My Authors
Read all threads
பண்டைய வரலாற்றைத் தெரிந்து கொள்ள கல்வெட்டுகளைப் படித்தால் ஒன்றும் புரிவதில்லை. ஆனால் அன்று எல்லோரும் வாசிக்கும் வண்ணம்தான் எழுதியிருக்கிறார்கள். நம் முன்னோர்களால் வாசிக்க முடிந்தவை நம்மால் முடியவில்லை. ஓலைச் சுவடிகளைப் படித்தாலும் அதே நிலைதான்.‌ ஓலைச் சுவடி ஏன், 100 வருடத்துக்கு
முன் எழுதிய நிலம், வீட்டு பத்திரங்களே புரிவதில்லை. அவற்றை வாசிக்க தமிழ்நாட்டில் 90 வயது தாண்டியவர்களைத் தேடி ஓட வேண்டி இருக்கிறது. ஒரு ஆங்கிலேயனால் அவன் மொழியில் 700 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டதை படிக்க முடிகிறது, ஒரு இத்தாலியனால் 1000 வருடத்துக்கு முற்பட்ட அவன் மூதாதையர்
எழுத்தைப் படிக்க முடிகிறது. யூதனால் 2000 ஆண்டுக்கு முற்பட்ட ஹீப்ரு மொழியினைப் படிக்க முடிகிறது, ஒரு அரேபியனால் 1400 வருடத்துக்கு முற்பட்ட குரானை எளிதாகப் படிக்க முடிகின்றது. சீனருக்கோ எத்தனையோ நூற்றாண்டுகளைக் கடந்த தங்கள் முன்னோர் குறிப்பையும் படிக்க முடிகிறது. அவர்கள் தங்கள்
மொழியினைக் கவனமாக காத்திருக்கிறார்கள். ஓரெழுத்து தவறி எழுதினாலும் வருங்கால சந்ததி குழம்பித் தவிக்கும் என்பதில் கவனமாய் இருந்திருக்கிறார்கள். ஆனால் தமிழனால் அவன் மூதாதையர் வரிகளை வாசிக்க முடியவில்லை, 100 வருடத்துக்கு முந்தைய தமிழ்ப் பத்திரங்களைக் கூட அவனால் வாசிக்க முடியவில்லை.
எப்படி இந்த அவலநிலை உண்டாயிற்று? கல்லூரிகள் வெள்ளையனால் அமைக்கப்பட்ட பொழுது கூட செய்யுளும் ஓலைச் சுவடிகளும், அதன் சாயலான காகித எழுத்தும் சரியாகத் தொடரப்பட்டிருக்கின்றன‌. குழப்பம் ராமசாமி கும்பல் தமிழ் எழுத்து உலகுக்குள் வந்தபின் தொடங்கிற்று, தமிழைத் திருத்துகிறேன் என எத்தனையோ
அக்கும்பல் செய்து எல்லாவற்றையும் மாற்றிற்று. புதிய எழுத்துக்கள் உருவானால் வரும் சந்ததி பண்டைய தமிழை எப்படிப் படிக்கும்? முன்னோர் மொழியினை எப்படி வாசிக்கும்? தமிழ் அப்படியே தொடரப்பட்டால் தமிழனை எப்படி ஏமாற்றமுடியும்? உனக்கு மதமில்லை. அறிவில்லை. நீ காட்டுமிராண்டி என எப்படிச் சொல்ல
முடியும்? இதனால் தமிழின் எழுத்துவடிவம் மாறினால் பண்டைய தமிழுக்கும் வரும் தலைமுறைக்குமான சங்கிலி உடைபடும் என திட்டமிட்டுச் செய்தார்கள். விளைவு இன்று முன்னோரின் எழுத்துக்களை அறியமுடியாத முட்டாள் தலைமுறை, அறிவு முடக்கப்பட்ட தமிழ்ப் பரம்பரை, குருட்டுப் பரம்பரை உருவாகிவிட்டது. தமிழைத்
திருத்தியது மிகப்பெரும் கொடுமை. சீனனுக்கும், அரேபியனுக்கும், ஆங்கிலேயனுக்கும், யூதனுக்கும் இருக்கும் தொடர்ச்சி தமிழருக்கு இல்லை, காரணம் அவர்கள் பூமியில் அவர்கள் கலாச்சாரத்தைப் பாரம்பரியத்தைக் கெடுக்க வந்த திராவிடக் காட்டுமிராண்டிக் கும்பல் இல்லை. அதனாலவர்களால் அவர்கள் மொழியினைத்
தொடர்ந்து பாதுகாத்து தலைமுறை தலைமுறையாய் கொண்டு சேர்க்க முடிகிறது, இக்காலத் தலைமுறையும் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நூல்களை எளிதாய் படிக்க முடிகிறது.
சரி, ஆங்கிலத்தில் புலிகளாயிற்றே என 100 வருடத்துக்கு முற்பட்ட ஆங்கிலக் கடிதங்களை வாசிக்க கொடுத்தால் வாசிக்க முடியாது. இந்த மண்ணில்
தொடரப்பட்ட பாரதப் பொது மொழியான சமஸ்கிருதமும் தெரியாது. பண்டைய தொடர்ச்சியாக ஏதுமில்லாத, பழம் பெருமைகளைப் படிக்க கூட முடியா ஒரு பரிதாபச் சமூகமாக இது மாறிவிட்டது. காலம் கடந்துவிட்டாலும் மெல்ல முயன்றால் அதை மீட்டெடுக்கலாம். இன்றும் கல்வெட்டு நிபுணர்கள் உண்டு, ஓலைச் சுவடி படிப்பார்
உண்டு. இதை இன்னும் விரிவுபடுத்தி பழம் தமிழை எல்லோரும் கற்கவைத்தால் இடையில் வந்த குழப்பங்களைச் சரி செய்யலாம். ஒழிந்தது திரும்பும், திரும்பியது ஒழியும் என்பது காலத்தின் விதி. அப்படி ஒரு காலம் பழைய நல் தமிழ் இங்கே மீண்டெழும், அப்பொழுது மொழியின் தொடர்பறுத்தவன் "தமிழர் தந்தை" அதை
பற்றி கவலையே படாதவர் "தமிழ் அறிஞர்" எனும் பொய்ப் பிம்பங்களெல்லாம் உடைந்து சிதறும். இந்த திராவிடக் கும்பலால் எவ்வளவு இழந்தோம் எனச் சிந்தித்தால் முதலில் இழந்தது பண்டைய தமிழ் மரபின் தொடர்ச்சியும் தமிழுக்கும் நமக்குமான தொடர்பும் என்பதுதான் பெரும் சோகம். அவர்கள் மேல் பெரும் ஆத்திரம்
வரவைக்கும் காரணமும் அதுவே. அதுமட்டுமில்லாமல் அவர்கள் நடத்தி வரும் பல தொலைக்காட்சிகள் வழியாக திட்டமிட்டு தமிழ் மொழியைக் கொன்று ஒழித்தே விட்டார்கள். இன்றைக்கு தமிழர்கள் ஒரு வாக்கியம் கூட முழுமையாக ஆங்கில கலப்பில்லாமல் பேச முடியாத அளவு நிலைமையை மோசமாக்கியதும் இந்த திராவிட கும்பலே.
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with அன்பெழில்

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!