அவனோடு பிரான்ஸின் இங்கர்சால் போன்ற சிலர் உண்டு
"உலக தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள்" என முதலில் முழங்கியவன் மார்க்ஸ்
அந்த அழைப்புத்தான் சோவியத் யூனியனாக பின்னாளில் மலந்தது,
அதில் வந்த சோவியத் யூனியன் தொழிலாளருக்கான சட்டதிட்டங்களை வகுத்து நல்வாழ்வு வாழ வழிசெய்தது
அந்த எதிரொலி தன் ஆட்சிநடக்கும் நாட்டிலும் நடக்காமல் இருக்க பிரிட்டனும் அமெரிக்காவும் தொழிலாளர் சலுகைகளை அளித்தன
உண்மை இப்படி இருக்க அம்பேத்கர்தான் மே 1 தேதி தொழிலாளர் நாள் என அறிவித்து புரட்சி செய்தார், தொழிலாளருக்கு அவரே விடிவெள்ளி என்றொரு கோஷ்டி புலம்புகின்றது
அம்பேத்கர் தொழிலாளருக்கு பெரிதும் பாடுபட்டவர் அல்ல,
அந்த பரோடா மன்னரின் கணக்குபிள்ளையாக அம்பேத்கர் இருந்தபொழுது என்ன புரட்சி நடத்தினார் ஒன்றுமில்லை
இன்னொரு கோஷ்டி வழக்கம் போல பெரியார் என கிளம்பிற்று
பெரியார் சாதி ஒழிப்பு, பிராமண ஒழிப்பு என அலைந்தவரேயன்றி
அந்நாளைய அரசு ஊழியரான பிராமணனை சாடுவாரே தவிர மில் முதலாளியான, நிலசுவாந்தார்களான நாயுடு, செட்டிகள் மேல் எல்லாம் பெரியாரின் பார்வை திரும்பவே இல்லை
என்றாவது தொழிலாளருக்கு ஊதியம் அதிகம் கொடு , கூலியாட்களுக்கு நெல் அதிகம் கொடு என
இது பற்றி அவரிடம் கேட்டால் பதில் இப்படி வந்தது
"தொழிலாளி சம்பளத்தை கூட்டினால் முதலாளி பொருள் விலைய கூட்டுவான், அப்புறம் கூட்டுன சம்பளம் தொழிலாளி வாங்குற பொருளுக்குத்தான் சரியா இருக்கும்
ஏன் பேசமாட்டார்?
அவருக்கு பெரும் சொத்தும் இன்னும் ஏராளமான தொழில்களில் பங்கும் இருந்தது
அதனால் தொழிலாளர் பற்றி பெரியார் ஒருநாளும் பேசவேயில்லை தவிர்த்தே வந்தார்