My Authors
Read all threads
இராமாயணத்தில் விஸ்வாமித்திரர் இராம லக்ஷ்மணர்களுக்கு, பகீரதன் பெருந்தவம் செய்து, ஆகாச கங்கையை பூமிக்கும் பின்னர் பாதாள லோகத்திற்கும் கொண்டு சென்றதை விரிவாகச் சொல்கிறார். வால்மீகி ராமாயணம் பால காண்டத்தில் 35வது முதல் 44வது ஸர்கம் இந்த பகுதியை சொல்கிறது #கங்காவதரணம் என்று பெயர்.
அமாவாசை மற்றும் சிராத்த தினங்களில் #கங்காவதரணம் பாராயணம் செய்தாலோ கேட்டாலோ விசேஷம். கிரகண காலத்தில் இதை செய்து புண்ணியம் சேர்க்கலாம். இன்று போல புண்ணிய நதி கங்கை பூமியில் ஓடவில்லை. ஆகாயத்தில் மட்டுமே ஓடியது. அதனாலேயே ஆகாய கங்கை என்று பெயர். ஆனி மாதம் சுக்ல பக்ஷ தசமி திதியும்
ஹஸ்த நக்ஷத்திரம் உள்ள நாளில் பகீரத மஹா ராஜாவின் கடும் முயற்சியால் கங்கா தேவி ஆகாசத்திலிருந்து பூமிக்கு அழைத்து வரப்பட்டாள். இந்த நன்னாளே #கங்காவதாரம் என்று அழைக்கபடுகிறது . அன்று தங்களால் இயன்றவர்கள் கங்கையில் நீராடலாம். அல்லது மற்ற நதிகளிலும் கங்கையை நினைத்துக் கொண்டு நீராடலாம்
அல்லது வீட்டிலேயே கங்கையை மனதால் நினைத்துக் கொண்டு ஸ்நானம் செய்யலாம். ஒருமுறை கங்கையில்-புனித நீராடினால் ஒருவர் செய்த பாவங்கள் நீங்கும். ஒரு புனித நாளில் நீராடினால் பல பிறவிகளில் ஏற்பட்ட பாவங்கள் நீங்கும். மேலும் கங்கை நீரைக் கண்டாலும், தொட்டாலும் பாவம் தொலையும். கங்கையின் பெயர்
உச்சரித்தாலே பாவம் அகலும். தெரியாமலே கங்கை நீரை தொட்டாலும் பாவம் போய்விடும் என்று கிருஷ்ணர் கூறியுள்ளார் . கங்கை பூமியில் இருக்கும்போது லவண சமுத்திரம் கங்கையின் பதி ஆகும். கங்கையைப் பகீரதன் பூமிக்கும் கொண்டு வந்ததால் பாகீரதி எனப்பெயர் பெற்றான். இந்திரலோகத்தின் வழியாகப் பாயும்போது
மந்தாகினி என்று பெயர். பாதாளத்தில் பாயும் போது யோகவதி, விஷ்ணுபஷத்தில் தோன்றியதால் விஷ்ணுபதி. க=என்றால் போ; கங்க் என்றால் விண்ணும், மண்ணும். விண்ணிலும் மண்ணிலும் ஓடுவதால் கங்கை என்று பெயர் உண்டாயிற்று.
#பகீரதப்பிரயத்தனம் சூரிய குலத்துத் தோன்றலாகிய திலீபன் என்பவனின் மகன் பகீரதன்.
தன் மூதாதையர்கள் கபிலரின் சாபத்தால் இறந்த செய்தியை வசிட்டர் வாயிலாகக் கேள்விப்பட்டு, அவர்கள் நற்கதி அடையப் பிரம்மனை நோக்கி 10,000 ஆண்டுகள் ஒற்றைக் காலில் நின்று கைகளை மேலே கூப்பி மாதம் ஒரு முறையே உண்டு கடும் தவம் புரிந்தான். பிரம்மனோ நீ கங்கையையும் சிவனையும் நோக்கித் தவம் செய்து
கங்கையைக் கொண்டு அவர்களின் சாம்பலை நனைத்தால் அவர்களுக்கு நற்கதி கிடைக்கும் என்று கூற அவ்வாறே பல நூறு வருடங்கள் தவம் செய்தான். கங்கை அவன் முன் தோன்றி, நான் வருவதற்குத் தடையொன்றும் இல்லை, என் வேகத்தைத் தாங்கிக் கொள்வார் உண்டாயின் என்றாள். பிரம்மன் கட்டளைப்படி சிவனாரை நோக்கித் தவம்
புரிந்தான். சிவனாரும் கங்கையின் வேகத்தைத் தாங்கிக் கொள்வதாகக் கூறினார். வாக்குக் கொடுத்தபடியே கங்கையின் வேகத்தைத் தம் திருமுடியில் தாங்கிக்கொண்டு, பூமி தாங்கும் அளவுக்கு கங்கையின் சிறு பகுதியை மட்டும் பூமியில் விழும்படிச் செய்தார். பகீரத மன்னன் ஒரு தேரில் ஏறிக்கொண்டான். மன்னர்
தேரில் வழி காட்ட கங்கை நீர் பின்னால் பிரவாகமெடுத்து வந்தது. நாடு, நகரம், காடு, கிராமம் அனைத்தையும் புனிதமாக்கிக் கொண்டு வந்தது. ஆனாலும், பகீரதனுக்கு மேலும் ஒரு சோதனை ஏற்பட்டது. பிரவாகமாகப் பெருகி வந்த கங்கை, வழியில் ஜஹ்நு முனிவர் இயற்றிக்கொண்டிருந்த யாகத்தை அழித்துவிட்டது. கோபம்
கொண்ட ஜஹ்நு முனிவர், கங்கையை அப்படியே பருகிவிட்டார். நடந்தது அறிந்த பகீரதன் முனிவரிடம் சென்று, தன்னுடைய நிலையைக் கூறி பிரார்த்தித்தான். பகீரதனின் விடாமுயற்சி மற்றும் பல நூறு ஆண்டுகள் இயற்றிய தவம் பற்றி தம் ஞானதிருஷ்டியால் ஏற்கெனவே அறிந்திருந்த ஜஹ்நு முனிவர், பகீரதனுடைய வேண்டுகோளை
ஏற்று, தாம் பருகிய கங்கையை தம் காதின் வழியாக வெளிவரச் செய்தார். மறுபடியும் கங்கையின் பிரவாகம் வெளிப்பட்டது. ஜஹ்நு முனிவரின் காதின் வழியாக வெளிப்பட்டதால், 'ஜஹ்நவீ' என்று கங்கை இன்னொரு பெயரும் பெற்றாள். பகீரதன் தேரில் பின்னால் சென்ற கங்கை நீர் பகீரதன் மூதாதயர் சாம்பலாக கிடந்த
இடத்தில் நீரோட்டமாக பாய்ந்து சென்று அந்த சாம்பலை நீரில் மூழ்கடித்தாள். உடனே சகர புத்திரர்கள் தேவஉரு பெற்று உயிர்த்தெழுந்து தேவலோகம் (வானுலகம்)சென்றடைந்தனர். பகீரதன் நாடு அயோத்தியா திரும்பி நல்லாட்சி புரிந்தான். புத்திர பேறும் அடையப்பேற்றான்
பகீரதனின் விடாமுயற்சி மற்றும் மன உறுதி
பற்றிய இந்த நிகழ்ச்சியை விசுவாமித்திரர் ராமபிரானுக்கு எடுத்துக் கூறியதன் மூலம், தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இருந்துவிட்டால், ஒருவன் எத்தனை சோதனைகள் ஏற்பட்டாலும், அவற்றைப் பொருட்படுத்தாமல் விடாமுயற்சியுடன் தன் லட்சியத்தை அடைவது உறுதி என்பதை நாம் அறிந்துகொள்ள முடிகிறது.
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with அன்பெழில்

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!