நவோதயா பள்ளிகள் ஏன் வேண்டாம் - அதுல ஹிந்தி இருக்கு, கிராமப்புற மாணவர்கள் ஏழை, சோத்துக்கே கஷ்டப்படறவன்க்கு ஹிந்தி ஒரு கேடா?
புதிய கல்வி கொள்கை ஏன் எதிர்க்கறீங்க - கிராமப்புற மாணவர்கள் மூணு மொழி எல்லாம் படிக்க முடியாது....
மொத்ததில் கிராமப்புற மாணவர்கள், ஏழைகள், படிப்பறிவில் தாழ்ந்தவர்கள், குழத்தொழில் எல்லாம் கேவலமானது, அவர்களுக்கு..
என்ன லாஜிக்ங்க இது, இல்லே என்ன கொடுமைங்க இது.
பொதுவா கிராமத்தில் வளர்ந்தவர்களுக்கு ரோஷம் அதிகம்ன்னு கேள்விபட்டு இருக்கேன், இப்படி உங்களை ஒவ்வொரு மீடியாவும், அரசியல்வாதியும், வேடதாரிகளும் கேவலப்படுத்தறாங்களே..
அவர்கள் எந்த விதத்தில் குறைச்சல்?
அப்போ அவங்களுக்கு மொழி ஒரு பிரச்சனை இல்லை தானே.
திலகவதி என்னும் @PTTVOnlineNews நெறியாளர் அப்பட்டமாக சோத்துக்கு வழியில்லாதவனுக்கு ஹிந்தி ஒரு கேடான்னு கேட்பது ..
நவோதயா பள்ளிகள் உண்டு உறைவிட பள்ளிகள் என்ற உண்மை கூட அறியாத இவர்கள் எல்லாம் எதில் சேர்த்தி.
மாவட்டத்துக்கு மூணு தானே என்று ஒரு உபகேள்வி. போன வாரம் கூட இரு புதிய மாவட்டங்கள் உதயமானது.
இன்று பரப்பளவில் மாவட்டங்கள் சிற்றூர் அளவிற்கு
சென்னையில் இருக்கும் பெரிய வேடதாரிகளுக்கு என்றுமே கிராமம் என்றால் பஞ்சபராரிகள் வாழும் இடம் என்ற எண்ணம். எங்கே அவர்கள்..
இன்னொரு உண்மை, இன்று புதிய சிபிஎஸ்சி, இன்டெர்நேஷ்னல் பள்ளிகள் இடப்பற்றாகுறை காரணமாக அருகில் உள்ள கிராமங்களில் கிளை பரப்பி வருகின்றதே, அங்கேயும் வசதியுள்ள மாணவர்கள்
இது எதோ லட்சத்தில் ஒருவர் என்று நினைக்க கூடும், ஆனால் எண்ணற்ற அரசு பள்ளி மாணவர்கள் 8வது வரை இப்படி தான் கற்பிக்க படுகின்றனர் என்பதே
அவன் கற்றது சரியா பிழையா என்று ஒரு மதிப்பீடு இருந்திருந்தால் என்ன தவறு நேர்ந்திருக்கும்.
அதே மாணவன், ITI எப்படி தேறினார் என்பது சொன்னால் அது இன்னும் கொடுமை. ...
படிப்பறிவினை பற்றி எதாவது சொல்ல வந்தால், சிஸ்டம் சரியில்லை என்று சொல்லிவிட்டு அதை நிவர்த்தி மட்டும் செய்யவே கூடாது என்பது ஓரவஞ்சனை தானே?
கற்கும் கலைஅறிவியல் கல்விக்கு குரல்கொடுக்க சொன்னால், மருத்துவம் கிடைக்காதவன் தானே பிகாம் படிக்கிறான் என்று பேசும் அறிவிலிகளை என்னவென்று சொல்வது.
தொழிற்கல்வி படித்தால் என்ன..
வாய்ப்புகள் ஏராளம்
மொத்தத்தில் இன்னொரு முறை கிராமப்புற மாணவர்கள் லாயக்கு இல்லாதவர்கள் என்று இனி யாரெனும் சொன்னால், பதில் சொல்ல வேண்டியது உப்பு போட்டு சாப்பிடும் எனதருமை கிராமப்புற
சற்றே மூர்க்கமாக வார்த்தையில் பதில் சொல்லி, செயலில் ஜெயித்து காட்டுவீர்கள் என்று திடமாக நம்பும் உங்கள் நிஜமாகவே நேசிக்கும் உற்ற நகர்ப்புற தோழன். வாழ்க ஜனநாயகம். வளர்க இந்தியா.