ஒரு வழியாக இந்தியா வந்தான் கிளைவ்,அவன் மனதிற்குள் சீர்கெட்ட இந்த கம்பெனியினை மேம்படுதும் வெறி இருந்தது, கல்கத்தா வந்து சேர்ந்தான்
அவனுக்கு மிகபெரும் அதிர்ச்சி காத்திருந்தது,ஆம் அந்த வளமான கல்கத்தா சுரண்டபட்டிருந்தது,மீர் ஜாபரும் மரணமடைந்திருந்தார்
கம்பெனியின் உத்தியோஸ்தகர்கள் சொந்தமாக வியாபாரம் செய்தோ இல்லை இங்கிருக்கும் சமஸ்தான அதிபர்களை மிரட்டியோ செல்வந்தர்கள் ஆகியிருந்தார்கள்
சுருக்கமாக சொன்னால் சசிகலா இல்லா நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்களின் கொண்டாட்டம் இருகின்றதல்லவா அப்படி இருந்தார்கள்
ஒரு சிலர் கிளைவ் கைபற்றிய
சமஸ்தான உரிமைகளை சில இந்தியருக்கு விற்றே இருந்தனர்
ஆம் எல்லாம் தான் காட்டிய வழி என்பதை கிளைவ் உணர்ந்தான், தன்னைபோலவே எல்லோரும் பணக்காரர் ஆக விரும்புகின்றார்கள் என்பது புரிந்தது
சூழல் அப்படி இருந்தது, கம்பெனியார் ஆளாளுக்கு சுருட்டி கொண்டிருந்தனர் வங்கமும், ஆற்காடும்,ஓரிசாவும்
தேய்ந்து ஏழை தேசமாகின, ஆச்சரியமாக கம்பெனிக்கும் வருமானமில்லை,எல்லாம் ஓட்டை வாய்க்கால் வழியாக பிரிட்டன் உத்தியோகஸ்தர்களுக்கு பாய்ந்தது
கிளைவ் தன் முன் மாபெரும் சவால் இருப்பதை உணர்ந்தான், கம்பெனியினை சீர்படுத்த நினைத்தால் அது பெரும் பின்விளைவுகளை கொடுத்தது
எப்படி?
ருசிகண்ட பூனைகள் ஆளாளுக்கு சதி கூட்டம் நடத்தின, "இது ஆள ஆள் இல்லா இந்தியா,அரசன் சரி இல்லை,டெல்லி முகலாய சுல்தானும் சரி இல்லை
நாம் வியாபாரம் செய்ய வந்தோம், வந்த இடத்தில் சுருட்டுகின்றோம் அதை கிளைவ் எப்படி தடுக்கலாம்? அவர் மட்டும் சம்பாதிக்கலாம் நாம் சம்பாதிக்க கூடாதா? விட கூடாது
கிளைவ் என்ன பெரிய கொக்கா?"
பணம் ருசி என்பது பொல்லாதது, ஒரு முறை சுவைத்துவிட்டால் அதை எவனும் விடமாட்டான், கம்பெனி உத்தியோஸ்தர்களும் அதற்கு விதிவிலக்கு அல்ல
ஆனால் கிளைவ் துணிந்து சொன்னான்,இனி கம்பெனியார் தனியாக வியாபாரம் செய்ய கூடாது,இது கம்பெனி விதி. மீறினால் தூக்கபடுவீர்கள்
அவர்களோ அவர்கள் பக்கத்து நியாயத்தோடு வந்தார்கள், அய்யா நாங்கள் கம்பெனிக்காக உழைக்கின்றோம்,லண்டனில் இருந்து வந்திருக்கின்றோம்
இதுதான் வாழ்வு,இதுதான் தொழில். பிரிட்டனில் இருக்கும் குடும்பம் குட்டிகளையும் காப்பாற்ற வேண்டும் இன்னும் பெரும் கடமை எல்லாம் உண்டு
ஆனால் எங்கள் சம்பளம் குறைவு, கோடை என்றால் சிம்லா செல்ல ஊட்டி செல்ல எங்களுக்கு பணம் வேண்டும்,இந்த கம்பெனி முறையாக நல்ல சம்பளம் கொடுத்தால் நாங்கள் ஏன் சொந்த தொழில் செய்ய போகின்றோம்
கிளைவ் யோசித்தான்,கம்பெனி டைரடக்டர்களிடம் கோரிக்கை வைத்தான் அவர்களோ அசையவில்லை,கம்பெனி வருமானம்
குறைவு என கைவிரித்தார்கள்
கிளைவ் யோசித்தான்,நிச்சயம் இவர்களுக்கு சம்பளம் வேண்டும், நாமோ கவர்னர் மட்டுமே கம்பெனி கட்டளைகளை மீற முடியாது
ஆனால் பணம் வேண்டும், இவர்களுக்கு சம்பளம் கூட்டி கொடுக்காவிட்டால் நிச்சயம் சிக்கல்
யோசித்த அவன் இந்தியாவின் கிராமங்களை நோட்டமிட்டான்,
அந்த கிராமம் எல்லாம் தன்னிறைவு பெற்றிருந்தன
ஆம் அக்கால கிராமங்களுக்கு நெல் முதல் பருத்தி வரை உள்ளூரிலே விளைந்தன,ஒரே ஒரு பொருள் மட்டும் வெளியிலிருந்து வந்தது அதை கிராமங்களால் உற்பத்தி செய்ய முடியவில்லை
அதன் பெயர் உப்பு
அந்த உப்பினை குறிவைத்தான் கிளைவ்,அதற்கு வரி விதித்தான்
அது நல்ல வருமானத்தை கொடுத்தது,அதை கொண்டு கம்பெனியின் சிவில் சர்வீஸ் ஊழியர்களின் கஷ்டத்தை தீர்த்தான்,கம்பெனி மேம்பட்டது
இந்நிலையில் ஒன்றை கவனிக்க வேண்டும்,முதலில் செல்வம் குவித்தானே அன்றி தன்னை போல எல்லோரும் குவிக்கும் கனவுக்கு வந்தபின் அதை கைவிட்டான் கிளைவ்
இந்த சிக்கல் வந்த பின் அவன் காசி சுல்தான்,அயோத்தி சுல்தான் என எவரின் பரிசுகளையும் ஏற்கவில்லை,ஏற்றால் தவறான வழிகாட்டலாகிவிடும் என உணர்ந்தான்
நினைத்திருந்தால் மாபெரும் செல்வம் ஈட்டியிருக்க அவனால் முடியும்,ஆனால் பதவியின் தர்மத்திற்கு கட்டுபட்டு நின்றான்.
கிளைவின் இக்குணம் உண்மையில் உயர்வானது
அப்படி இருந்ததால்தான் கம்பெனி ஊழியர்களை அவனால் கட்டுபடுத்தி வைக்க முடிந்தது
சிவில் சர்வீஸ் ஊழியர்களை கிளைவ் சந்தோஷபடுத்திய விதம் கம்பெனியின் ராணுவபிரிவிற்கு எட்டியது விடுவார்களா?
அவர்கள் அடிக்கடி ஆலோசனை செய்து தங்களுக்கும் ஊதிய உயர்வு
வேண்டும் என சொல்லி வேலை நிறுத்தம் செய்ய தீர்மானித்தார்கள்
உருப்படுமா? ராணுவம் வேலை நிறுத்தம் செய்தால் என்னாகும்? அவர்களோ அசால்ட்டாக ராஜினாமா செய்தார்கள்
விஷயம் வெளிதெரிந்தால் பிரெஞ்ச் டச்சு ஏன் அயோத்தி சுல்தான் படைகளே கம்பெனியினை நொடியில் விழுங்கி இருக்கும்
கிளைவோ தந்திரமாக ஆடினான், தனக்கு வேண்டியவர்களை அவன் சந்தித்ததும் எல்லோரும் அடிபணிந்து நின்றனர்
ஒரு கூட்டம் மட்டும் தனித்து நின்றது,அவர்கள் வரவில்லை. ராணுவ வீரர்களுக்கு சலுகையாக சில அறிவிப்புகளை அவன் அறிவித்ததும் ஓடி வந்தார்கள்
ராணுவ வீரர்களுக்கு சலுகை என அறிவித்தானே அன்றி வழங்க
பணம் இல்லை,கம்பெனியோ நீங்கள் எல்லாம் சம்பாதித்துவிட்டீர்கள் என்னமும் செய்யுங்கள் என்ற கோபத்தில் இருந்தது
கம்பெனியின் சிவில் சர்வீஸ் ஊழியர்கள் சிக்கலை உப்பு வரியினால் தீர்த்துவிட்ட கிளைவிற்கு ராணுவ வீரர்களுக்கான நிதி எங்கிருந்து வரும் என்ற கவலை வந்தது
திடீரென அவனுக்கு அந்த ஞானம் வந்தது
இந்த வீரர்கள் நமக்கு மட்டுமா யுத்தம் செய்தார்கள்? ஆற்காடு, வங்கம்,ஒரிசா என எத்தனை சமஸ்தானங்களுக்கு போர் புரிந்தார்கள்?
முதலில் நம் காலூன்றிய பகுதிகளில் நமக்கான உரிமைகளை கோருவோம் என கிளம்பினான்,கம்பெனி கடும் சீரமைப்பில் இறங்கி இருப்பதால்
இங்கு மன்னர்களை காக்கும் கிழக்கிந்திய கம்பெனியின் ராணுவத்திற்கு பெரும் தொகை வேண்டும் என கோரினான்
என்னதான் ஆற்காடு, வங்க நவாப் என இருந்தாலும் அவர்களின் மேல் மொகலாய அரசு இருந்தது, கம்பெனிக்கு பெரும் பணம் தேவைபட்டதால் டெல்லி முகலாய அரசின் மடியிலே கைவைத்தான் கிளைவ்
ஆம் ஆற்காடு,வங்கம்,ஒரிசா பகுதிகளில் வரி வசூலிக்கும் உரிமை வேண்டும் என கோரிக்கை வைத்தான்,முதலில் மறுத்தாலும் டெல்லி மன்னருக்கும் வேறு வழி இல்லை
ஒரு வழியாக வரிவசூல் செய்யும் உரிமை கிளைவிற்கு அதாவது கிழக்கிந்திய கம்பெனிக்கு கிடைத்தது
இதன் பின்பே கட்டபொம்மனிடம் வரி வசூலிக்க வந்து அவன் வானம் பொழிகின்றது என வசனம் பேசிய காட்சியும், பூலித்தேவன்,வேலுநாச்சியார் காட்சி எல்லாம் வரலாற்றில் வரும்
இங்குள்ள மன்னர்களுக்கும் சிக்கல் இருந்தது,டெல்லி முகலாய சாம்ராஜ்யம் வலுவிழந்தவுடன் பல தனி குட்டி சமஸ்தானங்கள் வரி கொடுக்க
கில்லாடியான கிளைவிற்கும் தன் ராணுவத்தினரிடம் அதோ கட்டம்பொம்மனாம் வரி தர மறுக்கின்றானாம்,உங்கள் வேலையினை செய்து அவனை வீழ்த்துங்கள்,அந்த பகுதி வரி வந்தால் உங்களுக்கு சம்பள உயர்வு என பேரம் பேசவும்
வாய்ப்பு இருந்தது
இப்படியாக உப்பு வரி,இந்திய சமஸ்தானங்களில் வரி வசூலிக்கும் உரிமை என பெரும் அடித்தளங்ளை இட்டான் கிளைவ்
இதில்தான் பிரிட்டானிய சாம்ராயம் பின்னாளில் எழும்பியது,மிக உறுதியாக சொல்லலாம் அவன் இவற்றை எல்லாம் செய்திருக்காவிட்டால் இங்கு பிரிட்டன் ஆட்சி சாத்தியமே இல்லை
நிச்சயம் நல்ல மிளகை தேடித்தான் இந்தியா வந்தனர் பிரிட்டிசார்,ஆனால் இங்கு உப்பிலும் சம்பாதிக்கலாம் என சொல்லி கொடுத்தவன் கிளைவ்.
இங்கு கிராமங்களின் தன்னிறைவு அப்படி இருந்தது உப்பை தவிர
உப்பு வரை மிக நுட்பமாக கவனிக்கும் யுக்தி அவனுக்கு இருந்தது,பின்னாளில் காந்தி வந்துதான்
இதற்கெல்லாம் போராட்டம் நடத்தியது இந்தியா
இப்படியாக இந்திய நிலமையினை சரிபடுத்திவிட்டு அவன் அப்பாடா என நிமிரும்பொழுது அவனுக்கு உடல்நலம் குன்றியது,அவன் லண்டன் திரும்பும் அவசியம் வந்தது
ஆனால் இம்முறை லண்டன் அவனை வரவேற்கவில்லை காரணம் அவன் இல்லா இடத்தில் எதிர்களின் கை ஓங்கி இருந்தது.
அவர்கள் கிளைவினை தொலைத்துவிடும் முடிவில் இருந்தார்கள்
இந்தியாவினை சுரண்டி கொழுத்தான் கிளைவ் எனும் கட்டுகதை அங்கே பரப்பபட்டது, அதன் விளைவுகள் மோசமாக இருந்தன.
(தொடரும்..)
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இந்திய குடியுரிமை சட்ட திருத்தம் கடந்த 10ம் தேதியன்று அமல்படுத்தபட்டு விட்டதாக இந்திய அரசு அறிவித்துவிட்டது.
யாருடைய எதிர்ப்பையும் , போலி அரசியலையும் அரசு கண்டுகொள்ளவில்லை கொஞ்சமும் தயக்கமின்றி தன் வேலையினை செய்கின்றது
முதல்கட்டமாக சோதனைகள் நடக்க தொடங்கிவிட்டன,
வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை அரச பிரநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஈழ அகதிகளை திரும்ப பெற கோரியிருக்கின்றார்
முதல்கட்டமாக தயாராக இருக்கும் 3000 பேர் திருப்பி அனுப்பபடுகின்றார்கள், விரைவில் எஞ்சியோரும் கட்டம் கட்டமாக அனுப்பபடுவர்
தமிழகத்தில் ஒரு அமைதியினை நீங்கள் உணரலாம், அது நாம் தமிழர் தும்பிகளின் அமைதி. அவைகள் ஈழ அகதி வேடத்தில் இலங்கைக்கு ஊடுருவி அப்படியே கொழும்பு சென்று கோத்தபாய குடலை உருவ திட்டம் வைத்திருக்குமோ என்னமோ
இலங்கை அகதிகள் திருப்பி அனுப்பபட தொடங்கும் நேரம் தமிழகத்தில் சத்தமில்லை,
ஈரான் 35 ஏவுகனைகளை வீசி ஈராக்கில் இருக்கும் அமெரிக்க விமான தளத்தை தாக்கியிருக்கின்றன
அங்கு அபு அல் அசாத் எனும் இடத்தில் இருந்த அமெரிக்க முகாம் தகர்க்கபட்டிருக்கின்றது, அது விமான படை தளம் என்பதால் விமானங்கள் பலத்த சேதத்துக்கு உட்பட்டிருக்கின்றன
இதை தாமே செய்தோம் என உரிமை கோரிவிட்டது ஈரான்
அமெரிக்க பெண்டகன் தாக்குதலை உறுதி செய்துகொண்டிருக்கும் பொழுதே அடுத்த விமானபடை தளமான எப்ரில் எனுமிடத்தை தாக்கிகொண்டிருக்கின்றது ஈரான்
ஈரானில் இருந்து நேரடியாக ஏவுகனைகள் கிளம்பிவிட்டதால் இனி அமெரிக்கா களத்தில் குதிக்கும்
ஆனால் நாங்கள் தாக்கியது ஈராக்கில் இருக்கும் அமெரிக்க முகாம்களையே, இது ஈராக் ஈரான் சிக்கல் என ஈரான் சொல்லிவிடும் அப்பொழுது காட்சிகள் மாறும்
ஆம் ஈராக்கிய அரசு உள்ளே வந்து எம் நாட்டு பாதுகாப்பு முக்கியம் நீங்கள் கிளம்புங்கள் என சொல்லும்,
ஈரான் தன் கடும் பழிதீர்த்தலை கட்டாயம் செய்யும் என எதிர்பார்க்கும் அமெரிக்கா, சில கணக்குகளை இடுகின்றது
அதாவது அல்கய்தா, ஐஎஸ் போன்றவை உலகெல்லாம் வலைபின்னல் கொண்ட இயக்கம், உலகில் எங்கும் தாக்கும் வண்ணம் அவை கட்டமைக்கபட்டிருக்கின்றன
ஆனால் அவை சன்னி இயக்கம்,
ஷியாவான சுலைமானி கொலைக்கு அவை பழிவாங்க நிச்சயம் கிளம்பாது
இதனால் உலகெல்லாம் அமெரிக்காவுக்கு மிரட்டல் குறைவு என்பதால் ஷியாக்கள் வலுவான அரபு பகுதியில் மட்டும் தனி கவனம் செலுத்துகின்றது
அமெரிக்கர்கள் இஸ்ரேல் மற்றும் ஜோர்டானுக்கு செல்லவேண்டாம் என
சொல்லியிருக்கும் அமெரிக்கா கடும் விழிப்பில் இருக்கின்றது
சந்தடி சாக்கில் உலகம் ஒப்புகொள்ளும் விஷயம் இதுதான்
ஆம் உலக மகா தீவிரவாதிகளில் அதாவது இஸ்லாமிய பெரும் இயக்கங்கள் யாவும் சன்னி வழி இயக்கம் அவைதான் அரேபியா தாண்டி தாக்கும் அவற்றுக்கு பணமும் பொருளும் கொடுப்பவை
அந்த மனிதன் ஆங்கில ஐ.சி.எஸ் அதிகாரி,கலெக்டராகத்தான் இந்தியா வந்தார் அவர் 1850ல் தன் பணியினை உத்திரபிரதேசத்தில் தொடங்கினார்,அவர் செய்த முதல் வேலை நல்ல பள்ளி ஒன்றை அமைத்தது
அவர் கலெக்டராக இருந்த காலத்தில்தான் 1857ல் சிப்பாய் கலகம் ஏற்பட்டது, அதன் முடிவில் கிழக்கிந்திய கம்பெனியின்
இந்தியா, பிரிட்டிஷ் அரசின் கட்டுபாட்டில் வந்தது. பிரிட்டிஷ் இந்தியா ஆனது
பிரிட்டிஷ் அரசு கடுமையான சட்டங்களை கொடுத்தது, 1859ல் இந்தியருக்கு கல்வி கூடாது என்றொரு கட்டளையினை பிறப்பித்தது,விக்டர் ஹியூம் அதனை கடுமையாக எதிர்த்தார், அவர்கள் அறியாமையில் இருக்கின்றார்கள்,கல்வி கொடுத்து
மாற்றினால் மட்டுமே பிரிட்டிஷ் அரசோடு ஒத்துழைப்பார்கள் என மல்லுக்கு நின்றார்
ஆங்கில அரசு மதுகடைகளை அன்று பரப்பியது,ஹியூம் அதனை கடுமையாக எதிர்த்தார், இது ஏழைகளை பாதிக்கும் செயல்,ஒரு கலெக்டராக நான் அனுமதிக்கமாட்டேன் என்று போர்கொடி தூக்கினார்