My Authors
Read all threads
கிரகணம் என்பது பற்றி அறிஞர்கள் காலை முதல் தொலைக்காட்சியில் பேசினார்கள்.. சரி. நம் ஸநாதன தர்மத்தை போதிக்கும் வேளுக்குடி ஸ்ரீ க்ருஷ்ணன் அவர்களின் விளக்கத்தைக் கேளுங்கள்.

அறிவியல் முன்னேற்றம் கண்டதாகக் கூறப்படும் இன்றே, இந்த வானவியல் நுட்பம் சரியாக நமக்குப் புரியவில்லை என்கையில்,
அக்காலத்தில் இதை எல்லோருக்கும் எடுத்துச் சொன்னால் புரிந்திருக்குமா என்பது சந்தேகமே. எனவே, குழந்தைக்குக் கதை சொல்வது போல் சொல்லி இருக்கிறார்கள். அவ்வளவுதான்.

அடுத்து, அன்றைய கால வாழ்க்கை முறை வேறு. (அந்நியப் படையெடுப்பின் வந்த குழப்பத்தைப் பற்றி இங்கே கூறவில்லை.)
அன்றைய நிலையில் படிப்பை மேற்கொள்ள விரும்பியவன் பிராமணன் ஆனான். அவனுக்கு அனைத்துப் படிப்பும், அறிவியல் பூர்வமாக கற்றுத்தந்தனர். அதைவைத்து, அது சார்ந்த வேலைகளை அவன் செய்தான்.

அதே போல்அரசியல் மற்றும் போர் பற்றி முழுமையாய் பயின்று க்ஷத்ரியனானான்.
அதையொட்டிய வாழ்வை வாழ்ந்தான். தொழில்நுட்பம் கற்று முதலாளியாய் தொழிலை மேற்கொண்டவ வைசியனானான். அவ்வண்ணமே சூத்திரனும், அனைத்துத் தொழில்நுட்பக் கருவிகளைத் தயாரிக்கும் சூத்திரம் பயின்று, சூத்திரதாரியாய் திகழ்ந்தான்.

இதில் எந்தவித வாழ்க்கை முறையை யார் மேற்கொள்ள வேண்டும்
என்ற கட்டுப்பாடு இல்லை முதலில். ஒரே குடும்பத்தில் நான்கு வர்ணத்தினரும் இருந்தனர். பின்னர், முன்னோர் மேற்கொண்ட வாழ்க்கை முறையைத் தலைமுறையாகத் தொடர்ந்து, அவ்வழி வாழ்வது சுலபமாக இருந்ததாலும், ஒரேவித வாழ்க்கை முறை மேற்கொண்டோரோடு கூடிவாழ்தல் நல்ல பலமாய் ஆனதாலும்,
ஒரே வர்ணத்தினர் ஒன்றாய் வாழ ஆரம்பித்தனர். இதில் அவர்களுக்குள் பிரச்சனை ஏதும் எழவில்லை.

அடுத்ததாக, அவரவர் தன் வாழ்க்கை முறைக்குத் தேவையானவற்றை அதிகம் படித்து முன்னேறினர். இன்றைய நமது ஆசிரியர் போல், அன்று பாடம் பயிற்றுவிக்கும் தொழில் செய்தவன் பிற வர்ணத்தவருக்கு, அவர்கள் முன்னேற
தேவையானதைக் கற்றுத் தந்தான். அவன் ஆசிரியப்பணி செய்ததால் அனைத்தும் சரியான முறையில் அறிந்துகொள்ள வேண்டியவன். எனவே அவனுக்கு மதிப்பு அதிகம் இருந்தது. அவ்வளவே....

இதில் அவரவர் சம்மந்தப்பட்ட தொழில்நுட்பங்களைத் தான் அவரவர் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். அரசாள்பவன், அந்நாட்டுக்கு
பாதுகாப்புத் தர, நிலவியல், எவ்விடத்தில் எக்காலத்தில் போர் தொடங்க வேண்டும் என அறிய வானசாஸ்திரம், நாட்டின் பொருளாதாரம் அறிய தொழில்கல்வி, உழைக்கும் மக்களின் தேவை அறிய தொழில்நுட்பம் போன்றவற்றை சற்று கற்றுக்கொண்டாக வேண்டும். எனவே கற்றான்.

இதில் மற்ற இரு வர்ணத்தாருக்கு, தொழில்முறை
மற்றும் தொழில்நுட்பம் மட்டுமே பிரதானமாதலால் அதனை மட்டும் நன்கு கற்றான். அவ்வளவே. அதனால், அவர்கள் வாழ்க்கை முறைக்குத் தேவையற்ற பாடத்தைச் சொல்லித் தரவில்லை. உண்மையில் அவர்களுக்கு அது தேவையும் இல்லை. எனவே கூறவில்லை.

பிராமணன் நல்வழிக்கே ஏதும் கூறுவான் என்பதால், அவர்களும்
அவர்கள் சொற்படி நடந்து வாழ்க்கையைச் சுலபமாக வாழ்ந்தனர். அப்படியும் சிலர் தங்கள் விருப்பத்தினால், தான் விரும்பும் வர்ணத்து வாழ்க்கை முறையைத் தேர்ந்து, முறையாய்ப் பயின்று, செவ்வனே வாழ்ந்தார்கள். அங்கே குழப்பபே வரவில்லை.....

பிற்காலத்தில் வந்த பல குழப்பங்கள், பலர் செய்த தவறுகள்,
நம் வாழ்க்கை முறையை மாற்றியது. இன்று விதண்டாவாதம் தான் அதிகம் உள்ளது. அது நம்மைச் சீரழிவை நோக்கி இட்டுச் செல்லும். நீ எந்த படிப்பு படிக்க விரும்பினாலும், படி... யாரும் மறுக்கவில்லை. ஆனால், ஜம்பத்துக்காகவோ, தற்பெருமைக்கோ படிக்க்காதே.

உண்மையான ஆவலோடு, முழு கவனமும் படிப்பில் தந்து
விரும்பிய துறையில் முன்னேற வேண்டும் என்ற வெறியோடு படி. நன்கு வாழ்வாய். அதைவிடுத்து, அரைகுறையாய் தான் படிப்பேன், ஜாதி அடிப்படையில் இடம்பிடித்து, ஒழுங்காகவும் படிக்காமல் கெட்டுப் போவேன் என்று உன் வாழ்வை நீயே அழித்துக் கொண்டு, பின் அக்கால வாழ்க்கை முறையைத் தூற்றாதே.....
மாணவர்களே, நன்கு படித்து நன்கு வாழுங்கள். இடையில் மனம் வேறு பக்கம் திரும்பாது, படிப்பொன்றே குறியாய் வாழ்ந்து வாழ்வை முன்னேற்றிக் கொள்ளுங்கள். மனமுவந்த ஆசிகள்.

Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with Vasavi Narayanan

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!