அதில் உண்மையும் இருந்தது, மாவோ எனும் நரி மிக தந்திரமாக ஆடியது. அது சாதாரண நேரம் என்றால் நேரு நினைத்தது நடந்திருக்கும் ஆனால் அது சோவியத்தும் அமெரிக்காவும்
சீனபடைகள் நம் பகுதிகளை ஆக்கிரமிக்க முதல் காரணம் உளவுபடைகளின் தோல்வி, கார்கிலில் சறுக்கியது போலத்தான் அன்றும் சறுக்கியிருந்தோம்
இரண்டாம் காரணம் உண்மை நிலையினை சொல்லாமல்
பெரும் யுத்தத்தை சாதாரண கோஷ்டி தகறாறு போல செய்திகளை சொல்லிகொண்டிருந்தது அந்த கிருஷ்ணமேனனே.
போரை நடத்திய கவுல் என்பவர் காயம்பட்டு டெல்லிக்கு கொண்டுவரபட்டபின்னும்
இப்படி பெரும் குழப்பங்கள் ஏற்பட்டன, இந்தியதரப்பில் ஏற்பட்ட இந்த சறுக்கலால் சீனபடைகள் வெற்றிமுகம் காட்டின அருணாசல பிரதேசத்தின் தவாங் புத்தமத கோவிலை கைபற்ற குறிவைத்து நகர்ந்தன சீனபடை
வேறுவழி தெரியாத நேரு தவித்தார்,
அதற்குபின்புதான் நேரு கென்னடியின் உதவியினை நாடினார், அமெரிக்க விமானங்கள் ரகசிய உதவிபொருட்களை அளித்தன
அமெரிக்க செனட்டர் குழு டெல்லிக்கு வந்து அப்போதைய குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணனை சந்தித்தது,
கிருஷ்ணமேனமும், கவுலும் பெரும் மக்கள் வெறுப்புக்கு ஆளாயினர், நிலமை சிக்கலானது.
ஆயினும் அமெரிக்க தலையீடு வந்தபின் நிலமை மாறியது,
இந்த போருக்கு பின்னரே நேருவுக்கு சில உண்மைகள் விளங்கியது, ": “நாங்கள் நவீன உலகின் உண்மையில் இருந்து விலகி இருந்தோம்,
ஐநா சபையில் ஒரே ஆசிய நாடான சீனா பாதுகாப்பு சபையில் இடம்பெற உழைத்தவர் நேரு, ஆனால் மாவோவிற்கு அந்த நன்றி எல்லாம் இல்லை
இந்தபோர் பல அதிர்வுகளை ஏற்படுத்தியது, சீனா இனி நண்பன் இல்லை,
இந்தியா என்பது அதன் சொந்தகாலில் நின்றாகவேண்டிய தேசம் என்றேல்லாம் பொட்டில் அடித்து சொன்ன விஷயங்கள் இவை
இந்த சீனப்போரில் ஒரு இயக்கம் ஸ்கோர் செய்தது என்றால் அது ஆர்.எஸ்.எஸ் இயக்கமே.
வேறுவழியின்றி நேருவும் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்
இந்த சம்பவங்கள் எல்லாம் நேருவின் மனதை பாதித்தன,அதன் பின் உற்சாகமான நேரு இல்லை,அப்படியே நோயில்
அதன் பின் சாஸ்திரி வந்தார், இப்பொழுது அடித்தால் இந்தியாவினை வெல்லலாம் என்ற கணக்கிட்ட பாகிஸ்தானை ஓட விரட்டியது இந்தியபடை, காரணம் அப்பொழுது கிருஷ்ணமேனன், கவுல் என்பவர்கள் எல்லாம் களத்தில் இல்லை
இச்சம்பவங்களை ஒன்றுவிடாமல் மனதில் இருத்தி,
தன் தகப்பன் விட்ட தவறுகளை எல்லாம் இந்திரா சரிசெய்தார். எதில் எல்லாம் நேரு சறுக்கினாரோ அதில் எல்லாம் இந்திரா மின்னினார்
பலமான உளவுபடை, பலமான ராணுவம் என புதிய இந்தியா பிறந்தது, அடுத்த 8 ஆண்டுகளில் பாகிஸ்தானை பிளந்து போட்டது இந்தியா
இந்த நவம்பர் 22 இத்தேசத்தின் வடு பதிந்தநாள்.இனி ஒருபோதும் அப்படி ஒரு சம்பவம் நடக்கவிடமாட்டோம் என இந்தியா உறுதி எடுத்துகொண்ட நாள்
அப்படி ஒருநாள் இனி வராது,வருவதற்கு எந்த இந்தியனும் விடபோவதில்லை
வந்தே மாதரம் 🇮🇳