#Vivek_Gananathan_thread
மின்சாரம்:
மின்சார சட்ட திருத்த வரைவு விவாதத்தில் இருக்கும்போதே, Tarrif Policy திருத்தத்தை சர்வசாதாரணமாக இன்று அறிவித்துவிட்டார்கள்.
ஒழுங்குமுறை ஆணையங்களை ஒழிக்கப் போகிறார்கள். உற்பத்தியாளர்களின் நலன் கருதி என செய்யப்பட்டிருக்கும் இந்த மாற்றம், மின் உற்பத்தியிலிருந்து மாநில அரசுகளை விலக்கும் திட்டம்.
அடுத்த வேட்டு விவசாயத்துக்கு !
கம்யூனிச பாஷையில் சொன்னால், நிலப்பிரபுத்துவர்கள் - பெருமுதலாளிகள் கூட்டு. ஆனால், சிறு - குறு விவசாயிகள் என்ன செய்வார்கள்?
ஒரு பேரழிவு காலத்தில், மக்களுக்கான பொருளாதார நலத்திட்டங்கள் என்கிற பெயரிலேயே செய்யப்பட்டிருப்பது மக்களை முழு மடையர்களாக கருதும் உத்தி.
தென்மாநிலங்களுக்கான செக் இது.