின்,அவர் மீது சர்ச்சையும் இருந்தது கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் மிக வலுவான அரசினை அமைத்தார்
ஐந்தாண்டு திட்டங்கள் என அவர்
பின் தங்கிய ஏழை நாடாக இருந்த ரஷ்யா இப்படி முன்னேறி வந்தபொழுதுதான்
ஹிட்லர் எனும் மந்திரவாதியிடம் எல்லா பூதங்களும் இருந்தன,ஒன்று மட்டும் இல்லை
அது பெட்ரோல்
அன்று அரேபிய பகுதி பெட்ரோல் அறியபடவில்லை,அது அன்றே தெரிந்திருந்தால் ஹிட்லர் இங்குதான் பாய்ந்திருப்பான். ஈரான் ஈராக் என ஒன்றும் இருந்திருக்காது
ஏன் இஸ்ரேலும் இருந்திருக்காது, ஜெருசலேம் சர்ச்சையும் இருந்திருக்காது ஆனால் விதி அது அல்ல
ஸ்டாலின் உருவாக்கிய எண்ணெய் சாம்ராஜ்யத்திற்காக ரஷ்யா மீது பாய்ந்தான் ஹிட்லர். ரஷ்யா ராணுவ பலம் கொண்ட நாடல்ல என்பது அவன் கருத்து
காரணம் ஸ்டாலின் பட்டுமெத்தையில் வளர்ந்தவர் அல்ல மாறாக சிறுவயது முதலே போராட்டம், கலவரம்,போர் என்றே வளர்ந்தவர்
யாராலும் வெல்ல முடியா ஹிட்லரை ஸ்டாலினின் செம்படை
உறுதியாக சொல்லலாம் ரூஸ்வெல்ட்டும்,சர்ர்சிலும் சும்மா அறிக்கைகளை விட்டுகொண்டிருந்த நேரத்தில் ஹிட்லரை நேருக்கு நேர் சந்தித்த வீரன் ஸ்டாலின் ஒருவரே
ஹிட்லரின் வீழ்ச்சிக்கு பின் ரஷ்ய ராணுவத்தை
பின்னாளைய உலகை மிரட்டிய சோவியத் யூனியன் ஸ்டாலின் போட்ட பாதையில்தான் பயணித்து தன் பொற்காலத்தை அடைந்தது
நிச்சயம் ஸ்டாலின் சர்வாதிகாரி, ஆனால் நல்ல சர்வாதிகாரி ஒரு நாட்டை எப்படி வளபடுத்தமுடியும்,
அந்த இரும்பு மனிதன் மீது கலைஞருக்கு பெரும் ஈர்ப்பு இருந்ததால் தன் மகனுக்கு ஸ்டாலின் என பெயரிட்டார்
ஸ்டாலின் எனும் பெயர்மட்டும் அம்மகனுக்கு வந்தது மற்றபடி ரஷ்ய ஸ்டாலினின் திறமையில், ஆற்றலில் ஒன்றும் வரவில்லை
ஜார் மன்னனை வீழ்த்தி ரஷ்யாவினை காத்து,பின் ஹிட்லர் எனும் பெரும் பூதத்தை வீழ்த்தி இந்த உலகினை ஏகாதிபத்திய இனவாதி ஹிட்லரிடம் இருந்து காத்தவர் ஸ்டாலின்
அறிவியலிலும் இன்னும் பல விஷயங்களில் மிக பின் தங்கி இருந்த ரஷ்யாவினை மாபெரும் வல்லரசாக்கி உலகை புரட்டி போட்ட அந்த செங்கொடி நாயகனுக்கு வீரவணக்கம்.