கலைஞரால் பெற்ற பயன் என்ன என்ற விதமாக பல பதிவுகள் பார்த்துள்ளேன் இங்கு... யோசித்து பார்க்கையில் FC வகுப்பைச் சேர்ந்தவன் என்பதாலும், குடும்பத்தின் இரண்டாவது (நான்கில்) பட்டதாரி என்பதாலும் கலைஞரின் பல திட்டங்கள் எனக்கு நேரிடையாக பயன் தரவில்லை. ஆனாலும் கலைஞர் தந்த ஒரு சிறப்பு 1/n
சலுகை எங்களைப் போன்ற பல குடும்பத்தை காப்பாற்றியது என பதிவிட வேண்டும் என ஆசைப்படுகிறேன். 1980 வரை கிராம கர்ணங்களும், மணியகாரர்களும் தான் கிராம நிர்வாகத்தை நடத்துவர். பொதுவாகவே FC வகுப்பினர் தான் இதனை நிர்வகித்து வந்தனர். MGR அரசில் வருவாய்த்துறை அமைச்சராக இருந்த SDசோமசுந்தரம் 2/n
தன் தனிப்பட்ட பிரச்சனைக்காக கர்ணம்,மணியகாரர் பதவிகளையே ரத்து செய்து அனைவரின் வேலை பறிபோக வழி செய்து விட்டார். என் தந்தை அப்போது கர்ணம், மாதம் ரூ.175 சம்பளம். அந்த வேலை போகும் போது நான் 9ம் வகுப்பு மாணவன். குடும்பம் ஏறக்குறைய வீதிக்கு வரும் சூழல்... கிராம கர்ணங்கள் அனைவரும் 3/n
சேர்ந்து SDS/MGRஐ பார்க்க செய்த முயற்சிகள் எல்லாம் தோல்வி. சிறுக சிறுக பலரும் பத்திரம் எழுவது அல்லது வேறு வேலைக்கு என்று சென்று விட்டனர். 86-87காலகட்டத்தில் என் தந்தை மற்றும் வேறு சிலர் இணைந்து வேலையிழந்த கிராம கர்ணம் சங்கம் ஒன்று தொடங்கி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து 4/n
குறைந்தபட்சம் தங்களுக்கு ஓய்வூதியமாவது வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். நீதிமன்றத்தில் வழக்கு வெற்றியும் பெற்ற பின்பும் அரசு ஓய்வூதியம் வழங்கவில்லை. நடுவில் MGR மரணத்திற்கு பின் திமுக ஆட்சி, நாஞ்சிலார் வருவாய்துறை அமைச்சர் என நினைவு. அவரை சந்தித்து ஓய்வூதிய பிரச்சனை 5/n
குறித்து முறையிட அவரும் ஒப்புக்கொண்டு கலைஞரிடம் பேசி, கலைஞரும் ஓய்வூதியம் நீதிமன்ற உத்தரவுப்படி வழங்க வேண்டும் என்று சொல்லி விட்டார். இதனிடையில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டு, ராஜீவ் படுகொலை நிகழ்ந்து ஜெ ஆட்சிக்கு வந்து விட்டார். மீண்டும் புதிய அரசிடம் முறையிட அவர்கள் இதனை 6/n
கண்டுகொள்ளவில்லை. 5 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு மீண்டும் 96ல் கலைஞரின் திமுக ஆட்சி. உடனடியாக ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டு அதனை சிறிது வருட arrers உடன் கொடுத்தார். என் தந்தை உட்பட பலருக்கும் இது ஒரு சாதனை நிகழ்வு. இதில் குறிப்பிட வேண்டிய அம்சம் இந்த பயன் பெற்றவர்களில் 7/n
பலரும் திமுகவுக்கு வாக்களிப்பவர்கள் இல்லை. இன்னும் சொல்லப்போனால், பல கர்ணங்கள் அய்யர்/அய்யங்கார் வகுப்பைச் சேர்ந்தவர்கள் தான். இருப்பினும் அவர்கள் குடும்பத்தையும் இந்த ஓய்வூதியம் தந்து காத்தவர் கலைஞர் தான். அவர் நினைத்திருந்தால், MGR, ஜெ போன்று இதனை கண்டுகொள்ளாமல் 8/n
விட்டிருக்கலாம். யாரும் அழுத்தம் தந்திருக்க முடியாது. ஆனால் நீதிமன்ற உத்தரவு, மற்றும் மனிதாபிமானம் பார்த்து கலைஞர் உதவியது தான். அந்த ஓய்வூதியம் என் தந்தைக்கு கொடுத்த நம்பிக்கை மிகப் பெரிது. கடந்த மே மாதம் என் தந்தை இறந்தபோது அவரின் கடைசி சடங்குகளுக்கு அந்த ஓய்வூதிய 9/n
சேமிப்பு மட்டுமே போதுமானதாயிருந்தது. நாங்கள் நால்வரும் செலவு செய்யவில்லை. காரணம் கலைஞர். இதனை விட வேறு உதவி தேவையுண்டா?
#கலைஞர்
#திமுகஅரசு_மக்களின்அரசு
#நன்றியுடன்_நாங்கள்
#அவர்தான்கலைஞர்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with பாலா...

பாலா... Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @brubala

18 Oct
Couple of days ago while I was working in Dharavi. Mumbai Market I visited a large Grocery stores viz Balaji Stores as they were happy meeting a Tamil speaking guy in me, they narrated many instances how they coped with Covid outbreak
( Dharavi is Asia's largest slum and was Maharashtra's Covid hot bed 4 months ago), in true Mumbai spirit I saw Dharavi is back in action. What impressed me the most is the way this shop keeper served the people there not only keeping the store open and also ensured each and
every essential item was sold as per the stipulated price, no hoarding, no black marketing etc., they remained fair and Human.
Based on the positive feedback from the locals , they were recognised by International Human Rights Association for their service...during our toughest
Read 4 tweets
10 Oct
கடந்த 5 வருடங்களில் திமுக மீதான ஒரு பெரும் குற்றச்சாட்டு - அதிமுக பிரிவு/கூவாத்தூர் கோமாளித்தனங்களுக்கு பிறகும் அதிமுக அரசை கீழிறக்கவில்லை என்பது மட்டும்தான். அதற்கும் ஏதாவது ஒரு வலுவான காரணம் இருக்கும் என்றே நம்புகிறேன். அதை தவிர்த்து திமுக எதிர்கட்சியாக இந்த வருடங்களில் 1/n
செய்த செயல்கள் அதிகம் என்றே நினைக்கிறேன். அதுவும் திமுக மீதான ஊடக அடக்குமுறையை மீறித்தான் கடந்த நாடாளுமன்ற தேர்தல் வெற்றியும், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கூத்துகளை மீறி வலுவான வெற்றி பெற்றதும். தமிழக உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் திமுக குரல் எழுப்பும் என்று எல்லோரும் 2/n
எதிர்பார்த்த வேளையில் எல்லா மாநிலங்களுக்கான உரிமைக்காக குரல் கொடுத்து வருவதையும் பார்த்து வருகிறோம். அதன் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த பெருந்தொற்று காலத்தில் செய்து வரும் உதவிகளையும் பார்த்து வருகிறோம். தர்மபுரி எம்பி @DrSenthil_MDRD மதுரை @ptrmadurai போல பலரும் இணையத்தில் 3/n
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!