, 35 tweets, 16 min read
My Authors
Read all threads
வாரியாரால் வீழ்ந்த திமுக:-

வாரியாரின் பயோ முன்னமே எழுதியதால் சங்கம் நேராக தலைப்புக்குள் செல்கிறது.

இசை மற்றும் புராணச் சொற்பொழிவாலும் இறைவன் புகழ்பாடி வந்த கிருபானந்த வாரியாரின் தந்தை மல்லையதாசர் முருகப்பெருமானின் பல நாமங்களில் ஒன்றான "கிருபானந்த வாரி" எனும் பெயரை சூட்டினார்.
"கிருபை" என்றால் கருணை என்றும், "ஆனந்தம்" என்றால் இன்பம் என்றும்,
"வாரி" என்றால் பெருங்கடல் என்றும் பொருள்.

தந்தை மல்லையதாசர் ஒருநாள் சொற்பொழிவு ஒன்றுக்குப் போக முடியாத நிலை தந்தைக்குப் பதிலாக அந்தச் சொற்பொழிவிற்கு வாரியார்
செல்கிறார்.
சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் மல்லையதாசர் சொற்பொழிவிற்கு வருவதாக ஒத்துக்கொண்டு தான் வராமல் இளம் வயது மகனை அனுப்பி வைத்திருக்கிறாரே என்று வருத்தப்பட்டனர்.

வாரியார் அன்று முதன் முதலாக செய்த சொற்பொழிவைக் கேட்டவர்கள் அசந்து போய்விட்டனர் மகிழ்ந்து போனார்கள்.
அப்படித்தான் தனது பதினெட்டு வயதில் சொற்பொழிவைத் தொடங்கினார் வாரியார்,

தமிழ் இலக்கியம் மற்றும் இந்து சமய ஆன்மிகச் சொற்பொழிவில் தனக்கென தனிப் பெயரை ஏற்படுத்திக் கொண்ட மிகச் சிறந்த சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியார். இவர் சொற்பொழிவைக் கேட்க எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும்.
எந்தச் சொற்பொழிவாக இருந்தாலும் அதில் நகைச்சுவை கலந்து மகிழ்ச்சியைச் சேர்த்து வழங்கும் தனித்திறன் அவருக்குண்டு. சின்னக் குழந்தைகளைக் கூட தன் பேச்சால் கவர்ந்து வயப்படுத்தி வைத்திருந்த மகான்

இந்தியா மட்டுமில்லாது, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளிலும்
சிறப்பான சொற்பொழிவுகளை நிகழ்த்தி உலகத் தமிழர்கள் அனைவரது மனத்திலும் தனக்கென நீங்கா இடம் பெற்றிருந்தார்

பண்டைய ஞானிகள் ரிஷிகள் வரிசையின் மீட்சியாக நம்மிடம் வாழ்ந்த மகான் வாரியார் சாமிகள் முருகனின் ஏழாம் நட்சத்திரம் அவர்
ஆறுமுகத்தானின் ஏழாம் முகம் அவர்
நடமாடிய ஏழாம் படை வீடு அவர்.
முருகனுக்கு ஏகபட்ட அடியவர்களும் புலவர்களும் இங்கு இருந்தார்கள்,, அவ்வையார், அருணகிரி நாதர், நக்கீரர், குமரகுருபரர் என பலர் இருந்தார்கள். அவர்களை எல்லாம் நாம் கண்டதில்லை
ஆனால் இவர்களை எல்லாம் நாம் வாழும் காலத்தில் ஒரு உருவத்தில் மொத்தமாக கண்டோம் என்றால் அது கிருபானந்த வாரியார்.
1944ல் பெரியபுராணத்தை கொளுத்துவேன் ராமாயணத்தை எரிப்பேன் என #திக ஆட்டம் போட்ட காலம் தமிழ்நாட்டில் நாத்திக அலை சுனாமியாய் பொங்கிய காலம் #திககூட்டம் ஒரு மதவாதியை விடாமல் கரித்து கொட்டி கருப்பு சட்டை கொடியுமாக வலம் வந்தகாலம் தனி ஒரு மகானாக அவர்களுக்கு பதிலடி கொடுத்து வந்தார் வாரியார்
“நாத்திக நச்சு ஆறு இங்கு ஓடுகின்றது” என பொதுவாக சொன்னார் வாரியார். அதை சவாலாக ஏற்று கொண்ட #திக தரப்பு பொங்கி எழுந்தது,

அண்ணா “கீலாசேபம்” என்றொரு கட்டுரை எழுதி பெரியார் நல்லாறு நச்சுகளை அழிக்க வந்த ஆறு என பொங்கி கொண்டிருந்தார்.

பெரியார் விடுதலையில் தலையங்கம் எழுதினார்.
‘யோக்கியமற்ற கூப்பாடுகள்’ என்ற அந்தத் தலையங்கத்தில் வாரியாரைப் பற்றி
தரக்குறைவாக விமர்சனம் செய்திருந்தார்.

வாரியாருக்கு எதிரான நிலைப்பாட்டை நியாயப்படுத்தினார் அண்ணாவுக்கும் கிருபானந்தவாரிக்கும் எழுத்துபோர் நடந்தது தீவிரமாகவும் நடந்தது வாரியாரின் தாக்குதல் முன் அண்ணா பதுங்கினார்
அதே நேரம் பெரியார் மகள் மணியம்மையுடன் திருமணம் என மனக்கசப்பு வந்ததால் தனது நிலையை மாற்றினார் அண்ணா.

வாரியார் அவர்போக்கில் ஆன்மீக மேகமாய் பொழிந்து கொண்டிருந்தார்.

திமுக vs வாரியார் மோதல் வாரியாரின் மக்கள் அபிமானத்தை கண்ட கருணாநிதி நேரடியாக தாக்க வக்கு திரணி இல்லாமல்,
தன் பத்திரிக்கை கும்பலுடன் சேர்ந்து
எழுதி தாக்கி கொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில் வாரியாரின் உபன்யாசங்களில் குறுக்குக்கேள்வி கேட்டு வம்பு செய்ததாக கருணாநிதியே
‘நெஞ்சுக்கு நீதி’யில் குறிப்பிட்டிருந்தார்.

நாட்கள் நகர்ந்தது 1969ல் கருணாநிதி முதல்வராய் இருந்தார் ,
அப்பொழுது அண்ணாவுக்கு Dr. Miller என்ற புகழ்பெற்ற British oncologist வைத்தியம் பார்த்துக் கொண்டு இருந்தார்.

அந்த சமயத்தில் நெய்வேலி பகுதியில் தொடர் சொற்பொழிவில் ஈடுபட்டிருந்தார் வாரியார் .

அப்போது ஒரு கூட்டத்தில், பேசும் போது மனிதனுக்கு காலனாகிய கில்லர் வந்து விட்டால்
ஆனானப்பட்ட மில்லர் ஆலும் அவனை வெற்றி கொள்ள முடியாது (கடவுளை நம்பாதவனுக்கு நல்மரணம் வாய்க்காது மருத்துவம் அவனுக்கு பலன் கொடுக்காது) என்றார் தமக்கே உரிய பாணியில்,

அவ்வளவு தான் அண்ணாவை இழிவுபடுத்திவிட்டதாகக்கூறி திமுக ரவுடிகள் அவரை சூழ நின்று தாக்கினர்கள்.
தொடர்ச்சியாக வாரியாரின் சொற்பொழிவுக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.

மக்கள் பாதுகாப்பில் காவல்துறை அவரை பத்திரமாக மீட்டு அனுப்பி வைக்கப்பட்டார் வாரியார்

காயமின்றி தப்பினாலும் அவரின் வீட்டின் மயில் சிலையும் இன்னும் பலவும் உடைத்தெறியபட்டன‌ அவர் பூஜை அறையில் புகுந்து உடைத்தார்கள்.
விக்ரகங்களையும் வழிபாட்டு பொருட்களையெல்லொம் உடைத்தார்கள் ஆனால் அன்று ஊடகம் என்பது செய்திதாளும் வானொலியும் என்பதால் விஷயம் மூடி மறைக்கபட்டது.

வாரியார் தாக்கப்பட்டபோது கருணாநிதி அண்ணா மீது தமிழக மக்கள் கொண்ட அன்பினை காட்டுகின்றது என்று தாக்குதலை நியாயப்படுத்தினார்
அதை செய்தது திமுக அரசு என்பது ஒன்றும் ரகசியம் அல்ல‌ வாரியார் தாக்கபடும் பொழுது அவருக்கு வயது 65, அந்த முதியவரை தாக்கியது தமிழ் வீரம், அதை ரசித்து கொண்டிருந்த பெயர் திராவிட பகுத்தறிவு.

வாரியார் தாக்கப்பட்ட செய்தி சட்டமன்றத்தில் எதிரொலித்தது.
வாரியாரைத் தாக்கியது தவறு என்று ஆவேசமாகப் பேசினார் காங்கிரஸ் கட்சியின் கொறடாவான சட்டமன்ற உறுப்பினர் விநாயகம். அண்ணாவை இழிவுபடுத்தும் வகையில் வாரியார் பேசியது தவறுதானே என்று எதிர்க்கேள்வி எழுப்பினர் திமுகவினர்

ராஜாஜி மனம் வருந்தினார், தீட்சிதர்களும் ஆதீனங்களும் களத்துக்கு வந்தனர்
முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் கண்டன அறிக்கை வெளியிட்டார். கி. வா. ஜகன்னாதன், குமரிஅனந்தன் ஆகியோர் சுவாமிகளை நேரில் பார்த்து உரையாடினார்கள் ம.பொ.சி திமுகவினரின் அராஜகத்தை கண்டித்து தீர்மானமே கொண்டு வந்தார்.

நிலமை எல்லை மீறி சென்றதை உணர்ந்த கில்லாடி கருணாநிதி திட்டம் போட்டர்
அந்நேரம் தன்னுடன் மோத தொடங்கியிருந்த எம்.ஜி.ஆரை சரியாக பழிவாங்கினார்

ஆம், வாரியாரை அடித்தது எம்.ஜி.ஆர் ரசிகர்கள் என ஆட்டத்தை திசை திருப்பினார்

வாரியாரைத் தாக்கியது மோசமான காரியம். அந்தப் பெரியவரின் மனம் புண்பட்டிருக்கும். அவரைச் சமாதானம் செய்யும் வகையில் ஏதேனும் செய்யவேண்டும்
என்று விரும்பினார் எம்.ஜி.ஆர். உடனடியாக ம.பொ.சியைத் தொடர்புகொண்டு பேசினார் எம்.ஜி.ஆர். வாரியாரை சமாதானப்படுத்த யோசனை ஒன்றைக் கொடுத்தார் ம.பொ.சி.

எம்.ஜி.ஆர் அவர்கள் தம் சொந்தச் செலவில் ஒரு ஆன்மீக கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். கிருபானந்த வாரியாரையும் அழைத்துப் பேசச் செய்தார்.
அப்பொழுது உண்மையினை விளக்கினார் எம்.ஜி.ஆர் பொன்மனச் செம்மல்’ என்னும் பட்டத்தைத் கொடுத்தார் அவரை வாழ்த்தி அனுப்பினார் கிருபானந்த வாரியார்.

வாரியாரை நேரில் கண்ட முதல் திமுக பிரமுக‌ர் அவர் தான் அந்த வாழ்த்தில் கருணாநிதியினை வீட்டுக்கு அனுப்பிவிட்டு முதல்வராக அமர்ந்தார் எம்.ஜி.ஆர்.
அதன் பின் கருணாநிதியால் எழமுடியவில்லை 1987ல் வந்தாலும் சில மாதங்களில் ஆட்சி கவிழ்ந்தது

வாரியாரால் ஆசீர்வதிக்கபடும் காட்சியே எம்.ஜி.ஆர்க்கு பெரும் வெற்றியினை பெற்று கொடுத்தது பொன்மன செம்மல் என வாரியார் சொன்ன அந்த வார்த்தையே அடையாளமாகி மங்கா புகழாகி அவரை அரசர் கோலத்துக்கு ஆக்கியது
சுமார் 30 ஆண்டுகள் திராவிட நாத்திக கோஷ்டியோடு மல்லுகட்டிய கிருபானந்த வாரியாருக்கு எம்.ஜி.ஆர் மூலம் பெரும் ஆறுதல் கிடைத்தது அத்தோடு போலி நாத்திக அடையாளம் ஒழிய ஆரம்பித்தது
அதன்பின் அம்மா முதல்வராகி ஆலயமெல்லாம் பகிரங்கமாக சென்றார் வாரியாருடன் மோதியதில் திமுகவின் அழிவு தொடங்கிற்று,
முருகபெருமான் தன் ஞானவேல் மூலம் அந்த அரக்க கூட்டத்தை சரித்து போட்டார்

வாரியார் தாக்குதலை கண்டிக்காத கருணாநிதி வாரியார் காலம் வரை எழவே இல்லை முருகபெருமானின் அடி அப்படி இருந்தது வரலாற்றின் மிக பெரிய சான்று ஒரு ஜெகஜால கில்லாடி ஒரு சாதாரண முருகன் ஆண்டியிடம் தோற்று அவமானபட்ட வரலாறு
அது அந்த தோல்விதான் கந்த சஷ்டி கவசம் வரை #திருட்டு_திமுக வின் முதுகில் சாத்தி கொண்டிருக்கின்றது, இன்னும் சாத்தும் இதெல்லாம் முருகபெருமானின் விளையாட்டு தன் கடைசி மூச்சு வரை திமுகவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார் வாரியார்.
சாந்தமான முகம் பார்த்தால் வணங்கதக்க தோற்றம், அமைதியான மொழி, அழகு தமிழ், வாய்திறந்தால் எம்பெருமான் என தொடங்கும் அந்த கீர்த்தி எல்லாம் இனி யாருக்கும் வாய்க்காதவை எந்த வாதத்திலும் அவரை வெல்ல முடியாது எந்த சபையிலும் அவர் தோற்றதுமில்லை,

சங்க காலத்திலிருந்து வந்த ஆழ்வார்கள்,
புலவர்கள் வரிசையில் நாம் கண்ட மாபெரும் மனிதர் வாரியார் முருகபெருமான் அவர் நாவில் இருந்து தமிழ் கொடுத்தான் என்பதை பல இடங்களில் காண முடிந்தது.

இந்த நூற்றாண்டின் மிக சிறந்த தமிழறிஞர்களில் ஒருவர் கண்ணில் ஒற்ற கூடிய அழகு தமிழ் அது, பண்டைய தமிழ் முருக அடியார்கள் எப்படி இருந்தார்கள்?
எப்படி எழுதினார்கள்? எப்படி போதித்தார்கள்?என்பதை அவராலே தமிழகம் கண்டு கொண்டது ஆனால் தமிழ் என்பது தமிழக நாத்திகர்களின் சொத்து அவர்கள் வளர்த்ததே தமிழ் எனும் ஒருவித குருட்டு நம்பிக்கையில் ஆன்மீகவாதியான வாரியாரின் அழகு தமிழ் மறைக்கபட்டாலும் அது சூரியன் போல் மீண்டெழுந்து ஒளிவீசும்.
வாரியார் சுவாமிகள், சித்தியடையும் வரை பூரண நலத்துடன் விளங்கி வெளிநாடு சென்று சொற்பொழிவு ஆற்றிவிட்டு திரும்புகையில் விண்ணில் பறந்த விமானத்தில் அப்படியே முருகன் அவரது ஆன்மாவை அழைத்துக்கொண்டான்.
ஆனால் தாக்கியவர்கள் கதி நடை பிணமாய் தொண்டையில் ஓட்டை போட்டு மூத்திர சட்டியை சுமந்து ஆறடி நிலத்துக்கு கூட பிச்சை எடுத்து நரகத்தை இங்கேயே ட்ரைலர் பார்த்து விட்டு நோயோடு போராடி நொந்து செத்தார்கள்,

இந்துக்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த மகான் திருமுருக கிருபானந்த வாரியார்.
வாரியார் சுவாமிகள் யாரையும் எதிரியாக நினைத்ததில்லை அவரை எதிர்த்து பேசியவர்கள் அழிந்து போனார்கள் என்பது கண்முன்னே நடந்த வரலாற்று,

அவர் வாழ்ந்த வீடு இன்று நினைவில்லமாக்கப்பட்டு இருக்கிறது. இந்திய அரசு இவருடைய உருவம் பொறித்த தபால்தலையை 2006 ஆம் ஆண்டில் வெளியிட்டு சிறப்பு செய்தது.
சிங்கபுரி நடராஐர் சன்னதி பிரகாரத்தில் வடகிழக்கே திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமி திருமேனி நிருவப்பட்டுள்ளது.

அருள்திரு கிருபானந்த வாரியார் சுவாமிகள்
வாழ்க வளமுடன் 🙏
#SSRThreads
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with SSR

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!