மலையக தேயிலை தோட்ட தொழிலாளர்களை, ஈழத்தமிழர்கள் அவர்கள் தங்கள் தொப்புள் கொடி உறவுகள் ஏமாற்றவில்லை. அவர்கள் கோரிக்கைகளுக்கு அவசியமில்லை. சிரிமாவோ - சாஸ்திரி ஒப்பந்தம் 1965 இல் போடும் போது, இவர்களுக்கு எந்த ஆதரவும் இன்றி நடுத்தெருவில் நின்றனர். அன்று ஈழத்தமிழர்கள் இலங்கை அரசின்
N/1
தகுதியானவர்களை முழுமையாக வெளியேற்றும் கொள்கையினை எதிர்த்து ஒரு சிறு குரல் கூடக் கொடுக்கவில்லை. இந்திய தமிழகத்தில் உள்ள, தி.மு.க. போன்ற கட்சிகளின் அரசியல் அழுத்தம் காரணமாகவும், காமராஜரின் பங்களிப்புடன் காரணமாகவும், இலங்கை அரசு 4 லட்சம் மலையகத் தமிழர்களுக்கு, இலங்கை அரசு
N/2
குடியுறிமைப் கொடுக்க வேண்டும் என்பதாகவும், இந்தியா 5 லட்சம் இந்திய வம்சா அணியினருக்கு குடியுறிமை கொடுப்பதாகவும் ஒப்பந்தமானது. இப்படியான ஒப்பந்தம் ஆனாலும், சிரிமாவோ கடைசி வரை எல்லா மலையகத்தமிழர்களை இந்தியா அனுப்புவதிலேயே குறியாக இருந்தார். தலைமுறை தலைமுறையாக இலங்கைக்கா உழைத்த
N/3
அந்த மக்களை நாடற்றவர்களாக வைத்திருந்தது இலங்கை அரசு. இதையெல்லாம் ஈழத்தமிழர்கள் கண்டு கொள்ளவில்லை. அதற்கு பதிலாக மலையகத்தமிழர்களை நாடற்றவர்கள் என்றும், கள்ளத்தனமாக வந்தவர்கள் என்றும் ஏழனப் படுத்தி சிரிமாவோவின் முயற்சிக்கு நிறைவேற்றினர். இந்த ஒப்பந்தத்தின் படி, இந்தியா 5 லட்சம்
N/4
மலையகத்தமிழர்களுக்கு குடியுறிமை கொடுத்து எடுத்துக் கொண்டது. ஆனால் இலங்கை அரசு சுமார் இரண்டு லட்சம் பேருக்கு மட்டும் குடியுறிமை கொடுத்து, மீதம் 2 லட்சம் பேரை நாடற்றவர்கள் என்று கை கழுவி விட்டது. இப்பொழுது ஈழத்தமிழர்கள் போராட்டத்தில் இந்த நாடற்றவர்களின் பிரச்சனைகளையும், இவர்கள்
N/5
அந்த போராட்டத்துடன் வைத்திருக்கலாம். ஆனால் இவர்களுக்கு மட்டும் தனி நாடு வேண்டும் என்று போராடினார்கள். இப்படி மலையகத் தமிழர்களை தன் இனமக்கள் என்று பார்க்காதவர்கள் ஈழத்தமிழர்கள். இதை இப்பொழுது நான் மறுபடியும் பதிவிடக் காரணம் என்ன என்ற கேள்வி எழலாம்.
இன்று உலக சாதனை படைத்த
N/6
மலையகத் தமிழரான முத்தையா முரளிதரன் வாழ்க்கை திரைப்படம் ஆகிறது. அதில் தமிழக நடிகரான விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனாக நடிக்கிறார்.
இப்பொழுது ஈழத் தமிழர்களும், தமிழகத்தில் ஈழத் தமிழர்களை ஆதரிக்கும் தமிழ் தேசியவாதிகளும் பொங்கி எழுதுகின்றனர். மலையகத் தமிழர்கள் அநாதையாக தெருவில்
N/7
நின்றபோது பொங்காத இந்த ஈழ தேசியவாதிகள், தமிழகத்து ஈழ ஆதரவாளர்கள், இப்பொழுது பொங்கி எழுவது ஏன்? இதுதான் ஒரு அரசியல். இப்பொழுது விஜய் சேதுபதியின் தலையை இங்குள்ள தமிழ் தேசியத்தினர் உருட்டுகின்றனர். ஈழத்தமிழர்கள் தங்கள் இனம் என்று ஒத்துக் கொள்ளாத அவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்
N/8
ஆகிறது, என்றால், அதே மலையகத்தமிழனின் சாதனையாளனின் திரைப்படத்தில், ஒரு இந்தியத் தமிழன் நடிப்பதில் என்ன தவறு. இதைக் கண்டிக்க ஈழத்தமிழர்களுக்கு என்ன உரிமையுள்ளது? இங்குள்ள ஈழத்தமிழர்களின் பெயரால் இயக்கம் நடத்தும் தமிழ் தேசியவாதிகளுக்கும் அந்த உரிமை கிடையாது. இப்படியிருக்க,
N/9
இங்குள்ள தமிழ் தேசியவாதிகள் இதை வைத்து இங்கு அரசியலாக்கி தேர்தல் களம் காண விரும்பும் அரசியல் என்பது உறுதியாகிறது. இந்த சூழல் யாருக்கு இலாபம்? நிச்சயமாக, மக்களை சாதி மதத்தால் பிறித்தாளும், ஏகாதிபத்திய பாரதிய ஜனதாவுக்கு நன்மையாக முடியலாம். இன்றைய தமிழ் தேசியம் உணர்வது நல்லது.
N/N0
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஈழத்தமிழர்கள் சாதியத்துக்கும், மதத்துக்கும், வர்க்கத்துக்கும் முன்னுரிமை கொடுப்பவர்கள். தங்கள் தலையைச்சுற்றி ஒளி வட்டம் அமைத்துக் கொண்டவர்கள். மலையகத் தமிழர்கள் அங்குள்ள சாதியினர் அல்ல. கூலிகள். ஏழைகள். ஆகவே அவர்களை கள்ள தோணியென்றெல்லாம் ஒரு காலம் ஏகடியம் பேசியவர்கள்.
N/1
மலையகத் தமிழர்களின் குடியுறிமைப் பிரச்சனையில், அவர்கள் உதவவும் இல்லை. இப்படி அவர்கள் தங்கள் இனத்தவரையே ஒதுக்கி வைத்ததால், உலக நாடுகள் பிரபாகரனின் போராட்டம் இனவிடுதலைக்கானது அல்ல என்று நம்பக்காரணமாக அமைந்தது. ஆகவே புலிகள் இயக்கத்தை எல்லா நாடுகளும் தடை செய்யக் காரணமானது.
N/2
ஈழத்தமிழர்கள் மொழி, இனத்தைக்காட்டிலும், மண்ணுக்கு முன்னுரிமை கொடுப்பவர்கள். ஆகவே இந்திய தமிழர்களையும், தமிழ் முகமதியரையும் தன் இனத்தவர் என்று ஏற்றுக் கொள்ளவில்லை. நாம்தான் அவர்களை நம் இனமாகப் பார்க்கிறோம். இது இந்திய தமிழர்களுக்கு ஒரு பாடம். இலங்கையிலும், இந்தியாவிலும்
N/3
#சக்கிலியர்கள் என்பவர்கள் தங்களை அருந்ததியர்கள் என்பதும், #சானார்கள் என்பவர்கள் தங்களை நாடார்கள் என்பதும், #வன்னியர்கள் என்பவர்கள் தங்களை சத்ரியகுல வீரன் என்பதும், #பள்ளர்கள் என்பவர்கள் தங்களை தேவேந்திரகுல வேளாளர்கள் என்பதும்,#ஆசாரிகள் தங்களை செளராஷ்டிரப் பிராமணர்கள் என்பதும்,1/n
#தேவாங்கர்கள் என்பவர்கள் தங்களை தேவாங்கப் பிராமணர்கள் என்பதும், #குயவர்கள் தங்களை குலால விஸ்வ பிராமணர்கள் என்பதும், இவ்வளவு சமூகத்தார்களும் தங்கள் தங்கள் உடலினால் கஷ்டப்பட்டு தொழில் செய்து பிற ஜனங்களுக்கு உதவியும் செய்து நியாயமான வழியில் வாழ்கை நடத்திக்கொண்டு தங்களை பிராமணன், 2/n
இந்திரன், அருந்ததி, சந்திரன் என்று பல ஒழுக்கமற்ற சோம்பேறிப் பட்டங்களை வைத்துக்கொள்ள முயற்சிக்கின்றதை பார்கின்றோம். இந்த மாதிரியான சமூக மகாநாடுகளில் இம்மாதிரியான சாதி உயர்வு தாழ்வுகளைப் பற்றிய பேச்சே இருக்கக்கூடாது என்றும் மற்ற சாதியார் என்பவர்களுடன் நாம் எப்படி கலப்பது?.3/n