முதல் இழையில் பாக்டீரீயாக்களை பற்றி எழுதியிருந்தேன். அனைவரும் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். படிக்க இயலாமல் போயிருந்தால் அவசியம் படிக்கவும். இணைப்பு கீழே👇🏽 (1/n)
இந்த இழையில் நோய்த்தொற்றுகளின் வகைப்பாடு மற்றும் பாக்டீரீயா எதிர்ப்பிகளின் (Antibiotic) கண்டுபிடிப்பை பற்றி தெரிந்து கொள்வோம். முதலாவது வகைப்பாடு நோயுண்டாக்கும் கிருமிகளின் மூலத்தை (Source) அடிப்படையாக கொண்டது. (2/n)
1. Exogenous (exo-வெளி) Infections - இந்த வகையான நோய்த்தொற்றிக்கு காரணமான நுண்ணுயிரிகள் (வைரஸ்கள், பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் மற்றும் ஒட்டுனிகள்) தண்ணீர், காற்று, உணவு, பகிர்ந்து உடுத்தும் உடைகள் மூலமாக தொற்றும்.எ.கா, சளி, காசநோய், மூளைக்காய்ச்சல், மலேரியா (3/n)
2. Endogenous (Endo-உள்) Infections: நம் உடலிலே நிறைந்திருக்கும் பாக்டீரீயாக்கள் மற்றும் பூஞ்சைகளால் உண்டாகும் தொற்று எ.கா. தொண்டை வலி, கொப்புளம், குடல் அழற்சி (4/n)
Opportunistic Infections: (தருணத் தொற்று) மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்* போது ஏற்படும் தொற்று. It can be exogenous or endogenous. எ.கா HIV-AIDS பாதித்தவர்களுக்கு ஏற்படும் காசநோய் தொற்று. (5/n)
*நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டிற்க்கு நிறைய காரணங்கள் உண்டு
2வது வகைப்பாடு நோய்த்தொற்றிற்க்கு காரணமான நுண்ணுயிரிகளின் அடிப்படையில் 1. Bacterial Infections 2. Viral Infections 3. Fungal Infections 4. Parasitic Infections
இவைகளில் பாக்டீரீயாவை முதன்மையாக வைத்தே இனிவரும் தகவல்கள் இருக்கும் (6/n)
மேலே குறிப்பிடப்பட்டுள்ள தொற்றுகளின் அறிகுறிகள் (Signs and Symptoms) சில சமயங்களில் ஒன்று போல தோன்றினாலும், ஒவ்வொரு தொற்றிருக்கும் வேறுபாடுகள் நிச்சயம் உண்டு. ஏனென்றால் நுண்ணுயுரிகள் உருவத்தாலும், உடலியிலாலும் மாறுபட்டவை. (7/n)
இந்த வகைப்டுத்துதலை எதற்க்காக நாம் அறிந்து கொள்ள வேண்டுமென்றால், தொற்றுக்கு காரணமான நுண்ணுயிரி, அந்த நுண்ணுயிரி எங்கிருந்து வந்தது என்று தெரிந்தால் மட்டுமே முறையான மருந்துகளை கொண்டு சிகிச்சை அளிக்க முடியும். (8/n)
4.5+1.5 ஆண்டுகள் இளநிலை மருத்துவம் அதன் பின்னர் முதுநிலை அதைத்தொடர்ந்து பயிற்ச்சியில் இருக்கும் மருத்துவர்களுக்கு தெரியும் நோய்த்தொற்றுக்களை எப்படி அனுக வேண்டும் என்று.
முகநூலில், வாட்சாப்பில் தமிழனா இருந்தா ஷேர் பன்னு என்று வரும் மருத்துவ குறிப்புகளை படித்து விட்டு....(9/n)
மருத்துவர்களின் உரிய ஆலோசணை பெறாமல்/ ஆலோசணையை மீறி தான்தோன்றிதனமாக மருந்து கடைகளுக்கு சென்று மருந்துகளை வாங்கி உட்கொள்ளும் பொதுமக்களுக்கு தெரியுமா எத்தனை வகையான நுண்ணுயிர் எதிர்ப்பிகள் உள்ளது என்று? (10/n)
நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (Antimicrobials/ Antimicrobial drugs) நான்கு வகைப்படும்,
வைரஸ் எதிர்ப்பிகள் (Antivirals)
பாக்டீரியா எதிர்ப்பிகள் (Antibiotics / Antibacterials)
பூஞ்சை எதிர்ப்பிகள் ( Anti-fungal drugs)
ஒட்டுனி எதிர்ப்பிகள் (Anti parasitic drugs) (11/n)
நோய்த்தொற்று பாதித்த ஒருவர் மருத்துவரை அனுகும்போது, நோயால் பாதிக்கப்பட்டவரின் அறிகுறிகள், மற்றும் பிரச்சனைகளை கேட்டு அறிந்த பின்னரே அந்த மருத்துவர் உரிய மருந்துகளை எழுதிக்கொடுப்பார். (12/n)
“நாம் என்ன மருந்தை உட்கொள்ள வேண்டும் என்று நம்மை தாக்கும் நுண்ணுயுரிகளே தீர்மானிக்கிறது”
ஆம், இது ஒரு நீண்ட நெடிய போர். காலம் காலமாக மனித குலத்தை கொத்து கொத்தாய் அழித்த கொண்டிருக்கிற கண்களுக்கு புலப்படாத எதிரிகளிடத்திலிருந்து (பாக்டீரியாக்கள்*) மனித குலத்தை காக்க அறிவியலாளர்கள் வழிகளை ஆராய்ந்து கொண்டிருந்த வேளையிலே...(13/n)
1928 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தைச் சேர்ந்த மருத்துவரும், நுண்ணுயிரியல் ஆராய்ச்சியாளருமான அலெக்சான்டர் பிளெமிங் அவர்கள் தன்னுடைய ஆய்வகத்தில் முற்றிலும் புதியதான ஒன்றை கண்டறிந்தார். அவரின் ஆய்வகத்தில் வளர்த்து வந்த பாக்டீரியாக்களின் கூடவே ஒரு பூஞ்சை வளர்வதையும் (14/n)
அந்த பூஞ்சைய சுற்றிலும் பாக்டீரியாக்கள் வளராமல் இருப்பதையும் கண்டார். அந்த பூஞ்சையிலிருந்து வரும் சுரப்பு (secretion) தான் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்கிறது என்றும் கண்டறிந்தார் (15/n)
அந்த பூஞ்சையின் பெயர் பெனீசீலியம் நோடேட்டம் (Penicillium
notatum ) என்பதால் அந்த சுரப்பிற்க்கு பெனிசிலின் (Penicillin) என்று பெயிரிட்டார். Penicillin became the first antibiotic to be accidentally discovered. (16/n)
சரியாக பதினாறு ஆண்டு காலம் கழித்து 1942ஆம் ஆண்டு முதன் முறையாக பெனிசிலின் மருத்துவ பயன் பாட்டிற்க்கு வந்தது. பாக்டீரியாவினால் உன்டாகிய மூளைக்காய்ச்சளால் அவதியுற்ற ஒர் நோயாளிக்கு பிளெமிங் அவர்கள் பெனிசிலினை செலுத்தி வெற்றிகரமாக குணப்படுத்தினார். (17/n)
அதை தொடர்ந்தே, இன்னும் நிறைய பூஞ்சைகளும், பாக்டீரியாக்களும் இது போன்ற சுரப்புகளை தன்னிடத்தே வைத்திருக்கின்றன என்று காலாப்போக்கில் அறிவியலாளர்கள் கண்டுபிடித்தனர். Now we live in a world full of antibiotics of all sorts natural, semisynthetic, synthetic and modified) (18/n)
1945 ஆண்டு நோபல் பரிசு பெற்ற பின்னர் NYT பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் பிளெமிங் கூறியது ‘Antibiotic ஐ முறையில்லாமல் பயன்படுத்தினால் எதிர்காலத்தில் Antibiotic ஐ கையாளும் திறன் கொண்ட பாக்டீரியாக்கள் (Resistant Bacteria) உருவாகும் வாய்ப்புகள் மிக அதிகம் என்று’. (19/n)
அவர் கூறியது போலவே அடுத்த பத்தாண்டுகளில் (1945-55) பாக்டீரியாக்கள் Antibiotic க்குகளிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள வழி வகைகளை ஏற்படுத்தி கொண்டன.
இந்த இழையை எழுதிக்கொண்டிருக்கிற இந்த வேளையிலே நம் வசம் இருக்கும் (20/n)
எல்லா Antibiotic களையும் எதிர்க்கும் வல்லமை கொண்ட பாக்டீரியாக்கள் ( Multi Drug Resistant - MDR and Extremely Drug Resistant- XDR) நம் உடம்பிலும், வெளியிலும் இருக்கின்றது என்று சொன்னால் நம்பமுடிகிறதா?
“நாம் (பாக்டீரியாக்கள்) நம்மை தற்காத்து கொள்ள என்ன ஆயுதம் எடுக்கும் வேண்டும் என்பதை நம்மை தாக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளே (Antibiotics) தீர்மானிக்கின்றன”
Bacteria live to prove Darwin’s theory
மேலதிக தகவல்கள் அடுத்த இழையில். இணைப்பில் இருங்கள். 😊
Antibiotic Resistance- Thread - Part-1
கொரோனா வைரஸின் முதலாமாண்டு பிறந்தநாளை நாம் சிறப்பாய் கொண்டாடி முடித்திருக்கின்ற இந்த வேளையிலே, இதை விட மிகச்சவாலான நோய் தொற்றுக்களை வருங்காலங்களில் நாம் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகிக்கொண்டிருக்கிறது என்பதை கூறவே இந்த பதிவு (1/n)
எளிய நடையில் எழுத முயற்ச்சித்திருக்கிறேன். சில இடங்களில் தவிர்க்க இயலாத காரணத்தால் ஆங்கிலமும்/தமிழும் கலந்து எழுதியிருக்கிறேன். ஆர்வமுள்ளவர்கள் படிக்கலாம். படித்தவர்கள் தங்களால் இயன்றவரை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைக்கலாம். (2/n)
நுண்ணுயிரிகளின் உலகம் வியப்பானது, விசித்திரமானது, ஆபத்து மிக நிறைந்தது. நுண்ணுயிரிகளை வகைப்படுத்தி ஆராய்வது இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதால் எளிய முறையில் வகைப்படுத்தயிருக்கிறேன். (3/n)
2017-11-04 அன்று என் சொந்த பணி நிமித்தமாக சீனாவிலிருந்து தமிழகத்திற்க்கு பயணித்தேன். மலின்டடோ ஏர்லைன்ஸ் விமானம் பயண வழி குவாங்சோ-கோலாலம்பூர்-திருச்சி. Check in முடித்து, காத்திருந்தேன். (1/n)
அப்போது தமிழகத்திலிருந்து சீனாவிற்க்கு Business Expo காண வந்த மூன்று நபர்கள் அறிமுகமானார்கள். அவர்களுக்கு அதுதான் முதல் சீன பயணம். சீனாவில் அவர்கள் செலவிட்ட நாட்களை பற்றி நிறைய பேசினார்கள். திருப்த்திகரமான பயணம் என்று சொன்னார்கள்.(2/n)
அதில் ஒருவர், மதிமுகவின் மாநில இளைஞர் அணி செயலாளர் திரு. வே. ஈஸ்வரன் அவர்கள். கோயம்புத்தூரை சேர்ந்தவர். விமானம் கிளம்பி அதன் Cruising Altitude ஐ அடைந்ததும், எனக்கு அடுத்த இருக்கையிலே வந்து அமர்ந்தார். நிறைய விஷயங்கள் பேசினோம். அவற்றில் ஒன்று...(3/n)
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த மாணவர்கள் எங்கள் பல்கலையில் 2014 ஆம் ஆண்டு முதல் மருத்துவம் பயில்கிறார்கள். அதில் 70% சதவிகிதம் பேர் குஜராத்திகள். சேர்ந்த புதிதில் எல்லா மாணவர்களையும் போல பயபக்தியுடன் (1/n)
நடந்துகொண்டனர். நாட்கள் செல்ல செல்ல அவர்களின் நடவடிக்கைகள் வேறு மாதிரி செல்ல ஆரம்பித்தது. பொதுவா எல்லா மாணவர்களிடமும் தெரிவதுதான் ஆனாலும் இவர்களின் ஆணவ போக்கை காண முடிந்தது. என்னை பொறுத்தளவில் வகுப்பு அறையில் யார் தொந்தரவு செய்தாலும் வெளியே அனுப்பிவிடுவேன்(2/n)
எந்த நாட்டவராக இருந்தாலும் சரி. எந்த பாலினத்தவராக இருந்தாலும் சரி. ஆதலால் பொதுவாக என்னுடைய வகுப்பில் எல்லோரும் சற்று கவனமாகவே இருப்பார்கள். ஆனால் சில குறிப்பிட்ட வகுப்புகளில் இந்த மாணவர்களின் சேட்டைகள் அளவுக்கதிகமாக இருந்த வந்தது. (3/n)