001இவர்களை நன்றாக பார்த்து கொள்ளுங்கள்! ஒரு அப்பா,மகள்!!
இவர்கள் வாழ்க்கையில் ஒரு கதை இருக்கிறது.
கதைக்குள் போவோமா?
சுமார் 22 வருடங்கள் பின்னோக்கி போக வேண்டும்.
002அஸ்ஸாம் மாநிலத்தில், கிராமம் என்றும் சொல்ல முடியாது. நகரம் என்றும் சொல்ல முடியாத ஒரு சிற்றூர். அங்கே சோபரன் என்ற பெயருடைய காய்கறி தள்ளு வண்டி வியாபாரி, தனிக்கட்டை.
அன்றன்றைக்கு கிடைப்பதை வைத்து அவருடைய வாழ்க்கை வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.பெரிய கனவெல்லாம் கிடையாது.
003ஒரு நாள் அந்தி சாயும் நேரம், வியாபாரம் முடித்து தன் குடிசைக்கு வந்து கொண்டிருக்கிறார். பக்கத்து புதர் ஒன்றிலிருந்து ஏதோ சத்தம்,போய் பார்க்கிறார். புதரில் ஒரு அழகான பச்சிளம் பெண் குழந்தை. சுற்றும் முற்றும் பார்க்கிறார். ஆள் அரவமே இல்லை.
004குழந்தையை அங்கேயே விட்டு வர மனமில்லாமல் அதை வீட்டிற்கு எடுத்து வருகிறார். கொஞ்ச நாட்கள் பார்த்தார், குழந்தையை தேடி யாராவது வரக்கூடும். யாரும் வரவில்லை.
குழந்தையை தானே வளர்ப்பது என்று முடிவு செய்தார். தன்னந்தனி ஆளாக, தன் வியாபாரத்தையும் கவனித்து கொண்டு,
005அந்த குழந்தையை கண்ணும் கருத்துமாக வளர்த்தார். அதற்கு ஜோதி என்று பெயரும் வைத்தார்..
அழகான குழந்தை. இறைவன் அதற்கு அழகுடன் நல்ல அறிவையும் கொடுத்தான். சாதாரண அரசு பள்ளியில் ஜோதி படித்து, அதற்கு படிப்பில் இருந்த ஆர்வத்தால் சோபரன் சளைக்காமல் கல்லூரியில் சேர்த்து, .
006கடந்த 2013 ஆம் ஆண்டு Computer Science ல் இளங்கலை பட்டமும் வாங்கியாயிற்று.
படிக்கும்போதே தன்னை எடுத்து வளர்த்த "அப்பா"விற்கு வியாபாரத்தில் உறுதுணையாக இருந்து, வேலைக்கான தேர்வுகளையும் எழுத தொடங்கினார் ஜோதி என்ற அந்த அழகுப் பதுமை.
007கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த அஸ்ஸாம் சர்வீஸ் கமிஷன் நடத்திய Group I service தேர்வில் தேர்ச்சி அடைந்து, 2018 ஆம் ஆண்டு அவருக்கு Assistant Commisioner of Commercial Tax பதவி கிடைத்தது.
படத்தில் இருப்பவர்கள் "தந்தை" சோபரன்'னும் "மகள்" ஜோதியும்தான்.
008எனக்காக உங்கள் வாழ்க்கையையே தியாகம் செய்திருக்கிறீர்கள் அப்பா, நான் ஒரு நல்ல அரசு பதவிக்கு வந்து விட்டேன். நீங்கள் ஓய்வெடுக்கலாமே. இனி நான் உங்களை காப்பாற்றுகிறேன், வியாபாரத்தை விட்டுவிடுங்கள்.
009இல்லை என் அருமை மகளே! இந்த தள்ளு வண்டிதான் இத்தனை நாளும் உனக்கும், எனக்கும் சோறு போட்டது. என்னால் முடிந்தவரை செய்கிறேன், எனக்கென்று வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். அவர்களை ஏமாற்ற விரும்பவில்லை.
10ஜோதியை பற்றி, அவர் புதரில் கிடைத்ததைப்பற்றி, யாராவது அவருக்கு நினைவு படுத்தினால், கோபப்படாமல் சொல்வாராம்.
11குப்பை தொட்டியில் குப்பைதான் இருக்கும் என்று யார் சொன்னது. சில சமயம் வைடூரியமும் கிடைக்கும். எனக்கு கிடைத்த வைடூரியம் ஜோதி. என் வாழ்க்கைக்கே அர்த்தம் கொடுத்தவள் அல்லவா, இறைவன் எனக்களித்த பொக்கிஷம் என்று கண் கலங்க சொல்லும்போது,
12"நமக்கும் கண்களில் கண்ணீர்"
தான், தனது என்று இயங்கும் மனித வாழ்வில் இவர்கள் இருவருமே "வைடூரியங்களே" சமூகத்திற்கு கிடைத்த பொக்கிஷங்கள். மனிதமும், மனித நேயமும் எவ்வளவு உன்னதமானது. மெய் சிலிர்க்கிறது
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஒரு ஊரில் இரண்டு சகோதரர்கள் இருந்தனர். ஒருவன் போதைப் பழக்கமுள்ளவன் எப்போதும் குடும்பத்தில் இருப்பவர்களை நையப்புடைத்து - மிரட்டி - பணம் வாங்கிக் குடித்துக் கொண்டே இருப்பான்.
002பிறருக்குத் தொல்லைகொடுத்து இன்பம் பெறும் ஸாடிஸ்ட் அவன்.
மற்றவன் நல்லவனாக சமூகத்தில் மதிக்கப்படுபவனாக - நல்ல குடும்பத்தலைவனாக இருந்தான். அருமையாக குடும்பத்தைப் பராமரித்து வந்தான். ஊரில் உள்ளவர்களுக்கு வியப்பு.
003"ஒரே தகப்பனுக்குப் பிறந்த ஒரே சூழ்நிலையில் வளர்ந்த இரு குழந்தைகளில் ஒன்று ஊர்போற்றும் நல்லவனாகவும், மற்றொன்று ஊர் தூற்றும் கொடியவனாகவும் இருக்கக் காரணம் என்ன", என ஊரில் இருப்பவர்களுக்கு வியப்பு.
001இறந்துவிட்டான் சேகர்.....
ஆமாங்க நாம எதுக்கெடுத்தாலும் செத்தான்டா சேகரு செத்தான்டா சேகருனு சொல்வோமே அந்த சேகரு தான்.....
இறந்தபின் சொர்க்கத்தின் வாசலுக்கு வந்த சேகர் சொர்க்கத்தின் கேட் அருகே சித்ரகுப்தனை பார்த்தான்.
002சித்ரகுப்தன் : சொர்க்கத்திற்குள் போகணும்னா நீங்க ஒரு வார்த்தைக்கு spelling சொல்லணும்.
சேகர் : சாமி... என்ன வார்த்தைங்க ?
சித்ரகுப்தன் : லவ்
சேகர் : L O V E
சித்ரகுப்தன்: சரியான விடை உள்ளே வாங்க.
சேகரையும் கூட்டிக்கொண்டு உள்ளே போகும்போது சித்ரகுப்தனின் போன் ரிங் அடித்தது?..
003சித்ரகுப்தன் : கடவுள் என்ன ஏதோவொரு காரியத்திற்காக அர்ஜென்டா கூப்டுகிறார்....நான் திரும்பிவரும் வரை நீ இந்த கேட்டுக்கு காவல் நிற்க வேண்டும்
. .
சேகர் : சரிங்க சாமி !!
சித்ரகுப்தன் : நான் திரும்பி வருவதற்குள் யாராவது வந்தால் இதே கேள்வியை
ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான்.
002மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.
சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான்.
003குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.