V Murali Madhavan Profile picture
பூர்வீகம் - ஓசூர் (வந்தவாசி அருகில்) ஆட்செய்த ஆழிப்பிரானைச் சேர்ந்தவன், மேலாத் தாய்தந்தையும் அவரேயினியாவாரே 🙏 நாலாயிரமும் அடியோங்கள் வாழ்வே !
Dec 25, 2023 4 tweets 1 min read
ஆண்டாள் திருப்பாவையில் "மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்" என்று பாடுகிறாள். அடியேன், உபந்யாஸத்தில் கேட்டவையை இங்கு பகிர்கிறேன். முடிந்தவரை அவன் நாமத்தை கூறுங்கள். நாமஸங்கீர்த்தனமே கலியில் நம்மை உய்விக்கும் வழி.
#NamaSankeerthanam #ThirupPAvai Image காலையில் எழுந்திருக்கும் பொழுது "ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி" என்று ஏழு முறைக் ஹரிநாமத்தை உச்சரித்து எழுந்திருக்க வேண்டும்.

ஸ்நானம் (குளியல்) செய்யும் பொழுது "புண்டரீகாக்ஷ" என்று அவனை அழைக்கவேண்டும்.

எம்பெருமானுக்கு ஸமர்பித்த பிரசாதத்தை உட்கொள்வதற்கு முன் "கோவிந்தா கோவிந்தா
Oct 5, 2021 6 tweets 2 min read
Rig Veda Ghana Parayanam is being performed by Ruthviks daily at Chitlapakkam for 100 days. Adiyen's close friend Sri. Ramkumar Sharma is organizing this parayanam with the blessings of Maha Periyavaa. Sri. Ramkumar needs each one of your support. 40 days of Parayanam completed. 60 more days to go. Adiyen got an opportunity to attend this Parayanam on Sunday. Sri. Ramkumar invited Adiyen, as Adiyen's Acharyan graced the Ghana Parayanam. Acharyan enjoyed the Parayanam, was recollecting memories from his poorvashramam days where Acharyan used to travel to
Jun 3, 2020 19 tweets 3 min read
#NamAzhwAr #Thirunakshthram
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: 🙏

முன் உறைத்த திரு விருத்தம் நூறு பாட்டும்
முறையில் வரும் ஆசிரியம் ஏழு பாட்டும்
மன்னிய நற்பொருள் பெரிய திருவந்தாதி
மறவாத படி எண்பத்து ஏழு பாட்டும்
பின் உரைத்ததோர் திருவாய்மொழி எப்போதும்
பிழையற ஆயிரத்தொரு நூற்றிரண்டு பாட்டும் இந்நிலத்தைல் வைகாசி விசாகம் தன்னில்
எழில் குருகை வருமாறா இரங்கு நீயே
- ப்ரபந்தசாரம் ஸ்ரீ வேதாந்த தேசிகன்

உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பொரு நாள்
உண்டோ சடகோபர்க்கு ஒப்பொருவர் - உண்டோ
திருவாய்மொழிக்கு ஒப்பு, தென்குருகைக்கு உண்டோ ஒரு பார்தனில் ஒக்கும் ஊர்
Apr 20, 2020 18 tweets 2 min read
#SriRamanuja
ஸ்ரீமதே ராமானுஜாய நம:

இராமானுஜரின் 1003 வது திருநக்ஷத்திரப்பூர்த்தி நெருங்கிக் கொண்டிருக்கிறது (April 28th 2020). இதை ஒட்டி அவரின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளை பகிர்ந்து, நினைவுப்படுத்தி, அடுத்து வரும் 10 நாட்கள், அவரின் நினைவில் திளைப்போம் 🙏 திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப்பெருமாளின் அருளாலும், ஸ்ரீ காஞ்சி தேவப்பெருமாளின் அருளாலும், ஸ்ரீ கேசவ சோமயாஜிக்கும், ஸ்ரீ காந்திமதி என்கிற பூமிபிராட்டிக்கும் திருமகனாக இளையாழ்வார், 1017 ஆம் வருடம், சித்திரை திங்கள், சுக்லபக்ஷம் பஞ்சமி திதியில், குருவாராம் கூடிய சுபதினத்தில்,
Apr 12, 2020 6 tweets 2 min read
கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும்
கடல் ஞாலம் அவேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கீண்டெனும் யானே என்னும்
கடல் ஞாலம் முண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலத் தீசன்வந் தேறக் கொலோ?
கடல் ஞா லத்தீர்க் கிவையென் சொல்லுகேன்
கடல் ஞா லத்தென் மகள்கற் கின்றனவே? பொருள்:
கடலோடு கூடிய ஜகத்தை வேறு எந்த உதவிகள் தேவையின்றி ஸ்ருஷ்டித்தவன் நானே
ஸ்ருஷ்டித்தப்பிறகு அவைகளில் அநுப்பிரவேசித்து அதன் ஆத்மாவாக நிற்பவனும் நானே
மஹாபலியிடமிருந்து தேவை என்று இரந்து அளந்து கொண்டேனும் நானே

#திருவாய்மொழி #பராங்குசநாயகி #படித்ததை_பகிர்கிறேன் #எவ்வுள்கிடந்தான்
Apr 7, 2020 4 tweets 2 min read
#காயத்ரி_த்யான_ஸ்லோகம்

முக்தாவித்ரும ஹேமநீல தவளச் சாயை: முகைஸ் த்ரீக்ஷணை:

யுக்தாமிந்து கலாநிபத்த மகுடாம் தத்வார்த்த வர்ணாத்மிகாம் |

காயத்ரீம் வரதாபயாங்குஶ கஶா: ஶூப்ரம் கபாலம் குணம்

ஶங்கம் சக்ர மதாரவிந்த யுகளம் ஹஸ்தைர் வஹந்தீம் பஜே ||

#படித்ததை_பகிர்கிறேன் Source: EvvulKidanthan Magazine, Feb-Mar2020

இது ஸந்த்யா வந்தனத்தின் போது, தினமும் மூன்று வேலைகளிலும் காயத்ரி ஜபத்தின் முன்பு சொல்லப்படும் த்யான ஸ்லோகம்.

பொருள்: காயத்ரி தேவிக்கு ஐந்து முகங்கள் . அவை முத்து, பவழம், தங்கம், நீலமணி இவைகளுடன், வெள்ளை நிறத்துடன் ஐந்து நிறங்களைக்
Dec 5, 2019 6 tweets 2 min read
இளையாழ்வார்
இராமானுஜன்
எதிராசன்
பவிஷ்யதாச்சார்யன்
உடையவர்
கோதாக்ரஜர்
எம்பெருமானார்
ஜகதாசார்யன்
திருப்பாவை ஜீயர்
என்றெல்லாம் இராமானுஜரைப் எல்லோரும் அன்புடன் அழைத்தனர். ஆனால் திருவரங்கத்து அமுதனார், இராமானுஜ நூற்றந்தாதியில், "இராமானுசா" என்ற நாமத்தை தான், 108 முறை அழைத்துள்ளார். இவர் இராமானுஜரின் மற்ற நாமங்களை பாசுரங்களில் குறிப்பிடவில்லை. ஸ்ரீமதே ராமானுஜாய நம: என்ற நாமம், திருமந்திரத்தை விட ஏற்றம் பெற்றது என்று பல பூர்வாசார்யர்கள் நமக்கு எடுத்துக் கூறியுள்ளனர். இந்த நாமம், நமக்கு மோக்ஷ ப்ராப்தி தரும் வல்லமை பெற்றது, நாராயணனின் பாதார விந்தத்திலே
Nov 26, 2019 16 tweets 6 min read
சப்த பிரகார மத்யே சரசிஜ முகளோத்பா சமாநே விமாநே
காவேரி மத்யதேச ம்ருதுதர பணிராட் போக பர்யங்கே பாகே
நித்ரா முத்ரா பிராமம் கடி நிகட சிர பார்ச்வ வினயச்த ஹஸ்தம்
பத்மாதாத்ரீ கராப்யாம் பரிசித சரணம் ரங்கராஜம் பஜேஹம் 🙏
#ஸ்ரீரங்கநாதஸ்தோத்ரம் #ஸ்ரீபராசரபட்டர் #Srirangam #Divyadesams #Trichy கடந்த வாரம் சனி மற்றும் ஞாற்றுக்கிழமை இனிதே சென்றது. ஆம். பூலோக வைகுண்டத்தில். அன்று ஏகாதசி. விஸ்வரூப தரிசனம், அரங்கனின் கடாக்ஷம் கிடைக்கப் பெற்றோம் . ரங்கநாயகி தாயாருடைய கடாக்ஷமும் நிரம்பப் பெற்றோம். இதோ இங்கே அரங்கனின் கம்பீரமான கோபுர தரிசனம் - "ஸ்ரீரங்கா ஸ்ரீரங்கா ஸ்ரீரங்கா"🙏