🌺கொஞ்சம் கவனிப்போமா....🌺

🍂காவிய தேனமுது மஹாபாரதம் யக்ஷனின் கேள்விகளுக்கு இன்றும்... என்றும்... பொருந்தும் தர்மரின் பதில்கள்.... நேரமும் விருப்பமும் உள்ளவர்கள் படிக்கலாம்.🍂

🌳 பாண்டவர்களின் பன்னிரண்டு ஆண்டுகால வனவாசம் முடியும் காலம்... அப்போது ஒருநாள் வனத்தில் கடுமையாக
அலைந்து திரிந்த பாண்டவர்களுக்கு கடும் வறட்சி ஏற்பட்டது. குடிக்க தண்ணீர் வேண்டியிருந்தது.

அருகில் எங்காவது ஓடையோ, குளமோ தென்பட்டால் நீர் கொண்டுவர வயதில் இளையவனான சகாதேவனை அனுப்பினார் தருமபுத்திரர். தண்ணீர் பிடிக்கச் சென்ற சகாதேவன் நெடுநேரமாகியும் வராது போகவே, நகுலனை அனுப்பினார்.
நகுலனும் நெடுநேரமாகியும் வரவில்லை. இப்படியே அர்ஜுனன், பீமன் ஆகியோரை அனுப்பியும் எவருமே திரும்பிவரவில்லை.

மாலை நேரமாகியும் தம்பிகள் திரும்பவில்லையே என்கிற ஆதங்கத்தில் பதட்டத்தோடு தருமர் தேடிச்செல்ல, வழியில் ஒரு குளம் தென்பட்டது. குளக்கரையில் பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன்
என நால்வரும் இறந்து கிடந்தனர். அதுகண்டு திகைத்துப்போன தருமபுத்திரர், “யார் செய்த அடாத செயல் இது!” என்று ஓலமிட்டார்.

அப்போது ஓர் அசரீரி எழுந்தது.

”தர்ம புத்திரரே! நானொரு யக்ஷன். இக்குளம் எனக்குச் சொந்தமானது. யார் தண்ணீர் எடுக்க வந்தாலும் அல்லது தனது தாகத்தைத் தீர்த்துக்கொள்ள
வந்தாலும் நான் சில கேள்விகளைக் கேட்பேன்.
அதற்கு தக்க பதில் கூறினால் மட்டுமே தண்ணீர் கிடைக்கும்; தவறாக பதில் சொன்னால் மரணம்தான்…” என்றான் யக்ஷன்.

அப்போதுதான் தன் சகோதரர்கள் தவறான பதில் கூறி, மாண்டது புரிந்தது தர்மருக்கு!

”நான் விடையளிக்கிறேன்” என்றார் தர்மர்.
🦏 யக்ஷன் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தான்.

⭐எது தினமும் சூரியனை உதிக்கச் செய்வது?

🕊பிரம்மம்.

🍎மனிதன் எதில் நிலைத்து நிற்கிறான்?

🕊சத்தியத்தில்.

🍁மனிதன் எதனால் சிறப்படைகிறான்?

🕊மன உறுதியால்.

🌿மனிதன் எதனால் எப்போதும் துணை
உள்ளவனாகிறான்?

🕊தைரியமே மனிதனுக்குத் துணை.
📕எந்த சாஸ்திரம் படித்து மனிதன் புத்திமானாகிறான்?

🕊இது சாஸ்திரத்தால் அல்ல;
பெரியோர்களைப் பொறுத்தே.

🌍பூமியைவிட பொறுமைமிக்கவர் யார்?

🕊தாய்.

🌥️ஆகாயத்தைக் காட்டிலும் உயர்ந்தவர் யார்?

🕊தந்தை.

🛫காற்றைவிட வேகமாகச்செல்வது எது?

🕊மனம்.

🌱புல்லைவிட அற்பமானது எது?

🕊கவலை.
🕉️மனிதனுக்கு தெய்வத்திடமிருந்து கிடைத்த நன்மை எது?

🕊மனைவி.

🎋தேசாந்திரம் போகிறவனுக்கு யார் துணை?

🕊வித்தை.

🐾சாகப் போகிறவனுக்கு யார் துணை?

🕊தர்மம். அதுதான் அவன்கூட பயணம் செல்லும்…

🍜பாத்திரங்களில் எது பெரிது?

🕊அனைத்தையும் தன்னுள்ளே
அடக்கிக்கொள்ளும் பூமி.
💃எது சுகம்?

🕊சுகம் நல்லொழுக்கத்தில் நிலைபெறுகிறது.

🌿மனிதன் எதைவிட்டால் துயரமில்லை?

🕊கோபத்தை.

⭐எதை இழந்தால் மனிதன் தனவான் ஆகிறான்?

🕊ஆசையை…

🌹மகிழ்ச்சியுடன் வாழ்பவர் யார்?

🕊கடன் வாங்காதவர்.

🌺வேகம் மிக்கது எது?

🕊நதி.

🦐வெற்றிக்கு அடிப்படை எது?

🕊விடாமுயற்சி.
🍁உலகில் மிகச்சிறந்த தர்மம் எது?

🕊கொல்லாமை.

🍎உலகெங்கும் நிறைந்து நிற்பது எது?

🕊அஞ்ஞானம்.

🐲முக்திக்குரிய வழி எது?

🕊பற்றினை முற்றும் விலக்குதல்.

⭐முக்திக்குத் தடையாக இருப்பது எது?

🕊’நான்’ என்னும் ஆணவம்.

🙏“”எது ஞானம்?”

🕊மெய்ப்பொருளை அறிதல்.
🐲எப்போதும் நிறைவேறாதது எது?

🕊பேராசை.

🌿எது வியப்பானது?

🕊நாள்தோறும் பலர் இறப்பதைக் கண்டும், தான் என்றென்றும் வாழ்ந்திருப்போம் என்று மனிதன் நினைக்கிறானே, அதுதான்.

⭐பிராமணன், உயர்வானவன் என்பது குலத்தினாலா? ஒழுக்கத்தினாலா? கற்ற பல சாஸ்திரங்களினாலா?

🕊ஒழுக்கத்தினால் மட்டுமே
ப்ராமணன் என்பவன் உயர்ந்தவனாகிறான். நான்கு வேதங்கள் கற்றவனாயிருந்தாலும், கெட்டநடத்தை உள்ளவன் பிராமணன் அல்ல; இழிந்தவனே…

🙏”அற்புதம் தர்மபுத்திரரே… உமது பதில்கள் அபாரம். ஆனால் இறந்த உன் சகோதரர்களில் ஒருவனை மட்டும் நான் உயிர்ப்பிக்கிறேன். உமக்கு யார் வேண்டும்?”

🕊நகுலன்…
சற்றும் யோசியாமல் பதிலளித்தார் தர்மர்.

🎋 அப்போது யக்ஷன் தர்மனுக்கு காட்சிதந்து, “நகுலனா? புஜபல பராக்கிரமசாலி பீமனையோ, அழகனும் திறமை உள்ளவனுமான அர்ஜுனனையோ, ஜோதிடத்தில் மட்டுமின்றி சகல சாஸ்திரங்களையும் அறிந்த சகாதேவனையோ கேட்காமல் நகுலனை ஏன் கேட்டீர்?
நகுலனைத் தவிர மற்ற மூவரும் உமக்குத் துணையில்லையா?”

🕊யக்ஷனே, தருமமே மனிதனைப் பாதுகாக்கிறது. பீமனோ அர்ஜுனனோ அல்ல. தருமத்தைப் புறக்கணித்தால் அது மனிதனைக் கொல்லும். நான் நகுலனை மட்டும் உயிர்ப்பிக்க வேண்டிய காரணம் உள்ளது. என் தந்தைக்கு குந்தி, மாத்ரி என்று இரண்டு மனைவியர்.
குந்திக்கு மகனாக நானும், பீமனும், அர்ஜுனனும் பிறந்தோம். மாத்ரிக்கு நகுலன், சகாதேவன் ஆகியோர் பிறந்தனர். கடைசி காலத்தில் குந்திக்கு இறுதிச் சடங்கை செய்ய நான் இருக்கிறேன். ஆனால் மாத்ரிக்கு இறுதிச் சடங்கு செய்ய அவள் முதல் மகன் வேண்டாமா? அதனால் தான் நகுலனை உயிர்ப்பிக்குமாறு கேட்டேன்…
🌳”பாரபட்சமற்ற தர்மனே! உன் பதில் எனக்கு திருப்தியளித்துவிட்டது. தன் அன்பிற் குரிய சொந்தத் தம்பிகளை உயிர்ப்பிக்குமாறு கேட்காமல், சிற்றன்னையின் மைந்தனை உயிர்ப்பிக்குமாறு கேட்டாயே- நீயல்லவோ தர்மதேவன்…”

என்று சொல்லி அனைவருக்கும் உயிர் கொடுத்தான் யக்ஷன்.
ஐவரும் அந்த யக்ஷனை நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கியபோது, யக்ஷன் எமதர்மராஜனாக நின்றிருந்தான். வியப்புடன் நின்றிருந்த பஞ்சபாண்டவர்களைப் பார்த்து எமதர்மன் சொன்னான்:

”தர்மபுத்திரரே… நான் எமன்தான். ஆனால் எந்தெந்த உயிர்களை எப்படி எடுத்துச் செல்வது? அதில் பாவி யார்- புண்ணியன் யார்
என்பதை சரியாக செய்துவருவதால் என்னை எமதர்மராஜன் என்பர்.

தர்மத்தின்படி நடந்துவரும் என்னைப்போல் பெயர் பெற்ற உன்னை சோதிக்கவே நான் யக்ஷனாக மாறி வந்தேன். என் பெயர் இருக்கும்வரை நீயும் தர்மமாகவே வாழ்வாய்…”
என்று வாழ்த்திவிட்டு எமதர்மன் மறைந்தான்.
🌺பெற்ற தாய்- தந்தையை, பெரியோர்களை, அறவோர்களை மகிழ்விப்பவனே உலகில் தர்மிஷ்டனாகிறான்.🌺

🙏: வாட்ஸப் பதிவு

🍁வாஸவி நாராயணன்🍁

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Vasavi Narayanan

Vasavi Narayanan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @VasaviNarayanan

15 Oct
🌺ஆய்ந்தறிய முடியா அதிசயமோ... ஈசா நீயேவோர் ரகசியமோ...🌺

நமது காங்கேயம் காளைகளுக்கு மட்டுமல்ல, அதை வாகனமாக்கிய ஈஸ்வரன் புகழையும் ஜொலிக்கச் செய்வது.

ஆனால் அந்த ஒளிரழகு என்னவென நம்மில் எத்தனை பேர் அறிவோம்?

இதோ - அதனருகே உள்ள நத்தக் காடையூர் எனும் அதிசய கோயில் பற்றிக் காண்போம்...
காங்கேயத்தின் சென்னிமலை - பெருந்துறை சாலையிலிருந்து 3Km அருகே உள்ளது நத்தக் காடையூர். இத்தலத்தில் உள்ள சிவபெருமான் திருமேனி சதுர ஆவுடையாருடன் லிங்கத்திருமேனியாக வடிக்கப்பட்டுள்ளது.

இது அப்பர் பிரானால் பாடப்பட்ட வைப்புத்தலம் எனும் புண்ணியம் பெற்றது. இது பரன்பள்ளி, பரஞ்சேர்பள்ளி,
நட்டூர், மத்யபுரி எனப் பல பெயருடன் அழைக்கப் படுகின்றது.

பரன் - ஈசன். பள்ளி - கோயில். எனவே, பரன்பள்ளி(ஈசன்பள்ளி), பரஞ்சேர்பள்ளி(ஈசனைச்சேரும் பள்ளி) போன்ற காரணப் பெயர்களுடனும்,

ஸமஸ்க்ருதத்தில் மத்யபுரி என்பது நடுவான ஊர் எனும் அர்த்தம் தருவதால், தமிழில் அது நடுவூர், நட்டூர் எனும்
Read 8 tweets
14 Oct
🌺வாட்ஸ் அப் கடி...🌺

😁🤣நம்பிக்கைக்கும் மூட நம்பிக்கைக்கும் உள்ள வித்யாசம் என்ன?

குழந்தை நன்றாக படித்து முன்னேற வேண்டும் என்பது 🌿நம்பிக்கை🌿

படித்து முன்னேறிய குழந்தை தன்னைக் காப்பாற்றுவான் என்பது 🌿மூட நம்பிக்கை🌿

😁🤣ஒவ்வொரு இளைஞனின் மன உளைச்சலுக்கும் காரணம்?
மதிப்பெண்ணும்
மதிக்காத பெண்ணும்

😁🤣 வசதி இல்லாதவன் ஆடு மேய்க்கிறான்!

வசதி உள்ளவன் நாய் மேய்க்கிறான்!

😁🤣ஆண்களை அதிக தூரம் நடக்க வைக்கும் விஷயங்கள் ரெண்டு?

ஒன்று ஃபிகர்
மற்றொன்று சுகர்!

😁🤣என்னதான் செண்டிமெண்ட் பார்த்தாலும் கப்பல் எப்படி கிளம்பும்?
பூசனிக்காய் உடைச்சு, எலுமிச்சம்பழம் நசுக்கி இல்லை...

சங்கு ஊதித்தான்....

😁🤣கணிப்பொறிக்கும் எலிப்பொறிக்கும் என்ன வித்தியாசம்?

கணிப்பொறியில் எலி வெளியில் இருக்கும்
எலிப்பொறியில் எலி உள்ளே இருக்கும்

😁🤣டாக்டருக்கும் ஆக்டருக்கும் உள்ள ஒற்றுமை என்ன?
Read 5 tweets
13 Oct
🌺Lovely Language....💧🌺

🌿Sanskrit a magical language...😊🙏🌿

1. There is no need of particular sentence structure for Sanskrit. Like, In English:- Subject +Verb + Object
Ex:- I am writing an answer.
But in Sanskrit there is no need for particular structure.

अहं उत्तरम् लिखामि (I am writing an Answer.)

लिखामि अहं उत्तरम् (I am writing an Answer.)

अहं लिखामि उत्तरम् (I am writing an Answer.) .
2. Elephant word has 4000 synonyms in Sanskrit. Here are some of them.

कुञ्जरः, गजः, हस्तिन्, हस्तिपकः, द्विपः, द्विरदः, वारणः, करिन्, मतङ्गः, सुचिकाधरः, सुप्रतीकः, अङ्गूषः, अन्तेःस्वेदः, इभः, कञ्जरः, कञ्जारः, कटिन्, कम्बुः, करिकः, कालिङ्गः, कूचः, गर्जः, चदिरः, चक्रपादः, चन्दिरः
Read 16 tweets
11 Oct
🌺அக்கறை இல்லாதவனுக்கு... அருகதை ஒரு கேடா....🌺

🌿1987 ல் ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த போது...🌿

மாறுபட்ட இடத்திற்கு 10 நாட்கள் சுற்றுலா செல்ல ராஜிவ் காந்தி குடும்பம் முடிவு செய்து, லட்சத்தீவுக்கு அருகில் உள்ள 'பங்காராம்' என்ற தீவை தேர்ந்தெடுத்தார்கள்.
காரணம் அந்த தீவில் மட்டும்தான் வெளி நாட்டினருக்கு அனுமதி உண்டு. யாரெல்லாம் தெரியுமா?

ராஜிவ் காந்தி,
சோனியா,
ராகுல்,
பிரியங்கா,
ராஜிவ் காந்தியின் மாமியார்,
மச்சான்,
மச்சினி,
மச்சானின் மனைவி,
மச்சினிச்சியின் கணவர்,
Bollywood அமிதாப் பச்சன்,
ஜெயா பச்சன்,
அபிஷேக் பச்சன்
அமிதாப்பின் மகள்

அடங்கிய பட்டாளம். பங்காராம் தீவுக்கு செல்ல பயன்படுத்தப் பட்ட வாகனம் எது தெரியுமா?

இந்திய கடற்படையைச் சேர்ந்த விமானம் தாங்கி கப்பல் (Premier warship) *INS VIRAT*
என்ற *Most Prestigious War Ship*

இந்த கப்பலை தான் Ola Taxi போல பயன் படுத்தினார்கள்.
Read 16 tweets
10 Oct
🌺A pencil is not only a pencil...🌺

Once upon a time... A boy was watching his grandmother writing a letter. At one point he asked:

‘Are you writing a story about what we’ve done? Is it a story about me?’

His grandmother stopped writing her letter and said to her grandson:
'I am writing about you actually, but more important than the words is the *Pencil I’m using*. I hope you will be like this pencil when you grow up.’

Intrigued, the boy looked at the pencil.

'It didn’t seem anything special. But it’s just like any other pencil I’ve ever seen!’
‘That depends on how you look at things. It has seven qualities which, if you manage to hang on them, will make you a person who is always at peace with the world.’

‘1 : You are capable of great things, but you must never forget that there is a hand guiding your steps.
Read 9 tweets
8 Oct
சிவ தாண்டவம்…

(காரைக்கால் அம்மையார் திருவாலங்காட்டில் ஈசன் அம்மையின் திருநடனம் காண வருவார். அங்கு ஈசனைப் பார்த்து கீழ்க்கண்ட பாடல் பாடுவதாக திரைப்படத்தில் வரும்.

அதில் 5 சந்தங்களை ஒன்றினைத்து இசையைமைத்து எழுதியிருப்பர். அதன் அடிப்படையில் எழுதப்பட்டதே எனது இந்த சிவதாண்டவம். Image
திரைப்பாடல்

"தக தக தக ....தக தகவென ஆடவா....
சிவ சக்தி சக்தி சக்தியோடு ஆடவா....")

சிவதாண்டவம்

தொகையறா
**************
ஆடுங்கால் கண்டுச் சந்தமெடுத்து உனது
புகழ்க்கவி பாடவந்தேன் ஈஸ்வரனே!

ஆடுங்கால் கண்டுச் சந்தமெடுத்து உனது
புகழ்க்கவி பாடவந்தேன் ஈஸ்வரனே!
பாடும்நா வினிக்க வரிதருவாய் – இறைவா
நிம்சக்தியுடன் தருமாட்டத்துக் கேற்றபடி!

நிம்சக்தியுடன் தருமாட்டத்துக் கேற்றபடி!!

பல்லவி
*********

தக ஜூனு தரி கிட தக திமி தாளமே
நின் அம்மையோடு ஆடுஞ்சதிர் ஆட்டமே!

தக ஜூனு தரி கிட தக திமி தாளமே
நின் அம்மை யோடு ஆடுஞ்சதிர் ஆட்டமே!
Read 13 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!