ஒரு ஊரில் அநாதை ஏழைப்பெண் இருந்தாள். அவளிடமிருந்த மாடுகளிடமிருந்து பாலைக்கறந்து, அக்கம் பக்கத்து கிராமங்களில் உள்ள பல வீடுகளுக்கு சென்று தினசரி கொடுப்பதை அவள் வழக்கமாக கொண்டிருந்தாள். அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து வாழ்ந்து வந்தாள்.
ஊரின் எல்லையில் இருக்கும் ஒரு சன்னியாசியின் ஆஸ்ரமத்துக்கும் இவள்தான் தினசரி பால் கொடுப்பது வழக்கம்.ஒரு நாள் வழக்கம் போல, சன்னியாசி பூஜையில் உட்கார்ந்தார். ஆனால் நைவேத்தியத்துக்கு தேவையான பால் இன்னும் வரவில்லை.
அடிக்கடி இந்த பால் கொண்டு வரும் பெண் தாமதமாக வருகிறாள் என்பதை புரிந்துகொண்ட அவர், அந்த பெண்ணிடம், “ஏன்மா!ஒழுங்கான நேரத்துக்கு பால் கொண்டுவர முடியாதா, உன்னால எனக்கு எல்லாமே தாமதமாகுது” என்று கடிந்து கொண்டார்.“மன்னிக்கணும் சாமி. நான் என்ன பண்ணுவேன்?
நான் வீட்டைவிட்டு சீக்கிரமா தான் கிளம்புறேன். ஆனால் இங்கே வர்றதுக்கு கரையில படகுக்காக காத்திருக்க வேண்டியிருக்கு.” என்றாள்.
"என்னது ஆத்தை கடக்குறதுக்கு படகுக்கு காத்திருக்கியா? அவனவன் பிறவிப் பெருங்கடலையே “கிருஷ்ணா கிருஷ்ணா"ன்னு சொல்லிகிட்டே தாண்டிடுறான்.
நீ என்னடான்னா ஆத்தை கடக்குறதை போய் ஒரு பெரிய விஷயமா சொல்லிகிட்டிருக்கியே. என்னமோ போ. இனிமே சீக்கிரம் வரணும் இல்லேன்னா எனக்கு பால் வேண்டாம்” என்று கறாராக கூறிவிட்டு உள்ளே சென்றுவட்டார்..அவர் விளையாட்டாக சொன்னதை, அந்த பெண் மிகவும் தீவிரமாக பயபக்தியுடன் கேட்டுக்கொண்டாள்.
மறுநாளிலிருந்து சரியாக குறித்த நேரத்துக்கு பால் கொண்டு வர ஆரம்பித்தாள்.சந்நியாசிக்கோ திடீர் சந்தேகம் வந்தது."என்னமா இது அதிசயமா இருக்கு? இப்போதெல்லாம் சரியான நேரத்துக்கு வந்துடுறியே?”என்றார்.
"எல்லாம் நீங்க சொல்லிக் கொடுத்த மந்திரம் தான் ஐயா. அது மூலமா தான், நான் ஆத்தை சுலபமா தாண்டிடுறேன். படகுக்காக இப்போல்லாம் காத்திருக்கிறதில்லை” என்றாள் அந்த பெண்.“என்ன நான் சொல்லிக் கொடுத்த மந்திரமா?அதை வெச்சு ஆத்தை தாண்டிடுறியா? நம்பமுடியலியே…. ” என்ற சந்நியாசி,அவள் ஆற்றை
தாண்டுவதை தான் நேரில் பார்க்க வேண்டும் என்றார். ஆற்றின் கரைக்கு சென்றவுடன், “எங்கே தாண்டு பார்க்கலாம்” என்றார் அந்த பெண்ணிடம். பால்காரப் பெண், கை இரண்டும் கூப்பியபடி “கிருஷ்ணா கிருஷ்ணா” என்று கூறியபடியே தண்ணீரில் நடக்க ஆரம்பித்தாள்.
நடந்ததை பார்த்த சன்னியாசிக்கு ஒரு பக்கம் அதிர்ச்சி மறுபக்கம் தயக்கம். “ஆறு எவ்வளவு ஆழம்னு தெரியலையே. தவிர கால் உள்ளே போய்ட்டா என்ன செய்வது...ஆடை நனைந்துவிடுமே... என்று பலவாறாக யோசித்தபடியே, ஒரு சில வினாடிகள் தயக்கத்துக்கு பிறகு,
"கிருஷ்ணா கிருஷ்ணா’ என்று கூறியபடி தண்ணீரில் காலை வைக்க முயற்சித்தார். ஆனால் கால் உள்ளே மூழ்கியது. சன்னியாசி திடுக்கிட்டார். "அம்மா உன்னாலே முடியுது, என்னால ஏன் முடியல" என்று அந்த பெண்ணிடம் கேட்டார். அந்தப்பெண் பணிவுடன்,
“ஐயா! உங்க உதடு "கிருஷ்ணா கிருஷ்ணா"ன்னு சொன்னாலும், உங்க கை ரெண்டும் உங்க உடுப்பு நனையக் கூடாதுன்னு தூக்கி பிடிச்சிருக்கே. தவிர ஆத்தோட ஆழத்தை பரீட்சித்து பார்க்கும் உங்க முயற்சி, அந்த ஆண்டவனையே ஆழம் பார்க்கிறது போலல்லவா இருக்கு!” என்றாள். சந்நியாசி வெட்கி தலைகுனிந்தார்.
கடவுள் மேல் நமது நம்பிக்கை வெறும் உதட்டளவில் இல்லாமல், உள்ளத்தில் இருந்து வந்ததாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவான் அந்த மாயக் கண்ணன்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அதிர்ந்து நின்றார் யுதிஷ்டிரர். மகாரௌரவம், கும்பிபாகம், காலசூத்திரம், அசிபத்ரவனம், அந்தகூபம்,கிருமி போஜனம் முதலான நரகக் காட்சிகளைக் கண்டு உறைந்து போனார் அவர்.
"அவலக் குரல்கள்,அதிபயங்கர தண்டனைகள்,சித்ரவதைகள் என்று நரகத்தின் கொடுமையைக் காணும் துர்பாக்கியம் எனக்கு வாய்த்தது எப்படி?
அதுவும் சொர்க்கம் செல்லும் வழியிலா இந்த அனுபவம் நேர வேண்டும்", மனம் வேதனையில் வாட, நரகத்தின் கொடுமையைக் காணமுடியாமல் கண்களை மூடிக்கொண்டார் யுதிஷ்டிரர்.
அப்போது "தருமபுத்திரா!" என்று எவரோ தன்னை அழைக்கும் குரல் கேட்டுக் கண்விழித்தார். எதிரில் எமதருமன்!
"தருமா! நீ செய்த பாவத்தின் காரணமாகவே நரகக் காட்சிகளை காண நேரிட்டது." எமதருமன் கூறியது கேட்டு ஆடிப்போனார் தர்மர். "கிருஷ்ணரின் வழியி்ல் தர்மத்தை சிரமேற்கொண்டு வாழ்ந்த நானா பாவம் செய்தேன்?” என்று கேட்டார். "ஆமாம்.உனது ஒரு வார்த்தையால் விளைந்த பாவம்" என்ற எமதருமர் தொடர்ந்தார்.
ஒரு சமயம் அர்ஜுனனும்,கிருஷ்ணரும் பூங்கா ஒன்றில் உலவிக் கொண்டிருந்தார்கள். அப்போது வானத்தில் ஒரு பறவை பறந்துக் கொண்டிருந்தது. கிருஷ்ணர் அதைப் பார்த்தார். அதை அர்ஜுனனுக்கும் காட்டினார். "அர்ஜுனா,அது புறா தானே?" என்று கேட்டார் கிருஷ்ணர்.
ஆமாம் கிருஷ்ணா,அது புறா தான்"என்றான் அர்ஜுனன். சில விநாடிகளுக்குப் பிறகு, "பார்த்தா,எனக்கென்னவோ அந்தப் பறவை பருந்தைப் போல் தெரிகிறது" என்றார் கிருஷ்ணர். அடுத்த விநாடியே, "ஆமாம்...ஆமாம்...அது பருந்து தான்" என்று சொன்னான் அர்ஜுனன்.
மேலும் சில விநாடிகள் கழித்து, "அந்தப் பறவையை உற்றுப் பார்த்தால்,அது கிளியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது" என்று
கிருஷ்ணர் சொல்ல, கொஞ்சமும் தாமதிக்காமல், "தாங்கள் சொல்வது சரிதான், அது கிளி தான்" என பதிலளித்தான் அர்ஜுனன்.
கையில் செம்பு காப்பு அணிவதால் உடலில் ஏற்படும் அற்புத பலன்கள்:
செம்பு காப்பு அணிவது என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக நமது நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கமாகும். செம்பு காப்பு அணிவது நமது சருமத்திற்கும், இரத்த ஓட்டத்திற்கும் மிகவும் அவசியமானது என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.
காப்பர்
தாமிரம் என்று அழைக்கப்படும் செம்பானது, உடலுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். நட்ஸ், மீன் போன்ற உணவுகளில் தாமிரம் இயற்கையாகவே உள்ளது. அதிகளவு ஜிங்க் மற்றும் வைட்டமின் சி எடுத்துக்கொள்வது உங்கள் உடலில் தாமிர குறைபாட்டை ஏற்படுத்தும்.
அதிகளவு மது அருந்துவதும் தாமிர குறைபாட்டை ஏற்படுத்தும். செம்பு காப்பு அணிவதால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
ஆர்திரிடிஸ் :
ஆய்வுகளின் படி செம்பு காப்பு அணிவது உங்கள் சருமம், தாமிரத்தை உறிஞ்சும் அளவை அதிகரிக்கிறது.
பாரதப் போர் நடந்து கொண்டிருந்த நேரம் அது. அர்ஜுனனுக்கும் கர்ணனுக்கும் இடையே நடந்த யுத்தத்தில், தேரிலிருந்தபடியே அர்ஜுனன் ஓர் அம்பை எடுத்து கர்ணனது தேர் மீது எய்தான்.
அந்த அம்பின் வீரியத்தால், கர்ணனது தேர் சற்று நிலைகுலைந்து, நான்கு அடி பின்னோக்கி நகர்ந்தது.
இதனால் கோபமுற்றான் கர்ணன். மறுகணம் அவன் ஆக்ரோஷத்துடன் அம்பு ஒன்றை எடுத்து அர்ஜுனனின் தேர்மீது எய்தான். அதனால் அர்ஜுனனின் தேர் ஓர் அடி பின்வாங்கியது.
அப்போது அர்ஜுனன் அருகிலிருந்த கண்ணனிடம் பெருமிதம் பொங்க,
"பார்த்தாயா கிருஷ்ணா! நான் எய்த ஒரே அம்பு, கர்ணனின் தேரை நான்கு அடி பின்னோக்கி நகர்த்தி விட்டது. ஆனால் பதிலுக்கு அவன் எய்த அம்பு, எனது தேரை ஒரே அடி மட்டுமே பின்னுக்கு நகர்த்தியது!’’ என்றான். அவனை இடைமறித்த கண்ணபிரான், ‘‘அர்ஜுனா! இதை நீ பெருமைக்குரிய செயலாகக் கருதாதே"
தமிழக கலாச்சாரங்களில் முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது. இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது. விருந்தினர்களை அதில் உட்காரவைத்து பரிமாறுவதுதான் நாகரீகம் சௌகரியம் என ஆகிவிட்டது.
முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவதுதான் கெளரவம்.ஆனால் இப்போது டைனிங் டேபிள். முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதன் நோக்கமென்ன?சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும்.
சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்து அமர்வதனால், ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது. காலை மடக்கி சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும்.
பாண்டவர் தூதனாக கிருஷ்ணர், அஸ்தினாபுரம் சென்றான். பரந்தாமன் வருகை அறிந்த ஆன்றோர் அனைவரும் அவனை எதிர்கொண்டனர். கண்ணன் இராசவீதி வழியாக வந்து கொண்டிருந்தான். வீதியின் இருமருங்கிலும் வானளாவிய மாளிகைகள் கண்ணனை வரவேற்பதற்காக அலங்கரிக்கப்பட்டு விளங்கின.
முதல் மாளிகையைக்கண்ட கண்ணன் "இது யாருடையது?" என்றான். "என்னுடையது" என்று பதில் வந்தது. பதில் சொன்னவன் துரியோதனன். இப்படியே ஒவ்வொரு மாளிகையையும் கண்ணன் கேட்டுக் கொண்டே வந்தான். அவனைத் தொடர்ந்து எதிர் கொண்டவர்கள், தங்கள் மாளிகையை என்னுடையது என்னுடையது என்றே சுட்டிக் காட்டினர்.
துரோணர்,வீடுமர்,கிருபர்,துச்சாதனன்,கர்ணன் முதலியோர் அனைவரும் அவ்வாறு கூறியவருள் முக்கியமானவர்கள்.
கண்ணன் அவர்கள் வரவேற்பைப் பொருட்படுத்தாமல், சென்றுகொண்டேயிருந்தான். வீதியின் கடைசிப் பகுதிக்கு வந்தாகிவிட்டது. அங்கே ஒரு கூரைச் சிறுகுடில். தவக்குடில் போல விளங்கியது.