, 16 tweets, 4 min read
My Authors
Read all threads
Stock market பத்தி நிறைய பேர் கேட்டிங்க எனக்கு தெரிந்ததை சொல்லுகிறேன்.
வெறும் dividend மட்டும் பார்த்திட்டு குதிப்பது பணம் விரயம் என்று தான் சொல்லுவேன் அதுவும் இந்த வருடம் முதல் டிவிடெண்ட் tax செலுத்த வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.அது ஒரு ஃபேக்டர் இருக்கலாம்.மற்றப்படி ஒரு
நிறுவனத்தை பத்தி முழுமையாக படிங்க அவுங்க management எப்படி அலசுங்க. Management கிட்ட clear vision இருக்கணும்.அடுத்த பத்து வருடம் என்ன பண்ண போறோம் என்ற தெளிவு நிறுவனத்திடம் இருக்க வேண்டும். ஒரு நிறுவனத்தை பத்தியோ, Management பற்றியோ தெரியாமல் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்வது ஆழம்
தெரியாமல் காலை விடுவது போல.Balance sheet,financial statement எல்லாம் அதுக்கு அப்புறம் தான் முதலில் நிருவாக திறமையை பாருங்க. ஒரு உதாரணம் ஜியோ 2016 ல launch பண்ணும் போது அவுங்க தெளிவா இருந்தாங்க அதை தான் முகேஷ் அம்பானி இப்படி சொல்லுவார் data is the new oil doesn't need to import it
இனி என்ன போறோம் தெளிவா இருக்காங்க data s the oxygen of digital economy அப்படின்னு தெளிவா புரிஞ்சு வைச்சு இருக்காங்க.2021 நிதியாண்டு முடிவில் கடன் இல்லாத நிறுவனமாக மாற்றுவோம் என்று சொன்னார்கள்.அதை இப்போவே அடைந்து விட்டார்கள். அந்த மாதிரி திறமையுள்ள நிருவாகத்தில் இன்வெஸ்ட் பண்ணுங்க
அதை போல அவுங்க products unique இருக்கா competitor பெரிய அளவில் இல்லாத நிறுவனமாக என்று பாருங்கள்.இதற்கும் ஒரு உதாரணம் சொல்லுறேன் இப்போ fevicol அது எந்த நிறுவனம் தயார் செய்கிறார்கள் தெரியுமா தேடி பாருங்க fevicol competitors யாருன்னு யோசிக்காமல் உடனே சொல்ல முடியுமா அது எதில் இருந்து
தயார் செய்யுறாங்க பாருங்கள் products unique இருக்கா என்று பாருங்க. இப்போ எப்படி analyse பண்ணுவது சின்ன example MRF நிறுவனம் என்றால் உங்களுக்கு என்ன தோன்றும் tyre manufacturer, அந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 65k சொன்னா நம்புவிங்களா எப்படி இவ்வளவு விலை,வெறும் tyre manufacturer
தானே வேறு என்ன செய்கிறார்கள் tyres, tyre-tubes, flaps, tread rubbers அப்புறம் conveyor belt இது இல்லாமல் toys manufacturing பண்ணுறாங்க funskool எல்லோரும் கேள்வி பட்டிருப்பிங்க அது இந்த நிறுவனத்தை சார்ந்தது. அது இல்லாமல் இவர்கள் paint manufacturing பண்ணுறாங்க இது இல்லாமல் MRF என்ற
உடன் ஸ்போர்ட்ஸ் ல நமக்கு இரண்டு விஷயம் கண்டிப்பாக நமக்கு ஞாபகத்திற்கு வர வேண்டும் ஒன்று MRF car race அடுத்தது MRF pace foundation. இப்படி என்ன எல்லாம் பண்ணுறாங்க பார்த்த பின்பு நாம அவர்களுடைய financial statement, balance sheet போக வேண்டும். ஏன் அவுங்க தொடர்ந்து முதல் இடத்தில்
இருக்கிறாங்க பார்த்திங்க என்றால் அவுங்க sales turnover மட்டும் கிட்டதட்ட 13 ஆயிரம் கோடிக்கு பண்ணுறாங்க இரண்டாம் இடத்தில் உள்ள அப்பல்லோ நிறுவனத்தின் sales turnover 9000 கோடி தான் கிட்டத்தட்ட 30% குறைவு. அதே மாதிரி அவர்கள் இலாபத்தை பார்த்திங் என்றால் MRF 1450 கோடி இலாபம்
பார்க்கிறார்கள் இரண்டாம் இடத்தில் உள்ள அப்பல்லோ 800 கோடி தான், இரண்டு நிறுவனத்திற்கு இடையே உள்ள இலாபத்தின் வேறுபாடு மட்டும் கிட்டதட்ட 44%. இப்போ உங்களுக்கு புரிந்து இருக்கும் ஏன் அவர்கள் முதல் இருக்கிறார்கள்.அதன் பங்கின் விலை இவ்வளவு அதிகமா இருக்கு என்று.. அதே போல 2002 ல இவர்கள்
பார்த்த இலாபம் 78கோடி அதுவே தற்போது 1450கோடி அதாவது (CAGR-compounded annual growth rate) 21.5%வளர்ச்சி அடைந்து இருக்கு..அதே போல MRF பங்கின் விலை 2012ல 10K தான் ஆனால் இன்றைக்கு 65000 கிட்டதட்ட CAGR 45% வளர்ச்சி அடைந்து இருக்கு. இன்னும் இதில் பார்க்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு
இது மாதிரி முழுமையாக ஒரு நிறுவனத்தை பற்றி தெரிந்து கொண்டு இன்வெஸ்ட் பண்ணுங்க. அப்புறம் HPCL, BPCL நிறுவனத்தை எடுத்துக் கொண்டால் அவர்கள் product petrol அதன் விலையை அரசு நிர்ணயம் செய்யும் அந்த மாதிரி நிறுவனத்தை நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்ய கூடாது. தன் நிறுவனத்தின் product
விலையை அவர்களே நிர்ணயம் செய்ய கூடிய நிறுவனமாக தேர்ந்தெடுங்கள். இப்போ Nestlé, Hindustan Unilever இவர்கள் எல்லாம் அவுங்க products விலையை அவர்கள் தான் நிர்ணயம் செய்வார்கள் அந்த மாதிரி sector தேர்ந்தெடுத்து, அந்த sector ல leading company பார்த்து முதலீடு செய்யுங்க. இது எல்லாம் நீண்ட
கால முதலீடு திட்டத்திற்கு உதவ கூடியவை.குறுகிய காலத்திற்கு technical analysis chart பார்த்து டிரேடிங் செய்வார்கள் அது முழுக்க வேறு இது இல்லாமல் ஆப்ஷன்ஸ்,futures நிறைய இருக்கு.Share market என்றாலே ரிஸ்க் தான் ஆனா இந்த மாதிரி futures,options tradingல risk ரொம்பவே அதிகம். இது எல்லாம்
செய்ய முதலில் நீங்க demat account open பண்ண வேண்டும். நிறைய brokers இருக்கிறார்கள். நீங்க அக்கவுண்ட் திறந்த உடனே உங்க மொபைல் நம்பர் விற்கப்படும் இரும்புத்திறை படத்தில் வருவது போல தான் நிறைய calls வரும் ஏமாறதிங்க. சிலர் நாங்க calls கொடுத்தா 90% சக்ஸஸ் அப்படின்னு வலை விரிப்பார்கள்
கவனம் தேவை. சிலரது ஆசை பேச்சுக்கு மயங்கி காசை இலக்காதிங்க. நிறைய படித்து அந்த நிறுவனத்தை முழுமையாக தெரிந்து கொண்டு அந்த நிறுவனத்தில் முதலீடு செய்யுங்க.
@teakkadai1 @_VarunKannan @bharath_kiddo @Dhananandhar @monk_offi
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with GJ

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!