பாமரர்களும் கர்நாடக சங்கீதத்தை ரசிக்க முடியும் என்ற நிலையை உருவாக்கியவர்.
பிண்ணணி பாடலே படத்திற்கு பிரதானம் என்ற தொடக்க காலங்களில் தன் காந்தர்வ குரலால்
ஒரே சமயத்தில் நாடகம், சினிமா, இசை என்று மூன்று குதிரைகளில் ராஜ பவனி வந்த பெருமை பாகவதருக்கு
எம்.கே தியாகராஜ பாகவதர் பற்றி அவரது ரசிகர்களிடம் கேட்டால் அப்படி உருகி சொல்வார்கள்
அப்படி பெரும் கூட்டம் அவருக்கு இருந்திருக்கின்றது
"எனக்கு பாகவதர் மாதிரி முடிவெட்டணும்"
"அது அவர் முடிக்கு தான் வரும்,உங்க முடிக்கெல்லாம் வராது..சொன்னா கேளு இல்லண்ணா மொட்டை அடிச்சி விட்டுருவேன்"
இன்னும் சில வாலிபர்கள் கொஞ்சம யோசித்து அடிக்கடி
காரணம் பாகவதருக்கு முன்நெற்றி வழுக்கை.
அக்கால கொண்டயிடும் (குடுமி) ஆண்களில், இவரைப்போல் கிராப் வெட்டி கிட்டதட்ட விகார அலங்கோலமாகி பின் மொட்டையிட்டவர்களும் உண்டு
அக்கால எம்.ஜி.ஆர், கமலஹாசன்,இம்ரான்கான் போல இவருக்கும் எண்ணெற்ற
ஒரு கலெக்டர் மகள் இவரிடம் பாடல் கற்றுகொள்ள ஏற்பாடு, முதல் நாள் பாடல் வகுப்பு முடியும் போது கலெக்டர் தலையில் இடிவிழுந்தது,
"எனக்கு பாகவதரை திருமணம் செய்து வைக்காவிட்டால் சாவுதான்" என்றாள் மகள்
"பிராணநாதா! உம்மை நேரிலே ஒரே ஒருமுறை தரிசித்துவிட்டால் போதும். மறுநொடியே தற்கொலை செய்து கொள்ளக் கூடத் தயார்" என்கிற ரீதியில் பெண்களின் கடிதங்கள் பாகவதரை மொய்த்த நாள்கள் உண்டு
அவருடைய ரசிகர்கள் பாகவதர் நடந்து வந்த பாதையில் உள்ள மண்ணை எடுத்துவைத்துக் கொள்வார்களாம்.
இன்னும் சில ரசிகர்கள் அவர் தொட்ட பொருட்களை முத்தமிட்டு
ரயிலில் பயணம் செய்ய நேர்ந்தால் ஆங்காங்கே பாகவதர் தரிசனம் கிடைத்தால் மட்டுமே ரசிகர்கள் ரயிலை செல்ல அனுமதிபபர்.அந்த அளவிற்க்கு பாகவதர் என்றால் அப்படி ஒரு மயக்கம்.ஒருசமயம் காரில் திருச்சியிலிருந்து புதுக்கோட்டை சென்று கொண்டிருந்தபோது, ரயில்வே கிராசிங் அருகே கார்
ரயிலையே நிறுத்தி மன்மதலீலை பாடலை பாடினால் மட்டுமே ரயிலை போக அனுமதிப்போம் என்று தங்கள் ஆசையை பூர்த்தி செய்து கொண்டனர்.
வெள்ளைக்குதிரை, அதன் மேல் ஒய்யாரமாக பாகவதர். மந்தகாசப் புன்னகையோடு
இது ஹரிதாஸ் படத்தில் இடம்பெற்ற காட்சி.பார்த்து கொண்டிருக்கும் பெண்கள் சொல்லுவார்களாம் "பாகவதர பாத்து ஓடுதாபாரு நானா இருந்தா ஓடிப்போய்
இன்னொரு படத்தில் "வதனமே சந்திரபிம்பமோ" பாடிகொண்டே 20 அடி தள்ளி நிற்கும் காதலிக்கு பறக்கும் முத்தம் கொடுப்பாராம், தியேட்டரில் ஆரவாரம் கூரை பிளக்குமாம்..
(அட பாவமே ஒரு பறக்கும் முத்தத்திற்கா...இது சன்னி லியோன் எல்லாம் தமிழில் நடிக்கும் காலமல்லவா நாம்
பாகவதர் தங்க தட்டுலதான் சாப்டுவாராம், பன்னீர்ல வாய் கொப்பளிப்பாராம், அரேபியா செண்ட் போடுவாராம், காஷ்மீர் குங்கும பூவுல தான் தூங்குவாரம் இன்னும் பல செய்திகள் வந்துகொண்டே இருந்தது.
திரையுலகம்,நாடக உலகம்,இசை உலகம் என மூன்று உலகங்களையும் ஆண்ட,
நீதிமன்றமும், பிரபல வக்கீல் எத்திராஜும் (எத்திராஜ் கல்லூரி நிறுவணர்) அவர் சொத்துக்களை எல்லாம் கரைக்க, மிக பெரும் சாம்ராஜ்ய சக்கரவர்த்தி போல
சினிமா கலைஞர்கள் கோடியில் புரளமுடியும் என முதலில் நிரூபித்து காட்டிய , பெரும் ரசிகர் பட்டாளமும், கிட்டதட்ட அரசனுக்கு உண்டான வாழ்வும் வாழ்ந்த பாகவதர்
ஒரு நொடியில் மாறுவதுதான் வாழ்க்கை
நிலாவில் இனி யாரும் கால் பதிக்கலாம், ஆனால் ஆம்ஸ்ட்ராங்கின் இடத்தை யாரும் மறைக்கமுடியாது, அப்படி ஆயிரம் ஸ்டார்கள் வந்தாலும் பாகவதருக்கு இருந்த மவுசே தனி.
அந்த பாகவதரின்பிறந்த நாள் இன்று
தமிழகத்தின் முதல் சூப்பர் ஸ்டார் அவர்தான்.
இவ்வளவு மக்கள் அபிமானமிக்க நடிகர்கள் அரசியலில் இருந்து தள்ளி இருந்திருக்கின்றார்கள். அதனால் அக்கால அரசியல் நன்றாய் இருந்திருக்கின்றது.
அவரின் வாழ்வு இன்று ஆட்டம் போடும் நடிகர்களுக்கெல்லாம் பாடம்.
அந்த திருச்சி சங்கிலியாண்டபுரம் கல்லறை, கோடம்பாக்க கும்பலுக்கான போதிமரம். அவர்களுக்கான ஞானம் அங்குதான் குடியிருக்கின்றது.