ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான்.
002மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.
சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான்.
003குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.
004தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு"
005என்று கோபத்துடன் கேட்டான்.
பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான்.
006பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். "ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான்.
007பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.
008பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய்.
009யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்"
10என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஒரு ஊரில் இரண்டு சகோதரர்கள் இருந்தனர். ஒருவன் போதைப் பழக்கமுள்ளவன் எப்போதும் குடும்பத்தில் இருப்பவர்களை நையப்புடைத்து - மிரட்டி - பணம் வாங்கிக் குடித்துக் கொண்டே இருப்பான்.
002பிறருக்குத் தொல்லைகொடுத்து இன்பம் பெறும் ஸாடிஸ்ட் அவன்.
மற்றவன் நல்லவனாக சமூகத்தில் மதிக்கப்படுபவனாக - நல்ல குடும்பத்தலைவனாக இருந்தான். அருமையாக குடும்பத்தைப் பராமரித்து வந்தான். ஊரில் உள்ளவர்களுக்கு வியப்பு.
003"ஒரே தகப்பனுக்குப் பிறந்த ஒரே சூழ்நிலையில் வளர்ந்த இரு குழந்தைகளில் ஒன்று ஊர்போற்றும் நல்லவனாகவும், மற்றொன்று ஊர் தூற்றும் கொடியவனாகவும் இருக்கக் காரணம் என்ன", என ஊரில் இருப்பவர்களுக்கு வியப்பு.
001இவர்களை நன்றாக பார்த்து கொள்ளுங்கள்! ஒரு அப்பா,மகள்!!
இவர்கள் வாழ்க்கையில் ஒரு கதை இருக்கிறது.
கதைக்குள் போவோமா?
சுமார் 22 வருடங்கள் பின்னோக்கி போக வேண்டும்.
002அஸ்ஸாம் மாநிலத்தில், கிராமம் என்றும் சொல்ல முடியாது. நகரம் என்றும் சொல்ல முடியாத ஒரு சிற்றூர். அங்கே சோபரன் என்ற பெயருடைய காய்கறி தள்ளு வண்டி வியாபாரி, தனிக்கட்டை.
அன்றன்றைக்கு கிடைப்பதை வைத்து அவருடைய வாழ்க்கை வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.பெரிய கனவெல்லாம் கிடையாது.
003ஒரு நாள் அந்தி சாயும் நேரம், வியாபாரம் முடித்து தன் குடிசைக்கு வந்து கொண்டிருக்கிறார். பக்கத்து புதர் ஒன்றிலிருந்து ஏதோ சத்தம்,போய் பார்க்கிறார். புதரில் ஒரு அழகான பச்சிளம் பெண் குழந்தை. சுற்றும் முற்றும் பார்க்கிறார். ஆள் அரவமே இல்லை.
001இறந்துவிட்டான் சேகர்.....
ஆமாங்க நாம எதுக்கெடுத்தாலும் செத்தான்டா சேகரு செத்தான்டா சேகருனு சொல்வோமே அந்த சேகரு தான்.....
இறந்தபின் சொர்க்கத்தின் வாசலுக்கு வந்த சேகர் சொர்க்கத்தின் கேட் அருகே சித்ரகுப்தனை பார்த்தான்.
002சித்ரகுப்தன் : சொர்க்கத்திற்குள் போகணும்னா நீங்க ஒரு வார்த்தைக்கு spelling சொல்லணும்.
சேகர் : சாமி... என்ன வார்த்தைங்க ?
சித்ரகுப்தன் : லவ்
சேகர் : L O V E
சித்ரகுப்தன்: சரியான விடை உள்ளே வாங்க.
சேகரையும் கூட்டிக்கொண்டு உள்ளே போகும்போது சித்ரகுப்தனின் போன் ரிங் அடித்தது?..
003சித்ரகுப்தன் : கடவுள் என்ன ஏதோவொரு காரியத்திற்காக அர்ஜென்டா கூப்டுகிறார்....நான் திரும்பிவரும் வரை நீ இந்த கேட்டுக்கு காவல் நிற்க வேண்டும்
. .
சேகர் : சரிங்க சாமி !!
சித்ரகுப்தன் : நான் திரும்பி வருவதற்குள் யாராவது வந்தால் இதே கேள்வியை