ஒரு ஊரில் தர்மன் என்ற ஒரு தொழில் அதிபர் இருந்தார். அவருக்கு ஒரு மகன் இருந்தான்.
அவன் ஒரு நாள் தன் தந்தையிடம் எளிதில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான்.
002அதற்கு தர்மன், தன் வீட்டை ஒட்டியிருந்த தோட்டத்திற்கு தன் மகனை அழைத்துச் சென்றார்.
தோட்டத்திற்கு சென்று அங்கு மூடி வைத்திருந்த ஒரு கூடையை அப்படியே தூக்கினார்.
003அதுவரை
அதன் உள்ளே அடைபட்டிருந்த கோழிகள் அனைத்தும் சுதந்திரம் கிடைத்ததென்று நினைத்து தோட்டத்திற்குள் தலைதெறிக்க ஓடின.
உடனே தர்மன், தன் மகனிடம், நீ விரைந்து சென்று அந்தக் கோழிகளைப் பிடித்து வரும்படி கூறினார்.
004அவனும் அந்தக் கோழிகளை விரட்டிக்கொண்டு கோழிகளின் பின்னாலேயே ஓடினான்.
அடைபட்டுக் கிடந்த கோழிகள் தோட்டத்தில் நான்கு திசைகளிலும் மாறி மாறி ஓடிக் கொண்டு இருந்தன.
கோழிகள் அனைத்தும் ஒவ்வொரு
திசையில் இருந்ததால் தர்மனின் மகனுக்கு எந்தக் கோழியைப் பிடிப்பது என்று தெரியாமல்
005அங்கும் இங்கும்
ஓடி, இறுதியில் களைப்படைந்து எதையும் பிடிக்காமல் சோர்ந்து போய் வந்தான்.
தன் தந்தையிடம் என்னால் எந்த கோழியையும் பிடிக்க முடியவில்லை என்று சோகமாகச் சொன்னான்.
006தர்மன் சிரித்துக் கொண்டே, மகனே! அதோ அந்த சிவப்பு நிறக் கோழியை மட்டும் துரத்திச் சென்று முதலில் பிடித்து வா.
பிறகு மற்ற கோழிகளைப் பிடித்துக் கொள்ளலாம் என்று கூறினார்.
அவனும் தன் தந்தைக் கூறியது போலவே, அந்த சிவப்பு நிறக் கோழியை மட்டும் குறிவைத்து துரத்திச் சென்றான்.
007சில நிமிடங்களிலேயே அந்த சிவப்பு நிறக் கோழி அங்கும் இங்கும் ஓடி ஓடி களைப்படைந்து
ஒரு இடத்தில் நின்றது.
உடனே அவன்
அந்த சிவப்பு நிறக் கோழியைப் பிடித்து கொண்டான்.
008சிவப்பு நிறக் கோழியை பிடித்து வந்த தன் மகனைப் பார்த்து, தர்மன் நீ என்னிடம் கேட்ட கேள்விக்கு இங்கே விடை கிடைத்து விட்டது என்றார்.
அவருடைய
மகனுக்கு ஒன்றும் புரியவில்லை.
அப்பா, நான் எளிதில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன்.
10அதற்கும் இந்த கோழியைப் பிடித்து வந்ததற்கும் என்ன சம்மந்தம் என்று சற்று விளக்கமாக கூறுங்கள் என்று கேட்டான்.
உடனே தர்மன்,
நீ ஒரு சிவப்புநிறக் கோழியை மட்டும் குறி வைத்து துரத்திச் சென்றதால் நீ மிக எளிதாக அந்த சிவப்பு நிறக் கோழியைப் பிடித்து வந்து விட்டாய் அல்லவா,
11அதேபோல் தான் ஏதேனும் ஒரு இலக்கை தீர்மானித்துக் கொண்டு அந்த இலக்கை அடைவதையே முக்கிய குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டால் எளிதில் வெற்றி பெறலாம் என்றார்.
தத்துவம் :
எளிதில் வெற்றி பெற வேண்டுமென்றால்
ஒரு இலக்கை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட வேண்டும்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஒரு பெண் தினமும் கோவிலுக்குச் செல்வாள்! ஒரு நாள் அந்த பெண் பூசாரி கிட்ட சொன்னாள், இனி நான் கோவிலுக்கு வரமாட்டேன்!
002அர்ச்சகர் கேட்டார் -- ஏன்?
அப்போது அந்தப் பெண் சொன்னார் -- கோயில் வளாகத்தில் மக்கள் செல் போனில் எதைப்பற்றியோ பேசுவதை நான் பார்க்கிறேன்! கிசுகிசுக்கும் இடமாக கோயிலை சிலர் தேர்வு செய்துள்ளனர்! சிலர் பாசாங்குத்தனம் குறைவாக வழிபடுகிறார்கள், அதிகம் பாசாங்கு செய்கிறார்கள்!
003இதில் அர்ச்சகர் சிறிது நேரம் அமைதியாக இருந்தார், பிறகு சொன்னார் -- சரி! ஆனால் நீங்கள் உங்கள் இறுதி முடிவை எடுப்பதற்கு முன் நான் சொல்வதை செய்ய முடியுமா!
ஒரு ஊரில் இரண்டு சகோதரர்கள் இருந்தனர். ஒருவன் போதைப் பழக்கமுள்ளவன் எப்போதும் குடும்பத்தில் இருப்பவர்களை நையப்புடைத்து - மிரட்டி - பணம் வாங்கிக் குடித்துக் கொண்டே இருப்பான்.
002பிறருக்குத் தொல்லைகொடுத்து இன்பம் பெறும் ஸாடிஸ்ட் அவன்.
மற்றவன் நல்லவனாக சமூகத்தில் மதிக்கப்படுபவனாக - நல்ல குடும்பத்தலைவனாக இருந்தான். அருமையாக குடும்பத்தைப் பராமரித்து வந்தான். ஊரில் உள்ளவர்களுக்கு வியப்பு.
003"ஒரே தகப்பனுக்குப் பிறந்த ஒரே சூழ்நிலையில் வளர்ந்த இரு குழந்தைகளில் ஒன்று ஊர்போற்றும் நல்லவனாகவும், மற்றொன்று ஊர் தூற்றும் கொடியவனாகவும் இருக்கக் காரணம் என்ன", என ஊரில் இருப்பவர்களுக்கு வியப்பு.
001இவர்களை நன்றாக பார்த்து கொள்ளுங்கள்! ஒரு அப்பா,மகள்!!
இவர்கள் வாழ்க்கையில் ஒரு கதை இருக்கிறது.
கதைக்குள் போவோமா?
சுமார் 22 வருடங்கள் பின்னோக்கி போக வேண்டும்.
002அஸ்ஸாம் மாநிலத்தில், கிராமம் என்றும் சொல்ல முடியாது. நகரம் என்றும் சொல்ல முடியாத ஒரு சிற்றூர். அங்கே சோபரன் என்ற பெயருடைய காய்கறி தள்ளு வண்டி வியாபாரி, தனிக்கட்டை.
அன்றன்றைக்கு கிடைப்பதை வைத்து அவருடைய வாழ்க்கை வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.பெரிய கனவெல்லாம் கிடையாது.
003ஒரு நாள் அந்தி சாயும் நேரம், வியாபாரம் முடித்து தன் குடிசைக்கு வந்து கொண்டிருக்கிறார். பக்கத்து புதர் ஒன்றிலிருந்து ஏதோ சத்தம்,போய் பார்க்கிறார். புதரில் ஒரு அழகான பச்சிளம் பெண் குழந்தை. சுற்றும் முற்றும் பார்க்கிறார். ஆள் அரவமே இல்லை.
001இறந்துவிட்டான் சேகர்.....
ஆமாங்க நாம எதுக்கெடுத்தாலும் செத்தான்டா சேகரு செத்தான்டா சேகருனு சொல்வோமே அந்த சேகரு தான்.....
இறந்தபின் சொர்க்கத்தின் வாசலுக்கு வந்த சேகர் சொர்க்கத்தின் கேட் அருகே சித்ரகுப்தனை பார்த்தான்.
002சித்ரகுப்தன் : சொர்க்கத்திற்குள் போகணும்னா நீங்க ஒரு வார்த்தைக்கு spelling சொல்லணும்.
சேகர் : சாமி... என்ன வார்த்தைங்க ?
சித்ரகுப்தன் : லவ்
சேகர் : L O V E
சித்ரகுப்தன்: சரியான விடை உள்ளே வாங்க.
சேகரையும் கூட்டிக்கொண்டு உள்ளே போகும்போது சித்ரகுப்தனின் போன் ரிங் அடித்தது?..
003சித்ரகுப்தன் : கடவுள் என்ன ஏதோவொரு காரியத்திற்காக அர்ஜென்டா கூப்டுகிறார்....நான் திரும்பிவரும் வரை நீ இந்த கேட்டுக்கு காவல் நிற்க வேண்டும்
. .
சேகர் : சரிங்க சாமி !!
சித்ரகுப்தன் : நான் திரும்பி வருவதற்குள் யாராவது வந்தால் இதே கேள்வியை