மக்கள் பிரதிநிதிகளும், மாவட்டச் செயலாளர்களும் நேரடியாக அரசு இயக்கத்துக்குள் வந்தார்கள்" என்கிறார் நாராயணன்.
ஒரு நேர்காணலுக்காக அவரைச் சந்தித்தபோதும் இதை விரிவாக பேசினார்.
ஏனெனில், அரசாங்கம் என்பது ஏகஇந்திய அதிகாரிகளால், மாஜிஸ்திரேட்டுகளால், கவர்னர்களால் நடத்தப்படும் பண்பாடு என்பது பிரிட்டிஷ் ஏகாதிபத்திய பண்பாடு.
காமராஜர் ஆட்சிக்காலத்தில் அது ஓரளவுக்கு கட்டுக்குள் இருந்தது; காரணம், காமராஜரின் ஆளுமை.
இந்த சாமானியர்கள் அதிகாரத்துக்கு வந்தபிறகு தான், அரசாங்கம் என்பது bureaucracy எனப்படும் மேல்தட்டு அதிகாரிகளால் நடத்தப்படுவது என்கிற வழமை ஒழிந்தது.
அந்தமரியாதைதான் பொன்முடி மாவட்டஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்ததும் ஒருசாமானியனுக்கு பாஸ் வாங்கித்தருகிறது
ஆனால், தங்களை மக்கள் பிரநிதிகள் என சொல்லிக்கொள்வதில்தான் அவர்களுக்கு சந்தோஷமும், கர்வமும் !
ஆனால், ஒரு நூற்றாண்டை உழைத்து உருவாக்கிய மக்கள் ஜனநாயகப் பண்பாட்டையும் தன் சொந்த அதிகாரிகளிடம் இழந்திருக்கும் அவலம் இப்போது நடந்திருக்கிறது.
அதிமுக அரசியல்வாதிகளுக்கு சுயமரியாதை இருந்தால், தலைமைச்செயலாளர் மன்னிப்பு கேட்பார்.