திருநெல்வேலி ரயில்வே ஜங்ஷனுக்கு அருகில் உள்ளது சாலைக் குமார சுவாமி கோயில். ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் இரட்டைப் பாலம் உள்ளது. இந்த இரட்டைப் பாலத்துக்குக் கீழே உள்ள பகுதியில் உள்ளது சாலைகுமார சுவாமி கோயில்.
ஆலயம் சிறியதுதான். ஆனால் கீர்த்தி மிக்க திருத்தலம். 🙏🇮🇳1
மிகச்சிறிய கோயில் என்றாலும் திருநெல்வேலி என்றில்லாமல் சுற்றுவட்டார ஊர்களைச் சேர்ந்த பக்தர்களும் இங்கு வந்து முத்துக்குமார சுவாமியை தரிசித்துச் செல்கின்றனர்.
மூலவர் முருகக் கடவுள், கிழக்கு நோக்கியபடி அருள்பாலிக்கிறார். 🙏🇮🇳2
ஆறுமுகங்களும் பனிரெண்டு திருக்கரங்களும் கொண்டு, அழகு முருகனாக, அழகன் முருகனாக, மயிலின் மீது அமர்ந்து ஒய்யாரமாகக் காட்சி தருகிறார்.
திருச்செந்தூர் திருத்தலத்துக்கு இணையான தலம் என்று கொண்டாடுகின்றனர் பக்தர்கள். 🙏🇮🇳3
கிரக தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள், முக்கியமாக செவ்வாய் தோஷத்தால் திருமணத் தடையால் வருந்திக் கொண்டிருப்பவர்கள், இங்கு வந்து சாலை குமாரசுவாமியை வேண்டிக்கொண்டால், சகல தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
திருமணத் தடை நீக்கும் அற்புதமான திருத்தலம் இது. 🙏🇮🇳4
அதனால்தான், நெல்லை மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பக்தர்கள், இந்தத் தலத்துக்கு வந்து, முருகப்பெருமான் சந்நிதிக்கு எதிரில் இருந்தபடி, திருமணம் செய்துகொள்வதும் வழக்கமாக உள்ளது என்கிறார்கள் பக்தர்கள்.
வாழ்வில் குரு பலம் இருந்தால் திரு பலம் கிடைக்கும் என்பார்கள். 🙏🇮🇳5
குருவின் பலம் இழந்து தவிப்பவர்கள்,எந்தக் காரியம் செய்தாலும் நஷ்டமாகிக் கொண்டிருக்கிறதே என்று வருந்துபவர்கள், எதிரிகளின் தொல்லையால் நிம்மதி இல்லாத நிலை இருக்கிறதே என்று கலங்குபவர்கள், 🙏🇮🇳6
திருநெல்வேலி ஜங்ஷன் சாலை முத்துக்குமார சுவாமியை செவ்வாய்க்கிழமைகளிலும், ஞாயிற்றுக் கிழமைகளிலும் சஷ்டி முதலான திதியிலும் கார்த்திகை நட்சத்திர நாளிலும் இங்கு வந்து முருகப்பெருமானை கண்ணார தரிசித்து மனதார வேண்டிக்கொண்டால், மங்கல காரியங்கள் நடந்தேறும். வியாபாரம் விருத்தியாகும். 🙏🇮🇳7
எதிரிகள் தொல்லை இல்லாமல் போகும் என்பது ஐதீகம்.
சாலை முத்துகுமார சுவாமியை கந்தசஷ்டி நாளில் தரிசியுங்கள். வீடு மனை யோகம் தந்தருள்வார் வேல்முத்துக்குமரன்.
வாழ்க பாரதம் 🇮🇳
வளர்க பாரதம் 🇮🇳🙏🇮🇳
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சில நாடுகளின் லாபத்திற்காக உலகம் பாதிக்கப்படக்கூடாது
புதுடில்லி : தென் சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சியை மறைமுகமாக கண்டித்து பன்னாட்டு இணைய கருத்தரங்கில் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:
இந்திய - பசிபிக் கடல் பிராந்தியக் கொள்கை என்பது எதிர்காலத்திற்கானது; அதை முந்தைய காலகட்டத்திற்கு தள்ளக் கூடாது.
பனிப் போரை விரும்பும் நாடுகள் தான் அத்தகைய பிற்போக்கான எண்ணத்தை விரும்பும். சமீப காலத்தில் இந்திய - பசிபிக் மற்றும் 'ஆசியான்' அமைப்புகள் குறிப்பிடத்தக்க வரவேற்பையும் முன்னேற்றத்தையும் அடைந்து வருகின்றன.
அதிமுக - திமுக.,வுக்கு போட்டியாக உருவெடுத்த பா.ஜ.,: தமிழக உளவுத்துறை உஷார்
சென்னை: வேல் யாத்திரைக்கு கூடும் கூட்டத்தால் தமிழகத்தில் தி.மு.க. - அ.தி.மு.க.வுக்கு போட்டியாக பா.ஜ.வுக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளதாக மாநில உளவுத்துறை அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் வேல் யாத்திரையை பா.ஜ. மாநில தலைவர் முருகன் கடந்த 6ல் திருத்தணியில் துவங்கிய நிலையில் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து தமிழகம் முழுதும் பா.ஜ.வினர் சாலை மறியலில் ஈடுபட்டு கைதாகினர்.
வழக்கமாக தமிழகம் முழுதும் பா.ஜ.வினர் செல்வாக்கு பெற்ற மாவட்டங்களை தவிர பிற இடங்களில் 100க்கும் குறைவானவர்களே கைதாவர்.
வேல் யாத்திரை விவகாரத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கைது எண்ணிக்கை 100ஐ தாண்டியது.
கோ பேக் மோடி தி.மு.க., வினருக்கு அண்ணாமலை எச்சரிக்கை
கரூர்: 'கோ பேக் மோடி' என்ற விளம்பரத்தை தி.மு.க., வினர் அழிக்கவில்லை எனில் பா.ஜ. வினர் அதை அழிப்பர்' என பா.ஜ. மாநில துணைத்தலைவர் அண்ணாமலை, மாஜி அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய பா.ஜ. அரசை கடுமையாக தி.மு.க. விமர்சனம் செய்து வருகிறது. நவ.,10ல் கரூர் திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகில் சேலம்- மதுரை புறவழிச்சாலை மேம்பால சுவற்றில் 'கோ பேக் மோடி' என தி.மு.க. சார்பில் விளம்பரம் எழுதப்பட்டது.
மேலும் ஈரோடு சாலை, வெங்கமேடு உட்பட பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இதுகுறித்து நவ.,11ல் மாவட்ட பா.ஜ. தலைவர் சிவசாமி சார்பில் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.