ஆனால் நீர்மூழ்கியில் இருந்து ஏவினால் கொஞ்சம் சிக்கல், கடல் அவ்வளவு பெரும் பாதுகாப்பு
சில நாடுகளிடம் நீர்மூழ்கியில் இருந்து ஏவபடும் டார்பிடோ ரக ஏவுகனைகள் உண்டு அவை குறுகிய தூரமே பாயும்,
ஆனால் ரஷ்யா நேற்று செய்திருக்கும் சோதனை ரஷ்யாவின் கடலில் இருந்து உலகின் எந்த மூலையினையும் தாக்கலாம்
அதாவது யுத்தம் வெடித்தால் ரஷ்ய நீர்மூழ்கிகள் உலகின் எந்த கடலில் இருந்தாலும் எந்த நாட்டையும் தாக்கலாம்,
கடலில் எந்த இடத்தில் இருந்து வரும் என தெரியாது, திடீரென எங்கிருந்தோ வந்து அடித்துவிடும்
திடீரென பெரும் சுறா பாய்வது போல் பாய்ந்து சென்று எதிரி நாடுகளை சிதறடிக்கும் இந்த ஏவுகனை
தான் வல்லரசாக நீடிக்கவும், எச்சூழலிலும் அமெரிக்காவுக்கு சவால் கொடுக்கவும் அதிரடி காரியங்களில் இறங்கியிருக்கின்றது ரஷ்யா
அமெரிக்கா எப்பொழுதுமே வித்தியாசமான நாடு,
ரஷ்யாவின் பலம் அதன் எண்ணெய், பெட்ரோலுக்கு எதிர்காலம் இல்லாமல் செய்துவிட்டால் ரஷ்ய கொட்டம் தானாய் அடங்கும் என திட்டமிடுகின்றது அமெரிக்கா
இவர்கள் ஏவுகனைகளால் பேசிகொண்டிருக்க, ரஷ்யாவின் பொருளாதாரத்தை எப்படி அடிப்பது என யோசித்து கொண்டிருக்கின்றது வெள்ளை மாளிகை..