முதலாவது கிளைவே உருப்பட்டுவிட்டார்,நமக்கென்ன என ஜென்டில்மேன்கள் எல்லாம் கிழக்கு நோக்கி கிளம்பினார்கள், அதில் சிலர் வசமாக சுருட்டி கொண்டு வந்து செட்டில் ஆனார்கள்,அதாவது உடனே கிழக்கிந்திய கம்பெனியில் சேர்ந்து இந்தியா வந்து
இரண்டாவது கிளைவ் கொட்டி கொடுத்த லாபத்தை கண்ட கிழக்கிந்திய கம்பெனி மலைத்து போயிருந்தது,மாபெரும் வைரசுரங்கமாக அது இந்தியாவினை கண்டது,அதன் பங்குதாரர்கள் கடும் உற்சாகம் அடைந்தனர்,டைரக்டர்,போர்டு ஆப் டைரக்டர்
இதில் கிளைவின் எதிர்களும் உள்ளே வந்தனர்,அவர்களில் சாலிவன் என்பவர் முக்கியமானவர்,அதாவது பரம்பரை பணக்காரர்
எப்பொழுதுமே பரம்பரை பணக்காரர்களுக்கும் புது பணக்காரர்களுக்கும் ஒத்துவராது,டாட்டா அம்பானி முதல் நமது ஊர் மூப்பனார் சிவாஜி கணேசன் வரை
இதனால் சாலிவான் டைரக்டர் ஆவதை முடிந்தவரை தடுத்துபார்த்தார்,காரணம் அவர் பெரும்புள்ளி எனினும் கிளைவ் வங்கத்தில் அவருக்கு சாதகமான செயல்களை செய்து கொடுக்கவில்லை என்பதால் முன்பகை இருந்தது
இந்நிலையில் அவர் டைரக்டர் ஆனார்,இருவரும் கோஷ்டி கட்டினர் என்றாலும்
ஐரோப்பிய நிலை இப்படி இருக்க, இந்திய நிலை எப்படி இருந்தது என்றால் மகா சிக்கலாக இருந்தது
ஆம் ஆங்கிலேயர் இந்தியாவினை மோசமாக சுரண்டுகின்றனர் எனும் பேச்சின் தொடக்கம் அப்பொழுதுதான் நடந்தது
அதாவது கட்சி தலைவர்கள் அல்லது தியாகிகள் நல்ல நோக்கத்துடன்
இதுதான் பிரிட்டனின் கிழக்கிந்திய கம்பெனியிலும் நடந்தது
கிளைவ் மிக கவனமாக வென்று அதிகாரத்தை பிடித்தான், அரசனின் சொத்துக்களை கப்பமாக பெற்றானே அன்றி பொதுமக்களை தொட்டு கூட பார்த்ததில்லை
மீர் காசிமிடம் ஆளாளுக்கு கறந்தார்கள்,போதா குறைக்கு வெள்ளையரின் பொருட்களை அதிக விலைக்கு வாங்கும்படி
பல வியாபாரிகள் பிரிட்டன் கொடியோடு வியாபாரம் செய்து அரசுக்கு வரவேண்டிய வரிகளை கொடுக்காமல் டபாய்த்தனர்
வங்கம் நாசமாயிற்று,தங்கம் விளையும் அந்த பூமி அந்த முறையற்ற கம்பெனியரால் சூறையாடபட்டது,எங்கும் குழப்பம்
இன்னும் குழப்பத்தை கூட்ட மறுபடி மீர் காசிமை
பாட்னாவிற்கு தப்பி ஓடிய மீர்காசிம் 100க்கும் மேற்பட்ட ஆங்கிலேயரை கொன்றுவிட்டு அயோத்தி சுல்தானிடம் சரணடைந்தான்
விஷயம் லண்டனுக்கு சென்றது, கம்பெனி தலைக்கு மேல் கை வைத்து உட்கார்ந்தது, இப்பொழுது போல் அல்ல நினைத்தவுடன் பயணிக்க
இந்த கால இடைவெளியில் கிழக்கிந்திய கம்பெனியும், லண்டனில் இருந்து கிளைவ் காட்டிய வழியில் வந்த பிரிட்டிசாரும் வங்கத்தை பிழிந்து தங்கமாக சம்பாதித்தனர்
(இந்த குழப்பமான காலத்தில்தான் ஆற்காடு நவாபையும் ஆங்கிலேயர் கசக்கி பிழிய,அவர் மதுரையினை ஆண்ட மருதநாயகத்திடம் அதிக கப்பம் கேட்டு மிரட்ட
அவனும் கொல்லபட்டான்
நிச்சயம் இங்கு கிளைவ் இருந்திருந்தால் மருதநாயகம் கிளர்ச்சி செய்திருக்கமாட்டான் என்கின்றது வரலாறு)
வரலாறு மிகபெரும் காட்டாட்சி என அதைத்தான் சொல்கின்றது, கிளைவ் வழியில் எல்லோருக்கும்
வங்கத்து மக்களுக்கும் வேறுவழி தெரியவில்லை,எதிர்க்கவும் முடியவில்லை.
அதுவரை வாழ்வாங்கு வாழ்ந்த வங்கம் இக்காலத்தில் மட்டும் 3 லட்சம் ஏழைகளை உருவாக்கிற்று என்கின்றது வரலாறு
வெள்ளையர் என்றாலே காட்டுமிராண்டி,சுரண்டலாலர்கள் என இந்தியாவின் மற்ற பகுதிகள் எல்லாம் மிரண்டிருக்கின்றன
அங்கே கம்பெனிக்குள் யார் கை ஓங்குவது என
கம்பெனி இந்த சீர்கேட்டை சரிபடுத்தவும் மறுபடியும் வங்கத்தில் சட்டம் ஒழுங்கை சீர் படுத்தவும் யாரை அனுப்பலாம் என சிந்தித்த கம்பெனி கிளைவிடம் சரணடைந்தது
இந்த அவமானத்தை உள்ளே வைத்து கொண்டு,கிளைவ் இல்லையேல் கிழக்கிந்திய கம்பெனியும் அதன் எதிர்காலமும் இல்லை என சொல்லி நகர்ந்தான் சாலிவன்
கிளைவ் இந்தியா திரும்பி நிலமையினை
கிளைவ் மறுபடியும் தான் ஒரு மிகபெரும் ராஜதந்திரி,வில்லாதி வில்லன் என்பதை நிரூபித்தான் எப்படி?
கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பிலும் ஒவ்வொரு எதிரியினையும் தன் வீரத்தாலும் தந்திரத்தாலும் வீழ்திய கிளைவ்,இந்த சூழலை அட்டகாசமாக பயன்படுத்தினான்
அமைதியாக சொன்னான், "நான் வங்கம் செல்கின்றேன் ஆனால் இந்த சாலிவன் டைரக்டராக இருந்தால் தொல்லை வரும், நிச்சயம் என்னை எங்காவது சிக்க வைப்பார் தொல்லை கொடுப்பார்
அவரை பதவியிலிருந்து நீக்காதவரை என்னால் இந்தியாவிற்கு செல்லமுடியாது , நீங்களே செல்லுங்கள்.."
பதறிய கம்பெனி சாலிவானை கழுத்தை பிடித்து வெளியே தள்ளி,கிளைவின் காலில் விழுந்து மன்றாடியது
தன் பெரிய எதிரியினை வீழ்த்திய வெற்றியுடன் மறுபடி இந்தியா கிளம்ப தயாரானான் கிளைவ்
(தொடரும்..)