*உலகிலேயே_மிக உயரமான_இடத்தில் உள்ள சிவப்பரம்பொருளின் ஆலயம்!_
*[ சுமார்_3680_மீ ]...*

*அருள்மிகு_துங்கநாதர் திருக்கோயில்*
*துங்கநாத்,
*உத்தர்காண்ட்_மாநிலம்.*
*ருத்ரபிரயாக்_மாவட்டம்.*

🇮🇳🙏1
*பரமேஸ்வரன் கொலுவிருக்கும்*
*கேதார்_கோயில்கள் ஐந்து.*

ஈசனின் உடல்பாகங்களில் ஐந்தாக அவை வர்ணிக்கப்படுகின்றன.

#கேதார்நாத்* - ஈசனின் உடல்

#துங்கநாத்* - ஈசனின் புஜம்

#ருத்ரநாத்* - ஈசனின் முகம்;

#மத்மஹேஷ்வர்* - ஈசனின் தொப்புள்;

#கபிலேஷ்வர்* - ஈசனின் தலைமுடி.

🇮🇳🙏2
குருக்ஷேத்திர யுத்தத்தில் தங்களுடைய சகோதரர்களையே கொன்றுவிட்டோமே என பஞ்ச பாண்டவர்கள் வருந்தியபோது,
வியாசர்தான் அவர்களிடம்
‘சிவனின் உடற் பகுதிகளாகக் கருதப்படும் இடங்களில் அவருக்குக் கோயில் கட்டுங்கள். அவர் உங்கள் பாவங்களை மன்னித்து காத்தருள்வார்’

🇮🇳🙏3
என கூறியதாகவும், அதனை ஏற்றுதான் பஞ்ச பாண்டவர்களும் ஆளுக்கு ஒரு ஆலயமாக கட்டினர் எனவும் இந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர்.

உலகின் உயரமான சிவாலயம் துங்கநாத்தான்.
( *துங்கநாத்* என்பதற்கு *கொடுமுடிகளின் நாதர்* எனப் பொருள்)

🇮🇳🙏4
பஞ்ச கேதாரங்களில் அதிகமான உயரத்தில் அமைந்துள்ள தலமும் இதுதான்.
மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரத்தில் ஆதி சங்கர பகவத் பாதாள் அன்னை பார்வதியை அழகிய சடையுடன் கூடிய மலைமகளை, (ரம்ய கபர்த்தினி சைலஸுதே)

சிகரி சிரோமணி துங்க ஹிமாலய
ச்ருங்க நிஜாலய மத்யகதே.....

🇮🇳🙏5
அதாவது இமயமலையின் சிகரங்களில் துள்ளி விளையாடுபவள் என்று குறிப்பிடுகின்றார்.

துங்கம் என்றால் *சிகரம்*.
துங்கம் என்றால் *கரம்* என்றும் பொருள் இங்கு ஐயன்,
கர ரூபமாக வணங்கப்படுகின்றார்.

🇮🇳🙏6
(புராணக் கதைகளின்படி சிவபெருமான் காளை வடிவத்தில் பூமியில் புதையுண்டு திரும்பவும் வெளிப்பட்டபோது அவரது கரம் இந்த ஸ்தலத்தில் வெளிப்பட்டதாக சொல்லப்படுகிறது)

🇮🇳🙏7
இங்கிருந்துதான் ஆகாஷ்காமினி நதி உருவாகி பாய்கின்றாள். சந்திரசிலா பனி சிகரத்தில் கடல்மட்டத்திலிருந்து சுமார் 3680 மீ உயரத்தில் அமைந்துள்ளது இத்தலம்.

சந்திர சிலாவில்தான் *இராமபிரான்* தவம் செய்துள்ளார் என்று கூறப்படுகின்றது.

🇮🇳🙏8
இங்கிருந்து கொண்டல்கள் கொஞ்சும் மஞ்சு திகழும்
பஞ்சசுலி,
நந்தாதேவி,
தூனாகிரி,
நீலகண்ட்,
கேதார்நாத் மற்றும்
பந்தர்பூஞ்ச் சிகரங்களை காணலாம்.

🇮🇳🙏9
துங்கநாத், கேதார்நாத்திலிருந்து பத்ரிநாத் செல்லும் பாதையில் ஊக்கிமட்டிலிருந்து 30 கி.மீ தூரத்திலும், சோப்டாவிலிருந்து 5கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.

பஞ்ச பாண்டவர்களில் *அர்ச்சுனன்* இக்கோவிலை கட்டி சிவபெருமானை வழிபட்டான் என்பது ஐதீகம்.

🇮🇳🙏10
*துங்கநாத ஆலயத்தில் சிவபெருமான் ஒரு அடி உயரத்தில் கருப்பு நிறமுடைய சுயம்பு லிங்கமாக இடப்பக்கம் சற்று சாய்ந்தவாறு அருட்காட்சி தருகின்றார்*

இங்குள்ள பிரதான சந்நிதியில்,
*ஈசன் புஜங்களோடு அற்புததரிசனம் அருள்கிறார்!*

🇮🇳🙏11
*அஷ்ட உலோகத்தால் ஆன வியாசர் மற்றும் கால பைரவரின் சிலைகள், அம்மை மலைமகள் பார்வதிக்கு ஒரு தனி சன்னதி* உள்ளது.

இந்த கோயிலின் *சிவலிங்கத்துக்கு அருகிலேயே ஆதி குரு சங்கராச்சாரியாரின் இரண்டரை அடி சிலை* காணப்படுகிறது.

🇮🇳🙏12
இந்த ஸ்தலத்திலிருந்து கேதார்நாத் சிகரங்கள், கங்காத்ரி மற்றும் யமுனோத்ரி சிகரங்கள் ஆகியவற்றின் அழகைக் காணலாம்.

இங்குதான் *இராவணன்* சிவபெருமானை நினைத்து தவம் செய்தான் என்று இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது.

🇮🇳🙏13
மற்ற கேதாரங்களை ஒப்பிடுகையில் துங்கநாத்தை அடைய 5 கி.மீ தூரம்தான் நடைப்பயணம் செய்ய வேண்டும்.

🇮🇳🙏14
ஆனால் பல இடங்களில் பாதை செங்குத்தாக உள்ளது. வழி முழுவதும். பசுமையான ஆல்பைன் மர காடுகளும், நீர் வீழ்ச்சிகளும் மற்றும் ரோடன்டென் (rhodenton) எனப்படும் அழகிய மலர் புதர்களும், மற்றும் இமயமலைக்கே உரிய பல அரிய மலர்களும் நீர் வீழ்ச்சிகளும் நிறைந்து காணப்படுகின்றது.

🇮🇳🙏15
மேலே ஏற சுமார் 3 அல்லது 4 மணி நேரம் ஆகும்.

ஆதி சங்கரர் 8ம் நூற்றாண்டில் இங்கு வந்திருந்ததாக கூறப்படுகிறது. மற்ற கேதார் கோயில்களில், தென்னிந்திய அர்ச்சகர்கள்தான் காலம் காலமாக இறைப்பணி செய்து வருகிறார்கள்.

🇮🇳🙏16
ஆனால், துங்கநாத் கோயிலில் மட்டும் மாகு என்ற கிராமத்தைச் சேர்ந்த பிராமணர்கள் அப்பணியை மேற்கொள்கிறார்கள்.

குளிர்காலம் வந்தால் இங்குள்ள உற்சவரும், அர்ச்சகரும் 18 கி.மீ. தூரத்தில் உள்ள முக்திநாத்துக்கு வந்து விடுவர்.

🇮🇳🙏17
கோயிலின் மேற்பகுதிக்குச் சென்றால் நந்தாதேவி, நீலகாந்த், கேதார்நாத் உட்பட பல இமயமலைப் பகுதிகளைப் பார்க்கலாம்.

தரிசனம் செய்ய ஏற்ற காலம்
மே மாதம் முதல் அக்டோபர் முடிய.....!!

வாழ்க பாரதம் 🇮🇳
வளர்க பாரதம் 🇮🇳🙏🇮🇳

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

29 Oct
*ஒரு முறை மகாகவி காளிதாசர் வயல்வெளியே வெயிலில் நடந்து சென்ற போது தாகம் எடுத்தது..!*

*சற்று தூரத்தில் ஒரு கிராமப்பெண் கிணற்றில் தண்ணீர் சேந்தி குடத்தில் எடுத்து வந்துக்கொண்டிருந்தாள்!*
காளிதாசர் அவரைப் பார்த்து அம்மா தாகமாகஇருக்கு கொஞ்சம் தண்ணீர் தருவீர்களா? என்று கேட்டார்! ....

அந்த கிராமத்துப்பெண்ணும், தருகிறேன் உங்களை அறிமுகப்படுத்தி க்கொள்ளுங்கள் என்றாள்!
உடனே காளிதாசருக்கு ஒரு உயர்வு மனப்பான்மை ஏற்பட்டு, இந்த பெண்ணிடம் நாம் யார் என்று சொல்ல வேண்டுமா என நினைத்து நான் ஒரு பயணி அம்மா என்றார்! உடன் அந்த பெண், உலகில் இரண்டு பயணிகள் தான்! ஒருவர் *சந்திரன்* ! ஒருவர் *சூரியன்* ! இவர்கள் தான் இரவு பகலென பயணிப்பவர்கள் என்றாள்! ....
Read 11 tweets
29 Oct
’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத்திக் குத்து...
பிரான்ஸ் நாட்டின் பிரபல பத்திரிக்கையான சார்லி ஹேப்டோவில் வெளிவந்த நபிகள் நாயகத்தின் கேலிச் சித்திரத்தை, வரலாற்றாசிரியர் சாமுவேல் பெடி என்பவர் கடந்த 16 - ம் தேதி கருத்துச் சுதந்திரம் பற்றிப் பேசும்போது மாணவர்களிடம் காட்டினார்.
அதனால், அவரது தலை துண்டிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது...
Read 10 tweets
29 Oct
கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் மகன் போதை பொருள் வழக்கில் கைது!

கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் போதை பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பெங்களூருவில் போதை பொருள் தடுப்பு பிரிவினர் பல இடங்களில் சோதனை நடத்தினர். இதில் , முகமது அனுப் என்பவர் கைது செய்யப்பட்டார். அனுப்பிடமிருந்து ஏராளமான போதை பொருள்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த நிலையில், அனுப்புடன் கேரள மாநில கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பினேசுக்கு ‘தொடர்பு இருந்ததாக சொல்லப்பட்டது.
Read 6 tweets
29 Oct
இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு, முந்தைய தேர்வுப்படி மதிப்பெண் தர மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை- யூஜிசி

இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு, முந்தைய தேர்வு அடிப்படையில் மதிப்பெண் வழங்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை என உயர்நீதிமன்றத்தில் பல்கலைக்கழக மானியக்குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
பொறியியல், கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு மாணவர்களின் அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், இறுதி பருவ தேர்வை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள பல்கலைக்கழக மானியக்குழு, இறுதிப்பருவத் தேர்வுகள் நடத்த வேண்டியது அவசியமானது என்று குறிப்பிட்டுள்ளது.
Read 4 tweets
29 Oct
தேவைக்கு அதிகமாக புற்றீசல் போல் பொறியியல் கல்லூரிகள் இருப்பதற்கு காரணம் யார்? -உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி
தமிழகத்தில் தேவைக்கு அதிகமாக புற்றீசல் போல் பொறியியல் கல்லூரிகள் இருப்பதற்கு அனுமதி வழங்கிய அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தான் காரணமா? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
கொரோனா காலத்தில் தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள்,
Read 5 tweets
29 Oct
அரசு நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் போராட்டம் நடத்தினால், நடவடிக்கையை கைவிட்டு அதிகாரிகள் திரும்பி வந்து விடுவார்களா? -உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி
அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள், போராட்டம் நடத்தினால் அதிகாரிகள் நடவடிக்கையை கைவிட்டு திரும்பி விடுவார்களா என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது.
கரூர் மாவட்டம் தாந்தோணி கிராமத்தில் ஓடை மற்றும் வாய்க்கால் ஆக்கிரமிப்பு குறித்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று வினாவினர்.
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!