மொபைல் ஃபோனில் தமிழ் வானொலி எனும் செயலியில் நாட்டுப்புறப்பாட்டு எனும் சேனல் இருக்கின்றது. அவ்வப்போது கேட்பதுண்டு. சில ரசனையாக இருக்கும், பல கத்தல்களாக இருக்கும்.
இன்று கேட்ட பாடல்கள், கொஞ்சம் கோக்குமாக்காதான் இருந்தது. அதென்னனு தெரிஞ்சுக்கனும்னா நீங்களும் கேட்டுப் பாருங்க
1/4
பாடல்கள் வரிசையில் முக்கியமானதொரு பாட்டு வந்தது
அதன் வரிகள் ஏறத்தாழ...
“அத்த மக உன்ன
கண்ணாலம் பண்ண ஆசப்பட்டேன்
சித்தப்பனுக்கு வாக்கப்பட்டு
சின்னாத்தாள ஆகிட்டியே”... எனத் தொடர்ந்தது.
அடப்பாவமே இப்படியெல்லாமா சிக்கல் வரும். அதை இப்படியுமா பாட்டாகப் பாடி வைப்பார்கள் 2/4
எனும் ஆச்சரியம் வந்தது. பாட்டில் சொல்லப்பட்ட அந்த சம்பவம் பரிதாபத்துக்குரியதுதான்.
யார் இப்படி நொந்து போய் எழுதியிருப்பார்கள் என மாய்ந்து மாய்ந்து யோசித்து கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தேன். 3/4
நிச்சயமாக அதை ஒரு ‘90ஸ் கிட்ஸ்தான்’ எழுதியிருக்க வேண்டும்.
ஆகவே... வெவகாரம் புடிச்ச சித்தப்பா வகையறா 80ஸ் கிட்ஸ்களுக்கு நமது கண்டனங்களை பதிவு செய்வோம்!
4/4
கிராமங்களில் பெரு, சிறு, குறு விவசாயி என யாராக இருந்தாலும் சரி, அவர்களிடம் எப்போதும் ஓர் அறியாமை நிரம்பிய வீம்பு இருப்பதுண்டு. தம் நிலங்களில் விற்பனை செய்வதற்கான பயிர் வகைகள் மட்டுமே விளைவிக்க வேண்டும் எனும் வீம்புதான் அது.
1/n
பயன்பாட்டில் இருக்கும் நிலம் முற்றிலும், தாம் காலம் காலமாகச் செய்து வரும் முறையில், அந்தந்தப் பகுதிகளுக்கேற்ப, நீர் வசதிக்கேற்ப விவசாயம் செய்து விடும் பழக்கம் தவறில்லை. பெரும்பாலான விதைப்பு என்பது காலங்காலமான பழக்கம் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் மட்டுமே நிகழ்கின்றது.
2/n
மொத்தத்தில் எதையாவது விதைக்க வேண்டும், பாங்கு பார்க்கவேண்டும், விளைந்ததை அறுவடை செய்து, என்ன விலைக்குப் போகின்றதோ அப்படியே விற்றுவிடவேண்டும். உதாரணத்திற்கு சில தருணங்களில் வெங்காயம் கிலோ 100 ரூபாயைக் கடந்து பறக்கும். அதே நாட்களில் தக்காளி ஓரிரு ரூபாய்க்கு விற்பனையாகும்.
3/n
சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் 5 கிமீ தொலைவிற்குள் சாலையோர பேக்கரிகளில் ஆறு பேருந்துகளைப் பார்த்தேன். அத்தனையும் அழுக்கடைந்த தனியார் சொகுசு பேருந்துகள். பேருந்தின் வெளியே பனியனும், ட்ரவுசருமாக நாட்கணக்கில் பயணத்ததில் அழுக்கடைந்த வட மாநிலத்தினர். 1/7
மார்ச் ஏப்ரல் மாதங்களில் ரயில்களிலும் பேருந்துகளிலும், கால்நடையாகவும் சொந்த ஊர்களுக்குத் திரும்பிய தொழிலாளிகள் போன வேகத்தில், தாம் தொடர்பில் இருந்த நிறுவன முதலாளிகளை, மேலாளர்களை அழைத்திருக்கின்றார்கள். 2/7
“இங்கே சோத்துக்கே வழியில்ல, எப்படியாச்சும் என்னைத் திருப்பி கூப்பிட்டுக்குங்க. பஸ் அனுப்புங்க, பஸ்ல வர்ற காசு கழியும்வரை சம்பளம் இல்லாம சோறு மட்டும் போடுங்க” என்று அழைப்பதாக நண்பர் சொன்னார். இது ஆட்களுக்கும்-நிறுவனங்களுக்கும் தகுந்த மாதிரி பல விதங்களில் அமையலாம்.
3/7
"10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து மாண்புமிகு முதல்வர் அவர்கள் தான் முடிவு மேற்கொள்ள வேண்டும்" என்று தமிழக கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ட்விட்டரில் தகவல் பகிர்ந்துள்ளார்.
முதற்கண் அதை அவர் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளதை வரவேற்கிறேன்.
என்னைப் பொறுத்தவரையில்...
தேர்வை ரத்து செய்வதுதான் சரியான தீர்வாக இருக்கும். உடனே, “அப்படியெல்லாம் கேன்சல் செய்தால் என்னென்ன பிரச்சனை வரும் தெரியுமா!?” என்று குரல்கள் எழலாம்.
என்னவெல்லாம் பிரச்சனைகள் எழுந்தாலும், அவற்றிற்கு சரியானதொரு வழிமுறையைக் கண்டுபிடிப்பது பள்ளிக் கல்வி துறையின் கடமை.
10ம் வகுப்பு பிள்ளைகள் அனைவரும், அவர்களின் தேர்வுக்கு இரண்டு நாட்கள் முன்பு வரை படித்துக் கொண்டும், விதவிதமான தேர்வுகளை எழுதிக் கொண்டும்தான் இருந்துள்ளனர்.