ஒருவருடைய தந்தைக்கு ஓரிரு நாட்களில் ஸ்ரார்த்தம் என்ற நிலையில் அவருக்கு ஸ்ரார்த்தம் பண்ணி
வைக்க வாத்தியார் கிடைக்கவில்லை. கவலையுடன் சென்று கொண்டிருந்தவர் கண்களில் ஆற்றங் கரையில் வெள்ளை வெளேரென்று தனது வேட்டியை துவைத்துக் கொண்டிருந்த ஒரு புரோகிதர் கண்ணில் படுகிறார். அவரிடம் ஓடோடி
தனது தந்தையின் ஸ்ரார்த்த நாளைக் கூறி அவரால் அதை நடத்தித் தரமுடியுமா என்று கேட்கிறார். அந்த புரோகிதரும் நடத்தி தருகிறேன் ஆனால் ஒரு கண்டிஷன் என்று கூறுகிறார். என்னவென்று இவர் வினவ அதற்கு அந்த புரோகிதர் அன்று சரியாக 11 மணிக்கு நான் உங்கள் வீட்டை விட்டு கிளம்பவேண்டும் அதற்கு
தகுந்தாற்போல் உங்களால் தயாராக இருக்கமுடியுமா என்று கேட்க இவரும் அதற்கு ஒப்புக்கொள்கிறார். ஸ்ரார்த்த நாளன்று நேரத்தில் வந்த அந்த புரோகிதர் ஸ்ரார்த்த காரியங்களை சிறப்பாக நடத்திக்கொடுத்து சரியாக 11 மணிக்கு அவர் வீட்டைவிட்டு கிளம்பவும் வீட்டின்முன் அந்த காலத்தில் பிரபுக்கள் பயணம்
செய்யும் குதிரை பூட்டிய கோச் வண்டி வந்து நிற்பதற்கும் சரியாக இருக்கிறது. அந்த வண்டியில் ஏறி புரோகிதர் உடனே சென்று விடுகிறார். ஸ்ரார்த்தம் நடத்த கூப்பிட்டவருக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும். யார் இவர்? மிகவும் முக்கியஸ்தவராக இருப்பார் போலிருக்கிறதே. அவரை புரோகிதராக கூப்பிட்டு
தவறிழைத்து விட்டோமோ என பயம் அதிகரிக்க அவரைப் பற்றி விசாரித்ததில் புரோஹிதராக வந்தவர் பிரபல வக்கீல் திரு அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் என்று தெரிந்து கொள்கிறார். இந்திய அரசியல் சட்டத்தை வடிவமைக்கும் குழுவில் இவர் அங்கம் வகித்தார். அந்த குழுவிற்கு திரு அம்பேத்கர் தலைவராக நியமனம்
செய்யப்பட்டார். இதைப்பற்றி திரு அம்பேத்கர் குறிப்பிடும்பொழுது என்னைவிட பெரிய, சிறந்த, திரு அல்லாடி கிருஷ்ணசாமி ஐயரைப் போன்று ஆற்றல்மிக்கவர்கள் இருக்க என்னை தலைவராக நியமனம் செய்தது என்னை ஆச்சரியப்பட வைத்தது என்று கூறியிருக்கிறார். பிரிட்டிஷ் அரசு இவருக்கு "திவான் பகதூர்" மற்றும்
"சர்"பட்டம் கொடுத்து கௌரவித்தது. இவருடைய சட்டப் புலமை, வாதத்திறமை அபரிமிதமானது. இதை கௌரவிக்கும் வகையில் இவரைத் தேடி நீதிபதி பதவி வந்தது. ஆனால் இவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இவரது வாதத் திறமைக்கு ஒரு சின்ன எடுத்துக்காட்டு: வெள்ளையர் ஆட்சியில் வெள்ளைக்காரர்களும் வெள்ளைக்காரர்களால்
கௌரவிக்கப் பட்டவர்களும்தான் குதிரை பூட்டிய சொகுசு கோச் வண்டியில் பிரயாணம் செய்யலாம். மீறினால் சிறை தண்டனை. இந்த சட்டத்தை மீறி ஒரு ஜமீன்தார் குதிரை வண்டியில் செல்ல அவர் கைது செய்யப்பட்டார். வழக்கு திரு அய்யரிடம் வந்தது. நீதிமன்றத்திற்கு சென்ற திரு அய்யர் தனது வாதத்தை தொடங்கினார்.
அவர் நீதிபதியைப் பார்த்து "கனம் நீதிபதி அவர்களே ஜமீன்தார் பயணம் செய்த அந்த வண்டியையும் அதை இழுத்துச் சென்ற மிருகத்தையும் தாங்கள் பார்க்க வேண்டும் என்று வேண்டுகிறேன்" எனறார். வண்டியும் குதிரையும் நீதிபதி முன் ஆஜர்படுத்தப் பட்டது.அதை பார்த்த நீதிபதி "சரி பார்த்துவிட்டேன் இப்பொழுது
உங்களது வாதம் என்ன?" என்று வினவினார். அடுத்த நிமிடம் திரு அய்யர் அவர்கள் நீதிபதியைப் பார்த்து "கனம் நீதிபதி அவர்களே சட்டத்தில் ஆண் குதிரையால் இழுக்கப்படும் வண்டி (horse driven vehicle) என்று தான் இருக்கிறதே தவிர பெண் குதிரையால் இழுக்கப்படும் வண்டி (mare driven vehicle) என்று
இல்லை. தயவு செய்து இந்த வண்டியை இழுத்த மிருகத்தை பார்த்தீர்களானால் தெரியும் அது பெண் குதிரை என்று. இதில் எந்த சட்ட மீறலும் இல்லை. ஆகவே ஜமீன்தாரை உடனே விடுதலை செய்ய வேண்டும்" என்றார். மூச்சு பேச்சற்றுப் போன நீதிபதி ஜமீன்தாரை அடுத்த நிமிடமே விடுவித்தார். இந்த வழக்கிற்குப் பிறகுதான்
சட்டத்தில் “ஆண்பால் என்பது பெண்பாலையும் குறிக்கும்" என்ற மாற்றம் புகுத்தப்பட்டது. அந்த காலத்திலேயே ஆயிரக்கணக்கில் பீஸ் வாங்கும் பிரபல வக்கீலாக இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மிகவும் எளிமையான தோற்றத்துடன் புரோகிதராக வந்து ஸ்ரார்தத்தை சிறப்பாக நடத்திக் கொடுத்த
திரு அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரின் பண்பை என்னவென்று சொல்வது! 14.5.1883 அன்று பிறந்த அந்த மாமேதையின் பிறந்த தினம் இன்று.
Intelligence is categorised under 4 headings by psychologist. 1) Intelligence Quotient (IQ) 2) Emotional Quotient (EQ) 3) Social Quotient (SQ) 4) Adversity Quotient (AQ) 1. Intelligence Quotient (IQ): this is the measure of your level of comprehension. You need IQ to solve maths,
memorize things, & recall lessons. 2. Emotional Quotient (EQ): this is the measure of your ability to maintain peace with others, keep to time, be responsible, be honest, respect boundaries, be humble, genuine and considerate. 3. Social Quotient (SQ): this is the measure of your
ability to build a network of friends and maintain it over a long period of time.
People that have higher EQ and SQ tend to go further in life than those with a high IQ but low EQ and SQ. Most schools capitalize on improving IQ levels while EQ and SQ are played down.
#Hinduphobia கூகிளுக்குள் சென்று Beef Violence In India or Muslim Attacked In India என்று டைப் செய்யுங்கள். ஒரு நொடிக்குள் ஆயிரக்கணக்கான பதில்கள் வந்து கொட்டும். 2015 இலிருந்து ஜூலை 2018 வரை பசு சம்பந்தப்பட்ட 17 விஷயங்கள் இதில் ஆவணப் படுத்தப்பட்டுள்ளது. அதில் 7 பேர் கொலை
ஆகியுள்ளனர். இந்த ஒவ்வொரு விஷயமும் மிகப் பெரிய அளவில் மிகக் கடுமையாக ஊடகங்களால் பேசப்பட்டு உள்ளது. ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், தி பிபிஸி, அல் ஜஸீரா மற்றும் உலகளாவிய பல சக்திவாய்ந்த ஊடகங்களில் விரிவாக எழுதப்பட்டும் பேசப்பட்டும் உள்ளது. இந்த ஊடகச்
செய்திகளை விரிவாகப் பார்த்தோமானால் இந்த விஷயங்களைப் பற்றி எழுதியது முழுக்க இந்திய ஊடகவியலாளர்கள் மட்டுமே. இவர்கள் இந்தியர்கள். இந்தியாவில் வசித்துக் கொண்டு இருப்பவர்கள். உதாரணமாக வாஷிங்டன் போஸ்டில் உள்ள பெரும்பாலான செய்திகளையும் எழுதியது #பர்கா_தத் (NDTV) இதில் கொடுமை இந்தச்
#ஶ்ரீகிருஷ்ண்ச்ன்கதைகள்
சீடன் மணிகண்டன் தன் குரு சுப்பிரமணியிடம், அய்யா என்னால் என் கோப இயல்பைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அதைக் கட்டுப்படுத்த ஒரு வழி சொல்லுங்களேன் என்று வேண்டிக் கொண்டான். குரு அவனிடம், “உனது கோபம் எங்கே? எனக்குக் கொஞ்சம் காட்டு” என்றார். மணிகண்டன் ஆச்சர்யப்
பட்டான். இப்போதைக்கு என்னிடம் கோபம் இல்லை, அதனால் என்னால் அதைக் காட்ட முடியாது என்றான். குரு பதில் அளித்தார். “பிரச்னை ஒன்றும் இல்லை. உனக்கு கோபம் வரும்போது என்னிடம் கொண்டு வந்து காட்டு” என்றார். மணிகண்டன் கடுப்புடன், கோபம் வந்தவுடன் என்னால் கொண்டு வந்து உடனடியாகக் காட்ட முடியாதே
என்றான். எதிர்பாராத வேளையில் கோபம் வரும். அதை நான் உங்களிடம் வந்து காட்டுவதற்குள் அது நிச்சயமாக மறைந்தே போய்விடும் என்றான்.
“அப்படியானால் கோபம் என்பது உனது உண்மையான இயல்பாக இருக்க முடியாது” என்றார் குரு. மேலும் நம்மிடம் உண்மையான இயல்பாக இருப்பது ஸ்ரீமந்நாராயணன் மீது உள்ள பக்தியே!
#கும்பகோணம்_அரிய_தகவல்கள்
கும்பகோணத்திற்கு குடந்தை என்ற பெயரும் உள்ளது. குடந்தை என்பது குடமூக்கு ஆகும். பின்நாளில் குடமூக்கு என்பது மறுவி குடந்தை என்று பெயர் பெற்ற. குடந்தை என்ற சொல்லுக்கு வளைவு என்ற பொருள் உள்ளது. முக்கிய நதிகளில் ஒன்றான காவிரி கும்பகோணம் வந்து வளைந்து செல்வதால்
குடமூக்கு என்ற பெயரும் உருவானதாக சொல்லப்படுகிறது. கும்பகோணம் என்ற சொல் வடமொழிச் சொல் குடம் என்றால் கும்பம் மூக்கு என்றால் கோணம் அது தான் கும்பகோணமாக மறுவியுள்ளது என்பதும் உண்டு. கும்பகோணத்திற்கு பாஸ்கரசேத்திரம், கல்யாணபுரம், தேவலோகப்பட்டிணம், சிவவிஷ்ணுபுரம், மந்திராதி தேவஸ்தானம்,
சாங்கராஜன்பட்டினம் சேந்திரசாரம் ஒளிர்மிகு பட்டணம் உள்ளிட்ட பல பெயர்கள் இருந்தன. இவைகள் தற்போது எதுவம் பயன்பாட்டில் இல்லை. எல்லா தலங்களையும் நகரங்களையும் பிரம்மன் படைத்தான் ஆனால் கும்பகோணத்தையோ சிவ பெருமனே உருவாக்கியதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய நதிகளான காவிரி கங்கை
Experiences with Maha Periyava:
The greatness of #Mylapore
Everyone is familiar with the name Sri Ki.Va.Jagannathan, a very eminent Tamil scholar, poet and author. Once when MahaSwamigal was camping in Mylapore, Sri Ki.Va.Ja’s daughter-in-law,
Tripurasundari went there for darshan. She was introduced to Sri Maha Periyava. She kept the fruits, flowers and other offerings which she brought for the Mahan in a bamboo tray in front of Him and prostrated. Raising His right hand, the Mahan blessed Tripurasundari and asked
“Where are you staying in Madras?”
Here in Mylapore Periyava, replied Tripurasundari.
“Do you have the habit of going to temples?”
Yes Periyava. Especially, I always enjoy going to Kapaleeswarar Temple and praying to Karpagambal said Tripurasundari with a face blooming with
#இராம_நாமத்தின்_மகிமை#சமர்த்த_ராமதாசர்
சத்ரபதி சிவாஜி மகாராஷ்டிரத்தை ஆண்டு கொண்டிருந்த காலம் அது. ஒரு சமயம் அவர் நதியில் இறங்கி தன் கை, கால்களைத் தூய்மை செய்து கொண்டிருந்த போது ஆற்று நீரில் பல ஓலைச் சுவடிகள் மிதந்து வந்ததைப் பார்த்தார். ஓர் ஓலைச் சுவடியை எடுத்துப் பார்த்த போது,
அதில் மஹாராஷ்டிர மொழியில் எழுதப்பட்டிருந்த அற்புதமான கவிதைகள் இருந்தன. மனம் வியந்த சிவாஜி, ஓலைச் சுவடிகளை எல்லாம் எடுத்துக் கொண்டு ஆற்று நீர் வந்த திசையை நோக்கிக் குதிரையைச் செலுத்தினார். அங்கே ஓரிடத்தில் சிவாஜி கண்ட காட்சி, அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. காரணம் அங்கே மர நிழலில்
ஒரு பாறையின் மீது இருந்தபடி ஒப்பற்ற ஒரு தவ சீலர் இனிய குரலில் இராம நாமத்தைப் பாடிக் கொண்டிருந்தார். அவரைச் சுற்றி காட்டில் இருந்த கொடிய விலங்குகள் எல்லாம் அமர்ந்திருந்தன. அந்தக் கொடிய விலங்குகளிடம் பயப்பட வேண்டிய பசுக்களும், மான்களும் அவற்றின் அருகிலேயே எந்த வித பயமும் இல்லாமல்