, 46 tweets, 6 min read
My Authors
Read all threads
வள்ளுவர் சர்ச்சை : பூணூலிஸ்டுகள் சொல்வது சரியா? (1)
"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" என்றார் பாரதி. வள்ளுவம் ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு இனம் என்பதற்கு அப்பால் உலகப் பொது மறை எனும் நிலையை எட்டிய ஒரு அறநூல் என்பதை ரத்தினச் சுருக்கமாக இப்படிச் சொன்னார் பாரதி
அவரை இன்று பூணூலிஸ்டுகள் இந்துத்துவச் சிழுக்குள் அடக்க முயல்வது அபத்தம். ஆனால் அதை அவர்கள் இன்று நேற்றல்ல நெடுங்காலமாகவே செய்து வருகின்றனர். முதலில் அதைச் செய்தவர் பரிமேலழகர் எனலாம். பார்ப்பனரான அவர் திருக்குறளுக்கு உரை எழுதுகிறேன் எனும் பெயரில் வேண்டுமென்றே இடையிடையே பார்ப்பனக்
கருத்துக்களைப் புகுத்தினார். நவீன சிந்தனையாளர்கள் சொல்வதுபோல எந்த உரையுமே இன்னொரு தனி நூல்தான் என்பதற்கு பரிமேலழகரின் உரை ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

சமீப காலத்தில் திருவள்ளுவருக்குக் காவிச்சாயம் பூசி நிறுத்த முயன்றவர் பா.ஜ.க எம்.பியாக இருந்த தாருண் விஜய். இந்த ஆள் ஆர்.எஸ்.எஸ்சின்
முக்கிய பத்திரிகையான 'பாஞ்சஜன்யா' வின் ஆசிரியராக இருந்தவர். இவர் எம்.பி ஆனவுடன் ஹரிதுவாரில் கங்கைக் கரையில் ஷங்கராச்சார்யா பார்க்கில் 'ஹர்கி பூரியில்' ஆதி சங்கரர் சிலைக்கு அருகாக வள்ளுவர் சிலையை அமைக்கப் போகிறேன் எனச் சொல்லிக் கொண்டு அடிக்கடி ஒரு கழுகு போலத் தமிழ்நாட்டிற்கு
வந்து வட்டமடித்துக் கொண்டிருந்தார். அவரது நோக்கம் திருவள்ளுவரை மதிக்க வேண்டும் என்பதெல்லாம் அல்ல. “அவர்களது நோக்கம் தமிழகத்துக்குள் . ஊடுருவுவதும், திருவள்ளுவரை இந்துத்துவ வலைக்குள் கொண்டு வருவதும்தான்" எனத் தலைப்பிட்டு நான் அப்போது எழுதியது சிலருக்கேனும் நினைவிருக்கலாம்..
ஆனாலும் இங்கே சில அரசியல்வாதிகள் இந்தச் சூழ்ச்சுமத்தை எல்லாம் கண்டுகொள்ளாமல் ஆவரைச் சந்தித்து அசடு வழிந்து கொண்டிருந்தனர்.

திருவள்ளுவர் சிலையெல்லாம் செய்தாயிற்று. ஆனாலும் கங்கைக்கரையில் 'ஷ'ங்கராசார்யா பார்கில் அதை நிறுவ எந்த முயற்சியும் இல்லை. சாதி, வருணம், தீண்டாமை ஆகியவற்றைக்
கட்டிக் காப்பாறுவதையே குறிக்கோளாகக் கொண்ட இவர்கள் ஒரு "வள்ளுவனின்" சிலையை ஷங்கராச்சார்யா பூங்காவில் வைக்கத் தயாராக இல்லை என்பதுதான் அதன் பின்னணியில் இருந்த இரகசியம். இறுதியில் காங்கிரஸ் முதல்வரான ஹரிஷ்ராவத் சிலையை control room central tower park ல் அமைத்தார்.
அவர்கள்தான் இன்று பூணூல். காவி எல்லாம் தடவி வள்ளுவரை நம் முன் நிறுத்த முயல்கிறார்கள்.
அப்படியானால் வள்ளுவர் இந்து இல்லையா?

வள்ளுவர் சர்ச்சை : பூணூலிஸ்டுகள் சொல்வது சரியா? (2)
உறுதியாக அவரை இந்து மதத்திற்குள் திணிக்க முடியாது. திருக்குறளின் கடவுள் வாழ்த்தை எடுத்துக் கொள்ளுங்களேன். "அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு" என்பது முதற் குறள். "ஆதிபகவன்" -என
இந்திய மதங்களில் சமண மதத்தின்அருகக் கடவுளைத்தான் குறிப்பார்கள்.
"மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார்" - என்பது கடவுள் வாழ்த்தில்ல் அமைந்துளள இன்னொரு குறள். அருகக் கடவுள் நடக்கும்போது அவரது பாதம் தரையில் படாமல் அங்கொரு தாமரை மலர் அதைத் தாங்கிக் கொள்ளும் என்பது
சமண நம்பிக்கைகளில் ஒன்று. மலர்மிசை ஏகினான் என இந்துக் கடவுளர் யாரையும் சொல்வதில்லையே !

காஞ்சிபுரம் அனந்தநாத நயினார் எனும் சமண அறிஞர், "திருக்குறள் ஆராய்ச்சியும், ஜைன சமய சித்தாந்த விளக்கமும்" எனும் நூலில் மிக விரிவான ஆய்வுகளின் அடிப்படையில் திருக் என்பதை குறள் ஒரு சமண நூல்தான்
நிறுவுவார். (இதை நீங்கள் tamilvu தளத்தில் தரவிரக்கம் செய்து படிக்கலாம்). இந்நூலுக்கு மதிப்பிற்குரிய தமிழறிஞர் திரு.வி.க அவர்கள் அற்புதமான ஒரு முன்னுரை எழுதியிருப்பார். அதிலும் அவர் திருக்குறளின் சமணப் பின்புலத்தை நிறுவி இருப்பார்.
எனவே இந்திய மரபுகளில் ஏதேனும் ஒன்றுடன் திருக்குறளை அடையாளம் காண முடியுமானால் அது சமண மரபாகத்தான் இருக்க முடியும்.

சமணத்தில் திருவள்ளுவரை "ஆச்சார்ய ஸ்ரீகுந்தகுந்தர்" என ஏற்று வணங்குவதும் இங்கு குறிப்பிடத் தக்கது.
வந்தவாசியிலிருந்து சுமார் ஆறு கல் தொலைவில் உள்ள பொன்னூர் எனும் கிராமத்தில் உள்ள மலையில் ஆச்சார்ய ஸ்ரீ குந்தகுந்தரின் திருப்பாத கமலங்கள் செதுக்கப்பட்டு வணங்கப் படுகின்றுன. நானும் சென்று தரிசித்து வந்துள்ளேன்.

திருக்குறளை பௌத்த நூல் எனச் சொல்வாரும் உண்டு.
பௌத்தத்திற்கும் சமணத்திற்கும் இடையில் சில பொதுமைகள் உண்டு. நுணுக்கமான வேறுபாடுகளும் உண்டு. இரண்டுமே பார்ப்பனீயத்தையும், அதன் வேள்விச் சடங்குகள் முதலானவற்றையும் கடுமையாக எதிர்த்தவை. சாத்தனார் அவரது பௌத்தப் பெருங் காப்பியமான மணிமேகலையில் குறைந்தது இரு இடங்களில் திருக்குறளை
எடுத்தாண்டிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது. நம்மிடையே வாழும் பௌத்தவியல் அறிஞரான மதிப்பிற்குரிய ஓ.ர.ந.கிருஷ்ணன் அவர்கள் திருக்குறளை ஒரு பௌத்த நூலாகவே முன்வைத்து வருகிறார். எனினும் இந்த ஓரம்சத்தில் மட்டும் எனக்கு அவருடன் கருத்து மாறுபாடு உண்டு.
இறுதியாக ஒன்று. அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கு புருடார்த்தங்களில் திருக்குறள் முதல் மூன்றுடன் நிறுத்திக் கொள்வதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். வீடு பேற்றை அது குறிப்பதில்லை.
வள்ளுவர் கிறிஸ்தவரா?
வள்ளுவர் சர்ச்சை : பூணூலிஸ்டுகள் சொல்வது சரியா? (3)

திருவள்ளுவரை கிறிஸ்தவர் எனச் சொல்வாரும் உண்டு. எனினும் அது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள இயலாத ஒன்று. ஒரு வகையில் ஏசுவும் வள்ளுவரும் ஒரே காலகட்டம் அல்லது வள்ளுவர் ஓரிரு நூற்றாண்டுகள் பின்னால் வந்தவர் எனலாம்.
கடந்த அறுநூறு ஆண்டுகளில் இங்கு மதம் பரப்பவும் ஆங்கிலேய நிர்வாகத்தின் ஊடாகவும் வந்த பாதிரிமார்களும், அதிகாரிகளும் திருக்குறளில் மயங்கினர். லத்தீனிலும், ஆங்கிலத்திலும் ஏராளமான மொழிபெயர்ப்புகள் திருக்குறளுக்கு வந்தன.
அந்த மொழியாக்கங்களின் முன்னுரைகளை வாசிக்கும்போது நாம் அசந்து போகிறோம்.

இந்த மொழியாக்கங்களில் முதலாவதாக வந்தவற்றுள் முக்கியமானது வீரமாமுனிவரின் லத்தீன் மொழியாக்கம். வீரமா முனிவர் எழுதியுள்ள இந்த உரையில் திருக்குறளை அவர் கிட்டத்தட்ட ஒரு கிறிஸ்தவ
நூலாகவே வளைத்துப் பொருள் கூறி இருப்பாr. எனினும் ஜி.யூ.போப் முதலான பிற்கால மற்றவர்களின் மொழியாக்கங்கள் அப்படி இருக்காது. பொதுவில் கிறிஸ்தவப் பாதிரிகளையும், வெள்ளை அதிகாரிகளையும் ஈர்த்த ஒரு நூலாகத் திருக்குறள் இருந்தது உண்மை.

எல்லாவற்றையும் தொகுத்துப் பார்க்கும்போது திருக்குறள்
சாதி, மதம், இனம் என அனைத்தையும் தாண்டிய ஒரு உலகப் பொது அறநூல் ஆக உள்ளது என்பதே உண்மை. அதை எந்த ஒரு மதச் சிமிழுக்குள்ளும் அடைக்க முடியாது.

தந்தை பெரியார் திருக்குறள் மீதும் பல விமர்சனங்களை வைத்துள்ளார். அவை அனைத்தும் ஏற்றுக் கொள்ளத் தக்கவையே. "தெய்வம் தொழாள், கணவன் தொழுதெழுவாள்
பெய்யனப் பெய்யும் மழை" என்பதை எல்லாம் இன்று எப்படி நாம் ஏற்றுக் கொள்ள இயலும். பெண் விடுதலைக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளித்த தந்தை பெரியாரின் விமர்சனத்தை நாம் எப்படிப் புறக்கணித்துவிட இயலும்?
எல்லாவற்றிற்கும் அப்பால் தமிழின் மாண்புமிக்க ஒரு பெருஞ் சொத்து திருக்குறள் என்பதில் ஐயமில்லை. இந்தப் பெருஞ் சொத்தைக் காவிகள் ஒரு பாம்பைப்போல நெளிந்து நெளிந்து வந்து 'லபக்'கிக் கொண்டு போவதை நாம் எப்படி அனுமதிக்க முடியும்?
#திருவள்ளுவர்
#Thiruvalluvar
“இந்திரன்” என்கிற கருத்தாக்கம் பிராமணத்திலும் சிரமணத்திலும் ஒன்றா?

வள்ளுவர் சர்ச்சை : பூணூலிஸ்டுகள் சொல்வது சரியா? (4)

திருவள்ளுவர் இந்து மதத்தில் அடக்கப்பட வேண்டியவர்தான். திருக்குறள் ஒரு இந்து சமய நூல்தான் என சாதிக்கும் முயற்சிகள் அபத்தமானவையாகவும் நகைச்சுவையாகவும் முடிவதற்கு
மேலும் ஒரு எடுத்துக்காட்டைப் பார்க்கலாம். இந்த சர்ச்சையின் பின்னணியில் ஒரு காணொளி பெரிய அளவில் பரப்பப் படுகிறது. மறைந்த துக்ளக் சோ திருக்குறள் இந்து மதநூல்தான் என ஏதோ ஒரு புத்தகத்தைக் கையில் வைத்துகொண்டு பேசும் ‘வீடியோ கிளிப்பிங்’தான் அது, அதில் அவர் ஒரு நான்கைந்து குறள்களைப்
படித்துக் காட்டி திருக்குறள் ஒரு இந்துநூல் என “நிறுவ” முயல்கிறார், அந்த முயற்சியின் ஊடாக அவர் தமிழகப் பண்பாட்டு வரலாறு, மத நம்பிக்கைகள் எல்லாவற்றிலும் எத்தனை அறிவுக் குறைபாடுடையவராக உள்ளார் என்பதைத்தான் வெளிப்படுத்துகிறார்.
“திருக்குறள் இந்துமத நம்பிக்கைகளைப் பல இடங்களில் பேசறது
எனத் தொடங்கும் அவர் அதற்குச் சான்றாகச் சில குறள்களையும் அவற்றுக்கான பொருள்களாக அவர் கருதிக் கொண்டிருப்பனவையையும் குறிப்பிடுகிறார், அவற்றில் சில:

“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேராதார்”
“ஐந்தவித்தான் ஆற்றல் அகல் விசும்புளார் கோமான் இந்திரனே சாலும் கரி.”
“அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டிவிடும்”
“தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம் அதனை அஃதிலார் மேற்கொள்வது”
முதலான சில குறள்களைப் படித்துக் காட்டி, பிறவிப் பெருங்கடல் என்பது இந்துமதக் கோட்பாடுதானே, இந்திரன் என்பது இந்து மதக் கடவுள்தானே,
தவம் என்பது இந்து மத வழக்கம்தானே... எனச் சொல்லி “திருக்குறள் ஒரு இந்துமத நூல்தான்” – என ‘நிறுவுகிறார்’ !
இந்திய மரபுகள், இந்திய மதங்கள் ஆகியன குறித்த பொதுப் புத்தியில் நிலவும் கருத்துக்கள்தான் இவை. “பிறவிப் பெருங்கடல்”, “தவம்” என்பனவெல்லாம் இந்திய மதங்கள் எல்லாவற்றிலும்,
அவ்வவற்றுக்குரிய தனித்துவத்துடன் பயிலப்படுகின்றன. இந்து நம்பிக்கைகளில் உள்ள தவம் மற்றும் தவமுனி என்கிற கருத்தாக்கங்களில் தவசி என்பவன் இறுக்கமான பிரம்மச்சாரியத்தைக் கடை பிடிப்பவன் அல்ல. ஆனால் சமண, பௌத்த அவைதீக மதங்களில் தவசி என்போர் முற்றும் துறந்தவர்கள்.
தவமுடையோரின் இறுக்கமான ஒழுக்க நெறிகளைச் சொல்வதுதான் திரிபிடகங்களில் ஒன்றான ‘விநயபிடகம்’. பௌத்தத் துறவிகள்இவ்வாறு இல்லற வாழ்விலிருந்து அகன்றவர்கள். ஆனால் இந்துமதத்தில் தவ முனிகள் என்போர் மனைவியுடன் வாழ்ந்தவர்கள். எடுத்துக்காட்டாக கோதம முனியை எடுத்துக் கொண்டால்
அவர் தன் அழகிய மனைவியான அகலிகையுடன் தவமிருந்தவர். ஆயிரம் கண்ணனாக இந்திரன் சபிக்கப்பட்ட புராணக் கதையில் இந்த அகலிகையை ஏமாற்றிப் புணர்ந்ததாலேயே அவன் கோதமரால் சபிக்கப்பட்டு ஆயிரம் கண்ணனாக வாழ வேண்டியவனாகிறான்.

இந்த இந்திரனும், சிரமண மரபில் வரும் இந்திரனும் ஒன்றல்ல.
சமண நூலாகிய சிலப்பதிகாரம், பௌத்த நூலாகிய மணிமேகலை இரண்டிலும் தொடக்கத்திலேயே இந்திரவிழா கொண்டாட்டங்கள் இடம் பெறுகின்றன.

சிலம்பில் புகார்க் காண்டத்தில் ஐந்தாவது காதையாகவும், மேகலையில் முதற் காதையாகவே “இந்திரவிழா ஊரெடுத்த காதை”யும் இடம் பெறுவது குறிப்பிடத் தக்கது.
சங்கத்தை ஒட்டிய காலத்தில் தமிழர்களின் வாழ்வில் இந்திர விழா மிக முக்கியமான பங்கு வகித்ததையே இது காட்டுகிறது. கிட்டத்தட்ட ஒருமாத காலம் கொண்டாடப்படும் திருவிழாவாக அது இருந்துள்ளது என்பர்.

பிறவிப் பெருங் கடல் எனும் கருத்தாக்கமும் இந்திய மதங்களுக்கு ஒரு வகையில் பொதுவானவையாகவும்,
அதே நேரத்தில் அவ்வவற்றுக்குள்ள தனித்துவங்களுடனும் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது. துறவுக்குரிய “ஏது”க்கள் (ஹேது) முகிழ்த்துப் பக்குவம் அடைவது பௌத்தத் துறவில் முக்கிய கருத்தாக்கமாக இருந்ததைப் பெருங்கவி சாத்தானார் விளக்குவதே மணிமேகலை எனும் மாகாவியம். இது வைதிக மதத்தில் கிடையாது.
“இப்போது இந்திரனே சாலும் கரி” – எனும் சர்ச்சைக்குரிய குறளை எடுத்துக் கொள்வோம். இந்து புராணங்கள் முன்னிறுத்தும் ‘இந்திரனும்’, சிரமண மதங்கள் முன்வைக்கும் ‘இந்திரனும் வேறு வேறு என்பதை மனங்கொண்டு மேலே தொடரலாம். இக்குறளுக்குப் பிராமண மரபில் வரும் பரிமேலழகர் சொல்லும் உரை இப்படி அமையும்
“ஐந்து அவித்தான் ஆற்றல் - புலன்களில் செல்கின்ற அவா ஐந்தனையும் அடக்கினானது வலிக்கு; அகல் விசும்பு உளார் கோமான் இந்திரனே சாலும் கரி - அகன்ற வானத்துள்ளார் இறைவனாகிய இந்திரனே அமையும் சான்று.” – அதாவது “ஐந்து புலன் நுகர்ச்சிகளையும் கட்டுப்படுத்தியவனது ஆற்றலுக்கு அகண்ட வானத்தில் உள்ள
இந்திரனே சாட்சி” என்கிறார் பரிமேலழகர். அதனூடாக இந்து புரான நம்பிக்கை ஒன்றை அவர் குறளுக்குள் திணிக்கிறார்.

ஐந்து புலன்களையும் அடக்கியவன் கோதமன். அவனது மனைவியை ஏமாற்றிப் புணர்ந்தவனான இந்திரன் தேவர் கோமானாக இருந்தபோதிலும், ஐந்து புலன்களையும் அடக்கியவனான கோதமனின் சாபத்தால் அவன்
அதன்பின் ஆயிரம் கண்ணனாக அவமானப்பட வேண்டியிருந்தது என்கிறார் பரிமேலழகர்.

ஆனால் கோதமர் ஐந்து புலன்களையும் அடக்கியவர் அல்லர். அவர் அழகிய மனைவியுடன் வாழ்ந்தவர். தவிரவும் விளக்கம் அளிக்கிறேன் எனும் பெயரில் மூலத்தில் இல்லாத ‘சாபம்’ எனும் கருத்தைப் புகுத்தி ஒரு வைதிக நம்பிக்கையை
இங்கே பரிமேலழகர் திணிப்பதை ஏற்க இயலாது.. இக்குறள் இடம்பெறும் அத்தியாயத்திற்கு “நீத்தார் பெருமை” என்பதே வள்ளுவர் இட்ட தலைப்பு. அதாவது முற்றும் துறந்தோரின் பெருமை. முற்றும் துறந்த முனிவர்கள் என்போரை ஆத்திரத்தில் சபிப்போர் என்பதாகச் சிறுமை செய்வதும் இங்கு பொருத்தமற்றது.
பரிமேலழகருக்கு மூத்தவரும் இன்னொரு முக்கியமான உரை ஆசிரியருமான மணக்குடவர் இப்படியான திருத்தல் வேலைகளைச் செய்யாது பொருள் விளம்பிய அறிஞர்.

அவர் இக்குறளுக்கு அளிக்கும் விளக்கம்:
“நுகர்ச்சியாகிய வைந்தினையுந் துறந்தானது வலிக்கு அகன்ற விசும்பிலுள்ளார்க்கு நாயகனாகிய இந்திரனே யமையுஞ் சான்று.

இந்திரன் சான்றென்றது; இவ்வுலகின்கண் மிகத் தவஞ் செய்வாருளரானால், அவன் தன்பதம் இழக்கின்றானாக நடுங்குமாதலான். இது தேவரினும் வலியனென்றது.”
சுருங்கச் சொல்வதானால் “ஐந்து புலன்களையும் அடக்கியவனை மிக்க வலிவுடைய இந்திரனும் கூட அஞ்சுவான்” என்பதையே இக்குறளின் நேரடிப் பொருளாக மணக்குடவர் முன்வைக்கிறார்.
வள்ளுவரை இப்படி இந்துத்துவச் சிமிழுக்குள் அடக்க முயலும் முயற்சியைச் செய்வோர்கள் அம்பலப்படுவார்களே ஒழிய அவர்கள் இம்முயற்சியில் வெற்றி பெற இயலாது...
#திருவள்ளுவர்
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with sivagsk

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!