, 24 tweets, 5 min read
My Authors
Read all threads
என்ஜினீயரிங் மேல் உள்ள அபிப்பிராயத்தை மாற்றவே இந்த பதிவு. 2010க்கு பின்பு Mechanical, Electrical படித்தவர்களுக்கு சரியான பாதை அமையவில்லை. அண்ணா பல்கலைக்கழகம், PSG போன்ற கல்லூரிகளில் படித்தவர்கள் கூட பாதிப்பேர் படித்த பின்பு மென்பொருள் துறையை தான் தேர்வு செய்கிறார்கள்.

ஆனால் ஒரு
சிலர் ஒரு படி மேலே சென்று என்னது என்ஜினீயரிங் ஆ? அதெல்லாம் ஸ்கோப் இல்லாத படிப்பு இப்போ. இப்போ லாம் அக்ரி க்கு தான் ஸ்கோப், CA க்கு தான் scope என்று எங்க அண்ணன் சொன்னாரு னு நீங்க கோவப்படுறது தெரியுது.

ஒரு காலத்துல ஊருக்கு ஒரு என்ஜினீயர் இருக்கிறதே பெரிய விஷயம் இப்போ வீட்டுக்கு
ஒரு என்ஜினீயர்ங்கிற நிலமைக்கு வந்துட்டோம். ஆனா அன்னைக்கு என்ஜினீயர்க்கு இருந்த மதிப்பும் மரியாதையும் இப்போ இருக்கா? வேலை இல்லாம சுத்திட்டு இருக்க அண்ணன்ங்களை பார்த்தும் நான் எப்படி என்ஜினீயரிங் படிக்கிறது? னு கேள்வி வருவது நியாயம் தான்.

ஒரு period ல என்ஜினீயரிங்க்கு நல்ல Scope
இருக்குனும் கை நிறைய சம்பாரிக்கலாம் என்ற ஒரு mind set நம்ம middle class பெற்றோர்க்கிட்ட ஒரு விதையை விதைச்சாங்க. அது என்ஜினீயரிங் காலேஜ் ஓனரா இல்ல அரசியல் வாதியானு தெரியல.

முன்னாடி மாவட்டத்துக்கு ஒன்று இரண்டு னு இருந்த என்ஜினீயரிங் காலேஜ் விறு விறுன்னு நூறுகளை கடந்தது எல்லாம்
என்ஜினீயரிங் படிச்சாங்க. என்ன படிச்சி இருந்தாலும் பரவால்ல நான் trianing கொடுத்து வேலை வாங்கிக்கிறேன் னு IT கம்பெனி campus interview ல எடுத்து கை நிறைய சம்பளமும் கொடுத்து பல மெக்கானிக்கல் என்ஜினீயர்களை java சுந்தரேசன் போல திடீர் பணக்காரனா ஆக்கினாங்க.

நாமளும் MLM seminar ல இவங்க
இவ்ளோ சம்பாரிச்சி இருக்காங்க அவங்க அவ்ளோ சம்பாரிச்சி இருக்காங்கனு விளம்பரத்தை பார்த்து ஏமாந்த மாதிரி 12th பாஸ் ஆனா போதும் ஏதோ ஒரு என்ஜினீயரிங் கோர்ஸ் சேர்த்து விட்டா நம்ம பிள்ளைங்க காட்டுல கஷ்ட படாமல் முன்னுக்கு வந்துடும்னு, நாம பட்ட கஷ்டம் நம்ப பிள்ளைங்க பட கூடாது என்ற ஆசையில
என்ஜினீயர் ஆக்கிட்டாங்க.

ஆனா நிலைமை என்னன்னா நிறுவனங்களுக்கு தேவைப்படுவது மதிப்பெண் மட்டும் எடுக்கின்ற புத்திசாலி இல்லை திறமையான என்ஜினீயர். திறமையான என்ஜினீயர் பற்றாக்குறை இப்போவும் நிறைய இருக்கு. இங்கு கார்ப்பரேட் மற்றும் small scale industries என்று இரண்டு வகையான நிறுவனங்கள்
இருக்கு.Small scale நிறுவனங்கள் சம்பளம் குறைவாக தரும் ஆனால் நிறைய கற்றுக் கொடுக்கும்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் நிறைய சம்பளம் கொடுக்கும் ஆனால் நீ வரும் போது எல்லாம் கற்றுக்கொண்டு வரனும். கல்லூரியை முடித்ததும் smallscale நிறுவனங்கள் உன்னோட என்ஜினீயரிங் படிப்போட அடிப்படைகள்(basics)
பொறுப்பா புரிஞ்சு படிச்சு இருக்கியா என்பதை ஆய்வு செய்யும். கார்ப்பரேட் நிறுவனங்கள் படிப்போடு latest technology extra வா படிச்சு இருக்கியா என்று டெஸ்ட் பண்ணும். Small scale நிறுவனங்கள் சொல்லி கொடுத்தால் சீக்கிரம்/ பொறுப்பா கற்றுக் கொள்வானா என்று பார்க்கும். Corporate நிறுவனங்கள்
அடுத்த இரண்டு மாசத்தில் நமக்கு சம்பாதித்து கொடுப்பானா என்று பார்க்கும்.

இங்க தான் நம்ப B &C கிளாஸ் சிட்டிகளில் உள்ள இன்ஜினியர்களுக்கும், நிறுவனங்கள் தேடுகின்ற இன்ஜினியர்களுக்கும் வித்தியாசம் வருது.

நாலு வருஷம் படிக்கிற நம்ப மெக்கானிக்கல் இன்ஜினீயர்க்கு small scale நிறுவனங்கள்
கேட்கின்ற வெல்டிங் பற்றிய அடிப்படை புரிதல்களும் இருக்காது கார்ப்பரேட் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்ற primavera P6, CWI (Extra skills)ம் இருக்காது.ஏன்னா நாம இன்ஜினியர்கள உருவாக்கவில்லை மதிப்பெண் எடுத்தால் புத்திசாலி நம்புற புத்திசாலிகளை உருவாக்கி வைத்து இருக்கோம்.

என்ஜினீயரிங் ஒரு
டெக்னாலஜி படிப்பு மட்டுமல்ல அது ஒரு கலை. உதாரணமாக பெய்ன்டர்யையும், ஆட்டிஸ்ட்டையும் எடுத்துக்கோங்க. வீட்டுக்கு பெய்ன்ட்டு அடிக்க இரண்டு நாள் பயிற்சி கொடுத்தால் யார் வேணும்னாலும் paint அடிக்கலாம். ஆனா ஆர்ட்டிஸ்ட் ஆக ஓவிய திறமை மட்டும் தான் கற்று கொடுக்க படும் வரையப்படும் ஓவியம்
ஒவ்வான்றும் தனித்தன்மையா இருக்கும். இரண்டு artist கிட்ட படத்தை கொடுத்து வரைய சொன்னா இரண்டும் ஒவ்வொரு வகையில் சிறந்ததா இருக்கும். ஆனால் artist திறமை அதை அணுகிய விதம் மற்றும் உயிரோட்டம் தான்.அதே போல தான் என்ஜினீயர் கிட்ட டெக்னாலஜி மட்டும் தான் கற்று கொடுக்க படும். தீர்வு காணவேண்டிய
பிரச்சினைகளுக்கு நீங்கள் அணுகும் விதம் மற்றும் தீர்வின் இஸ்திரத்தன்மை தான் உங்கள் திறமையை தீர்மானிக்கும்.

Painterகளுக்கும் வேலை இருக்கு, ஆர்டிஸ்ட்களுக்கும் வேலை இருக்கு ஆனால் paint கலக்க மட்டுமே தெரிந்தவர்களுக்கு வேலை இல்லை.நீங்கள் என்னவாக போகிறீர்கள் என்பதை நீங்கள் தான் முடிவு
செய்ய வேண்டும்.

மீண்டும் சொல்கிறேன் இந்த உலகிற்கு என்ஜினீயர்கள் தேவை என்றும் இருக்கும். வேலைக்காக படிக்காதீர்கள் பிடித்ததை படியுங்கள் அதில் திறமையை வளர்த்து கொள்ளுங்கள். வேலை தானாக கிடைக்கும்.

இவ்ளோ நாள் கஷ்ட பட்டு படிச்சு நல்ல மார்க் வாங்கிட்டா பின்னாடி நல்லா இருக்கலாம் னு
சொல்லி படிக்க வைப்பாங்க. அந்த பார்வையில் பார்க்காமல் ஆர்வத்துடன் படியுங்கள். நான் இங்கு எனக்கு தெரிந்த சில படிப்புகளை பற்றி சொல்லுகிறேன். தம்பி @_VarunKannan சொன்னது போல் இந்த வருடம் பெரிய அளவில் வேலை வாய்ப்புகள் இருக்காது. அதனால் சில Extra skills வளர்த்துக் கொள்வதற்கான சூழலாக
எடுத்துக் கொள்ளுங்கள்.
1) School of welding என்று சொல்லி திருச்சி BHEL நிறுவனத்தில் உள்ள engineering முடித்த மாணவர்களுக்கு PG 1year program இருக்கு.. இதில் நாங்க படிக்கும் போது (2000 -2010) காலகட்டத்தில் 100% placement இருந்தது..L&T, JSW, Reliance போன்ற நிறுவனங்கள் கேம்பஸ் மூலம்
எடுத்துக் கொண்டனர். தற்போது எப்படி என்று தெரியவில்லை.

அதே நிறுவனம் (Welding research institute - WRI, Trichy) சில ஒரு மாதம் படிப்புகளை வழங்குகிறார்கள். அதன் விவரங்கள் Certified welding inspector, Phased array ultrasonic testing போன்றவை.. இந்த course எல்லாமே நம்மை போன்றவர்கள்
பயன்படுத்தி கொள்வதில்லை பெரும்பாலும் corporate நிறுவனங்கள் Adani, reliance, NTPC போன்ற நிறுவனங்கள் தன்னுடைய இன்ஜினியர்கள அனுப்புகின்றனர். Phased array ultrasonic படிப்பிற்கு மட்டும் செலவு அதிகம் ஒரு இலட்சம் ஆகும். Certified welding inspector பொறுத்த வரை நிறைய கற்றுக் கொள்ளலாம்.
ஆனால் அதை விட CSWIP படிப்பிற்கு தான் உலக அளவில் மதிப்பு இருக்கு. இங்கு சொல்லி கொடுப்பவர்கள் எல்லோரும் குறைந்தபட்சம் இரண்டு PhD முடித்தவர்கள் தான் அதனால் அறிவு பசிக்கு பஞ்சம் இருக்காது. நாங்கள் படிக்கும் போது சென்னை ஐஐடி உடன் ஒப்பந்தம் செய்து இருந்தனர். தற்போது PSG உடன் 1 year
Course படிக்க எழுத்துத் தேர்வு & நேர்முகத் தேர்வு மூலம் தான் தேர்ந்தெடுப்பார்கள்.

அடுத்தது NPTI (National power training institute) இந்தியாவில் 6 இடத்தில் மட்டும் தான் இருக்கு இவர்களும் நிறைய courses conduct (simulator training) பண்ணுறாங்க.
npti.gov.in one year
Program சேருவதற்கு நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். Engineering basics நல்லா படிச்சுட்டு போனால் சுலபமாக தேர்ச்சி பெறலாம்.

இது இல்லாமல் வளைகுடா நாடுகளில் கால் எடுத்து வைக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக என்ஜினீயரிங் இல்லாமல் கூடுதலாக திறன் சார்ந்த படிப்பை படித்து இருக்க வேண்டும்
முன்னர் சொன்னது போல் CSWIP 3.1 welding inspector, NACE 2.5 painting inspector, API 653 tank inspector, planning துறையில் செல்ல வேண்டும் என்றால் கண்டிப்பாக Primavera P6, MS project, BIM கண்டிப்பாக தெரிந்து இருக்க வேண்டும்.

ஆகையால் இந்த கொரோனோ காலத்தில் உங்களது திறனை வளர்த்துக்
கொள்ள முயற்சி செய்யுங்கள்.

@bharath_kiddo @gcybertron @nkchandar @_VarunKannan @teakkadai1
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with GJ

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!