திருப்பூர் அருகே அஸ்திவாரம் இல்லாமல் தரையில் நிற்கும் கல்மண்டபம் தமிழர்களின் பாரம்பரிய கட்டிட கலை பாதுகாக்கப்படுமா?
திருப்பூர் அருகே அஸ்திவாரம் இல்லாமல் தரையில் நிற்கும் கற்தூண்கள் கொண்ட சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. wix.to/v0CkBv8
திருப்பூர்-2/15
தமிழர்களின் பாரம்பரியமிக்க இந்த கட்டிட கலை பாதுகாக்கப்படுமா? என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.எந்திரத்தனமாக மாறிப்போன மனித வாழ்க்கையில் இன்றைய நாகரிக உலகில் அக்கம் பக்கத்தினரை கூட நாம் அறிந்து வைத்திருக்கவில்லை. முன்னோர் வகுத்த வாழ்வியல் முறைகளை..
திருப்பூர்-3/15
அலட்சியம் செய்வது வருந்தத்தக்க விஷயம் தான். நம் முன்னோர் கூட்டு வாழ்க்கை, உணவே மருந்து, ஒழுக்கம், சுயகட்டுப்பாடு உள்ளிட்ட நற்பண்புகளை நமக்காக விட்டுச்சென்றனர்.அதுமட்டுமின்றி காலத்தால் அழியாத பல கட்டுமானங்களையும் விட்டுச் சென்றுள்ளனர்.
திருப்பூர்-4/15
அவற்றின் எச்சங்களை தற்போதும் அங்கொன்றும் இங்கொன்றுமாக காண முடிகிறது. அப்படிப்பட்ட எச்சங்களின் மூலமும் நமக்கான வாழ்வியல் மந்திரங்கள் மற்றும் அறிவியல் ஆகியவற்றை இன்றளவும் நம்மால் உணர முடிகிறது.இன்றைய காலக்கட்டிடங்கள் கூட 50, 60 ஆண்டுகளில் பழுதடைந்து விடுகின்றன.
திருப்பூர்-5/15
ஆனால் அன்றைய கால தமிழர்களின் கட்டிடங்கள் இன்றும் வரலாறு சொல்வது மிகையல்ல. தஞ்சாவூர் பெரிய கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில் என இன்னும் பலவற்றை சொல்லி கொண்டே போகலாம். ஆனால் அன்றைய கட்டிட கலையை இன்று பாதுகாக்க வேண்டியது அவசியம்.
திருப்பூர்-6/15
தரையில் நிற்கும் சாவடி:
அந்த வகையில் அஸ்திவாரமே இல்லாமல் தரையில் நிற்கும் கல்மண்டபத்தை பார்த்து இருக்கிறீர்களா? ஆமாம். நம் தமிழர்களின் பாரம்பரிய கட்டிட கலை ஒன்று திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே உள்ள மொரட்டுபாளையம் காவேரி நகர் பகுதியில் உள்ளது.
திருப்பூர்-7/15
இங்கு தான் சுமார் 300 ஆண்டுகளுக்கு முந்தைய ஆங்கிலேயர் கால சாவடி மற்றும் அதன் அருகிலேயேபழமையான மாதேஸ்வரன் கோவில் உள்ளன. இந்த சாவடி(மண்டபம்) கட்டப்பட்டுள்ள விதம் தற்போதுள்ளகட்டிடப்பொறியாளர்களே வியப்புக்குள்ளாக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. wix.to/v0CkBv8
திருப்பூர்-8/15
ஆறு தூண்கள் மண்ணில் குழி எதுவும் தோண்டாமல் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன்மேல் கருங்கற்கள் மட்டும் ஒரு அடி அளவிற்கு செங்கல் சுண்ணாம்புக் கலவை கொண்ட பூச்சும் அமைக்கப்பட்டுள்ளது.
அஸ்திவாரம் எதுவும் இல்லாமல் தரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள..
திருப்பூர்-9/15
இந்த கல்மண்டபம் காண்போரை வியப்பில் ஆழ்த்துகிறது. மழைக்காலங்களில் இந்த மண்டபத்தில் தஞ்சம் புகுந்து உள்ளனர் அன்றைய முன்னோர். 6 தூண்கள் இந்த சாவடியை தாங்கி பிடித்து இருப்பதால் இதை ஆறுகால் சாவடி என்றும், ஆறுகால் மண்டபம் என்றும் அப்பகுதி மக்கள் அழைக்கின்றனர்.
திருப்பூர்-10/15
ஆங்கிலேயர்கள் வரி வசூல் செய்த இடம்:அதோடு இந்த ஆறுகால் சாவடியை ஆங்கிலேயர்கள் தொழிலாளர்களுக்கு கூலி வழங்கும் இடமாகவும், வரிவசூல் செய்யும் இடமாகவும் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இங்குள்ள மாதேஸ்வரன் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது.
திருப்பூர்-11/15
முன்பு இப்பகுதியை சேர்ந்த ஒருவர் கோவிலில் பூஜை செய்து வந்தார். காட்டுப்பகுதியில் கோவில் இருப்பதால் போதிய பக்தர்கள் வருவதில்லை. தற்போது பூஜை, புனஸ்காரம் இல்லாமல் கோவில் உள்ளது. நந்தி சிலையும் சிதிலமடைந்து காணப்படுகிறது. wix.to/v0CkBv8
திருப்பூர்-12/15
பழமை வாய்ந்த கட்டிடத்தில் உள்ள இந்த கோவிலை பராமரித்து ஒரு கால பூஜையாவது நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள ஆன்மிக அன்பர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.பல நூற்றாண்டுகளுக்கு முன் அறிவிலும், சிந்தனையிலும், நாகரிகத்திலும் சிறந்து விளங்கிய..
திருப்பூர்-13/15
தமிழர்கள் அனுபவ அறிவால் இது போன்ற வியக்கத்தக்க படைப்புகளை விட்டு சென்றுள்ளனர். ஆனால் இன்று சிதிலமடைந்து பயனில்லாத நிலையில் உள்ள படைப்புகளை நாம் அறியாத அளவில் இருப்பது வேதனைக்குரியது. எனவே இது போன்ற அரிய அபூர்வமான கால வெள்ளத்தால் அழிந்தும் அழியாமல் எஞ்சியவைகளை..
திருப்பூர்-14/15
பாதுகாத்திட அரசு முன் வரவேண்டும். தமிழர்களின் பாரம்பரிய கட்டிட கலையை பாதுகாக்க வேண்டும் என்பதே அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்களின் விருப்பம் ஆகும்.
வணக்கம்.
முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் என சோழர் காலக் கல்வெட்டுகள் கூறுகின்றன!!
இதில் முந்நீர் என்பது கடலைக்குறிக்கும் .அதுமட்டுமா தமிழர் கடலுடன் உறவாடிக்குலாவிகொண்டு இருந்தனர் என்பதற்கு கடலுக்கு தமிழில் இருக்கும் அதிகப்படியான சொற்களே சான்று ! .அவைகள்.. wix.to/lkDqBwI
முந்நீர் பழந்தீவு-3/10
போன்ற இவைகளில் பல தமிழ்ச் சொற்கள் அல்ல. கடல் மூன்று வழி நீரால் ஆனது என்பதாலேயே முந்நீர் எனப்பட்டது. கடலில், அதனடியில் சுரக்கும் ஊற்று நீர், மலைகளில் பொழிந்த மழை நீர் வழிந்தோடி ஆறாக உருவாகி ஓடி வந்து கலக்கும் ஆற்று நீர் மேகங்கள் கருவுற்று நேரடியாகக்..
வணக்கம்.
தலைமைத்துவத்திற்காக நீங்கள் யாரை மிகவும் மதிக்கிறீர்கள், ஏன் (குறிப்பிட்டு கூறுங்கள்)?
இதை பார்க்கும் பொழுது என்ன தோன்றுகிறது? ஓநாய் பொதிகளாக நகர்கிறது. ஆம் நானும் அப்படி தான் நினைத்தேன். ஆனால் அதற்கு பின்னால் ஒரு மிக பெரும் தலைமை பண்பு ஒளிந்திருக்கிறதென்று.
தலைமைத்துவம்-2/5
இந்த பொதிகளில் செல்லும் முதல் மூன்று ஓநாய்கள் அந்த கூட்டத்திலேயே வயது முதிர்ந்தவைகள். அதை பின்னால் விட்டால் பின் தங்கிவிடும் எனவே அதன் வேகத்திற்கு தான் அனைத்து ஓநாய்களும் நகரும். வயது முதிர்ந்தவர்களை விட யார் சிறப்பாக வழிநடத்திட முடியும்?
தலைமைத்துவம்-3/5
அடுத்து செல்லும் 5 ஓநாய்கள் மிகவும் பலசாலிகள்.அது முன் வரிசை பலசாலிகள்.அது முன்னாள் செல்லும் முதியவர்களை எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் விதத்தில் செல்கிறது.நடுவில் வருபவர்கள் குட்டிகள்,பெண்கள்,பலம் குன்றியவர்கள்.
அதன் பின் வரும் 5 ஓநாய்களும் பின் வரிசை பலசாலிகள்.
வணக்கம்
தமிழக அகழாய்வுகளில் இதுவே பிரமாண்டம் கீழடியில் 32 அடுக்கு உறைகிணறு! கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த பிப். 19ம் தேதி துவங்கி செப். 30ம் தேதியுடன் நிறைவு பெற்றன. கீழடி, கொந்தகையில் மட்டும் பொருட்களை ஆவணப்படுத்தும் பணி மழையினால் தாமதமாக நடந்து வருகிறது.
தமிழக அகழாய்வில்-2/5
கீழடியில் தோண்டப்பட்ட 20வது குழியில் கடந்த 14ம் தேதி இரண்டு அடுக்கு உறைகிணறு கண்டறியப்பட்டது. 30ம் தேதியுடன் நடந்த அகழாய்வு முடிவில் 16 அடுக்குகள் வரை கண்டறியப்பட்டது. தொடர்ந்து பணிகள் நடந்து வந்த நிலையில் 32 அடுக்குகள் கொண்ட உறைகிணறு வெளிப்பட்டுள்ளது.
தமிழக அகழாய்வில்-3/5
ஒவ்வொரு அடுக்கும் சுமார் 20 முதல் 25 செமீ உயரம் உள்ளன. ஒரு சில அடுக்குகள் சேதமடைந்துள்ளன.கீழடியில் நடந்த அகழாய்வில் 8 முதல் 12 அடுக்குகள் வரையிலான உறைகிணறுகள் மட்டுமே கண்டறியப்பட்டன. 6ம் கட்ட அகழாய்வில் அகரத்தில் 26 அடுக்குகள் கொண்ட உறைகிணறு கண்டறியப்பட்டது.
வணக்கம்.
தமிழக வரலாற்றில் மிக பிரமான்டமாய் சித்தரித்த இடங்களை நேரில் பார்க்கும் போது பிரமிப்பு ஏற்படவில்லையே, எகா: கங்கைகொன்ட சோழபுரம் இந்த ஊர் மற்றும் இதனை சுற்றி பெரிய ஊர்கள் ஏதுமில்லைஎப்படி இந்த கிராமத்தை தேர்வு செய்து ராஜேந்திர சோழன் கோவிலை கட்டினான்? wix.to/SECWBvw
தமிழக வரலாற்றில்-2/10
அழியாப் புகழ்பெற்ற மாமன்னன் ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரத்தை கட்டுவதற்கு முன்பு சோழர் தலைநகரை தஞ்சையிலிருந்து ஜெயங்கொண்ட சோழபுரம் அருகில் மாளிகைமேடு என்ற புதிய நகரத்தில் நிர்மாணித்தார் .மாளிகைமேடு அதிகார மையம் கங்கைகொண்டசோழபுரம் கலாச்சார மையம்.
தமிழக வராற்றில்-3/10
வரலாற்று சூழ்நிலையின் அடிப்படையில் ராஜேந்திர சோழர் தலைநகரை மாற்றி அமைப்பதற்கும் காரணங்கள் பின்வருமாறு கூறப்படுகின்றது
மாமன்னர் ராஜராஜ சோழர் காலத்திலிருந்து சோழப் பேரரசிற்கு வடக்கே சாளுக்கியர் மூலம் அச்சுறுத்தல் இருந்து வந்துள்ளது அதனை ராஜராஜ சோழன் தன் மகள்
வணக்கம்
ஆதித்ய கரிகாலன் கொலைக்கு காரணமான பாண்டிய ஆபத்துதவிகளுக்கு தண்டனை கொடுத்தது உத்தம சோழனா அல்லது ராஜராஜனா?பிற்காலச் சோழர் வம்சத்தில் இன்று வரை விளக்க முடியாத புதிராக இருப்பது, பார்த்திவேந்திர கரிகாலன் என்ற 2 ஆம் ஆதித்தனுடைய படுகொலை ஆகும்!
ஆதீத்திய-2/15
இவன் ராஜ ராஜ சோழனின் அண்ணன்.
இவனது படுகொலையைப் பற்றி ' திருவேலங்காட்டு செப்பேடு மற்றும் உடையார் குடி கல்வெட்டுகளும் குறிப்பிடுகின்றன
சோழ மன்னன் கண்டராதித்தன் ஓராண்டு ஆட்சியில் இருந்து விட்டு பதவி விலகினார்.இவரது மகன் உத்தமச் சோழன் சிறுவன் எனவே ,
ஆதீத்திய-3/15
இவரது தம்பி அரிஞ்சயன் பட்டம் சூட்டப்பட்டார். இவர் ஓர் ஆண்டு ஆட்சி செய்துவிட்டு 'ஆற்றூர்' என்ற இடத்தில் ராஷ்டிரஹூடர்களுடன் நடந்த போரில் மரணம் அடையவே இவரது மகன் இரண்டாம் பராந்தகன் என்றழைக்கப்படும் சுந்தரச்சோழர் ஆட்சிக்கு வந்தார்.(படங்களை அழுத்தி பார்த்து படிக்கவும்)
வணக்கம்.
ராஜேந்திர சோழனின் ஆட்சிப்பகுதிகள் எவை?ஆனால்,அதைவிட சுவாரசியம் இது!அவன் காலத்தில் தலைநகரான'கங்கைகொண்ட சோழபுரம்'எப்படியிருந்திருக்கும்!ஒவ்வொரு தமிழனும் அறிந்திருக்க வேண்டும்.
இராஜேந்திர சோழனின்-2/15
இராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் சோழநாடு; இந்தியா இலங்கை, மாலத்தீவு, கடாரம், ஸ்ரீவிஜயம், மலேயா(சிங்கப்பூர் - மலேசியா), சுமத்ரா, கம்போடியா, இந்தோனேசியா, மியான்மர், வங்கதேசம் ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது. இராஜேந்திர சோழனே முதன்..
இராஜேந்திர சோழனின்-3/15
முதலில் அயல்நாட்டிற்குப் பெரும் படை எடுத்துச் சென்ற முதல் தமிழ் மன்னன்".ஆனால் அதை விட சுவாரசியம் இது !!!
மீன்சுருட்டி- ஜெயம்கொண்டான் சாலையில் பயணிக்கும் போது சாளரம் வழியாக எட்டிப் பார்த்தால் அதிகபட்சமாக ஒரு பெரிய கோயிலும், இரண்டு தேநீர் கடைகளும்,