#அறிவு என்றால் என்ன?
#ஞானம் என்றால் என்ன?

இரண்டுக்கும் வித்தியாசம் என்ன?

பகவான் ராமகிருஷ்ணரிடம் பாடம் படிப்பதில் நிறையப் பயன்கள் உண்டு. அவர் எந்த ஒரு விஷயத்தையும் மிக மிக எளிமையாக விளக்குவார். Image
புரியாததைப் புரிய வைப்பார். அன்றாட வாழ்க்கையில் உள்ள எளிய உதாரணங்களைக் கூறி தெளிவடையச் செய்வார். அவற்றுள் ஒன்றுதான் இது:

பகவான் ராமகிருஷ்ணரிடம் மூன்று மாணவர்கள் பாடம் படித்துக் கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு அறிவு, ஞானம் பற்றிய ஐயம் இருந்தது.
" அறிவு என்றால் என்ன?
ஞானம் என்பது எது? " என்று குருவிடம் கேட்டனர்.

அவர் அறிவு, ஞானம் பற்றி பல நாள்கள்பாடம் எடுத்தும் அவர்கள் மூவருக்கும் அது முழுவதுமாக விளங்க வில்லை. இரண்டிற்குமுள்ள வேறுபாட்டை உணர முடியவில்லை.
பகவான் ராமகிருஷ்ணர் மூன்று மாணவர்களையும் அழைத்து, "இன்று உங்களுக்கு ஞானம்_என்பது_எது? என்பதை ஒரு செயல் மூலம் விளக்கப் போகிறேன்'' என்று சொல்லிவிட்டு மூவரையும் ஒரு அறையில் உட்கார வைத்தார்.
அவர் மற்றொரு அறைக்குச் சென்று சிறிது நேரத்தில் வெளியே வந்தார். அறையின் கதவுகளை மூடிவிட்டு அம்மூவரின் அருகில் வந்தமர்ந்தார்.

முதல் மாணவனைப் பார்த்து, "நான்போய் வந்த அறையினுள் மூன்று தம்ளர் பால் உள்ளது. அதில் நீ ஒரு தம்ளர் பாலை பருகிவிட்டு வா என்றார்.
அவன் உள்ளே சென்றான். தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய மூன்று தம்ளர்களில் பால் இருந்தது.

தங்கத்தம்ளரில் இருந்த பாலை எடுத்து மிகுந்த சந்தோஷத்தோடு பருகினான். பிறகு வெளியே வந்தான்.,
அடுத்து இரண்டாவது மாணவன் உள்ளே சென்றான். தங்கத் தம்ளரில் பால் இல்லாததைப் பார்த்த அவன் அதிலிருந்த பால் தனக்குக் கிடைக்கவில்லையே என்று ஆதங்கமுற்றான்.

ஆயினும் அதற்கடுத்த மதிப்பினைக் கொண்ட வெள்ளி தம்ளரில் இருந்த பாலை எடுத்துக் குடித்துவிட்டு ஓரளவு நிறைவோடு வெளியே வந்தான்.
மூன்றாவது மாணவன் உள்ளே சென்றதும் காலியாகக் கிடந்த தங்க, வெள்ளி தம்ளர்களைப் பார்த்ததும் கோபம் தலைக்கேறியது.

எனக்கு வெண்கல தம்ளர் பாலா? யாருக்கு வேண்டும் இது? நான் என்ன அவ்வளவு இளப்பமானவனா? எந்தவிதத்தில் நான் தாழ்ந்தவனாகி விட்டேன்?' என்று அவன் மனதில் எண்ணங்கள் ஓடின.
ஆயினும் குரு பாலைக் குடித்து வா என்றதை நினைவில் கொண்டு வருத்தத்தோடு குடித்துவிட்டு வெளியே வந்தான். அவன் முகத்தில் சுரத்தே இல்லை!

பகவான் ராமகிருஷ்ணர் மூவரையும் பார்த்து, "பாலைக் குடித்தீர்களா" என்றார். முதல் மாணவன் மகிழ்ச்சிப் பூரிப்புடன், "தங்கத் தம்ளரில் பால் குடித்தேன்.
நான் மிகவும் கொடுத்து வைத்தவன், குருவே!'' என்றான். இரண்டாவது மாணவன், "எனக்கு தங்கத் தம்ளரில் பால் கிடைக்க வில்லை என்கிற வருத்தம் இருந்தாலும் வெள்ளி தம்ளரிலாவது கிடைத்ததே என்கிற மகிழ்ச்சி ஓரளவு இருக்கிறது, குருஜி'' என்றான்.
மூன்றாவது மாணவன் பதில் சொல்ல ஆரம்பிக்கும் முன்பே அழுகை வந்துவிட்டது. அதனூடேயே அவன், மூன்று பேர்களில் மிகவும் துரதிர்ஷ்டக்காரன் நானே குருஜி. எனக்கு வெண்கலத் தம்ளரில்தான் பால் கிடைத்தது'' என்றான்.
பகவான் ராமகிருஷ்ணர் அமைதியாக எல்லாவற்றையும் கேட்டபின் பேச ஆரம்பித்தார். "மாணவர்களே! தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய மூன்று தம்ளர்களிலும் ஏலக்காய், குங்குமப்பூ சேர்த்து சுண்டக் காய்ச்சிய சுவையான பசும்பால்தான் ஒரே அளவில் இருந்தது. அதில் எந்த வேறுபாடும் இல்லை.
பாலை பருகப் போகிற மூவருக்குமே அதிலிருந்து ஒரே மாதிரியான சுவையும், சத்துவ குணமும்தான் கிடைக்கப் போகிறது. அதிலும் வேறுபாடில்லை. ஆனால் நீங்கள் மூவருமே நினைத்தது வேறு.
பால் ஊற்றி வைத்திருக்கும் தம்ளர்களின் மதிப்பைப் பற்றியே உங்கள் மனம் யோசித்தது. பாலின் குணம், சுவை, ருசி ஆகிய அனைத்தும் ஒரேமாதிரிதான் இருக்கும் என்பதை யோசிக்கவே இல்லை.
ஆகவே நீங்கள் பண்டத்தை விட்டு விட்டு பாத்திரத்தையே பார்த்துள்ளீர்கள்! பாத்திரத்தைப் பார்த்து சந்தோஷப்படுவது அறிவு. அதில் உள்ள பண்டத்தைப் பார்த்து இன்புறுவது ஞானம். ஞானிகள் பண்டத்தைப் பற்றியும் அதன் பயன் பற்றியுமே பார்ப்பார்கள்.
பாத்திரங்களுக்கு மதிப்பு தர மாட்டார்கள். மண்சட்டியில் ஊற்றிக்கொடுத்தால் கூட ஆனந்தமாக பருகிச் செல்வார்கள்''

"நீங்கள் அறிவு கொண்டு பார்க்காமல் ஞானம் கொண்டு பார்த்திருந்தால் மூவருமே ஒரேமாதிரியான மனோநிலையை எட்டியிருப்பீர்கள்!''
பகவான் ராமகிருஷ்ணர் சொல்லி முடித்ததும் மூன்று பேர்களுக்கும் அறிவிற்கும், ஞானத்திற்கும் உள்ள வேறுபாடு தெளிவாக விளங்கியது...

🇮🇳🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

15 Nov
இன்று முதல் கந்த சஷ்டி விழா ஆரம்பம்சிறப்பு பதிவு முருகன் பற்றிய 40 ருசிகர தகவல்கள்:

*முருகு அல்லது முருகன் என்னும் சொல் மிகமிகத் தொன்மையானது* முருகப்பெருமானை பற்றிய 40 ருசிகரமான தகவல்களை இங்கே அறிந்து கொள்ளலாம்.

🙏🇮🇳1 Image
1. முருகனின் திருவுருவங்கள்:

1. சக்திதரர், 2. கந்த சுவாமி, 3. தேவசேனாதிபதி, 4. சுப்பிரமணியர், 5. கஜவாகனர், 6. சரவணபவர், 7. கார்த்திகேயர், 8. குமாரசுவாமி, 9. சண்முகர், 🙏🇮🇳2
10. தாரகாரி, 11. சேனாபதி, 12. பிரமசாத்தர், 13. வள்ளி கல்யாண சுந்தரர், 14. பாலசுவாமி, 16. கிரவுஞ்ச «பதனர், 16. சிகிவாகனர் எனப்படும்.

2. முருகன் அழித்த ஆறு

பகைவர்கள்ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம்.

🙏🇮🇳3
Read 25 tweets
14 Nov
”சந்தேக நிவர்த்தி”

காஞ்சி மடம் என்றும் போல் ஜேஜே என்று கூட்டம் பொங்கி வழிய இருக்கும் நாள் அது. பெரியவா உள்ளே இருக்கா. இன்று மவுனம் இல்லை. Image
அவாளை தரிசிக்க அவாளுடைய ஒன்று இரண்டு வார்த்தைகள் நமது காதில் விழ கொடுத்து வைத்திருக்கோமா . அவாள் திருஷ்டி நம் மீது விழாதா? ஜன்ம சாபல்யம் அடையுமே!
நிறைய ஜனங்கள் இருந்தாலும் சப்தம் அதிகம் இல்லை. அவ்வளவு மரியாதை. பய பக்தி மஹா பெரியவாளிடம். அவரை சூழ்ந்திருந்த ஒரு கூட்டத்தில் நடந்தது இது.

ஒரு இளைஞன். பிரமச்சாரி. பொன்னிற மேனி. பட்டை பட்டையாக விபுதி, கழுத்தில் ருத்ராக்ஷம். தட்டிசித்து வேஷ்டினான்.
Read 29 tweets
14 Nov
லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் கடுங்குளிரையும் சீனப்படையினரையும் ஒருசேர எதிர்கொள்ளும் இந்திய வீரர்கள்
லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் துருவப் பகுதிகளில் நிலவுவது போன்ற கடுங்குளிரையும், சீனப் படையினரையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் வகையில் இந்தியப் படையினர் நிலைகொண்டுள்ளனர்.
கிழக்கு லடாக்கில் எல்லைக்கட்டுப்பாட்டுப் பகுதிகளில் துருவப் பகுதிகளைப் போன்று உறைநிலைக்குக் கீழே கடுங்குளிர் நிலவுகிறது. சீனப் படையினர் கோக்ரா ஹாட் ஸ்பிரிங்ஸ், வடக்கு பாங்காங் சோ, தெற்கு பாங்காங் சோ ஆகிய நிலைகளில் உள்ளனர்.
Read 4 tweets
14 Nov
தூய்மை இந்தியா திட்டத்தால் கிராமப்புற இந்தியாவுக்கு கிடைத்த ஆதாயம் என்ன?

பிரதமர் மோடி தனது கனவுத் திட்டமாக ஸ்வச் பாரத் மிஷன் எனப்படும் தூய்மை இந்தியா திட்டத்தை  அக்டோபர் 2, 2014 அன்று துவக்கி வைத்தார்.
2019 அக்டோபருக்குள் மக்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதை முற்றிலுமாக தவிர்க்க இந்தியா முழுவதிலும் இலவசமாக கழிப்பறைகளை கட்டித் தருவதாக அறிவித்தார்.
இந்த கழிப்பறை வசதிகளை பெற்றபின் கிராமப்புற இந்தியாவில் ஒரு வீட்டுக்கு ஆண்டுக்கு ரூ.53,000 (727 அமெரிக்க டாலர்கள்) க்கும் அதிகமான மதிப்பிலான நன்மைகளை பெற்றுள்ளனர்.
Read 18 tweets
14 Nov
பாலைவனமோ, பனிமலையோ ராணுவ வீரர்கள் இருக்கும் இடத்தில் தான் எனக்கு தீபாவளி - பிரதமர் மோடி

ஜெய்சால்மர்: பனிமலையோ, பாலைவனமோ, ராணுவ வீரர்கள் எங்குள்ளனரோ அங்கு தான் எனக்கு தீபாவளி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் வீரர்களுக்கு இனிப்பு வழங்கி, அவர்களுடன் தீபாவளி வாழ்த்துக்களை பிரதமர் பகிர்ந்து கொண்டார்.

பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும், ராணுவ வீரர்களை கவுரவப்படுத்தும் வகையில், எல்லை பகுதிக்கு சென்று, அவர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவார்.
2014ல் சியாச்சினிலும், 2015ல் பஞ்சாபிலும், 2016ல் ஹிமாச்சல பிரதேசத்தில் சீன எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுடன் இணைந்து தீபாவளியை கொண்டாடினார்.2017 ல் காஷ்மீரின் வடக்கு பகுதியில் உள்ள குரேஸ் பகுதியிலும், 2018 ம் ஆண்டில் உத்தரகண்டிலும்,
Read 11 tweets
14 Nov
ராணுவ டாங்கில் பிரதமர் மோடி பயணம்

ஜெய்சால்மர்: ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாட ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மர் சென்றுள்ள பிரதமர் மோடி, ராணுவ டாங்கில் பயணம் செய்தார்.
ஒவ்வொரு ஆண்டும், தீபாவளி பண்டிகையை, ராணுவ வீரர்களுடன் இணைந்து கொண்டாடும் பிரதமர் மோடி, இந்த ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள ராணுவ முகாமிற்கு சென்று கொண்டாடினார். அப்போது வீரர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி பேசும்போது,
நமது நாட்டின் மீது தீய நோக்கத்துடன் கண் வைப்பவர்களுக்கு நமது ராணுவம் உரிய பதிலடி கொடுக்கும். இதன் மூலம், நமது ராணுவத்தின் பெருமை அதிகரித்துள்ளது.
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!