எப்பவும் pack sealedஆ இருக்கும் பிரிக்கறது கொஞ்சம் கஷ்டமா இருக்கும்
இந்த முறை just சலோடேப் ஒட்டிருந்தாங்க
சரி பேக்ல ஏதாவது பிரிஞ்சிருக்கும்னு அவசரத்தில பிரிச்சி எடுத்துட்டு திரும்ப ரப்பர்பேன்ட் போடுறப்ப தான் கவனிச்சேன் கீழயும் சலோடேப் ஒட்டிருந்தாங்க
அப்போ டவுட் வந்து காலியான பழைய டப்பாவ எடுத்து பாத்தா இது பாக்கெட்டே வேறயா இருந்தது
வெளிபாக்கெட் கொஞ்சம் வெளிறிப் போய்....
மேல பாக்கெட் மூடுற இடத்தில் வெள்ளையா இருந்தது பழையதுல புதுசுல பச்சையா இருந்தது
உள்ள foil மேல பழையதுல சிவப்பு print புதுசுல பச்சைprint
சட்னு கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு சின்னதா தான் வேறுபாடுன்னாலும் அந்த சலோடேப் என்னை ரொம்பவே உறுத்துச்
சலோடேப் ஒட்டி அதுமேல print வேற
கூகுள்ல தேடி இந்த வெப்சைட்ல இருக்குற நம்பருக்கு பேசினா படமெடுத்து வாட்சப்ல அனுப்புங்க பாத்துட்டு பேசுறோம்ன்னாங்க aachigroup.com/cms/contact-us/
நானும் விக்ரமாதித்தியா முயற்சி செஞ்சதில ரெண்டரை மணி நேரம் கழித்து ஹலோன்னாங்க
நா ஹலோவுக்கு பதிலா படம் அனுப்பினேனேன்னேன்
பாக்கல இதோ பாத்துட்டு லைன்ல வரேன்னு சொல்லிட்டு she cut the call
மறுபடியும் வெயிட்டிங்...
எவ்ளோ நேரம் தான் அந்த மாவு கலந்த பாலை வச்சிக்கிட்டு உட்கார்ந்து இருக்கறது
இன்னும் டவுட்டாகி அந்த அரைலிட்டர் பாலையும் கீழ ஊத்தியாச் 😣
ஒரு மணி நேரம் கழித்து அவங்களே பேசினாங்க
ஹப்பாடா
படத்தை பாத்தாங்களாம்
அவங்களோடதுதானாம்
ஒரு பேட்ச் மட்டும் இப்படி ஆனதாம்
அதைப் பற்றி விளக்கம் கொடுத்துட்டு...
என் பேரு நா எங்க இருக்கேன் எல்லாம் விசாரிச்சாங்க - இதுல எல்லாம் சரியா தான் இருக்காங்க
இதோட சுபம்னு போடலாம்னு பாத்தா...
Sent மட்டும் தான் காட்டுது seen காட்டல
திறந்து பாக்காம மெசேஜ பாக்கலாம் பிச்சர எப்படி பாக்கறது 🤔
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
திராவிட கட்சிகள் தனியார் பள்ளிகளை ஆரம்பித்து கொள்ளை அடிக்கின்றன என்பார்கள்...
ஒருபொழுதும் பத்ம சேஷாத்ரி, மகரிஷி வித்யா மந்திர், பால வித்யா பவன், DAV போன்ற நிறுவனங்கள் எப்படி பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளை ஆரம்பித்தார்கள் என்று பேச மாட்டார்கள்!
சன் குழுமம், 4 மாநிலங்களில் தொலைக்காட்சி வைத்திருக்கின்றனர் என்பார்கள்!
ஒருபொழுதும் ZEE TV, Star TV, NDTV, Times Now போன்ற TV நிறுவனங்கள், பல மாநிலங்களில் உள்ளதைப் பற்றி பேசமாட்டார்கள்!
கலைஞர் தனது குடும்பத்திற்கு சொத்து சேர்த்து விட்டார்... மாறன் குடும்பத்திற்கு லட்சம் கோடிகள் சொத்து எப்படி வந்தது! அவர்கள் எப்படி ஆசியாவின் No 1 பணக்காரர்கள் ஆனார்கள் என்பார்கள்!!!
ஒருபோதும் ராமச்சந்திரன், ஜெயலலிதா பற்றி பேசமாட்டார்கள்!
— சார் இந்த வனிதா இருக்கில்லே?
— யார் அது வனிதா? பேஸ்புக்குல ஒரு வனிதாதான் ஞாபகமிருக்கு. கொஞ்சம் குறும்புக்காரப் பொண்ணு.
— அதில்ல சார். இது வேற வனிதா
— சரி, அந்த வேற வனிதா யாரு?
— பிக் பாஸ்ல வந்துச்சு சார்.
— நீ பிக் பாஸ் பாத்தியா?
— ஓஓஓ... விடாம பாப்பேன் சார்
— சரி. அது மூணாம் கல்யாணம் பண்ணுச்சோ முப்பதாம் கல்யாணம் பண்ணுச்சோ... உனக்கென்ன பிரச்சினை
— என்ன சார்... ஏற்கெனவே ரெண்டு கல்யாணம் பண்ணி புள்ளைக கூட இருக்கு.
— இருக்கட்டுமே... அந்தப் புள்ளைக வந்து உன்கிட்டே அழுதுச்சா எங்கம்மா இப்படி மூணாம் கல்யாணம் பண்றாங்கன்னு?
சங்கிகளின் மதவெறி அரசியலுக்காய் அயோத்தி பிரச்சனை கிளப்பப்பட்டது. சங்கிகள் சொல்வது உண்மை என்றால் ராமாயணம் பொய் என்றாகிவிடும்.
அயோத்தியைப் பற்றி பேசும் வால்மீகி இராமாயணம் சரயூ நதியைப் பற்றியும் கூறுகிறது. சரயூ நதி அயோத்தியில் இருந்து ஒன்றரை யோஜன் தூரத்தில் உள்ளது என்று கூறுகிறது.
ஒன்றரை யோஜன் என்பது இன்றைய கணக்குப்படி 23 கிலோ மீட்டர் ஆகும்.
ஆனால் இப்போது நாம் அயோத்தி சென்று பார்த்தால் சரயூ என்ற பெயரில் ஒரு நதி அங்கே ஓடினாலும், அது அயோத்திலேயே ஓடுகிறது. அயோத்தியில் இருந்து 23 கி.மீ. தொலைவில் அது இல்லை.
அப்படியானால் இராமாயணத்தில் கூறப்படும் அயோத்தியும் சரயூ நதியும் இது அல்ல. வேறு ஏதோ ஒரு பகுதியில் அயோத்தி என்ற பெயரில் ஒரு ஊரும், அதிலிருந்து 23 கி.மீ தொலைவில் சரயூ என்ற பெயரில் ஒரு நதியும் இருந்திருக்க வேண்டும் என்று நம்பினால்தான் இராமா யணம் கூறுவது மெய்யாகும்.