கடந்த ஆட்சியை எதிர்த்து எதையெல்லாம் பேசி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததோ அதிலெல்லாம் முழுமையாக தோல்வி அடைந்துள்ளது மோடி தலைமையிலான பாஜக அரசு.
#BJPFail
கிலோ மீட்டர் கணக்கில் இந்தியாவை சீனா, ஆக்கிரமித்த நிலையிலும் சீனாவின் பெயரை கூட நேரடியாக சொல்ல மறுக்கிறார் மோடி. நேபாளம் கூட இந்தியாவின் பகுதியை இணைத்து வரைபடம் வெயிடுகிறது. தேசபக்தி, தேச பாதுகாப்பு பற்றி கடந்த ஆட்சியில் வாய்கிழிய பேசிய பாஜக வாய் அடைத்துள்ளது
இந்து, இந்துக்கள் என்று பேசும் பாஜக தான், தற்போது மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி இந்துக்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு தரக் கூடாது என்று நீதிமன்றத்தில் வாதாடியது. இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டும் அதுபற்றி மோடி இது வரை வாய் திறக்கவில்லை.
100 கோடிக்கு எம்எல்ஏவை விலைக்கு வாங்கி, 1000 கோடியில் மாநில ஆட்சிகளை கவிழ்த்து கொண்டு உள்ளது பாஜக. தனிநபர் ஊழல் போய் நேரடியாக பாஜக என்ற அமைப்பே இந்த ஆட்சியில் ஊழலில் ஈடுபட்டுள்ளது.
45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலை வாய்ப்பு இழப்பு ஏற்பட்டுள்ளது. இது கொரோனா காலத்திற்கு முன்பு, தற்போது எந்த நிலையில் இருக்கும் என்று நீங்களே நினைத்துப் பாருங்கள்.
மோடி ஆட்சியில் இந்தியாவின் கடன் 58 சதவீதம் உயர்ந்துள்ளது. மோடி ஆட்சிக்கு வந்தால் உலக வங்கிக்கே கடன் கொடுப்பார் என்றார்கள், ஆனால் இந்திய ரிசர்வ் வங்கியின் அவசர கால நிதி 1.76 லட்சம் கோடியை கூட பிடிங்கி தான் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்.
வீக்_பிரதமர்-
மன்மோகன் சிங் வீக் பிரதமர், பலமான பிரதமர் நாட்டுக்கு வேண்டும் என்றார்கள். அந்த மன்மோகன் சிங்காவது
நாடாளுமன்றம், ஊடகங்கள் கேள்விக்கு பதில் சொல்லுவார்..,
#கறுப்பு_பணம்_ஒழிப்பு -
கறுப்பு பணத்தை ஒழித்து வெளிநாட்டில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்டு எடுத்து வருவோம் என்றார்கள். ஆனால்,
வெளி நாட்டில் உள்ள கறுப்பு பணம் என்று பேசிய பாஜக, வெளி நாட்டு வங்கிகளில் உள்ளது எல்லாம் கறுப்பு பணம் இல்லை என்று வாக்குமூலம் கொடுத்துள்ளது. (அருண் ஜெட்லி)
@mkstalin @Udhaystalin