கடவுளானாலும்...?

கடவுளானாலும், காந்தியார் ஆனாலும் பார்ப்பனர்களுக்குப் பயன்படுகிறவரைதான் - பயன்படவில்லை என்றால் யாராக இருந்தாலும், எதுவாக இருந்தாலும் சரி அவை குப்பைக் கூடையில்தான்.
இதோ ஒரு தகவல்:

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை எனும் ஜாதி ஒழிப்புப் போராட்டத்தைத் தந்தை பெரியார் அறிவித்தார். முதலமைச்சர் கலைஞர் அவர்களோ 'எங்கள் ஆட்சியில் அய்யா பெரியார் போராட்டம் நடத்துவதா?' என்று கூறி, அதற்கான சட்டத்தை நிறைவேற்றினார்.
ஒருமுறை அல்ல, இருமுறை சட்டம் இயற்றினார்.

இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அனைத்து ஜாதியில் இருந்தும் தேர்வு செய்யப்பட்டு பயிற்சிப் பள்ளிகளும் தொடங்கப்பட்டு 206 மாணவர்கள் 18 மாதங்கள் பயிற்சி பெற்று தீட்சையும் பெற்றனர் (2008).
திருவண்ணாமலை அருணாசல ஈசுவரர் கோவில் வளாகத்தில்தான் அர்ச்சகர் பயிற்சி நடந்தது. கோவிலுக்கு வழிபாடு செய்யச் சென்ற அர்ச்சகர்ப் பயிற்சி மாணவர்களின் சங்கத் தலைவர் ரெங்கநாதன், அப்படியே தாங்கள் பயிற்சி பெற்ற பள்ளிக்கும் சென்றார்.
சென்றவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. பயிற்சி பெற்றபோது பிள்ளையார் வைக்கப்பட்டுப் பூஜைகளும் நடத்தப்பட்டு வந்தது. அந்தச் சிலைகள் எல்லாம் கேட்பாரற்றும், உடைந்தும், சிதைந்தும் கிடந்தன.

இதுபற்றி கோவில் அலுவலரிடம் ரெங்கநாதன் கேட்டபோது, அவர் சொன்ன பதில்தான் முக்கியமானது.
'நீங்களெல்லாம் பூஜை செய்த கடவுள் சிலையை அய்யர் பூஜை செய்யமாட்டார்!' என்று முகத்தில் அடித்ததுபோல் பதில் சொன்னார்.

மேலும் பயிற்சி பள்ளியின் உள்ளே சென்று பார்த்தபோது,

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் பள்ளி -திருவண்ணாமலை' என்று எழுதப்பட்டு இருந்த பெயர் பலகை உடைக்கப்பட்டுக் கிடந்தது
பயிற்சி மாணவர்கள் பயன்படுத்திய சிறுசிறு சிலைகளும் உடைத்து நொறுக்கப்பட்டுக் கிடந்தன.

ஆம்,

'சூத்திரன்' வழிபட்டால் அது கல்லு - 'பிராமணன்' வழிபட்டால் அது கடவுள்!

ஆம், காந்தியானாலும், கடவுள் ஆனாலும் பார்ப்பனர்களுக்குப் பயன்படும்வரைதான் - தெரிந்துகொள்வீர்!

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Tamilselvan🖤❤️

Tamilselvan🖤❤️ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Dravidan_dk

13 Oct
Marriage..

-Periyar

Married couple should behave to each other like bosom
friends. In any matter, the bridegroom should not have the vanity that he is
the husband. The bride also should behave in such a manner as not to think of
herself as her husband's slave and cook.
Married couple should not be hasty in bringing forth children. It will be good
if children are born at least three years after the marriage.
Married people should spend according to what they earn. They should not
borrow. Even if the income be meagre,
they should save at least a little. This
is what I would call discipline in life.
Married people should have a helpful bent of mind. Even if they cannot do
good, they should desist from doing harm.
Read 15 tweets
10 Oct
ஆச்சாரியாருக்கு பெரியார் பதில்! “நாங்கள் எறும்புகள் தான்”

நம்மைப் பார்த்து ஆச்சாரியார் எறும்புகள் என்கிறார். எறும்புகளையும், மூட்டைப் பூச்சிகளையும் நசுக்குவது போல நம்மை ஒழித்து விடுவதாகவும் முதலமைச்சர் ஆச்சாரியார் கூறியுள்ளார்.
நாம் உண்மையில் எறும்புகளைப் போல்தான் இருக்கிறோம். டாக்டர்கள் இன்ஜக்ஷன் போடும் போது பயப்படாதே! ஒன்றும் செய்யாது; சாதாரணமாக எறும்பு கடித்தது போல் இருக்கும் என்று கூறுகிறார். எறும்புக்கடி சாதாரணம் என்றுதானே பொருள். அந்தக் கருத்தை வைத்துத்தான் ஆச்சாரியார் கூறினார்.
நம்மிடம் விஷம் இல்லை என்று தெரிந்து கொண்டார். விஷமிருப்பதாக அவர் நினைத்திருந்தால் தேள், பாம்பு என்று சொல்லியிருப்பார். திராவிடர் நிலை இத்தகு நிலையில் கீழாகப் போய் இருக்கிறது. மிக மிகத் தாழ்வான நிலைக்குப் போய்க்கொண்டு இருக்கிறோம்.
Read 11 tweets
9 Oct
தத்துக்கிளி

ஒரு பெரிய மனிதர் வீட்டுக்கு ஒரு சாஸ்திரி வந்தார்.

பெரிய மனிதர்: வாருங்கள் சாஸ்திரிகளே, உங்களை வரவழைக்க வேண்டுமென்றி ருந்தேன்- நீங்களே வந்துவிட்டீர்கள்.

சாஸ்திரி: அப்படியா, என்ன விசேஷம்?
பெரிய மனிதர்: ஒன்றுமில்லை; ஒரு தத்துக்கிளியினை கழுத்தில் ஒரு பையன் கயிறு கட்டி இறுக்கி அதைக் கொன்று விட்டான். இதற்கேதாவது பிராயச்சித்தம் உண்டா?

சாஸ்திரி : ஆஹா, உண்டு!
அவன் பெற்றோர் தங்கத்தினால் 108 தத்துக்கிளி செய்து 108 பிராமணர்களுக்குக் கொடுத்துவிட்டால் அந்தப் பாவம் தீர்ந்துபோகும்-இல்லாவிட்டால் அந்தப் பையனைப் பார்க்கவே கூடாது.

பெரிய மனிதர்: தத்துக்கிளியின் கழுத்தில் கயிறு கட்டி இறுக்கிக் கொன்றது தங்களுடைய மகன் தான்.
Read 5 tweets
9 Oct
சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி!"

பிற எந்த மதமும் சொந்த மதத்தைச் சேர்ந்தவர்களைத் தீண்டத்தகாதவர்கள் என்று இழிவு படுத்தவில்லை. ஜெகத் குருக்கள் 'தீண்டாமை க்ஷேமகரமானது' என்று சொல்லுவதில்லை. பெரும்பாலான மக்களை சூத்திரர்கள் - தேவடியாள் மக்கள் என்று இழிவு செய்வதில்லை.
சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி என்று தன்மானத்தோடு பொங்கி எழுந்தால் 'பார் பார்', பிற மதங்களை எதிர்க்காமல் 'இந்துக்களை' மட்டும் எதிர்க்கிறார்கள் என்று 'சூ' காட்டும் தந்திரத்தை இன்னும் எவ்வளவு நாள்களுக்கு ஆரியம் கடைப்பிடிக்கப் போகிறது.
திருப்பதி ஏழுமலையானுக்கும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியனுக்கும், சங்கராச்சாரியாரே பூணூல் போடும் சூட்சமம் என்ன? கடவுள்களையே ஜாதிவாரியாகப் பிரிக்கும் கும்பல் இன்னொரு மதத்தைப் பற்றிப் பேச யோக்கியதை உடையது தானா? 'வைத்தியரே முதலில் உமது சீக்கைச் சரி செய்து கொள்வீர்.
Read 8 tweets
8 Oct
பிராமணாள் ஸ்வீட்ஸ்!'

மத்தியில் பி.ஜே.பி. ஆட் சிக்கு வந்தாலும் வந்தது - உச்சிக்குடுமிகள் வெளியே தெரிய - நெளிய ஆரம்பித்து விட்டன!
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உச்சிக்குடுமிகளை வெளியே தெரியும் அளவுக்குப் பார்ப்பன வக்கீல்கள் நடமாட ஆரம்பித்துவிட்டனர்.

நெற்றிப் பட்டைகளும் சாங்கோபாங்கமாகப் பளிச் சிடுகின்றனவாம்!
‘‘பிராமணாள் ஸ்வீட்ஸ்'' Prepared by 100% Brahmins என்ற சொற்களோடு இணையத்தில் ஒரு விளம்பரம் வலம் வந்து கொண்டுள்ளது. இதனைக் கண்ணுற்ற தோழர் அந்தக் கடைக்காரரிடம் உரையாடியதும் இப்பொழுது இணையத்தில் உலாவருகிறது.

பிராமணாள் ‘ஸ்வீட்' சுவை யாக இருக்கிறதோ இல் லையோ,
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!