அது போல், நான்மறை என்று தேவாரம் குறிப்பிடுவது அறம் பொருள் இன்பம் வீடுபேறா?
தமிழகச் சிவனும் "வடகத்திய சிவனும்" வெவ்வேறானவர்களா?+
இது எப்போது பாடப்பட்டது?
அப்பர் பிரான் சமண சமயம் தழுவி யிருந்தார். கடும் சூலை நோயால் (வயிறு வலி) அவதிப்பட்டார். சிவபெருமானை நோக்கிக் "கூற்றாயினவாறு" என்ற பதிகம் பாடினார்.
இதுவே, காலவரிசைப்படி முதன்முதல் தேவாரப் பாடல் ஆகும்.+
"என்ன தான் சமணமதம் மாறி அத்தி-நாத்திக் கொள்கை பேசினாலும் நான் உன்னை பூசிக்கும் முறையை மறக்கவில்லை."
சலம் பூவொடு தூபம் மறந்தறியேன்; தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்;
.. உன் நாமம் என்நாவில் மறந்தறியேன்
அப்பர் சொன்ன "தமிழோடு இசைபாடல்" சூழ்நிலை இதுவே+
அது மட்டுமா? வேறுபலப் பதிகங்களிலும்:
சந்திரன் பிறையிலணிந்த சங்கரன் சாமவேதி..
பாடினார் சாமவேதம் பாடிய பாணியாலே..
இருக்கு நான்மறை ஈசனையே தொழும்..
இருக்கு (ரிக்) ஓதி மறையவர்கள் வழிபட்டு ஏத்தும் இளங்கோவில்..+
அவனே திருமாலும் பிரம்மனும் ஆவானாம்.
அயன் திருமால் ஆனானை ..
மாலாகி நான்முகனாய்..
தொண்டர்க்கங்கங்கே அறுசமயமாகி நின்ற..
ஆறொன்றிய சமயங்களில் அவ்வவர்க்கு அப்பொருள்கள்..+
உண்மைப் பொருள் ஒன்றே; அறிவுடையோர் அதைப் பல பெயரிட்டு அழைக்கின்றனர்.
அப்பர் பாடல்கள் வேத சாரமே.
திருவைந்தெழுத்து முதன்முதலில் வருவது யஜூர் வேதம் ஸ்ரீ ருத்ரத்தில் தான்.
அதுவே அப்பரின் நமச்சிவாய பதிகத்திலும் வந்தது.+
சரி, வேதம் என்ற சொல்லே சமஸ்கிருதம் தானே. வித் (அறிதல்) என்ற மூலச் சொல்லில் இருந்து வந்தது.
இதைத் தான் அப்பர் பிரான் வேதியனே என்று எடுத்தாண்டுள்ளார்.
சமஸ்கிருத, வேத மறுப்பாளர் ஆயின் இது எல்லாம் சாத்தியம் இல்லைவே இல்லை அல்லவா!+
வேதம் சொல்லும் 5 வேள்விகளையும் வேதத்தின் ஆறு அங்கங்களையும் எவ்வளவு தெளிவாக எடுத்தாள்கிறார்!
சரி, இருக்கு (ரிக்), சாமம் சொன்னவர், ஒரு இடத்தில் கூட அறம் பொருள் இன்பம் வீடு என்று வேதப் பெயர்களாகச் சொல்லவில்லையே!+
அப்பர், சம்பந்தர் தேவாரங்களில் இந்த வாதம் எல்லாம் தவிடுபொடியாகிவிடும்.
தக்ஷன் (தக்கன்) வேள்வி
ராவணனை அடக்குதல்
மார்க்கண்டேயனை எமனிடம் இருந்து காத்தல்
ஆலகால விஷம் உண்ணுதல்
தக்ஷிணாமூர்த்தி வடிவம்+
துளிகூட ஐயப்பாடுக்கு இடமின்றி,
வேதம், வேதியர்/அந்தணர், யாகம் எல்லாம் எதைக் குறிக்கின்றன என்று நம் எல்லோராலும் எளிதில் அறிந்து கொள்ள முடியும்.+
நற்றுணையாவது நமச்சிவாயவே! 🙏🙏