இராமானுஜன்
எதிராசன்
பவிஷ்யதாச்சார்யன்
உடையவர்
கோதாக்ரஜர்
எம்பெருமானார்
ஜகதாசார்யன்
திருப்பாவை ஜீயர்
என்றெல்லாம் இராமானுஜரைப் எல்லோரும் அன்புடன் அழைத்தனர். ஆனால் திருவரங்கத்து அமுதனார், இராமானுஜ நூற்றந்தாதியில், "இராமானுசா" என்ற நாமத்தை தான், 108 முறை அழைத்துள்ளார்.
மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா, உலகோர்கள் எல்லாம்
அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே
நண்ணரு ஞானம் தலைக்கொண்டு, நாரணற்கு ஆயினரே
#Ramanujanootrandadhi #ThiruvarangathuAmudhanAr #SriRamanuja
கூரத்தாழ்வான் திருவடிகளே சரணம் 🙏
இராமானுஜன் திருவடிகளே சரணம் 🙏