நமது இந்திய தண்டனை சட்டங்கள் காலத்துக்கு ஒவ்வாதவை. இப் பொழுதுள்ள குற்ற நடைமுறைகளால் எல்லா குற்றவாளிகளையும், குறிப் பாக பணபலமும், அரசியல் பின்புலமும் உடைய குற்றவாளிகளை தண்டிக்கவே முடியவில்லை என்பது நிதர்சனமான உண்மை.
இதைவிட கேவலம் சட்டம் ஒழுங்கையும் காக்க வேண்டிய அமைப்புகள் காவல்துறையும், நீதித்துறையுமே அதை காலில் போட்டு மிதிப்பது அன்றாட நிகழ்ச்சி.
மக்கள் நீதிமன்றங்களின் மேல் உள்ள நம்பிக்கையை இழந்த கேவலமான, பலவீனமான, வலுவிழந்த நமது இந்திய குற்றவியல் சட்டங்களை அதை வலுப்படுத்த வேண்டிய, ( நீர்த்துப் போக அல்ல) சட்டத் திருத்தம் செய்வது மிகவும் அவசியம்.
தப்புசெய்தவர்கள் அனைவரும் தவறாமல் தண்டனை பெறவேண்டும் என்ற நியதியை குறிக் கோளாகக் கொண்டு சட்டத் திருத்தம் செய்ய வேண்டும்.
எல்லா வழக்குகளுக்கும் ஒரு கால அளவு நிர்ணயம் தேவை.
குறிப்பாக கிரிமினல் குற்ற வழக்குகள் உச்ச நீதிமன்றத்திற்கு செல்ல அனு மதிக்ககூடாது.
எந்த குற்றவழக்குகளும் 3 முதல் 6 மாதங்களுக்குள் விசாரித்து தண்டனை வழங்க வேண்டும். எல்லா குற்ற வழக்குகளுக்கும் ஒருமுறை மட்டுமே மேல் முறையீடு செய்யலாம்.
சிவில் வழக்கின் இறுதி உயர்நீதி மன்றத்தோடு முடிக்கப் பட வேண்டும்.
கொலைக் குற்றங்களில் மரணதண்டனை விதிக்கப் பட்ட குற்றங்களுக்கும், அரசியல் சாசனத்தையே ஆட்டம் காண வைக்கும் வழக்குகள் மட்டுமே உச்ச நீதிமன்றத்தால் விசாரிக்கப் பட வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் சட்டச் சிக்கல் மிகுந்ததும், முன்னுதாரனமாக பின் நாட்களில் சுட்டிக் காட்டத் தகுந்த வழக்குகளையும், அந்த வழக்கை விசாரித்த, கையாண்ட நீதிபதிகளின் குறிப்புகளோடு அவை ஒரு உயர்மட்ட முன்னாள் நீதிபதிகள், சட்ட வல்லுனர்கள் அடங்கிய குழுவிற்கு அனுப்ப படவேண்டும்.
அந்த உயர்மட்ட குழுவால் பரிசீலனைக்கு அனுப்பட்ட வழக்குகளின் குறை நிறைகளை ஆராயந்து அவற்றை திருத்த பரிந்துரை செய்யப்பட வேண்டும்.
இந்தக் குழவின் பரிந்துரைகளை பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தி சட்டத்திருத்தத்தின் மூலம் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை முழுமையாக களையப் படவேண்டும்
இந்திய குற்ற நடைமுறை சட்டங்கள் நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் மந்திரிகள், முதல்வர்கள், பிரதமர், ஆளுநர், குடியரசுத் தலைவர் உட்பட எல்லோரையுயும் தண்டிக்கும் அளவு பலம் பொருந்தியதாக இருக்க வேண்டும்.
அறுதப் பழசான சாட்சியங்கள், ஆவனங்கள், நீதி மன்ற விசானைகளின் அடிப்படையில் மட்டும் தீர்ப்பு வழங்குவதில் பல தவறுகள் உள்ளன.
எனவே நீதிமன்றங்கள் உளவுத் துறையால் அனுப்பப் படும் அறிக்கையும் ஒப்பிட்டு சரிபார்த்து தீர்ப்பு வழங்கும் முன் உண்மையை கண்டறிய வேண்டும்.
நீதிமன்றத்திற்கென்றே தனியாக ஒரு கடுமையான கட்டுப் பாடுகளை உடைய ஒரு தனி உளவுத் துறை உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் உருவாக்கப்பட வேண்டியதும் அவசியம்.
நமது அரசர்கள் காலத்திலேயே குற்ற வழக்குகளை விசாரனைகளை முடிவு செய்ய உளவுத் துறை பயன் படுத்தப் பட்டது.
குற்ற வழக்குகளில் அரசு வழக்குறைஞர்தான் குற்றவாளிகளின் குற்றத்தை நிரூபிக்க வேண்டும் என்பது விலைபோன அரசு வழக்கறிஞர்களால் வழக்கே தடம் புரண்டு பல கொலைக் குற்றவாளிகள் வெளியே இன்னும் தைரியமாக உலா வருவது கண்கூடு.
மேலும் கண்ணால் பார்த்த சாட்சிகளை பல பணபலமிக்கவர்கள், அரசியல் பின்புலம் உடையவர்கள் குற்றவாளிகள் மிரட்டி அவர்களது குடும்பத்தையே கொண்று விடுவதாக மிரட்டியும், பணத்தால் அடித்தும் பிறழ் சாட்சிகளாக மாறுவது நீதிமன்றங்களில் தினசரி வாடிக்கை.
இந்த சாம, தான, பேத, தண்டனைகள் சாட்சிகளுக்கு மட்டுமல்ல, காவல்துறை, அரசு வழக்கறிஞர், விசாரனை நீதிபதி வரை பாய்ந்து ஏராளமான வழக்குகளை கேலிக்குள்ளாக்கி, கொடிய கொலைக் குற்றவாளிகள் கூட வெகு சுலபமாக தப்பித்த வழக்குகள் ஏராளம்.
தவறான தீர்ப்பை வழங்கும் நீதிபதிகளும் தண்டனைக்குறியவர்களே. சட்டம் அவர்களுக்கு அளித்த சட்டப் பாதுகாப்பை அத்து மீறி பயன் படுத்தி தவறான தீர்ப்பை வழங்கும் நீதிபதிகளை பதவியிலிருந்து நீக்கி அவர்களையும் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப் படவேண்டும்.
நீதிபதிகளை நீதிபதிகளாகவே IAS, IPS போன்றே சட்டம் படித்த மாணவர்களை UPSC தேர்வு மூலம் தேர்வு செய்து, IJS (INDIAN JUDICIAL SERVICES) எல்லாத் துறைகளிலும் நல்ல பயிற்சி கொடுத்து படிப்படியாக அவர்களை முழு நேர நீதிபதிகளாக நியமிக்கப் பட வேண்டும்.
மூத்த வழக்கறிஞர்களில் திறமையானவர்களை குறிப்பாக அவர்களின் நேர்மை, தகுதி, திறமை, இவற்றின் அடிப் படையில் மட்டும் அவர்களையும் Conferred IJS, நீதிபதிகளாக நியமனம் செய்யலாம்.
இதுதான் நடக்கிறது மருத்துவமனைகளில்...! - இரு மருத்துவர்களின் ஒப்புதல் வாக்குமூலம்
தனியாக எந்தவொரு முன்னுரையும் இல்லாமல் நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன்... ஏனெனில், இதற்கு முன்னுரை எழுதும் வகையில்,
1/22
இந்த கட்டுரையை படிக்கும் அனைவருக்கும் ஒவ்வொரு தனி அனுபவம் இருக்கும்.
ஆம். *மருத்துவத் துறையில் நடக்கும் தில்லுமுல்லுகள்* பற்றி அங்கொன்றும், இங்கொன்றுமாக விவாதிக்கப்பட்ட விஷயங்கள் இப்போது பொதுவெளிக்கு வந்திருக்கிறது. அதுவும் _இரண்டு மருத்துவர்கள்_ மூலம்.
2/22
மருத்துவர்கள் *அருண் காத்ரே* மற்றும் *அபய் சுக்லே*, “ _*Dissenting Diagonisis*_" என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதி இருக்கிறார்கள்.
மருத்துவத்துறையின் இருட்டுப்பக்கங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.
3 /22
சமஸ்கிருதம் கணிப்பொறிக்கு ஏற்ற மொழி என்பது எந்த அளவிற்கு உண்மை? இந்தப் புரளி எப்படித் தொடங்கியது?
1985இல் வெளியான AI Magazine எனும் செயற்கை நுண்ணறிவு குறித்த சஞ்சிகையில், அமெரிக்காவில் உள்ள ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் ஃபார் அட்வான்ஸ்டு கம்ப்யூட்டர் சயின்ஸ்
1/15
Research Institute for Advanced Computer Science எனும் நிறுவனத்தைச் சேர்ந்த ரிக் ப்ரிக்ஸ், 'சமஸ்கிருதம் மற்றும் செயற்கை நுண்ணறிவில் அறிவை வெளிப்படுத்துதல்' (Knowledge Representation in Sanskrit and Artificial Intelligence) எனும் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார்.
2 /15
மனிதர்கள் பயன்படுத்தும் வாக்கியக் கட்டமைப்புகளை உள்ளீடுகளாக கணினியில் செலுத்தினால் அதை அவ்வாறாகவே புரிந்துகொள்ளும் செயற்கை நுண்ணறிவுக்கு ஏற்ற மொழி குறித்து அந்தக் கட்டுரையில் அவர் விவரித்துள்ளார்.
3 /15