Post Covid Care : thread.,
உயர் பொறுப்பில் உள்ள ஓர் அரசு மருத்துவரிடம் நேற்று பேசினேன். நுரையீரல் துறை நிபுணர் அவர். அவர் சொன்ன சில எச்சரிக்கைகளை இங்கே பகிர்கிறேன். 1. முதலில் நமது சுகாதாரத் துறைச் செயலாளர் பெண்மணி குறிப்பிட்டதைப் போல கோவிட் வைரஸ் ஒரு எளிய ஃப்ளூ ஜுரம் அல்ல.
2. மிக வேகமாக தனது தன்மையை மாற்றிக் கொள்ளும் வகையாக உள்ளது. எனவே, தடுப்பூசி வந்தாலும் அதிலும் எல்லோருக்குமான நிரந்தர தீர்வாக அமையுமா என்பது ஐயமே! 3. ஒரு முறை கரோனா பாசிட்டிவ் வந்து குணமாகி கரோனா நெகட்டிவ் ஆனவுடன், அந்த நோய் 'முற்றிலுமாக' நீங்கி, இனி அபாயமில்லை என பொருள் அல்ல.
4. கரோனா வைரஸ் விலகும்போது சிலருக்கு அவரவர் உடல்தன்மையை வைத்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திச் செல்கின்றன. இதை கவனித்து முன்கூட்டியே கண்டுபிடிக்க நம்மிடம் வழிமுறையும் இல்லை. அதற்கான வசதிகளும் இல்லை. 5. கடந்த வாரத்தில் அவரிடம் வந்த நுரையீரல் தொற்று கேஸ்களில் 7ல் 5 கரோனா குணம்
அடைந்தவர்கள். ஆக, கரோனா ஏற்படுத்திச் சென்ற பாதிப்புகள் அவை என கருதுகிறார். 6. நுரையீரல் மட்டுமல்லாமல், மூளைக்குச் செல்லும் ரத்தஒட்டம் அடைப்பு வரை பல்வேறு வகையில் அந்த பாதிப்புகள் இருக்கும் என்கிறார். 7. இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியவுடன் ஏற்படும் இவ்வகையான பாதிப்புகள்
எதிர்பாராத விதத்தில் தாக்குவதால் கரோனாவை விட அபாயம் மிக அதிகம்.
அவர் கருத்துப்படி கரோனா குணம் அடைந்து நெகட்டிவ் ஆனவர்கள் 3 வாரம் கழித்து CT Scan எடுத்துப் பார்ப்பது நல்லது. நிச்சயம் மருத்துவரையேனும் சந்தித்து பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.
அதை இங்கே பதிவு செய்கிறேன்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
"அட்சயபாத்திரா" எனும் தொண்டு நிறுவனம் மூலம் மிகப் பெரிய தில்லாலங்கடி வேலை நடந்திருப்பதை இன்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் @ptrmadurai விளக்கினார்.
முதலில் அந்த பேச்சு வந்தது உறுப்பினர் எஸ்.பி. வேலுமணி பேசும்போது பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை முதன்முதலில் எடப்பாடி அரசுதான்
கொண்டு வந்தது என்று பேசினார். உடனே அமைச்சர் மா.சு எழுந்து, காலை உணவுத் திட்டத்தை தமிழ்நாடு அரசு இதற்கு முன்பு தொடங்கவில்லை. உறுப்பினர் கூறுவது அட்சய பாத்திரா எனும் என்.ஜி.ஓ சென்னை மாநகராட்சியில் சில இடங்களில் செய்த தொண்டு பணியை தாங்கள் செய்ததாக குறிப்பிடுகிறார். பல்வேறு NGO
கள் அரசிடம் பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்த அனுமதி கோரும். அரசும் அதை அனுமதிக்கும். ஆனால் திட்டம் அதற்குப் பொறுப்பான தொண்டு நிறுவனத்திக்குதான் சொந்தம். நிதி ஆதாரமும் அவர்கள்தான் செய்வார்கள் என விளக்கினார்.
வழக்கம் போல அதிமுக உறுப்பினர்கள் அதை குழப்பிக் கொண்டிருக்க
கடவுளின் குழந்தைகள் : #Autism பற்றி டைம்லைனில் நிறைய கருத்துகளைக் காண்கிறேன். இந்தக் குறைபாட்டை பொதுப்படையாக ஒற்றைச் சொல்லில் அடைத்து விட முடியாது. பிறவி குறைபாடுகள் பல வகை உண்டு. ஆட்டிசமே ஐந்து வகை., அது போக CP.,
மிகவும் உற்று கவனித்தால் மட்டுமே தெரிந்து கொள்ளக் கூடிய சிறிய
அளவிலான பாதிப்பு முதல் உடலின் எந்த அசைவையும் கட்டுப்படுத்த இயலாமல் motor movements கட்டுப்பாடு அற்றவர்கள் வரையில் பல விதமான குறைபாடுகள் உள்ளன. இது நோய் அல்ல! குறைபாடு மட்டுமே! Stephen Hawking பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். உலகின் ஆகச் சிறந்த அறிவியிலாளரான அவர் கூட இதே வகையில்
Amyotrophic LateralSclerosi (ALS) என்றொரு பிறவி குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்தான். ஆனால் பிறவி மேதை. வாழ்நாள் முழுக்க மிகுந்த கவனமும், பராமரிப்பும் தேவைப்படும் இவ்வகைக் குழந்தைகள் ஏழை, பணக்காரன் பார்த்து பிறப்பதில்லை. தினக்கூலி வீட்டிலும் சிறப்புக் குழந்தைகள் உள்ளன. அவர்களும்
#Thread
"ஒரு சாதாரண இடைத்தேர்தலுக்கு ஆளும்கட்சியான திமுக இத்தனை மெனக்கெட வேண்டுமா? செய்த சாதனைகளைச் சொல்லிட்டு காலாட்டிக் கொண்டே ஜெயித்திருக்கலாமே!" - இந்த வசனத்தை வெவ்வேறு குரல்களில் தொலைக்காட்சிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் கேட்டிருப்பீர்கள். அதற்கான பதிலை இதில் சொல்கிறேன்.
ஒரு சாதாரண இடைத்தேர்தலைக் கொண்டு என்னவெல்லாம் பகடை ஆட்டங்கள் நடத்தப்பட்டன என்பதைப் பாருங்கள். 1. ஈரோடு கிழக்கில் 2021 தேர்தலில் வென்றது திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே, திமுக தலைவர், காங்கிரஸ் தலைவரை அழைத்து, அது உங்கள் இடம். நீங்கள்
வேட்பாளரை நிறுத்துங்க. நாங்கள் வந்து வேலை செய்கிறோம் என தயக்கமின்றி சொல்லி விட்டார். டெல்லியில் இருந்து பொறுப்பாளர்கள் வந்து அறிவாலயத்தில் தன்னைச் சந்தித்து கோரிக்கை வைக்கட்டுமே என்றுகூட அவர் காத்திருக்கவில்லை. அடுத்த அரை மணி நேரத்தில் திமுகவின் ஆதரவை அள்ளித் தந்தார்.
எதிர்கட்சி
மீண்டுமொரு முறை சொல்கிறேன். கிருஷ்ணகிரியில் நடந்த ராணுவ வீரர் கொலை இரு தரப்பினருக்கு இடையே நடந்த அடிதடியின் விளைவே தவிர வேறில்லை. கிராமப்புற வாழ்வைப் பற்றி குறைந்தபட்ச அறிவு இருந்தால் கூட நடந்ததைப் புரிந்து கொள்ள முடியும். ஏதோ இராணுவ ரகசியத்தை களவாட முயன்றபோது எதிரிகளால் கொல்லப்
பட்டதைப் போல தோற்றத்தை ஏற்படுத்த முயன்ற பாஜகவின் சதி திட்டம் தமிழ்நாட்டில் எடுபடாது.
பிப்ரவரி 8 ஆம் தேதி தொடங்கிய வாய்த்தகறாறு இரு தரப்புக்குமான பெரும் மோதலாக முடிந்துள்ளது. யாருக்கு ஆள் பலம் அதிகம் எனும் வழக்கமான ஈகோதான் பல நுறு கிராமவாசிகளை சிறைச்சாலைகளில் தண்டனைக் கைதிகளாக
வைத்திருக்கிறது. அப்படியான கவுரவப் பிரச்சனைதான் ஒரே நாளில் அடுத்தடுத்து அங்கே நடந்த வன்முறைச் சம்பவங்கள். அன்று இரவே இரு தரப்பிலும் அடிபட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர். அடுத்த நாளே 'இரு தரப்பு மீதும்' வழக்குப் பதிவு செய்து மேல் விசாரணைக்கு காவல்துறை
தற்போது state level registry வச்சிருக்கோம். மாற்று உடல் உறுப்புகள் தேவைப்படுவோர் அதில் பதிந்து வைத்துக் கொள்ள வேண்டும். மூளைச் சாவு, விபத்தினால் இறப்பு ஏற்பட்டு உடல் உறுப்புகள் கிடைக்கும்போது, அந்த ரெஜிஸ்டிரியில் உள்ள வரிசைப்படி அந்த உறுப்புகள்
அளிக்கப்படும். இந்தப் பணியை மாநில
சுகாதாரத் துறையின் கீழ் உள்ள உயர்மட்டக்குழு நிர்வகித்து வருகிறது. ஒருவேளை உடல் உறுப்புகள் கிடைத்து, நமது மாநிலத்தில் அதற்கான தேவை இல்லாத பட்சத்தில் பக்கத்து மாநிலங்களுடன் நாம் பகிர்ந்து கொள்வதும் வழக்கம். முன்னுரிமை நமது மாநிலத்து நோயாளிகளுக்கு! தமிழ்நாடு கண் தானத்திலும், உடல்
உறுப்புகள் தானத்திலும் முன்னணியில் உள்ள மாநிலம். ஹித்தேந்திரன்' எனும் சிறுவனின் பெற்றோர்கள் தொடங்கி வைத்த மகத்தான விழிப்புணர்வும் முக்கியக் காரணம். அப்போதைய மேயராக இருந்த தலைவர் @mkstalin அவர்கள் வீட்டுக்கே சென்று நன்றி சொன்னதால் தேசிய அளவில் அது செய்தி ஆனது. அது முதல் இங்கே
#Thread : நினைவுச் சின்னங்கள் :
தமிழ்நாட்டில் ஐயன் வள்ளுவர் முதல் மகாத்மா காந்தி, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், காமராஜர், எம்ஜிஆர் முதல் கி.ராஜநாராயணன் வரை அத்தனை ஆளுமைகளுக்கும் நினைவுச் சின்னங்கள், சிலைகள், பல்கலைக்கழகங்கள், நூலகங்கள் என எண்ணற்ற அடையாளங்களை தமிழ்நாடு அரசு
அமைத்துள்ளது. அத்தனையும் அரசு செலவில்தான் நடந்தது.
அமைத்தவர் எங்கள் தலைவர் கலைஞர். அண்ணல் அம்பேத்கர் பெயரில் பல்கலை தொடங்க அவர் பிறந்த மஹாராஷ்டிராவிலேயே முடியாமல் தவித்தபோது, இங்கே தமிழ்நாட்டில் சட்டப் பல்கலைக்கழகத்துக்கு அண்ணலின் பெயரை சூட்டியவர் தலைவர் கலைஞர். அண்ணா என்றால்
நூலகம், பெரியார் என்றால் பல்கலைகழகம், காமராஜர் என்றால் கல்வி தினம், எம்.ஜி.ஆர் என்றால் ஐந்து நாளும் சத்துணவில் முட்டை என அவரவர் இயல்புகேற்ப அடையாளம் இட்டு இனி வரும் காலமெல்லாம் அவர்களை மக்கள் இப்படிதான் நினைவு கூற வேண்டும் என வழி காட்டியவர் கலைஞர். தன்னை அழிப்பேன் என சவடால்