#இடஒதுக்கீடு என்பது பல்வேறு நிலைகளில் உள்ள பல்வேறு சமூகங்களுக்காக பல்வேறு பிரிவுகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். அது தான் உண்மையான சமூகநீதி ஆகும். (1/5)
ஆந்திரத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு ஏ, பி, சி, டி, இ என 5 பிரிவுகள் மற்றும் இஸ்லாமியர் என 6 தொகுப்புகளாக பிரித்து வழங்கப்படுகிறது. அதனால் ஒரே நிலையில் உள்ள சமுதாயங்களுக்குள் போட்டி ஏற்படுத்தப்பட்டு, முழுமையா #சமூகநீதி உறுதி செய்யப்படுகிறது!(2/5)
கர்நாடகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு பிரிவு 1 & 4%, பிரிவு 2ஏ &15%, பிரிவு 2 பி & 4%, பிரிவு 3ஏ &4%, பிரிவு 3பி & 5% என 5 பிரிவுகளாக பிரித்து வழங்கப்படுகிறது. அதனால் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள அனைத்து சமூகங்களும் பயனடைகின்றன.(3/5)
கேரளத்தில் ஈழவர்களுக்கு 14%, இஸ்லாமியர்களுக்கு 12%, லத்தீன் கிறித்தவர்களுக்கு 4%, நாடார்களுக்கு 2%, கிறித்தவ மதத்திற்கு மாறிய தலித்துகளுக்கு 1%, தீரவர்களுக்கு 1%, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3%, விஸ்வகர்மாக்களுக்கு 3% என BC ஒதுக்கீடு 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.(4/5)
ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் BC இட ஒதுக்கீடு 2 பிரிவுகளாக மட்டும் பிரிக்கப்பட்டுள்ளது. அதுவும் கூட எனது தலைமையில் #வன்னியர்சங்கம் தீவிரமாக போராட்டம் நடத்திய பிறகு தான் MBC என்ற இரண் டாவது பிரிவு ஏற்படுத்தப்பட்டது! (சுக்கா, மிளகா, சமூகநீதி? நூலில் விரிவாக)(5/5)
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியாரின் சிலை மீது சில நச்சுக்கிருமிகள் காவி சாயத்தை ஊற்றி அவமதிப்பு செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. இதற்கு காரணமான விஷமிகள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!(1/4)
தந்தை பெரியாரின் சிலைகள் மட்டும் தொடர்ந்து அவமதிக்கப்படுகிறது என்றால், அவரது கொள்கைகள் தமிழகத்தில் கடந்த சில காலமாக ஊடுருவியுள்ள நச்சுக்கிருமிகள், விஷப்பாம்புகளை அச்சமடையச் செய்துள்ளன; அதன்விளைவு தான் இது என்பதை புரிந்து கொள்ள முடியும்!(2/4)
கொள்கை அடிப்படையில் எதிர்க்க துணிவில்லாத கொரோனாவை விட மோசமான இந்த நச்சுக்கிருமிகள் மிகவும் ஆபத்தானவர்கள்; சமுதாயத்தில் நஞ்சை பரப்புபவர்கள். அவர்களிடமிருந்து நமது பிள்ளைகளைக் காப்பதும், விழிப்புணர்வூட்டுவதும் தான் நமது முதல் கடமையாக இருக்க வேண்டும்!(3/4)
இந்தியாவில் கொரோனா நோயை தடுப்பதற்காக இந்திய தொற்று நோய் சட்டம் 1897 என்ற சட்டத்தின்படி நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக மத்திய, மாநில அரசுகள் கூறுகின்றன. அந்த சட்டம் குறித்து பார்ப்போம். (1/6) #Coronavirus#LockDownTNnow
1. இந்திய தொற்று நோய் சட்டம் 1987-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பம்பாயில் பரவிய பிளேக் நோயை கட்டுப்படுத்துவதற்காக இயற்றப்பட்ட சட்டமாகும். அப்போது பிளேக் நோயால் ஆயிரக்கானோர் இறந்தனர். லட்சக்கணக்கானோர் மும்பையிலிருந்து வெளியேறினர். (2/6) #CoronaVirus#LockDownTNnow
2. பின்னர் தேசிய அளவில் தொற்றுநோய்களை கட்டுப்படுத்த இந்த சட்டம் விரிவுபடுத்தப்பட்டது. மலேரியா, காலரா, டெங்கு, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்ட போது அவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டது! (3/6) #CoronaVirus#LockDownTNnow
1. முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டிடத்தில் இயங்குகிறதாமே.... அப்படியானால், அந்த பட்டா வெளியிட்டது, அரசியலில் இருந்து விலகத் தயாரா? என்று சவால் விட்டதெல்லாம் வழக்கம் போல் வெற்றுச் சவடால் தானா?
2.அரசியல் உலகில் எவ்வளவோ பல்டிகள் அடிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அவை அனைத்திலும் ஆகச்சிறந்த பல்டி... முரசொலி நிலம் மீதான பழியைத் துடைப்போம் என்று வீர வசனம் பேசி விட்டு, இப்போது நாங்களே வாடகைக்கு தான் இருக்கிறோம் என்று சரண் அடைந்தது தான்?
3. முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டிடத்தில் தான் இயங்குகிறது என்பதாவது உண்மையா? மூலப் பத்திரத்தைத் தான் வெளியிடவில்லை. குறைந்தபட்சம் வாடகை ஒப்பந்தத்தையாவது முரசொலி நிர்வாகம் வெளியிடுமா? கூடவே சவால் விட்டவர் அரசியலில் இருந்து விலகுவாரா?
1. முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்க 1985-ஆம் ஆண்டு வாங்கப்பட்ட பட்டாவை ஆதாரமாகக் காட்டியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். இதற்கு காட்ட வேண்டிய ஆதாரம் நிலப் பதிவு ஆவணமும், மூல ஆவணங்களும். அவை எங்கே? நில உரிமையாளரிடமே ஆவணங்கள் இல்லையா?
2.முரசொலி அலுவலகம் கட்டப்பட்டது எப்போது? அதற்கான இடம் வாங்கப்பட்டது எப்போது? அவற்றை விடுத்து 1985-ஆம் ஆண்டின் பட்டாவை ஸ்டாலின் காட்டுகிறார் என்றால், இடையில் உள்ள சுமார் 20 ஆண்டுகள் மறைக்கப்படுவது ஏன்? அதன் மர்மம் என்ன?
3. முரசொலி அலுவலகம் உள்ள இடத்தில் அதற்கு முன் அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி இருந்தது உண்மை விளம்பி ஸ்டாலினுக்கு தெரியுமா? முரசொலி இடம் வழிவழியாக தனியாருக்கு சொந்தமான மனை என்கிறார் ஸ்டாலின். அப்படியானால் அங்கு அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி எப்படி வந்தது?