பரம்பரை பணக்காரனுக்கும் புதிய பணக்காரனுக்கும் பொருந்தாது அல்லவா? கிளைவினை அவர்கள் வெறுத்தார்கள்
கூடவே பிரிட்டனில் அப்பொழுது மாறி இருந்த புது சமூக நிலையும் சச்சரவுகளும் கிளைவின் மேல் மக்களுக்கு அவமரியாதையினை கொண்டுவந்தன,
நாம் முன்பே சொன்னதுதான் இந்தியாவில் முறையற்ற வகையில் சுரண்டிய கம்பெனி ஊழியர்கள்,வியாபாரிகள் எல்லாம் லண்டனில் பணக்கார கோலம் பூண்டனர். கும்மாளவிடுதல் சட்ட மீறல் நள்ளிரவில் அழிச்சாட்டியமென புது பணக்கார கலாச்சாரத்திற்கு மாறினர்
பரம்பரை பணக்காரர்களுக்கான
இந்திய மக்களை சுரண்டி வந்த படுபாவிகள் ஆடும் ஆட்டத்தை கண்டீர்களா? இதற்கெல்லாம் கிளைவே வழிகாட்டி என லண்டனில் கிசுகிசுக்கள் கிளம்பின
இறுதியாக கிளைவ் இந்தியாவினை சுரண்டினார், கொள்ளையடித்தார்,
கிளைவ் முதலில் அதை தைரியமாக எதிர்கொண்டார், தனக்கு கொடுக்கபட்ட சந்தர்ப்பத்தில் ஒவ்வொரு நாட்டு தளபதியும் எப்படி நாட்டுக்காக உழைத்தானோ அதையே தானும் செய்தேன் என வாதிட்டார்
தான் அக்காரியங்களை
தன்மேல் பல தவறுகள் சொல்லபட்டாலும்,ஜெர்மனியின் மோரிஸ்,ஸ்காட்லாந்தின் வில்லியம்,பிரான்சின் காஸ்மோ, இங்கிலாந்து முர்ரெ,ரஷ்யாவின் பீட்டர்
உண்மையில் சபை வாய் அடைத்தே போனது,அவ்வளவு அழகாக பேசியிருந்தான் கிளைவ், இந்தியாவில் தான் செய்துவிட்டு வந்த சீர்திருத்தங்களையும் அதனால் இனி வரப்போகும்
ஒருவழியாக தன் குற்றசாட்டுகளில் இருந்து அவன் தப்பும் நேரம்தான் அந்த கொடும் செய்தி வந்தது
ஆம் 1770ம் ஆண்டு வங்கத்தை பெரும் பஞ்சம் தாக்கியது,கங்கை வற்றியது வங்கத்தில் குண்டுமணி நெல்லும் விளையவில்லை,பஞ்சம் என்றால் பெரும் பஞ்சம்
அம்மக்களுக்கு உணவளிக்கவோ ஆறுதல் சொல்லவோ யாருமில்லை,இதுதான் சாக்கு என தானியங்களை பதுக்குதல் கொள்ளை விலையில் விற்றல் மக்களின் தங்கத்தை பிடுங்குதல் என தரம் கெட்ட வேலையில்
லட்சம் லட்சமாக மக்கள் செத்தனர், பஞ்சம் வருவது இயல்பு ஆனால் மக்களுக்கு ஒரு தானிய பருக்கை கூட கிடைக்கா அளவு வியாபாரத்திற்காக கம்பெனியார் பதுக்கி இருந்தனர்
மக்கள் நடுதெருவுக்கு வந்தனர், பட்டினி சாவு தொடங்கியது இரக்கமற்ற படுபாவிகளோ
பஞ்சம் எந்த அளவிற்கு இருந்ததென்றால் இறந்தவர்களை உண்ண நரிகள் கூட உயிரோடு இல்லை எனும் அளவு கொடூர பஞ்சம் அது
வரலாற்றில் அப்படி ஒரு பட்டினிசாவு எங்கும் நடக்கவில்லை எனும் அளவிற்கு லட்சகணக்கான மக்களும் ஆடுமாடுகளும் அழிந்தன, அதிலும் ஆதாயம் தேடியது வெள்ளையர் கும்பல்
ஆனால் இந்தியர் செத்தாலும் ஆதாயமே முக்கியம் என மனசாட்சியினை கொன்றுவிட்டு நின்றனர்,நவாப் எனும் பொம்மையும் செய்வதறியாமல் நின்றார்
இந்தியா கண்ட மாபெரும் அழிவு அது
இந்த பேரழிவு செய்தி லண்டனை உலுக்கியது,கம்பெனி மேல் வந்த குற்றசாட்டை கம்பெனி கிளைவ் மேல் திருப்பிவிட்டது
இவனே இந்தியாவின் அரசர்களை ஒழித்து மக்களை சுரண்டி அவர்கள்
கிளைவோ மனம் கசந்தான் தன் மேலான குற்றசாட்டை விட அவன் சீர்திருத்தி நல்லாட்சி கொடுக்க நினைத்த வங்கம் அழிந்ததில் அவனுக்கு கவலை பெருகிற்று
இனி அங்கு எப்படி கவர்னராக செல்வோம்,எப்படி ஆள்வோம் என்ற மனசாட்சி குத்திற்று, தன்னை நம்பிய
அவன் இப்படி கவலையில் விசாரணைக்கு வந்து சென்றான், அவனுக்கு அப்பொழுது அபின் பழக்கமும் வந்தது,மிகுந்த மன உளைச்சல் வரும் பொழுதெல்லாம் அதில் அமைதி தேடி கொண்டிருந்தான்.
தான் மிக சிறப்பாக உருவாக்க நினைத்த வங்கம்,தனக்கு பெரும்
கிளைவிற்கு மனசாட்சி இருந்தது என்றுதான் வரலாறு சொல்கின்றது,அவன் ஆள நினைத்தானே தவிர மக்களை மாளவிட கூடாது என்பதில் குறியாக இருந்தான் அதுவும் இந்திய மக்கள் மேல்
அபினிலே மூழ்கி கிடந்தான் கிளைவ்,அவனுக்கு அடிக்கடி வயிற்றுவலியும் வர ஆரம்பித்தது
கம்பெனி வழக்கு ஒரு பக்கம் நடந்தாலும்,பிரிட்டன் அரசின் கணக்கு வேறுமாதிரி இருந்தது, அவர்களுக்கு அப்பொழுது பெரும் தலைவலி ஒன்று எழும்பியது அதன் பெயர் ஜார்ஜ் வாஷிங்டன்
அந்நிலையில்தான் பிரிட்டனின் ராணுவ தளகர்த்தர்கள் மன்னனிடம் அக்கோரிக்கையினை வைத்தனர்
அரசே,இப்போதுள்ள நிலையில் பெரும் அனுபவம் கொண்டிருப்பவர்,
எப்படியோ கிழக்கிந்திய கம்பெனி ஊழியராகி இந்திய மன்னர்களையே வென்று, நம்முடைய ஆட்சியினை அங்கு அமைத்திருகின்றார்,அவரை விட பெரும் வீரர் எங்குண்டு
அவரை உடனடியாக பிரிட்டன் படைகளுக்கு
பிரிட்டன் அரசரும் அனுமதி கொடுத்தார்,கம்பெனி விசாரணை எல்லாம் மூட்டைகட்டபட்டன, அரசன் பேச்சுக்கு மறுபேச்சில்லை
ராயல் பிரிட்டன் ஆர்மியின் தளபதியாக பொறுப்பேற்க ரகசிய தகவல் கிளைவிற்கு அனுப்பபட்டது
அந்த மாபெரும் அதிர்ச்சி செய்தி பிரிட்டனை புரட்டி போட்டது, அமெரிக்க விடுதலையினை இனி தடுக்க முடியாது என பிரிட்டன் ராணுவம் கைவிரித்தது
பிரிட்டனே அலறியது,இந்திய அரசர்களோ நிம்மதி பெருமூச்சு விட்டனர்
(தொடரும்..)