, 17 tweets, 3 min read
My Authors
Read all threads
எனக்கு தோனியை பெரிதாக பிடிக்காது நான் யுவராஜை நேசிப்பவன்

ஆனா இந்தியாவில் மிகவும் பின் தங்கிய குடும்பத்தில் இருந்து இன்னும் சொல்ல போனால் பின் தங்கிய மாநிலத்தில் இருந்து உச்சத்தை தொட்ட மனிதன் எனலாம். ஜார்கண்ட், பீகார் மாநிலத்தில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றவர்கள்
வரலாற்றில் உச்சத் தொட்ட மனிதன் யாருமே இல்லை என சொல்லலாம்

Born to lead னு சொல்லுவாங்கல்ல அந்த வார்த்தை எங்க இருந்து உதிச்சதுனு தெரியல ஆனா அந்த வார்த்தை தோனிக்காவே கண்டுபிடிக்கப்பட்டதுனு சொல்லலாம்.

2005ம் ஆண்டு தோனி பாக்கிஸ்தான்க்கு எதிரான போட்டியில் அடித்த 148 ரன்கள்,
இலங்கையுடன் அடித்த 183 ரன்கள் அவரை புகழின் உச்சத்தில் அமர்த்தியது .

எந்த ரயில்வே நிர்வாகம் வேலையைவிட்டுத் தூக்கியதோ அந்த நிர்வாகம் தோனியின் வீட்டு வாசலில் வந்து கைகட்டி நின்றது. 'நீங்கள் ரயில்வே வேலையில் தொடர வேண்டும் அது நாட்டுக்கே கௌரவம். பணிக்கு வரத் தேவையே இல்லை. எந்த
நிபந்தனையும் இல்லை! தோனி சிறுபுன்னகையுடன் அவர்களை திருப்பி அனுப்பிவைத்தார்.

2007ம் ஆண்டு உலகக்கோப்பை தோல்வி இந்திய அணியையும் ரசிகர்களையும் உலுக்கி விட்டது

ராஞ்சியில் கட்டிக்கொண்டிருந்த புதிய வீடு,ஜார்கண்ட் முக்தி மோட்சாவினரின் தாக்குதலுக்கு உள்ளானது.

களங்கங்களால் தோனி
கலங்கவில்லை ! இனிமே தான் நாம் சாதிக்க போகிறோம் என்று இளம் படையை அழைத்து சென்றார் .

சச்சின் தோனி பெயரை டி-20 உலகக் கோப்பை அணிக்குக் கேப்டனாக பரிந்துரைக்க இந்திய அணியின் பெயர் சாதனை புத்தகங்களில் இடம் பெயர ஆரம்பித்தது .

2007 T20 உலககோப்பை :
உலகக்கோப்பை பைனல் ஓவர் ஒரு தலைசிறந்த
தலைவனை இந்தியாவிற்கு அளித்தது . ஜோகிந்தரை அழைத்த தோனி தோத்தோம்னா நான் பொறுப்பு ஏத்துக்கிறேன் நீ ரிலாக்ஸா பவுலிங் போடு நம்மால் முடியும் என்று பந்தை கையில் கொடுத்தார் முதல் 2 பந்துகளில் 7 ரன் வந்துவிட வெற்றிக்கு தேவை 6 ரன்கள் என இருக்க தோனி மீண்டும் ஜோகிந்திரிடம் வந்து பந்தை
அவுட் சைடு ஆப் ஸ்டம்ப்பை பந்தை வீச சொல்ல அந்த அதிசயம் நடந்தது .The perfect trap delivery laid in last over என்று இன்றுவரை கிரிக்கெட் பண்டிட்களால் அழைக்கப்படுகிறது .

2011 உலககோப்பை :

முயற்சி என்பது முடிந்தவரை செய்வது அல்ல எடுத்த காரியம் முடியும் வரை செய்வது.
அதை 2011 பைனலில்
சரியாக செய்தார் தோனி . 114 ரன்களுக்கு 3 விக்கெட்கள் போய்விட அடுத்து யுவராஜ் வருவார் என்று அனைவரும் நினைத்து கொண்டு இருக்க யாரும் எதிர்பாராவிதமாக மகேந்திர சிங் தோனி உள்ளே வந்தார் . ஸ்பின்னர்கள் பவுலிங் போட்டுகொண்டு இருக்கும்போது Left /Right hand காம்பினேஷன் சரியாக இருக்கும் என்று
யுவிக்கு முன்னால் களம் கண்டார் . எடுத்த காரியத்தை காம்பிர் உடன் சேர்ந்து கச்சிதமாக செய்தார். அவர் அடித்த வின்னிங் ஷாட் சிக்ஸ் தான். இந்திய கிரிக்கெட்டில் சாதிக்க துடிக்கும் இளைய சமுதாயத்துக்கு ஒரு driving force. சாகும் தருவாயில் கூட நான் கடைசியா பாக்க ஆசைபடுவது தோனி அடித்த
சிக்ஸ் தான் என்று கவாஸ்கரையே சொல்ல வைத்தது .

“Dhoni finishes off in style. A magnificent strike into the crowd! India lift the World Cup after 28 years! இப்பகூட இந்த கமெண்டரியோட அந்த வீடீயோவை பாத்தா ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருசா சாதிச்ச சந்தோசத்தை அடிமனசுல இருந்து உணர முடியும்.
2013 சாம்பியன்ஸ் டிராபி :

பைனல்ல டாஸ்ல இந்தியா தோக்க சோதனை ஆரம்பமாச்சு இந்தியா கொடுத்த டார்கெட் வெறும் 129 ரன்கள். பீல்டிங் செய்ய இறங்கிறதுக்கு முன்னாடி வீரர்களுக்கு தோனி சொன்ன அறிவுரை "God is not coming to save us" நம்ம தான் போராடி ஜெயிக்கனுமுனு பேசி உள்ள அழைத்து சென்றார்...
2007கு ஜோகிந்தர் ஷர்மானா 2013கு இஷாந்த் ஷர்மா. இஷாந்த் சர்மா ஏற்கனவே 15வது ஓவரில் ரன்களை வாரி இறைக்க அவர் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் 18வது ஓவரை அவர் கைகளில் கொடுத்து அதிசயத்தை நிகழ வைத்தார். இந்தியா வெறும் 3ரன்களுக்கு 4விக்கெட்கள் எடுத்து இறுதியில் 5 ரன்கள் வித்தியாசத்தில்
வெற்றி பெற்றது.

தோனியின் தனித்துவங்கள் :

9 விக்கெட் போயிருக்கும் கூட டெய்ல்எண்டர் தான் நிப்பான் தோனி கொஞ்சம்கூட பொருட்படுத்தாம லாங்ல அடிச்சுட்டு ஓடாம நிப்பார் . அப்படி அவர் நிக்கும்போதெல்லாம் டிவி கேமரா எதிர் டீம் கேப்டன தான் focus பண்ணும். அவனுக முகத்துல மரணபயம் இருக்கும்
அந்த பயம்தான் தோனி வெதச்சது.

2013 கடைசி ஓவர்ல இலங்கை கூட சேஸ் பண்ணப்ப இயன் பிஷப் பின்வருமாறு சொன்னாரு
"If 15 runs are needed off the last over, pressure is on the bowler… not on MSDhoni – Ian Bishop

DRS Method a - DHONI REVIEW SYSTEMனு பேச வச்சவர் அந்த அளவுக்கு Accuracy
prediction தோனியோடது

ஐபில்ல பொல்லார்ட்க்கு straight mid-off and straight long-off combo field set பண்ணது எல்லாம் யாரும் கனவுலயும் நினைச்சு பாக்காதது Sourav Ganguly once remarked that “once Dhoni retires, he should write a book on field placements.” .

இஷாந்த் சர்மாவை லார்ட்ஸ்ல
தொடர்ந்து short பால் போட வைச்சு இங்கிலாந்து கூட 7 விக்கெட் எடுத்தது எல்லாம் rare piece செட்டியார் மொமெண்ட்கள் .

வெற்றியை பகிர்வதும் தோல்வியை தன் தோளில் மட்டும் சுமப்பது மட்டுமே ஒரு தலைவனின் சிறந்த தகுதி. அதை தான் கேப்டனாக இருந்த காலம் முழுவதும் செய்தவர் தோனி.
உதிக்கும் போது மறையும் போதும் ரசிக்கும் உலகம்:
உச்சிக்கு வந்தால் தீட்டிதிர்க்கும் சூரியனை மட்டும் அல்ல மனிதனின் வளர்ச்சியையும் தான்.
தோனி மட்டும் என்ன விதி விலக்கா அவரை வசை பாடாத வாய்கள் இல்லை ஆனால் அவர் எக்காலத்திலும் அதை பொருட்படுத்தியதும் இல்லை.
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with GJ

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!