உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். சுயநிலம் என்பீர்கள். என் சுயநிலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன் – அதைப் போல.
பகட்டு என் தங்கையை மிரட்டியது. பயந்து ஓடினாள். பணம் என் தங்கையைத் துரத்தியது. மீண்டும் ஓடினாள். பக்தி என் தங்கையை பயமுறுத்தியது. ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள். அந்த ஓட்டத்தைத் தடுத்திருக்கவேண்டும். வாட்டத்தைப் போக்கியிருக்கவேண்டும்.
இன்று சட்டத்தை நீட்டுவோர். செய்தார்களா? வாழவிட்டார்களா என் கல்யாணியை?
கடவுள் பெயரால் காம லீலைகள் நடத்தும் போலிப் பூசாரிகளை நாட்டிலே நடமாட விட்டது யார் குற்றம்? கடவுளின் குற்றமா? அல்லது கடவுளின் பெயரைச் சொல்லி காலட்சேபம் நடத்தும் கயவர்களின் குற்றமா? இக்குற்றங்கள் களையப்படும் வரை குணசேகரன்களும் கல்யாணிகளும் குறையப்போவதில்லை.
தமிழ் சினிமாவில் இது போன்றதொரு காட்சியை யாராலும் மறுஉருவாக்கம் செய்ய முடியாது .கலைத்துறையில் புரட்சி விதையை வித்திட்டவர் பராசக்தி நாயகர் கலைஞர் .
வாழ்க கலைஞர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
திராவிட இயக்கம் இனத்தை முன்னிருத்தி மொழியை காத்தது - மொழியை முன்னிருத்தி இனத்தை காத்தது என்று அண்ணன் ஆ.ராசா அவர்கள் பல முறை சொல்லியுள்ளார்.
அதை வரலாற்று சான்றுகளுடன் நம் பேரறிஞர் அண்ணா விளக்குகிறார் .
1/n
நெடுங்காலமாகவே, ஆரியத்தின் அணைப்பிலிருந்து விடுபட, திராவிடம் பலமுறை முயன்றிருக்கிறது.
சில நேரத்தில் செயலற்று இருந்தது என்ற போதிலும், அடியோடு சரண் புகுந்ததில்லை.
அடிக்கடி தனித்தமிழ், வேளாளர் நாகரிகம், உண்மை சைவம், பண்டைய நாகரிகம், என்று பல்வேறு தலைப்புகளில் கிளம்பிய இயக்கங்கள் யாவும், மூல முயற்சியின் சிறு கிறு பதிப்புகளேயாகும்.
கடமையைச் செய்யக் கலங்காதீர் ( திராவிட நாடு 13-08-1950)
நமது மாகாண சர்க்காரில் 20 வருடகால அமுலில் இருந்து வந்த கம்யூனல் ஜீ.ஓ. ஜொலிக்கும் மணிகளை நமக்கு அளித்தது. 1/n
திராவிட மக்கள், சந்தர்ப்பமும் சூழ்நிலையும் கிடைத்தால் எவரையும் மிஞ்சிவிடுவோம் என்பதை நிரூபித்துக் காட்டிவிட்டார்கள். இதைப் பார்த்தே, “சதிகார வர்க்கத்தினர்” வெகுகாலமாக திட்டமிட்டு, ஹைகோர்ட் வரை சென்று வழக்காடி வெற்றியும் பெற்றுவிட்டனர்.
உங்களுக்குத் தெரியுமென்று நினைக்கிறேன்; சேலத்தில் பிராமண மாநாடு கூடிய காலத்திலேயே, கம்யூனல் ஜி.ஓ.வை ஒழிக்க அவர்கள் திட்டம் போட்டு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள்.
#திராவிடப்பெருஞ்சுவர் திராவிடன் என்றால் யார்? தமிழன் என்று கூறாமல் திராவிடன் என்று கூறுவது ஏன் என்று கேட்கிறார்கள். நான் கூட்டங்களிலும், ஏடுகளிலும் எழுதும் போதும், பேசும்போதும் மொழியால் நாம் தமிழர்கள், இனத்தால் திராவிடர்கள், நாட்டால் இந்தியர்கள், உலகத்தால் மனிதர்கள் என்று 1/n
குறிப்பிடுவேன். தமிழனை, தமிழ் மொழியை நாங்கள் மறந்து விடவில்லை. நாம் பட்ட பாட்டால், நாம் நடத்திய போராட்டங்களால், நாம் உருவாக்கிய கிளர்ச்சிகளால், நாம் அடிபட்டு, உதைபட்டு சிறைச்சாலைகளுக்குச் சென்று பெரியாரும், அண்ணாவும், சமூகநீதிக் காவலர்களும் தங்களை இந்த இயக்கத்திலே மாத்திரமல்ல,
இந்த இனத்திற்காக, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களினுடைய உயர்வுக்காக பாடுபட்டு பணியாற்றியதன் காரணமாகத்தான் இன்றைய தினம் ஓரளவு நாம் நிமிர்ந்திருக்க முடிகிறது.
திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்ற கழகமும் இரு திக்குகளிலிருந்தும் வட நாட்டு ஏகாதிபத்தியத்தை ஒழித்து, வைதீகக் காட்டை அழித்துச் சமதர்மப் பூங்காவை திராவிடத்தைச் செழிக்கச் செய்தல் வேண்டும். #திராவிடப்பெருஞ்சுவர் 1/n
அதிலே எந்தக் கழகம் பூங்காவை அமைத்தாலும் அதில் பூக்கும் பூக்கள், காய்கள், கனிகள் திராவிடத்தின் எழுச்சியை, மலர்ச்சியைத்தான் குறிக்கும்.
பழமையும், பாசிசமும் முறியடிக்கப்படும்வரை ஓயமாட்டோம். உழைப்போம். உருவான பலனைக் காண்போம்.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தந்தவர் மட்டுமல்ல கலைஞர் . இலவச மின்சாரத்தை மத்திய அரசு ரத்து செய்ய நினைத்த போது அதை போராடி மீட்டவர் கலைஞர் .
சட்டமன்ற விவாதம் : 06-05-1998 அன்று கலைஞர் பேசியது. 1/n
டெல்லியில் மாநாட்டு நிரலில் உள்ள பல பிரச்சினைகளில் எங்களுக்கு உடன்பாடு உள்ளது. உதாரணத்திற்கு மின் திட்டங்களைச் சீர்படுத்துதல், நவீனப்படுத்துதல், கணிசமான அளவுக்கு மின் இழப்புகளைத் தவிர்த்தல், மின் உற்பத்திக்கு ஊக்கம் அளித்தல் போன்றவைகளில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து இல்லை.
ஆனால் சில பிரச்சினைகளில் எங்களுக்கு மாறுபாடு உண்டு. ஒன்று, தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் விவசாயி களுக்கு இலவச மின்சாரம் கொடுப்பதை இரத்து செய்ய முடியாது. விவசாயப் பம்பு செட்டுக்குக் கட்டணம் விதிப்பதை எங்கள் மக்கள் எதிர்க்கிறார்கள்.
ரயில், அஞ்சல் நிலையங்கள் பெயர்ப்பலகைகளில் மூன்றாவது வரிசையில் இருந்த இந்திய - முன்னுரிமை கொடுத்து மேலே முதல் வரிசையில் எழுத வேண்டும், என்பது அரசின் உத்தரவு
அதன் காரணமாக மேலே இருந்த தமிழ் மூன்றாவதாக கீழே எழுதப்பட்டது. 1/n
தடியைத் தட்டிய பெரியார், முன்னுரிமை கொடுத்து எழுதப்படும் இந்தி - தார் கொண்டு அழிக்கப்படும்.
மக்களின் மன உணர்வுகளைப் புரிந்து கொண்டு, நடுவண் அரசு அதை மாற்றும் வரை, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 ஆம் நாள் தார் கொண்டு இந்தியை அழிக்கும் போராட்டம் தொடரும் என அறிவித்தார்.
இந்தப் போராட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும் கலந்து கொண்டால் வரவேற்போம் என்றார் பெரியார்.