ஒரு நாள் பரமாசார்யாளை தரிசனம் பண்ண வந்தா எம்.எஸ். கொண்டு வந்திருந்த பழத்தட்டை மகாபெரியவா முன்னால் வைச்சுட்டு, நமஸ்காரம் பண்ணினா.
"பெரியவா, பாரத தேசத்தோட சார்புல ஐ.நா.சபையில சங்கீதக் கச்சேரி ஒண்ணு பண்ணறுதுக்காக என்னை அழைச்சிருக்கா. உங்க உத்தரவைக் கேட்டுண்டு பதில் சொல்றதா சொல்லியியிருக்கேன்!" பவ்யமாகச் சொன்னா.
மெல்லிசான புன்னகையோட ஆசிர்வாதம் பண்றாப்புல
கையை உசத்தின ஆசார்யா
"ரொம்ப நல்லது. இது உனக்கு மட்டுமான கௌரவம் இல்லை.
நம்ம தேசத்தோட கௌவரத்துக்கானது. அதனால் கண்டிப்பா போய்ட்டுவா!" அப்படின்னு சொன்னதோட, " ஒரு பாட்டு எழுதித் தரேன். அதை அவஸ்யம் அங்கே பாடு!" ன்னுசொல்லிட்டு, பாட்டை எழுதிக் குடுத்தார்.
லோக மக்கள் சண்டை சச்சரவு இல்லாம, ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசையா இருக்கணும்கற அர்த்தத்துல அமைஞ்ச அந்தப் பாட்டு, "மைத்ரீம் பஜத...!" ன்னு
தொடங்கினதால, அதுக்கு அந்தப் பேரையே வைச்சார். பரமாசார்யாளோட ஆசிர்வாதமே பெரிய சந்தோஷம்.
அதை விடப் பெருசா, அவரே ஒரு பாட்டை எழுதிக் குடுத்து அதை அவஸ்யம் பாடுனு சொல்றார்னா, அந்த சந்தோஷத்தை எப்படிச் சொல்றது? புளகாங்கிதத்துல கண்லேர்ந்து ஆனந்த பாஷ்யம் சொரிய, அந்த பாட்டை வாங்கி பத்திரப்படுத்திண்டு புறப்பட்டார் எம்.எஸ்.
ஆச்சு. குறிப்பிட்ட நாள்ல குறிச்ச நேரத்துல ஐ.நா.சபையில பாடறதுக்காக போய் இறங்கினா எம்.எஸ். சரியா அதே நேரத்துல தடங்கல் மாதிரி ஒரு லாக் ஏற்பட்டது. ஏரோப்ளேன்ல போய் இறங்கறவாளுக்கு ஜெட்லாக்னு ஒருபிரச்னை ஏற்படும்னு சொல்வா. அந்த மாதிரி ஏதாவது ஏற்பட்டிருந்தா பரவாயில்லை.
சமாளிச்சுண்டுடலாம்.
இவாளுக்கு ஏற்பட்டது, த்ரோட் லாக்.
ஆமாம் காற்றினிலே வரும் கீதம்னு பாடினவாளோட வாய்ஸ்ல வெறும் காத்து
மட்டும் வர்ற மாதிரி தொண்டை அடைச்சுண்டுடுத்து .ஐ.நா.சபையில பாடறுதுக்கு இன்னும் ரெண்டு மூணு நேரம்தான் இருக்குங்கற சூழ்நிலையில என்ன செய்யறதுன்னே புரியலை அவாளுக்கு.
கூடப் போயிருந்த இசைக் கலைஞர்கள் எல்லாம் தெரிஞ்ச கை வைத்தியத்தை செஞ்சு பார்த்தா. ஊஹூம் எதுவும் கைகொடுக்கலை.
அழறதுக்குக்கூட முடியாம அப்படியே வாயடைச்சு பரிதவிச்சு நின்னுண்டு இருந்த சமயத்துல அவாளுக்கு பரமாசார்யாளோட ஞாபகம் வந்திருக்கு. 'இது உனக்கான கௌரவம் இல்லை. பாரத தேசத்துக்கானது கண்டிப்பா நீ பாடணும்னு!' சொல்லி ஒரு பாட்டையும் எழுதிக்குடுத்த அந்த மகானோட வாக்கு ஒரு போதும் பொய்க்காது.
கண்டிப்பா அவா காப்பாத்துவார்!' னு ஒரு நம்பிக்கை மனசுக்குள்ளே தோணித்து. உடனே, என்ன ஆனாலும் பாத்துக்கலாம்னு, தங்கியிருந்த ஜாகைலேர்ந்து ப்ரோக்ராம் நடக்கப் போற இடத்துக்கு கிளம்பிட்டா.
நிகழ்ச்சியோட நிறைவா மகாபெரியவா எழுதிக் குடுத்த 'மைத்ரீம் பஜத' பாடலைப் பாடி முடிச்சா.
அவ்வளவு நேரமும் அந்த கானசாகரத்துல ஐக்கியமாகி இருந்த ஐக்கிய நாடுகள் சபையோட உறுப்பினர்கள் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் பண்ணினா.
கண்ணுல நீர்க் கசிய எழுந்து நின்ன எம்.எஸ்,மனசுக்குள்ளே,"ஆசார்யாளே அத்தனை பெருமைக்கும் காரணம் நீங்கதான்!. ஒலிச்சது என்னோட குரல் இல்லை. கடவுளான உங்க அனுகிரகத்தால் வந்த குரல்.இது' ன்னு நினைச்சுண்டு நெகிழ்ந்து நின்னா.
அங்கேர்ந்து திரும்பி வந்ததும், பரமாசார்யாளை தரிசனம் பண்ண வந்தா.அவா எதுவும் சொல்றதுக்கு முன்னாலேயே " என்ன பாட முடியாத படிக்கு தொண்டை, சண்டை போட்டு தாக்கும்! இருந்தாலும் சமாளிச்சு பாடிட்டே போல இருக்கு!
சந்த்ரமௌளீச்வரரோட க்ருபை உனக்கு எப்பவும் உண்டு!" அப்படின்னு சொல்லி ஆசிர்வதித்தார் ஆசார்யா.' இந்த லோகத்துல எந்த மூலைல என்னோட பக்தர்களுக்கு என்ன நடந்தாலும் எனக்குத் தெரியும்.
அவாளை நான் இருந்த இடத்துலேர்ந்தே காப்பாத்துவேன்!'னு சொல்லாமலே உணர்த்திட்ட மகாபெரியவா அந்த மகேஸ்வரனாகவே தெரிஞ்சார் எல்லாரோட கண்ணுக்கும்.
🙏🇮🇳
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சில நாடுகளின் லாபத்திற்காக உலகம் பாதிக்கப்படக்கூடாது
புதுடில்லி : தென் சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சியை மறைமுகமாக கண்டித்து பன்னாட்டு இணைய கருத்தரங்கில் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:
இந்திய - பசிபிக் கடல் பிராந்தியக் கொள்கை என்பது எதிர்காலத்திற்கானது; அதை முந்தைய காலகட்டத்திற்கு தள்ளக் கூடாது.
பனிப் போரை விரும்பும் நாடுகள் தான் அத்தகைய பிற்போக்கான எண்ணத்தை விரும்பும். சமீப காலத்தில் இந்திய - பசிபிக் மற்றும் 'ஆசியான்' அமைப்புகள் குறிப்பிடத்தக்க வரவேற்பையும் முன்னேற்றத்தையும் அடைந்து வருகின்றன.
அதிமுக - திமுக.,வுக்கு போட்டியாக உருவெடுத்த பா.ஜ.,: தமிழக உளவுத்துறை உஷார்
சென்னை: வேல் யாத்திரைக்கு கூடும் கூட்டத்தால் தமிழகத்தில் தி.மு.க. - அ.தி.மு.க.வுக்கு போட்டியாக பா.ஜ.வுக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளதாக மாநில உளவுத்துறை அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் வேல் யாத்திரையை பா.ஜ. மாநில தலைவர் முருகன் கடந்த 6ல் திருத்தணியில் துவங்கிய நிலையில் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து தமிழகம் முழுதும் பா.ஜ.வினர் சாலை மறியலில் ஈடுபட்டு கைதாகினர்.
வழக்கமாக தமிழகம் முழுதும் பா.ஜ.வினர் செல்வாக்கு பெற்ற மாவட்டங்களை தவிர பிற இடங்களில் 100க்கும் குறைவானவர்களே கைதாவர்.
வேல் யாத்திரை விவகாரத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கைது எண்ணிக்கை 100ஐ தாண்டியது.
திருநெல்வேலி ரயில்வே ஜங்ஷனுக்கு அருகில் உள்ளது சாலைக் குமார சுவாமி கோயில். ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் இரட்டைப் பாலம் உள்ளது. இந்த இரட்டைப் பாலத்துக்குக் கீழே உள்ள பகுதியில் உள்ளது சாலைகுமார சுவாமி கோயில்.
ஆலயம் சிறியதுதான். ஆனால் கீர்த்தி மிக்க திருத்தலம். 🙏🇮🇳1
மிகச்சிறிய கோயில் என்றாலும் திருநெல்வேலி என்றில்லாமல் சுற்றுவட்டார ஊர்களைச் சேர்ந்த பக்தர்களும் இங்கு வந்து முத்துக்குமார சுவாமியை தரிசித்துச் செல்கின்றனர்.
மூலவர் முருகக் கடவுள், கிழக்கு நோக்கியபடி அருள்பாலிக்கிறார். 🙏🇮🇳2
ஆறுமுகங்களும் பனிரெண்டு திருக்கரங்களும் கொண்டு, அழகு முருகனாக, அழகன் முருகனாக, மயிலின் மீது அமர்ந்து ஒய்யாரமாகக் காட்சி தருகிறார்.
திருச்செந்தூர் திருத்தலத்துக்கு இணையான தலம் என்று கொண்டாடுகின்றனர் பக்தர்கள். 🙏🇮🇳3
கோ பேக் மோடி தி.மு.க., வினருக்கு அண்ணாமலை எச்சரிக்கை
கரூர்: 'கோ பேக் மோடி' என்ற விளம்பரத்தை தி.மு.க., வினர் அழிக்கவில்லை எனில் பா.ஜ. வினர் அதை அழிப்பர்' என பா.ஜ. மாநில துணைத்தலைவர் அண்ணாமலை, மாஜி அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய பா.ஜ. அரசை கடுமையாக தி.மு.க. விமர்சனம் செய்து வருகிறது. நவ.,10ல் கரூர் திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகில் சேலம்- மதுரை புறவழிச்சாலை மேம்பால சுவற்றில் 'கோ பேக் மோடி' என தி.மு.க. சார்பில் விளம்பரம் எழுதப்பட்டது.
மேலும் ஈரோடு சாலை, வெங்கமேடு உட்பட பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இதுகுறித்து நவ.,11ல் மாவட்ட பா.ஜ. தலைவர் சிவசாமி சார்பில் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.