My Authors
Read all threads
நாவலந்தீவு என்ற குமரிக்கண்டத்தை ஆட்சி செய்த "வடிம்பலம்ப நின்ற பாண்டியன்/நெடியோன்"என்ற சங்ககால பாண்டியன்!காலம்:சங்ககாலம் கி.மு 6-ம் நூற்றாண்டு என அறிய முடிகிறது.சங்ககாலப் பாண்டிய மன்னகளுள் காலத்தால் மிகவும் முற்பட்டவன் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் ஆவான்.

wix.to/lMClC_Q
நாலந்தீவு-2
இவனுடைய அரசவையில்தான் தொல்காப்பியம் அரங்கேறியது என்பர். இவன் முடிசூட்டிக் கொண்டு நெடுங்காலம் ஆண்டு வந்ததால் இம்மன்னன் நெடியோன் என்று பாராட்டப்பெற்றான்.

நிலம்தந்த பேர் உதவி
பொலந்தார் மார்பின் நெடியோன் உம்பல்
(மதுரைக் காஞ்சி: 60-61)
நாவலந்தீவு-3
தலைச்சங்க காலத்தின் இறுதியில் வாழ்ந்தவனாகக் கருதப்படும் இப்பாண்டிய மன்னன் நெடியோன், நிலந்தரு திருவிற்பாண்டியன், பாண்டியன் மாகீர்த்திதேவன்  எனவும் அழைக்கப்பட்டான். கடற்கோளால் இன்றைய குமரிக்குத் தென்பகுதியிலுள்ள நாட்டுப் பிரிவுகள் அழிவதற்கு முன்னர் பஃறுளி என்றதோர்
நாவலந்தீவு-4
ஆற்றை வெட்டுவித்தவன் என்றும், கடல் தெய்வத்திற்கு விழா வெடுத்தான் என்றும்புறநானூறு கூறும். தொல்காப்பிய உரையாசிரியர் நச்சினார்க்கினியர்இவ்வேந்தன் அவைக்களத்தே தொல்காப்பியம் அரங்கேற்றப்பெற்றதென மொழிகிறார்.இம்மன்னன் மதுரையில் நடைபெற்றதான, திருவிளையாடல்களிலும் பங்கேற்றான்
நாவலந்தீவு-5
எனத் திருவிளையாடல் புராணம் குறிக்கும். இவனுக்குப் பிற்பட்ட காலத்தில் அளிக்கப்பட்ட வேள்விக்குடிச் செப்பேடுகளில் கடற்கோளால் உலகங்கள் அழிய ஒரு பாண்டிய மன்னன் மட்டும் உயிர் வாழ்ந்த செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. சின்னமனூர்ச் செப்பேடுகளும் (இரண்டும்) பாண்டியன் கடல் மீது
நாவலந்தீவு-6
வேலெறிந்து பெரு வெள்ளத்தைத் தடுத்த கதையைக் கூறுகின்றன. வடிவலம்ப நின்ற பாண்டியனான நெடியோனைப் பற்றிய மதுரைக் காஞ்சியின் குறிப்புக்களை வைத்து அவன் ஜாவா, ஸுமத்ரா முதலிய தெற்காசிய நாடுகளைக் கைப்பற்றி ஆண்டமையை அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். அங்கே பொருனை முதலிய ஆறுகளின்
நாவலந்தீவு-7
பெயரிருப்பதையும் சுட்டுகின்றனர். இந்த முடிவுகள் உண்மையானால் ராஜேந்த்ர சோழனுக்கு ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே கடல்கடந்து தெற்காசிய நாடுகளைக் கைப்பற்றி ஆண்ட தமிழ் வேந்தன் இவனே என்பது உறுதியாகும். தொல்காப்பியத்தைப் புலப்படுத்தியவனும் இவனாகவே கருதப்பெறுகிறான.
நாவலந்தீவு-8
வடிம்பலம்ப நின்ற பாண்டியன் என்னும் அரசன் சங்ககாலத்துக்கு முன் ஆண்ட அரசன். இவனை நெடியோன் எனவும் அழைப்பர்.பல்லாண்டுகளாக ஆண்டதால் இப்பெயர் பெற்றதாகக் கருதுகின்றனர். 24 ஆயிரம் ஆண்டு அரசு புரிந்தான் என இவன் ஆண்ட 24 ஆண்டுக்காலத்தினை தொல்காப்பியத்திற்கு உரை
நாவலந்தீவு-9
எழுதிய நச்சினார்க்கினியர் கூறியுள்ளார். கடற்கோளால் கொள்ளப்பட்ட குமரி நாட்டில் முந்நீர்க் கடல் தெய்வத்திற்கு இவன் விழா எடுத்ததாக அறியப்படுகின்றது.
மூன்று கடல்கள் கூடுமிடம் குமரி முனை. இன்றுள்ள குமரி முனைக்குத், தெற்கே பஃறுளி ஆறு என்று ஓர் ஆறு கடற்கோளுக்கு முன்னர்
நாவலந்தீவு-10
இருந்தது. இன்று ஓடும் பறளியாற்றின் தொடர்ச்சி ஆகலாம். இதன் கழிமுகத்தில் இவன் விழாக் கொண்டாடினான். அதனால் இந்த விழா முந்நீர் விழா எனப்பட்டது.காவிரியாற்றுக் கழிமுகத்தில் புகார் நகரத்தில் இந்திர விழா நடைபெற்றதைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
நாவலந்தீவு

குமரிக்கண்டத்தை ஆட்சி செய்த வடிம்பலம்ப நின்ற பாண்டியன் மூலம் குமரிக்கண்டம் என்ற மாபெரும் கண்டம் இருந்தததை உலகம் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.

மிக நீண்ட பகுதி.Linkஐ பயன்படுத்த படிக்கவும்

wix.to/lMClC_Q

நன்றி
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with Mathavan Venukopal

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!