உலக அளவில் பூனைகளுக்கான குத்துச்சண்டைப் போட்டி நடைபெற்றது. அனைத்து நாட்டுப் பூனைகளையும் வீழ்த்தி, அமெரிக்கா பூனை முன்னனியில் இருந்தது.
இந்தியா,பாகிஸ்தான்,ஜெர்மனி,ஆஸ்திரேலியா இப்படி அனைத்து நாட்டுப் பூனைகளும், அமெரிக்க பூனையிடம் அடிவாங்கி சுருண்டு கிடந்தன.
அமெரிக்கா பூனையல்லவா? பாலும்,இறைச்சியும் அளவிற்கு அதிகமாக உண்டு கொழுத்து கொழு,கொழுவென இருந்தது.
கடைசியாக இறுதி சுற்று..
இந்தச் சுற்றில் அமெரிக்க பூனையிடம், சோமாலியா நாட்டுப் பூனை மோதப்போவதாக அறிவித்தார்கள். பார்வையாளர்களுக்கு வியப்பு.
சோமாலியா நாட்டுப்பூனை நோஞ்சானாக மெலிந்து,
நடக்கவே தெம்பற்று தட்டுத்தடுமாறி, முக்கி முணங்கி மேடையேறியது. இதுவா அமெரிக்க பூனையிடம் மோதப்போகிறது? பார்வையாளர்கள் கேலியும் கிண்டலுமாய் சிரித்தார்கள். போட்டி துவங்கியது. அமெரிக்கா பூனை அலட்சியமாக, சோமாலியா பூனையின் அருகில் நெருங்கியது.
சோமாலியா பூனை முன்னங்காலை சிரமப்பட்டு தூக்கிப் பறந்து ஒரேஅடி. அமெரிக்க பூனைக்கு மண்டைக்குள் ஒரு பல்பு, பளீச் என்று எரிந்து படாரென வெடித்து சிதறியது. கண்கள் இருண்டு மயங்கி சரிந்தது. பார்வையாளர்கள் அதிர்ச்சியில்
வாயடைத்து நின்றார்கள்.
சற்று நேரம் சென்றபின், மெதுவாக கண்விழித்து பார்த்த அமெரிக்கா பூனைக்கு ஒன்றுமே புரியவில்லை. சோமாலியா பூனையின் கழுத்தில் தங்கப்பதக்கம் தொங்கியது. போட்டியில்
வென்றதாக சோமாலியா பூனையை, எல்லோரும் கைகுலுக்கி பாராட்டிக் கொண்டிருந்தார்கள்.
மெதுவாக எழுந்து சோமாலியா பூனையின் அருகில் சென்று,
"இத்தனை நாட்டின் பூனைகளை வீழ்த்திய பலசாலியான என்னை, நோஞ்சான் பூனையான நீ வீழ்த்தியதுஎப்படி?" என்று கேட்டது அமெரிக்க பூனை. அமெரிக்கா பூனையின் காதில் மெதுவாக சோமாலியா பூனை சொன்னது.
"நான் பூனையே இல்லை. புலி...டா...!
என் நாட்டு பஞ்சத்தில் இப்படியாகி விட்டேன்".
--- இளைத்தாலும் புலி புலிதான்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
குருக்ஷேத்திரத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையிலான யுத்தத்தில், ஒன்பது நாள்கள் முடிந்துவிட்டன. "ஒன்பது நாட்கள் கடந்தும் பாண்டவர்களை வீழ்த்த முடியவில்லையே" என்று நினைத்த துரியோதனன், மகாரதராக இருந்த பீஷ்மரிடம், தான் கொண்டிருந்த நம்பிக்கையை இழந்துவிட்டான்.
"பீஷ்மர், பாண்டவர்களை ஒழிக்க வேண்டும் என்ற உறுதியுடன் போரிடவில்லை" என்று நினைத்தான். தன் எண்ணத்தை மிகக் கோபத்துடன் பீஷ்மரிடம் தெரிவித்தான். துரியோதனின் கடுமையைக் கண்ட பீஷ்மரும், அதேக் கடுமையுடன் மறுநாள் போரில் பாண்டவர்களை அடியோடு வீழ்த்துவதாக சபதம் செய்தார்.
ஆனால் துரியோதனனோ, "பாண்டவர்களை வீழ்த்துவேன் என்று சொல்லாதீர்கள். அவர்களை போரில் கொல்வேன் என்று சொல்லுங்கள்" என்றான். செஞ்சோற்றுக் கடனைத் தீர்க்க வேண்டுமே என்பதற்காக பீஷ்மரும், "அப்படியே ஆகட்டும்" என்று கூறிவிட்டார்.
கடவுள் ஒரு நாள் பூமிக்கு வந்தார். நம் "குடி"மக்களைப் பார்த்துவிட்டு, அப்படி என்ன தான் இருக்கு இந்த டாஸ்மாக் கடைக்குள் என்று பார்த்துவர உள்ளே சென்றார். சரி குடித்து தான் பார்த்து விடுவோம் என்றெண்ணி ஆர்டரும் செய்தார்.
குடிக்க ஆரம்பித்தார். ஒரு வித்தியாசமும் தெரியவில்லை. தொடர்ந்தார் இன்னும் குடிக்க. அப்பொழுதும் ஒன்றும் ஆகவில்லை. மீண்டும் முதலில் இருந்து, குடிக்க ஆரம்பித்தார். கடைக்காரர் ஆச்சரியம் தாளாமல் கேட்டார்.
"யாருய்யா நீ? இவ்வளவு குடிச்சும் உனக்கு போதை எறல, மறுபடியும் கேட்குற?"
அதற்கு கடவுள் பதில் சொன்னார், "நான் தானப்பா உங்களை ஆளும் கடவுள். எனக்கு இந்த போதை ஒன்றும் செய்யாது" என்றார்.
அதைக்கேட்ட கடைக்காரர், "தோ டா ..! தொரைக்கு இப்பதான் ஏற ஆரம்பிச்சி இருக்கு. நடக்கட்டும்..நடக்கட்டும்.." என்றார்.
ஒரு முறை ஸ்ரீகிருஷ்ணர், அவரது சகோதரர் பலராமர் மற்றும் அர்ஜுனன் ஆகிய மூவரும் ஒரு அடர்ந்த வனத்தின் வழியாகச் சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது நேரங்கடந்து நள்ளிறவு ஆகிவிட்டதால், மூவரும் ஒரிடத்தில் தங்கி உறங்கி விட்டு, விடிந்த பின் செல்லலாம் என்று முடிவெடுத்தனர்.
காட்டில் கொடிய மிருகங்கள் இருக்கும் காரணத்தினால், மூவரும் ஒரே நேரத்தில் உறங்கக்கூடாது என்றும், ஜாமத்திற்கு ஒருவர் உறங்காமல் மற்ற இருவருக்கும் காவல் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்தனர். அதன்படி முதலில் அர்ஜுனன் காவல் இருக்க ஸ்ரீகிருஷ்ணரும், பலராமரும் தூங்க ஆரம்பித்தனர்.
அப்போது திடீரென ஒரு புகை மண்டலம் தோன்றியது. அதிலிருந்து ஒரு பயங்கர உருவம் வெளிவந்தது. அகன்ற நாசியும்,கோரப் பற்களும்,பெரிய கண்களுமாக இருந்தது அவ்வுருவம். ஒரு மரத்தடியில் பலராமரும், ஸ்ரீகிருஷ்ணரும் தூங்குவதையும், அவர்களுக்கு அர்ஜுனன் காவல் இருப்பதையும் கண்டது அவ்வுருவம்.
விபூதியை பூசிக்கொள்வது வேறு இட்டுக்கொள்வது வேறு. விபூதி பவித்ரமானது. தேவர்கள் அனைவரும், விபூதியை அணிவதன் மூலமே மேன்மை பெறுகின்றனர். விபூதியை பூசுவதால் கிடைக்கும் மகிமையை பற்றி தெரிந்துக் கொள்ளவேண்டும்.
விபூதி என்றால் ஐஸ்வர்யம். அதனால் தான் விபூதியை, திரு நீறு என்கிறோம். விபூதியை பயன்படுத்துவதற்கு பல காரணங்கள் உண்டு. முக்கியமாக, விபூதி என்பது சக்தியை வழங்குவதற்கு ஏதுவான சாதனம். உடலின் சக்தி ஓட்டத்தை வழிநடத்தவும், கட்டுப்படுத்தவும் விபூதி பயன்படுகிறது.
நமது உடல் நிலையற்றது என நினைவூட்டுவதற்கு விபூதி சாம்பலை அணிகிறோம். இந்த உடல் என்பது கடைசியில் சாம்பல் தான். யோகிகள் எப்போதும் சுடுகாட்டிலிருந்து எடுக்கப்பட்ட சாம்பலைத் தான் பயன்படுத்துவார்கள்.
சில சிவன் கோயில்களில் சிவலிங்கத்திற்கு மேலாக ஒரு பாத்திரம் கட்டி, அடியில் துளையிட்டு, பாத்திரத்தில் இளநீர், தண்ணீர், நெய், பன்னீர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை நிரப்பிவிடுவார்கள். அது சொட்டு சொட்டாக சிவன்மீது விழும்.
சிவபெருமான் நெற்றிக்கண்ணுடன் கூடியவர் என்பதால் உஷ்ணமாக இருப்பார். இதைத் தணிப்பதற்காக ஜலதாரை எனப்படும் தாரா அபிஷேகம் செய்யப்படுகிறது. ஒரு செம்பின் கீழ் துளையிட்டு உள்ளே தண்ணீரை நிரப்பி விடுவர். அது சொட்டு சொட்டாக லிங்கத்தின் மீது விழும். இதுவே ஜலதாரை.
இந்த பூஜையால் குழந்தை இல்லாதவர்களுக்கு சந்தான விருத்தி ஏற்படும். எல்லா நலனும் உண்டாகும். நோய்கள் நீங்கும். சர்க்கரை கலந்த பாலை தாராபிஷேகம் செய்தால் கெட்ட சக்திகள், கெட்ட நண்பர்கள் விலகுவர். கெட்ட குணங்கள் மறையும். பகைவர்கள் ஒதுங்கிப் போவார்கள். பயம் நீங்கும்.