வாகன சந்தையின் இறங்குமுகம் உண்மையா? ஓர் அலசல்

கடந்த சில மாதங்களாக ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சியில் உள்ளது என்ற கருத்து பரவலாக பரப்பப்படுகிறது

ஆனால் சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்த பாடில்லை

புது வாகனங்கள் பதிவு செய்வதும் முற்றிலும் குறைந்ததாக தெரியவில்லை

பின் எப்படி?
ஆங்கிலத்தில் சொல்வார்கள், there is a saturation point for every market

ஒரு கட்டத்தில் அனைத்து சந்தைகளும் அதன் முழு கொள்ளளவை எட்டிவிடும்

இதற்கு காரணிகள் பல்வேறு

1. புதிய மாற்றங்கள் கொண்டுவர இயலாதது - Resistance to Change
2. பழைய பொருட்களின் நிலைத்தன்மை - Reliability
3. அரசின் பொருளாதார கொள்கை - Economic Policies
4. போட்டிக்கான சந்தை - Competitive Market

என்ற இந்த நான்கை மட்டும் பார்ப்போம்

1. புதிய மாற்றங்கள் கொண்டு வர இயலாதது

2 வருடங்களுக்கு முன் வந்த செல்போனே இன்று தொழில்நுட்பத்தில் பின் தங்கி விடுகிறது. 4G, RAM, Inbuilt Memory
கேமிரா என அடிப்படை தேவைகள் சார்ந்து மக்கள் தேர்ந்து எடுக்கின்றனர்.

ஆனால் இரண்டு வருடம் முன்வந்த ராயல் என்பீல்டு பைக்குகள், தற்போதும் கலர் மட்டுமே மாற்றப்பட்டு புதிதாக ஜொலித்தால் எங்கனம் மக்களை கவர முடியும்

அதே வேளையில் மக்களின் தேவை என்ன என்பதையே புறக்கணித்து தன்னிடம்
என்ன உள்ளதோ அதையே விற்க முனைகின்றனர்.

அத்தகைய தேவைகளில் முதலாமவது பெட்ரோல் சிக்கனம், பாதுகாப்பான, சொகுசான பயணம்

இதில் கடைசி வார்த்தையான சொகுசை மட்டுமே வாகன தயாரிப்பாளர்கள் கவனம் கொள்வது போல் உள்ளது

இதில் விதிவிலக்காக ஹீரோ பைக்குகள் i3s என்னும் பெட்ரோல் சேமிப்பு
தொழில்நுட்பம் புகுத்தியதால் அதன் சந்தை பங்கு சற்றும் குறையவில்லை, அதே போல் பஜாஜ் பைக்குகளில் அதிக மைலேஜ்(85 KMPL) தரும் பிளாட்டினா பைக்குகள் இன்றும் அதிக விற்பனை கொண்டுள்ளது

பஜாஜ் டீலர் ஒருவரிடம் கேட்டறிந்த பொழுது, இன்றும் சற்றும் தொய்வில்லாமல் விற்பனை உள்ளது, பிளாட்டினா, பல்சர்
என்ற இரு வாகனங்கள் உள்ளவரை எங்களுக்கு பயமில்லை என்று தெரிவிக்கிறார்.

டிவிஎஸ் பைக்குகளை பொருத்தவரை அவை பெரிதளவில் மக்களை ஈர்க்கவில்லை என்றே தோன்றுகிறது. புதிய அறிமுகம் கூட ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கின் காப்பி என்றே அறிமுகப்படுத்த படுகிறது, புதிய மொந்தையில் பழைய கள்ளு.
அதே வேளையில், பஜாஜ் பிளாட்டினா பைக்குகள், அதிக சாலை பாதுகாப்பு திறன், சற்றே சொகுசான பயண வசதி முன்வைத்து புதிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது

மற்றோரு புறம் சற்றே விலை குறைவான பலசர் 125cc பைக்குகள் அறிமுகம் செய்துள்ளது.

மாற்றம் ஒன்றே நிலைபெற வைக்கின்றது
அதே போல கார்களில், அதிக மைலேஜ் தரும் ஹோண்டா சிட்டி, மாருதி வகையறா இன்றும் சந்தையில் மவுசுடன் விற்று இருக்கின்றன

புதிய அறிமுக தயாரிப்புகளான, KIA மற்றும் MG க்கு இருக்கும் வரவேற்பு இந்த கணக்கில் கொள்ள இயலாது.

நிற்க, இது மட்டுமே போதுமா?

2000 உதிரிபாகங்கள் கொண்டு ஒரு மோட்டார்
சைக்கிள் தயாரிக்க முடியும் ஒரு நிறுவனத்தால், சுமார் 200 சொச்சம் உதிரி பாகங்கள் கொண்ட ஒரு எலெக்ட்ரிக் வாகனம் தயாரிக்க இயலாதா? அதனால் ஏற்படும் சரிவை ஈடுகட்ட இயலாதா?

மனமில்லை என்ற ஒற்றை காரணமின்றி வேறு என்ன இருக்க முடியும்

அடுத்த கட்ட நகர்விற்கு தன்னை ஆட்கொள்ள முயலாதது தான் -
- மிகப்பெரிய காரணம்

பெருகி வரும் வாகன போக்குவரத்தில் மக்கள் பெட்ரோல் மீது செய்யும் செலவை குறைக்க முயல்கின்றனர். ஆனால் வாகன தயாரிப்பாளர்கள் அதை பெரும்பாலும் கண்டுகொள்வதே இல்லை

Dont push me what u have, serve me what i need என்பதே இதன் தீர்வு
2. பழைய பொருட்களின் நிலைத்தன்மை

இது ஒரு முக்கிய காரணம், பெரும்பாலும் யாரும் கண்டு கொள்வதில்லை

முன்னர் புதிய வாகனம் விற்க இருந்த டீலர்கள் போலவே, இன்று பழைய வாகனங்கள் விற்க ஷோரூம்கள் திறக்கபட்டுள்ளன

அதுபோக இன்று சாலையில் ஓடும் வாகனங்கள் பலவும் சுமார் மூன்று ஆண்டுக்கு முந்தையவே.
சர்வீஸ் சென்டர்கள் அதிகரித்த அளவுக்கு இன்று சாலையோர மெக்கானிக்களும் அதிகரித்து விட்டனர்.

இதுவும் ஒரு பெரிய சந்தையை.

மாருதி, ஹூண்டாய் போன்ற நிறுவனங்களே கூட USED CAR ஷோரூம் திறந்துள்ளனர்.

80 ஆயிரம் விலையில் வாங்கும் ஒரு பைக், ஐந்து வருட வாரண்டியுடன் சுமார் 15 வருடம் உழைக்கும்
என்கையில், புதிய வாகனங்கள் சற்று தேக்க நிலையை அடையும் என்பதே உண்மை.

ஐந்து வருடம் முன் வாங்கிய 60 ஆயிரம் விலையில் உள்ள ஒரு ஐபோன் இன்று ஸ்பேர்ஸ் கிடைக்காது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

வாகன உற்பத்தியாளர்கள் இதை கருத்தில் கொண்டு தான் பழைய வாகனங்களின் ஆயுளை 15 வருடமாக குறைக்க
அழுத்தம் கொடுத்துள்ளனர்.

ஆனால் சட்டம் போட்டால் நம்நாட்டில் இது நடவாது

ஒரு பொருளை வாங்கியவர் அதன் முதலீடை திரும்ப பெறுவது அவர் உரிமையே

இதற்கு பதில் மூன்று உத்திகள் உள்ளன

ஒன்று தயாரிப்பாளர்களே அந்த பொருளை அதிக விலைக்கு திரும்ப வாங்கி, பதில் புதிய வாகனம் விற்று
பழைய வாகனம் மீண்டும் சந்தையில் வராதவாறு முடக்குவது, படிப்படியாக ஸ்பேர்களை சந்தையில் இருந்து நீக்குவது

இரண்டாவது புதிய விலைகுறைந்த ஆயுள்திறன் குறைந்த வாகனங்களை களம் இறக்குவது

மூன்றாவது வாகன இன்சூரன்ஸ், அதை ஹெல்த் இன்சூரன்ஸ் போன்று வயது கூட கூட ப்ரீமியம் அதிகரிப்பது.
இங்கு தேவையின் கருத்தில் தான் விற்பனை உயரும்

3. அரசின் கொள்கை முடிவு

இது சற்று ஆரோக்கியமாக விவாதம் செய்யப்பட்ட வேண்டியது

பட்ஜெட் வெளியான உடன், நான் இதே கருத்தை வெளிப்படுத்தி உள்ளேன்

சந்தையில் இல்லாத பொருளுக்கு சலுகைகள் அறிவிப்பது எப்படி ஒரு நல்ல முடிவாக இருக்க முடியும்
புதிய உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க எடுக்கும் முயற்சில் பாதியேனும் பழைய உற்பத்தியாளர்களுக்கு பகிர்ந்து அவர்களை எலெக்ட்ரிக் வாகனம் தயாரிக்க ஊக்குவித்தாலோ, 75kmpl மேல் மைலேஜ் கொண்ட வாகன தயாரிப்புக்கு சலுகைகள் அறிவித்து இருந்தாலோ நன்மை பயக்கும்

கவர்ச்சிகரமான அறிவிப்புகள் யாருக்கும்
பயனில்லாமல் கிடக்கின்றது. படிப்படியாக அறிவிக்க வேண்டிய திட்டம் ஒரே நாளில் சந்தையை புரட்டி போட்டு விட்டது

முன்பே வாகன உற்பத்தியாளர்கள், க்ளஸ்டர் கொண்டு செயல்படும் தன்மை கொண்டவர்கள்

அவர்களை சீண்டி தன் கையை கொண்டே தன் கண்ணை குத்த முயல்கின்றது அரசு

இந்த இறங்குமுகம் முழுக்க
உற்பத்தியாளர்களின் மிரட்டி பணிய வைக்கும் முயற்சி என்பதே என் கருத்து.

ஒரு நல்ல நோக்கம் அரசின் தவறான கொள்கை முடிவினால் பின்வாங்கும் நிலைக்கு தள்ளபட்டுள்ளது

அதே போன்று வாகன பதிவு, இன்சூரன்ஸ், FC கட்டணங்கள் பலமடங்கு உயர்த்தியதும் தவறே.

தேவைக்கு மேல் அதிக வாகனங்கள் உற்பத்தி
செய்யப்பட்டு தேங்கியதும், அதை அரசின் மேல் குற்றம் சொல்லும் உற்பத்தியாளர்கள் ஒரு புறம்,

எலெக்ட்ரிக் வாகனங்கள் என்ற போதையை, அறியாமல் மக்களிடையே ஆர்வகோளாறினால் விதைத்த அரசு மறுபுறம்

இவை இரண்டுமே இந்த இறங்குமுகத்தின் பெரும் காரணிகள்

இதை சரியாக பயன்படுத்தும் எதிர்கட்சியினர் தான்
கவனம் கொள்ள வேண்டியவர்கள்.

இப்போ ஏன் புது வண்டி வாங்கறீங்க, எல்லா பைக்கும் ஸ்டாக் அதிகமா இருக்காம், விலையை குறைப்பங்க, அப்போ வாங்குங்க என்றார் ஒருவர்

எவ்வளவுங்க என்றேன், புல்லட் எல்லாம் 1.5 லட்சத்துக்கு வருதாம் என்றார். அது விலையே அவ்வளவு தானுங்களே என்றேன்

இப்படி எதிர்மறை
கருத்துக்கள் பரவாமல் தடுக்க வேண்டியது யார் என்பதே கேள்வி

அரசும் இந்த ஐந்தாண்டு மட்டும் போதும் என்று எண்ணாமல் இனியும் நம் ஆட்சி தொடரும் , ஆகையால் எதையும் மெல்ல நடைமுறைப்படுத்தும் திட்டத்தை ஆராய வேண்டும்
4. போட்டிகான சந்தை

அதாவது, அதிக அளவு பயனாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய அதிக அளவு உற்பத்தியாளர்கள் போட்டியிடும் சந்தையை இப்படி குறிப்பிடும் படும்

இந்தியாவை பொருத்தவரை இது நன்கு ஆரோக்கியமான சந்தையாகவே உள்ளது

வெறும் நான்கு பேர், நாற்பது பேருக்கு பொருள் விற்கும் சந்தையாக இல்லாமல்
சந்தைக்கு ஏற்ப போட்டியாளர்களும் அவர்களுக்கு சமவாய்ப்பை தரும் சந்தையாகவும் உள்ளது

ஆனால் அதுவே புதிய மாற்றத்தை தடுக்கும் க்ளஸ்டர் உருவாகவும் காரணமாக உள்ளது.

மக்களின் தேவையை தீர்க்க முனையாமல் தாங்கள் தீர்மானிப்பதை மக்கள் ஏற்றுகொள்ள செய்யும் சந்தையாக உருவெடுத்துள்ளது
தான் கவலை
கொள்ள வைக்கின்றது

இருசக்கர மற்றும் கார் போன்றவை விற்பனை சரிவுக்கு காரணம் இருப்பினும், ட்ராக்டர், லாரிகள் போன்றவை இவற்றுள் அடங்காது

அவை கிட்டத்தட்ட monopoly ஒருசார் மார்க்கெட் என்னும் கட்டத்துக்குள் அடங்கும்

உலக அளவில் பொருளாதார மந்தநிலை, தேர்தல் காரணமாக தொய்வு,
பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு, அது பூர்த்தி செய்யா ஏமாற்றம், நேர்மறை கருத்துக்கள் பரப்பிடும் ஊடகங்கள் போன்றவையே மக்கள் செலவை தள்ளி போடுகின்றனர் என்று தோன்றுகிறது

இது ஒரு சிறு மந்த நிலையே, யாரும் வீட்டில் அடுப்பெரிய வேண்டாம் என்று நினைக்க மாட்டர். இயல்பாகவே மக்கள் தங்கள் தேவைகளை
கொஞ்சம் காலம் சுருக்கி பின்னர் நிலமை சீரானதும் பூர்த்தி செய்வர்

சாமானியன் இந்த தேக்கநிலை காரணமாக அவதியுற்றுள்ளான் என்றால் மிகையே. பொதுவாக மக்களுக்கு இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை

பண்டிகை காலங்கள் நெருங்கியதும் நிலமை சீராகும்

அதற்குள் உற்பத்தியாளர்களும், அரசும் இதை
ஒரு எச்சரிக்கை மணியாக எடுத்து கொண்டு திட்டங்கள் வகுக்க வேண்டும் என்பதே என் போன்ற சாமானியனின் எதிர்பார்ப்பு

தேனாறும் பாலாறும் ஓடாவிடினும் ஒரு அமைதியான பதட்டமில்லா நிலமை நிலவ வேண்டும்

எதிர்கட்சிகளும் (திமுக நீங்கலாக) பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். திமுகவிற்கு அத்தகைய
தகுதியோ மனப்பான்மையோ இல்லை என்பதே என் கருத்து

ஓலாவும் உபரும் சந்தையை ஆக்கிரமிக்கும் போது சந்தையும் அந்த மாற்றத்தை எதிர்கொள்ள முனைய வேண்டும். தேவையற்ற விவாதங்களை தவிர்த்து அரசும் கவனமாக கையாள வேண்டும். ஒரு சிறு நெருப்பும் பெரும் அழிவை விளைவிக்கும்.

நல்லதே நடக்கும் 🙏🙏
* எதிர்மறை கருத்துக்கள் பரப்பிடும் ஊடகங்கள்
Missing some Tweet in this thread?
You can try to force a refresh.

Like this thread? Get email updates or save it to PDF!

Subscribe to முகுந்தன் 🇮🇳 Mugundan
Profile picture

Get real-time email alerts when new unrolls are available from this author!

This content may be removed anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!